TNPSC Current Affairs July 20-21, 2020 - Download as PDF

 
TNPSC Current Affairs July 20-21,  2020 - Download as PDF
சர்வதேச நிகழ்வுகள்
உலகளாவிய நேரடி சில்லறை விற்பனை தரவரிசை 2019: இந்தியா 15-வது இடம்
  • உலக நேரடி விற்பனை சங்கங்களின் (WFDSA) வெளியி்ட்ட 2019-ஆம் ஆண்டின் “உலகளாவிய நேரடி சில்லறை விற்பனை” அறிக்கையின்படி, உலக நேரடி விற்பனைத் துறையில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது. 
  • 2019-ஆம் ஆண்டில் 2.477 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு இந்தியாவில் நேரடி சில்லறை விற்பனை நடைபெற்றுள்ளது.
  • 2018-ஆம் ஆண்டில் இந்தியா பெற்ற 19-வது தரவரிசையுடன் ஒப்பிடும்போது தற்போது 12.1% வளர்ச்சி பெற்றுள்ளது, மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் 16.3 
  • சதவீத மிக உயர்ந்த கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தையும் பதிவு செய்துள்ளது.
  • நேரடி விற்பனையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இந்தியா 6-வது இடத்தில் உள்ளது, 
  • அமெரிக்கா 20% பங்களிப்புடன் 35.21 பில்லியன் அமெரிக்க டாலர் விற்பனையுடன் முதலிடத்தில் உள்ளது, சீனா 13% பங்களிப்புடன் 2-வது இடத்திலும்
  • கொரியா மற்றும் ஜெர்மனி தலா 10% பங்களிப்புடனும் 3-வது இடம் பெற்றுள்ளன.
  • CAGR: Compound Annual Growth Rate, The Global Direct Selling-2019 Retail Sale. 
ஆக்ஸ்போர்டு கொரானா தொற்றுக்கு தடுப்பூசி சோதனை - வெற்றி 
  • கொரானா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இரண்டுகட்ட சோதனைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • 1077 நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரானா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது சோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.
இந்திய நிகழ்வுகள் 
இரயில் நெட்வொர்க் மூலம் 2023-க்குள் இணைக்கப்படும் வடகிழக்கு தலைநகரங்கள்
  • ஊடகங்களுடனான ஒரு மெய்நிகர் உரையாடலின் போது, இரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் 2023-ஆம் ஆண்டுக்குள் வடகிழக்கு (North-Eastern) மாநிலங்களின் அனைத்து தலைநகரங்களையும் இரயில் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படவுள்ளதாக 200 ஜூலை 17-அன்று அறிவித்துள்ளார். 
  • இது தொடர்பாக ரயில்வே ஏற்கனவே ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, 
  • அசாம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரங்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன. மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா ஆகிய தலைநகரங்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
டெல்லியில் "இந்தியாவின் முதல் பொது "எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் பிளாசா" 
  • இந்தியாவின் முதல் பொது எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் பிளாசாவை (India’s first public Electric Vehicle charging plaza), மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் புதுதில்லியில் உள்ள செல்ம்ஸ்ஃபோர்ட் கிளப்பில் திறந்து வைத்தார்.
  • பணியிடங்களில் மோசமான காற்றின் தரம் தொடர்பான பிரச்சினையைத் தணிப்பதற்கும் ஆரோக்கியமான மற்றும் எரிசக்தி திறன் கொண்ட கட்டிடங்களை உருவாக்குவதற்கும் "RAISE" என்ற "பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான உட்புற காற்று தரத்தை மேம்படுத்துவதற்காக ரெட்ரோஃபிட் ஆஃப் ஏர் கண்டிஷனிங்" என்ற தேசிய திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இது EESL மற்றும் USAID அமைப்புகளின் கூட்டு முயற்சி ஆகும்.
  • RAISE: Retrofit of Air-conditioning to improve Indoor Air Quality for Safety and Efficiency.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் "மனோதர்பன் திட்டம்"
  • ஜூலை 21 அன்று, மத்திய மனித வள மேம்பாட்டு (மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மனோதர்பன் முன்முயற்சி திட்டத்தை (MANODARPAN initiative) புதுடில்லியில் மெய்நிகர் தளம் மூலம் தொடங்கி வைத்தார்.
  • மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்களுக்கான உளவியலாளர்கள் மற்றும் பிற மனநல நிபுணர்கள் பங்குபெறும் (Interactive Online Chat) Platform ஊடாடும் இணையதள பேசும் தளம் இதுவாகும். இந்த முயற்சி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான அவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்கிறது.
