TNPSC Current Affairs July 22-23, 2020 - Download as PDF

TNPSC Current Affairs July 22-23, 2020 - Download as PDF

சர்வதேச நிகழ்வுகள்
பாகிஸ்தான்-சீனா இடையே ஆசாத் பட்டான் நீர் மின் திட்ட ஒப்பந்தம்
 • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் 700 மெகாவாட் ஆசாத் பட்டான் நீர் மின் திட்டத்திற்கான ஒரு பொறியாளர் கொள்முதல் (EPC) ஒப்பந்தத்தில் 2020 ஜூலை 7-அன்று, இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கெஜோபா குரூப் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளன.
 • இந்த 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த நீர் மின் திட்டம் சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தின் (CPEC) கீழ் 2-வது மின் திட்டமாகும்.
 • முதல் திட்டம், முசாபராபாத் அருகே ஜீலம் ஆற்றில் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1100 மெகாவாட் கோஹலா திட்டத்திற்காக 2020 ஜூன் 23 அன்று கையெழுத்தானது. 
 • EPC: Engineer Procurement and Contract agreement.
 • CPEC: China Pakistan Economic Corridor.
ITUC உலகளாவிய தொழிலாளர் உரிமைகள் குறியீடு 2020
 • சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு (ITUC), 2020-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய உரிமைகள் குறியீடு தொழிலாளர்களுக்கான உலகின் மிக மோசமான நாடுகளை பட்டியலிட்டுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளுக்கான மரியாதை அடிப்படையில் இந்த குறியீடு 144 நாடுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.இந்தப் பட்டியலில் இந்தியா 5 தர மதிப்பீட்டைப் பெற்று, உழைக்கும் மக்களுக்கான உலகின் மிக மோசமான 10 நாடுகளில் இடம் பெற்றுள்ளது. 
 • மிக மோசமான பத்து நாடுகள்: பங்களாதேஷ், பிரேசில், கொலம்பியா, கஜகஸ்தான், பிலிப்பைன்ஸ், துருக்கி மற்றும் ஜிம்பாப்வே, எகிப்து, ஹோண்டுராஸ், இந்தியா.
 • இந்தியாவின் தரவரிசை மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளது, அவை; வெகுஜன பணிநீக்கம், வேலைநிறுத்தங்களை மிருகத்தனமாக அடக்குதல் மற்றும் பிற்போக்கு சட்டங்கள்.
 • ITUC: International Trade Union Confederation.
இந்திய நிகழ்வுகள்
கக்ரபர் அணுமின் திட்டம் - வழக்கமான இயக்க நிலையை எட்டிய 3-வது உலை 
 • குஜராத்தில் கட்டப்பட்ட கக்ரபர் அணுமின் திட்டத்தின் 3-வது உலை (KAPP-3) அணு மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இந்த 700 மெகா வாட் அணு உலை ஆகும். 
 • KAPP-3: Kakrapar Atomic Power Plant-3.
அயோத்தி இராமர் கோவில் பூமி பூஜை
 • அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.
 • 161 அடி உயரத்தில் கட்டப்படவுள்ள, இராமர் கோவிலின் முதன்மை வடிவமைப்பாளரான நிகில் சோம்புரா உள்ளார்.
பாதுகாப்பு நிகழ்வுகள்
பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை "துருவாஸ்த்ரா" 
 • ஜூலை 15 மற்றும் 16-ஆம் தேதிகளில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), "துருவாஸ்த்ரா" (Dhruvastra) என்ற பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையின் (ATGM), இடைக்கால சோதனை ஹெலிகாப்டர் இல்லாமல் ஒடிசாவின் பாலசூரில் வெற்றிகரமாக செய்துள்ளது.
 • ஹெலிகாப்டர் மூலம் செலுத்தப்படும் நாக் ஏவுகணை "ஹெலினா" என்று பெயரில் அழைக்கப்படுகிறது.
 • ATGM: Anti-Tank Guided Missile.
இந்திய இராணுவத்திற்கான "பாரத் ட்ரோன்கள்"
 • இந்திய இராணுவம் உலகின் மிக சுறுசுறுப்பான மற்றும் இலகுவான "பாரத்" என்ற ட்ரோனை பெறுகிறது. உருவாக்கியுள்ளது, இந்த பாரத் ட்ரோனை, சண்டிகர் சார்ந்த DRDO-TBRL ஆய்வகத்தால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது. 
 • பாரத் ட்ரோன், இந்தோ-சீனா எல்லையில் உயரமான மற்றும் மலைப்பகுதிகளையும் கிழக்கு லடாக் பகுதியையும் துல்லியமாக கண்காணிக்க நிறுத்தப்பட்டுள்ளது
 • பாரத் தொடர் ட்ரோன்கள் உலகின் மிக சுறுசுறுப்பான மற்றும் இலகுவான கண்காணிப்பு ட்ரோன்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.
