வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடா்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. விவசாயிகள் எழுப்பி வரும் பிரச்சினைகளுக்குத் தீா்வு காண்பதற்காக 4 பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் அமைத்த குழு:
பூபேந்தார்சிங் மான் - தேசியத் தலைவர், பாரதிய கிஸான் யூனியன்.
பிரமோத் குமார் ஜோஷி - தெற்காசிய இயக்குநா், சா்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம்.
அசோக் குலாடி - முன்னாள் தலைவா், வேளாண் விளைபொருள்களுக்கான விலை நிர்ணய ஆணையம்.
அனில் கன்வட் - தலைவா், ஷேத்கரி சங்காதனா விவசாயிகள் சங்கம்.
பூபேந்தர் சிங் மான் விலகல்: இந்த குழுவிலிருந்து பூபேந்தார்சிங் விலகிநார். இதையடுத்து தற்போது குழுவில் 3 பேர் மட்டுமே உள்ளனர்.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 19 அன்று நடைபெற்றது. விவசாயிகளுடனான முதல் சந்திப்பு ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 19 அன்று நடைபெற்றது. விவசாயிகளுடனான முதல் சந்திப்பு ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:
National Affairs