மின் கோபுரங்களை ஆய்வு செய்ய "ட்ரோன்களைப் பயன்படுத்தும் முதல் மாநிலம்" மகாராஷ்டிரா 
  • மகாராஷ்டிரா மாநில மின்சாரம் பரிமாற்ற நிறுவனம், வான்வழி கண்காணிப்பு மற்றும் கூடுதல் உயர் மின்னழுத்த மின் பரிமாற்ற கோபுரங்களை ஆய்வு செய்ய ட்ரோன்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இவ்வாறு ட்ரோன்களைப் பயன்படுத்தும் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது.
மிசோரம் மாநிலத்தில் "சோரம் மெகா உணவுப்பூங்கா" திறந்து வைப்பு
  • மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், மிசோரம் மாநிலத்தின் கோலாசிப் மாவட்டத்தில் உள்ள கம்ராங் கிராமத்தில் ஜூலை 20-அன்று, சோரம் மெகா உணவுப் பூங்காவைத் திறந்து வைத்தார். 
  • மெகா ஃபுட் பார்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்தப்பூங்கா, 5000 க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கும்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019 - அமல்
  • 1986-ஆம் ஆண்டின் பழைய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மாற்றியமைத்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (CPA), 2019, 2020 ஜூலை 20-முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. , இந்த சட்டம் நுகர்வோரின் உரிமைகளைச் செயல்படுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டது, மேலும் இது நுகர்வோர் குறைகளைத் தீர்க்க ஒரு சிறந்த பொறிமுறையை வழங்குகிறது.
  • நுகர்வோர் தகராறு நிவாரண ஆணைய விதிகளின்படி ரூ .5 லட்சம் வரை வழக்குகள் பதிவு செய்ய கட்டணம் ஏதும் இருக்காது.
  • உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது நுகர்வோருக்கு எந்த காயமும் ஏற்படாவிட்டால் ரூ .1 லட்சம் வரை அபராதம் விதிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.
  • CPA: Consumer Protection Act
பாதுகாப்பு நிகழ்வுகள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் செவ்வாய் கிரக விண்கலம் "ஹோப் புரோப்"
  • முறையாக ஐக்கிய அரபு அமீரக நாடு செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி சாதனை புரிந்து உள்ளது.
  • ஹோப் புரோப் (Hope Probe) என்று பெயரிடப்பட்ட இந்த செவ்வாய் விண்கலம் ஜப்பானில் உள்ள தனேகஷிமா என்னும் இடத்திலிருந்து H2-A இராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் சுமார் 7 மாதம் பயணத்திற்குப்பிறகு செவ்வாய் சுட்டுவட்ட பாதையை சென்றடையும்
  • இது செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் பருவநிலைகளை ஆராயவுள்ளது. 
இந்திய-அமெரிக்க "பாசெக்ஸ்" கடற்படைப் பயணக் கூட்டுப்பயிற்சி
  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான "USS நிமிட்ஸ்" (USS Nimitz) கப்பலுடன் இணைந்து இந்திய கடற்படை "பாசெக்ஸ்" (PASSEX) என்ற ஒரு குறுகிய கூட்டு கடற்படைப் பயணக் கூட்டுப்பயிற்சியை (Naval Passage Exercise) ஜூலை 20-அன்று மேற்கொண்டது
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் இந்தியக்கடற்படை, அமெரிக்க கடற்படையுடன் இணாந்து இந்த குறுகிய கூட்டுக் கடற்படைப் பயணப் பயிற்சியை மேற்கொண்டது. லடாக்கில் இந்தியா-சீனா எல்லை நிலைப்பாட்டின் பின்னணியில் இந்தப்பயிற்சி நடைபெற்றுள்ளது.
விருதுகள்
நெல்சன் மண்டேலா பரிசு 2020
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் தலைவர் டிஜ்ஜனி முஹம்மது-பண்டே, 2020-ஆம் ஆண்டின் நெல்சன் மண்டேலா பரிசை இருவருக்கு ஜூலை 17-அன்று அறிவித்தார். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த விருதுகள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. 
  • பரிசு வென்றவர்கள் விவரம்:
    1. மரியன்னா வர்தினோயன்னிஸ் (கிரேக்கம்)
    2. டாக்டர் மோரிசானா கயாட்டா (கினியா) 
  • நெல்சன் மண்டேலா பரிசு: ஐ.நா. பொதுச் சபை 2014 ஜூன் மாதத்தில் இந்த விருதை நிறுவியது, இது நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை மற்றும் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தின் மரபுக்கு மதிப்பளிப்பதற்காக 5 வருடங்களுக்கு ஒருமுறை இந்த விருது வழங்கப்படுகிறது. 