சுரங்க கலப்பை தயாரிக்க BEML-பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
 • மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் ஒரு வெளிப்படையான முயற்சியாக, மத்திய பாதுகாப்பு அமைச்சின் கையகப்படுத்தல் பிரிவு பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) ரூ.557 கோடி செலவில் T-90 பீரங்கி கவச வாகனத்திற்க்கான, 1,512 சுரங்கக் கலப்பைகளை (Mine Plough) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
 • BEML என்பது கர்நாடகாவின் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பொதுத்துறை நிறுவனமாகும். போக்குவரத்து மற்றும் சுரங்கத்திற்கு பயன்படுத்தப்படும் பலவிதமான கனரக உபகரணங்களை நிறுவனம் தயாரிக்கிறது. 
 • BEML: Bharat Earth Movers Limited.
3D-பிரிண்டிங் முறையில் தயாரிக்கப்பட்ட கேஸ் டர்பைன் எஞ்சின் விமானம் "MGTD-20" 
 • 3D-பிரிண்டிங் முறையில் தயாரிக்கப்பட்ட, MGTD-20 என்ற கேஸ் டர்பைன் எஞ்சின் விமானத்தின் சோதனைகளை இரஷ்யா முதன்முறையாக வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
 • டாடர்ஸ்தானில் உள்ள கசல்பாஷ் விமான நிலையத்தில் இந்த விமான சோதனைகள் நடத்தப்பட்டன. இவ்வகை விமானத்தின் உற்பத்தி 2021-2022 ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது.
விருதுகள்
மனிதநேயத்திற்கான குல்பென்கியன் பரிசு 2020 - கிரெட்டா துன்பெர்க்
 • ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 17 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் (Greta Thunberg) மனிதநேயத்திற்கான முதலாவது குல்பென்கியன் பரிசை (Gulbenkian Prize for Humanity) வென்றுள்ளார்.
 • காலூஸ்டே குல்பென்கியன் அறக்கட்டளையால் வழங்கப்படும் மனிதநேயத்திற்கான முதலாவது பரிசைப் பெறும் முதல் நபர் என்ற சிறப்பை கிரெட்டா டின்டின் துன்பெர்க் பெற்றார்.
 • 1 மில்லியன் யூரோ (1.15 மில்லியன் டாலர்) பரிசுத்தொகை கொண்ட இந்த விருது, காலநிலை மாற்றம் தொடர்பாக இளைய தலைமுறையினரை அணிதிரட்டும் அவரது திறனை அங்கீகரிதது வழங்கப்படுகிறது.
 • காலநிலை நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக செயல்படும் திட்டத்திற்கும் நிறுவனங்களுக்கும் கிரெட்டா துன்பெர்க் முழு பரிசுத் தொகையும் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
 • குல்பென்கியன் பரிசு: 2020-இல் வருடாந்திர விருதாக தொடங்கப்பட்ட இந்த பரிசின் நோக்கம், காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்காக பங்களிப்புகள், புதுமை மற்றும் தாக்கத்திற்காக தனித்து நிற்கும் உலகெங்கிலும் உள்ள மக்கள், மக்கள் குழுக்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரிப்பது ஆகும். 
சிங்கப்பூர் ஜனாதிபதி விருது 2020 - கலா நாராயணசாமி 
 • சிங்கப்பூரில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னின்று போராடியதற்காக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 59 வயது கலா நாராயணசாமி என்ற பெண் நர்ஸ் ஒருவருக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது, தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பயன்படுத்தியதற்காக வழங்கப்பட்டுள்ளது. 
 • கலா நாராயணசாமியுடன் சேர்த்து மொத்தம் 5 நர்சுகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் அந்நாட்டின் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் கையெழுத்திட்ட சான்றிதழ், கோப்பை மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம்) சன்மானமாக வழங்கப்பட்டது.
மாநாடுகள்
இந்தியா ஐடியா உச்சி மாநாடு 2020
 • அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் சார்பில் இந்தியா ஐடியா உச்சி மாநாடு இணையவழியில் ‘சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவோம்‘ என்ற பொருளில் ஜூலை 22-அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதன் முக்கிய விவரங்கள்:
 • இந்தியாவில் மருத்துவத் துறை ஆண்டுக்கு 22 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து வருகிறது 
 • உலக வங்கியின் ஈஸி ஆஃப் டூயிங் பிசினஸ் தரவரிசையில் 190 நாடுகளில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63 வது இடத்தைப் பிடித்தது. கொரானா கால ஊரடங்கின் போது, இந்தியாவுக்கு 20 பில்லியன் டாலர் முதலீடு கிடைத்தது.