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் விருதுகள் 2020
  • மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) 92-வது அறக்கட்டளை தினத்தின் மெய்நிகர் கொண்டாட்டத்தை துவக்கி, 2019-ஆம் ஆண்டிற்கான ICAR விருதுகளை புதுடெல்லியில் உள்ள கிருஷி பவனில் 2020 ஜூலை 16-அன்று அறிவித்தார். முக்கிய விருது பெற்றவர்கள் மற்றும் நிறுவனம்;
  • ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை அகாடமி (NAARM) வெவ்வேறு பிரிவுகளில் 4 விருதுகளைப் பெற்றது
  • ரஃபி அகமது கிட்வாய் விருது - டாக்டர் சி.எச். சீனிவாச ராவ்,
  • சுவாமி சஹஜானந்த சரஸ்வதி சிறந்த விரிவாக்க விஞ்ஞானி விருது.- டாக்டர் பாரத் சங்கர் சோண்டாக்கி - 
  • NAARM: National Academy of Agriculture Research Management.
மாநாடுகள்
G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் மூன்றாவது கூட்டம்-2020
  • 2020-ஆம் ஆண்டின் இறுதியில் சவுதி அரேபியா நடத்தவிருக்கும் G20 தலைவர்கள் உச்சி மாநாட்டுக்கான நிதித் தடத்தின் ஒரு பகுதியாக, மூன்றாவது
  • G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (FMCBG) கூட்டம் ஜூலை 18-அன்று நடைபெற்றது. சவுதி அரேபிய அதிபர் ஏற்பாடு செய்த இந்தக்கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
  • FMCBG: Finance Ministers and Central Bank Governors.
பொருளாதார நிகழ்வுகள்
உலக வங்கியின் புதிய பொருளாதார வகைப்பாடு 2020-21
  • 2020-2021-ஆம் ஆண்டிற்கான உலக வங்கியின் புதிய நாடுகளின் வகைப்பாடுகளின்படி, இந்தியா கீழ்-நடுத்தர-வருமான பொருளாதாரம் (Lower-Middle-Income Economy) என்ற வகைப்பாட்டில் உள்ளது. இந்த வகைப்பாட்டில் மொத்தம் 218 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 
  • வகைப்பாடுகள் ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. அட்லஸ் முறை பரிமாற்ற வீதங்களைப் பயன்படுத்தி அமெரிக்க டாலர் மதிப்பிலி முந்தைய ஆண்டின் தனிநபர் மொத்த தேசிய வருமானத்தை (ஜிஎன்ஐ) அடிப்படையாகக் கொண்டு இந்த வகைப்பாடுகள் வெளியிடப்படுகின்றன.
  • உலக வங்கி நாடுகளை நான்கு வருமானக் குழுக்களாக வகைப்படுத்துகிறது, அவை; குறைந்த வருமானம், குறைந்த நடுத்தர வருமானம், உயர் நடுத்தர வருமானம் மற்றும் உயர் வருமான பொருளாதார நாடுகள்.
  • GNI: Gross National Income.
ஐ. நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உயர் மட்ட அமர்வு 2020 
  • அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (ECOSOC) 2020-ஆம் ஆண்டின் அமர்வின் உயர் மட்டப் பிரிவில் (High-Level Segment), பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 17-அன்று, முக்கிய உரை நிகழ்த்தினார். 
  • இந்த 2020 ECOSOC HLS அமர்வு, "Multilateralism after COVID19: What kind of UN do we need at the 75th anniversary" என்ற கருப்பொருளில் நடைபெற்றது.
  • ECOSOC: United Nations Economic and Social Council.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
ஆமைகளை பாதுகாப்பிற்கான தனித்துவ செயலி "குர்மா"
  • இந்திய ஆமைகளை பாதுகாப்பிற்கான தனித்துவமான கருவியாக, செல்போன் அடிப்படையிலான செயலி பயன்பாடான குர்மா (KURMA) விளங்குவதாக மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
  • செல்போன் அடிப்படையிலான செயலி பயன்பாடு குர்மா (KURMA),2020 மே 23-அன்று உலக ஆமைகள் தினத்தில் தொடங்கப்பட்டது. 
  • இந்த பயன்பாட்டை இந்திய ஆமை பாதுகாப்பு நடவடிக்கை நெட்வொர்க் (ITCAN), ஆமை சர்வைவல் அலையன்ஸ் இந்தியா மற்றும் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் ஆகியவை இணைந்து உருவாக்கின.
  • ITCAN: Indian Turtle Conservation Action Network.