ஐ.நா. பொதுசபை கூட்டம் 2020
 • 2020-ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பொதுசபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், செப்டம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது. ஐ.நா. தொடங்கப்பட்ட 75-வது ஆண்டு தினம் ஆகும். இந்த கூட்டத்தில் ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சிறப்பு மிக்க ஐ.நா. பொதுசபை அரங்கில் நின்றவாறு உலகுக்கு உரையாற்றுவார்கள். 
நியமனங்கள்
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணி "ரோஷ்னி நாடார்"
 • தற்போது இந்தியாவின் பணக்கார பெண்மணியான விளங்கும் ரோஷ்னி நாடார் (Roshni Nadar), பட்டியலிடப்பட்ட இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார், ரோஷ்னி நாடார், தனது தந்தை மற்றும் கோடீஸ்வரர் சிவ் நாடர் அவர்களிடமிருந்து HCL டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவராக 2020 ஜூலை 17-அன்று பொறுப்பேற்றார்.
 • தலைமை மூலோபாய அதிகாரியாக பதவியுடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சிவ் நாடர் (Shiv Nadar) தொடர்ந்து இருப்பார்.
 • எச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா அவர்களிந் பதவிக்கு மேலாக எச்.சி.எல் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சிவ் நாடர் இருப்பார்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் 45 பேர் - பதவியேற்பு
 • புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 61 மாநிலங்களவை உறுப்பினர்களில் 45 பேர் மாநிலங்களவை மண்டபத்தில் ஜூலை 22-அன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு நிகழ்வுகள்
உலகத்தரம் வாய்ந்த கீழடி "அகழ் வைப்பகம்" - அடிக்கல் நாட்டல்
 • தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த கீழடி அருகிலுள்ள கொந்தகை கிராமத்தில் 0.81 ஹெக்டேரில் ரூ.12.21 கோடியில் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள, உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்திற்கு ஜூலை 20-அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அவசர கால கடன் உதவி உத்தரவாதத் திட்டம்
 • இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியில் 45 சதவீதத்துக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்களிக்கின்றன. 
 • இந்தியாவிலேயே, தமிழ்நாடு அதிக அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கொண்ட 3-வது பெரிய மாநிலமாக திகழ்கிறது. அவசர கால கடன் உதவி உத்தரவாதத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொகுப்பாக ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 
 • இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை ரூ.7,042.9 கோடி கடன் ஒப்புதல் வழங்கப்பட்டு, அதில் ரூ.4,383.4 கோடி தொகை, நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. 
 • இந்திய அளவில் இதுவரை ஒப்புதல் வழங்கப்பட்ட கணக்குகளில் 10.8 சதவீதம் ஆகும். தமிழ்நாடு இத்திட்டத்தின் கீழ் மிக அதிக அளவில் ஒப்புதல்களைப் பெற்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
விளையாட்டு நிகழ்வுகள்
IPL கிரிக்கெட் 2020 - ஐக்கிய அரபு அமீரகம்
 • 2020-ஆம் ஆண்டிற்கான 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, கொரானா பாதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 
 • 2020 செப்டம்பர் 19-அன்று தொடங்கி நவம்பர் 8 வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது என ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் அறிவித்துள்ளார்.
 • நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஆசிய விளையாட்டு 2018 - இந்திய தடகள அணியின் வெள்ளிப்பதக்கம் பதக்கம் தங்கமாக உயர்வு
 • 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற இந்திய தடகள அணியின் பதக்கம் தங்கமாக உயர்த்தப்பட்டது. 2018-ம் ஆண்டு இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, ஹிமா தாஸ், ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. 
 • இந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பக்ரைன் அணியில் இடம் பெற்று இருந்த வீராங்கனையான கெமி அடிகோயா ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்ததை அடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு, தங்கப்பதக்கம் கைப்பற்றிய பக்ரைன் அணி தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணி, தங்கப்பதக்கம் வென்றதாக தரம் உயர்த்தி உலக தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. 
 • அனு ராகவன் - வெண்கலப்பதக்கம்: ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய கெமி அடிகோயா பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வென்ற தங்கப்பதக்கமும் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியில் 4-வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை அனு ராகவனுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.
முக்கிய தினங்கள்
தேசிய ஒலிபரப்பு தினம் - ஜூலை 23 
 • இந்தியாவில், ஆண்டுதோறும் ஜூலை 23-ஆம் தேதி, தேசிய ஒலிபரப்பு தினம் (National Broadcasting day) கொண்டாடப்படுகிறது, 
 • 1927-இதே நாளில், இந்தியாவில் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.
Post a Comment (0)
Previous Post Next Post