ஒடிசாவில் மஞ்சள் நிறத்திலான ஆமை - கண்டுபிடிப்பு
  • ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சுஜன்பூர் கிராமத்தில் மிகவும் அரிய வகை உயிரினமாக கருதப்படும் ஓடு உள்பட முழுக்க மஞ்சள் நிறத்திலான ஆமை கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு அல்பினோவாக (Albino) இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புத்தக வெளியீடு
Suraj Kade Marda Nahi - Baldev Singh Sadaknama
  • சாகித்ய அகாடமி விருது பெற்ற பல்தேவ் சிங் சதக்னாமா ‘சூரஜ் காத் மர்தா நஹி’ (சூரியன் ஒருபோதும் இறப்பதில்லை) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • சுதந்திரப் போராட்ட வீரர் உதம் சிங் அவர்களின் பல அம்சங்களை இந்தப் புத்தகம் சித்தரிக்கிறது. இந்தப் புத்தகத்தை யுனிஸ்டார்புக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • பல்தேவ் சிங் சதக்னாமா 1942 இல் பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் சந்த் நவான் என்ற கிராமத்தில் பிறந்தார். ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
  • உதம் சிங் 80-வது நினைவு தினம் 2020 ஜூலை 31-அன்று கடைபிடிக்கப்படுகிறது.
The Tangams: An Ethnolinguistic Study of the Critically Endangered Group of Arunachal Pradesh 
  • அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு அவர்கள், "தி தங்கம்ஸ்: அருணாச்சல பிரதேசத்தின் ஆபத்தில் உள்ள குழுவின் ஒரு இனவியல் ஆய்வு" என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டார்: 
  • இந்த புத்தகத்தை ஆபத்தில் உள்ள மொழிகளின் மையம் (CFEL), இராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் மற்றும் புது தில்லியில் உள்ள இமாலயன் வெளியீட்டகம் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
  • யுனெஸ்கோ அமைப்பின் ஆபத்தான மொழிகளின் நிலப்படத்தின் (2009) கருத்துப்படி, அதிக திபெத்திய-பர்மன் மொழி குடும்பத்தின் கீழ், டானி குழுவிற்கு சொந்தமான ஒரு வாய்வழி மொழியான தங்கம் (Tangams) ‘மோதமான ஆபத்தில் உள்ளது’ (Critically Endangered) என்று குறிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
ரூ.10,399 கோடி மதிப்புள்ள 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • 13,507-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழில்துறை குழுக்களுடன் ரூ.10,399 கோடி மதிப்புள்ள 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழ்நாடு அரசு ஜூலை 20-அன்று கையெழுத்திட்டது
  • சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
விளையாட்டு நிகழ்வுகள்
உலகக் கோப்பை கால்பந்து 2020 - கத்தார்
  • சர்வதேச கால்பந்து சங்கம் ஃபிஃபா, 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் உள்ள அல் பேட் ஸ்டேடியத்தில் (அல்லது) அல் கோர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது என 2020 ஜூலை 15-அன்று அறிவித்தது.
  • 2022 ஃபிஃபா ஆண்கள் உலகக் கோப்பை ஃபிஃபா உலகக் கோப்பையின் 22-வது பதிப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. 
  • 2022 நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளது. 
ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ் 2020 - "லூயிஸ் ஹாமில்டன்" சாம்பியன்
  • ஃபார்முலா ஒன் சாம்பியன் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் (பிரிட்டன்) ஹங்கேரியின் மொகிரோடில் நடைபெற்ற நடைபெற்ற ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ் 2020 கார்பந்தப்போட்டியில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
  • 2020 ஃபார்முலா ஒன் போட்டியின் மூன்றாவது சுற்றாக இந்த ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ் நடைபெற்றது.
  • ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை லூயிஸ் ஹாமில்டன் வெல்வது இது அவரது 8-வது முறையாகும். இந்த வெற்றியின் மூலம் அவர் மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்தார்.
  • இந்த வெற்றியின் மூலம், லூயிஸ் ஹாமில்டன் 86 கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் வென்றுள்ளார், ஜேர்மனியின் சிறந்த ஷூமேக்கரின் 91 வெற்றிக்கு பின்னால் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
முக்கிய ஆளுமைகள்
மத்திய பிரதேச ஆளுநர் "லால்ஜி டாண்டன்" மறைவு
  • உத்தரப்பிரதேசத்தில் லக்னோ நகரில் 2020 ஜூலை 21-அன்று, மத்திய பிரதேச ஆளுநர் லால் ஜி டாண்டன் தனது 85 வயதில் காலமானார். அவருக்கு நீண்டகால கல்லீரல் நோய் மற்றும் சுவாச பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இவர் 1935 ஏப்ரல் 12-அன்று உத்தரபிரதேசத்தின் லக்னோவில் பிறந்தவர் ஆவார்.
முக்கிய தினங்கள்
உலக செஸ் தினம் - ஜூலை 20
  • ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் முதலாவது உலக செஸ் தினம் (World Chess Day), 2020 ஜூலை 20-அன்று கொண்டாடப்பட்டது. இந்த நாள் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் 96-வது ஆண்டுவிழாவையும் குறிக்கிறது.
  • இந்த தினத்தில், சதுரங்க விளையாட்டின் மூலம் நாடுகளிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதில் இன, அரசியல் மற்றும் சமூக தடைகளை உடைப்பதற்கும் கொண்டாடப்படுகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post