நடப்பு நிகழ்வுகள் ஜூன் 1, 2020
இந்திய நிகழ்வுகள்
ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் - தொடக்கம்
- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக தமிழகம் முழுவதும் 2020 ஜூன் 1 முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது.
- கொரானா பரவல் நீடிப்பதால் நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 2020 ஜூன் 30-ந் தேதி வரை UNLOCK 1.0 என்ற பெடரில் 5-வது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதாகவும் மத்திய அரசு மே 30-அன்று அறிவித்தது. 30-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை ஏற்கனவே நடைமுறையில் இருந்த 4-ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
- ‘ஷர்மிக்‘ சிறப்பு ரெயில்கள் இயக்கம்
- புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக, மே 1-ஆம் தேதியில் இருந்து ‘ஷர்மிக்‘ எனப்படும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- ரெயில் போக்குவரத்து தொடக்கம்
- ரெயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கும் விதமாக, 2020 ஜூன் 1-முதல் நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்து தொடங்குகிறது. முதல்கட்டமாக நாள்தோறும் 200 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியல்-2020
- ‘கல்வி உலகம்’ அமைப்பின் சார்பில் 2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- முதல் இடத்தில் பெங்களூருவில் உள்ள இந்தியன் அறிவியல் நிறுவனமும், 2-வது இடத்தில் ‘டாடா’ அடிப்படை ஆராய்ச்சி நிறுவனமும், 3-வது இடத்தில்
- டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும், 4-வது இடத்தில் டெல்லி பல்கலைக்கழகமும் பிடித்து இருக்கிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 5-வது இடம் கிடைத்து இருக்கிறது.
- தமிழகத்தில் உள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 19-வது இடத்தில் உள்ளது.
பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்வு - மே 31, 2020
- பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மே 31-அன்று வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
- அவற்றின் முக்கிய விவரங்கள்:
- யோகக்கலை நம்முடைய சுவாச மண்டலத்தை மேலும் வலுவடையச் செய்யும் பலவகையான மூச்சுப் பயிற்சிகள் இருக்கின்றன. ஆயுஷ் அமைச்சகம், ‘என் வாழ்க்கை, என் யோகக்கலை‘ (My Life My Yoga) என்ற தலைப்பில் இணையத்தில் யோகக்கலை போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கிறது.
- தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த முடிதிருத்தகம் நடத்தி வரும் சி.மோகன் தனது மகளின் படிப்புக்கு என இவர் சேமித்து வைத்து இருந்த ரூ.5 லட்சத்தை தேவையால் வாடுபவர்கள், ஏழைகள் ஆகியோருக்கு சேவை செய்யும் வகையில் அவர் முழுக்க செலவு செய்து இருக்கிறார். இதே போல் அகர்தாலாவை சேர்ந்த கவுதம்தாஸ், பஞ்சாபின் பதான்கோட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த அமிர்தவல்லி ஆகியோரை பாராட்டினார்.
பாதுகாப்பு/ விண்வெளி
இரு NASA-விண்வெளி வீரர்கள் 'சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்'
- அமெரிக்காவின் NASA விண்வெளி ஆய்வு மையத்தைச் சோந்த இரு வீரா்களை அந்த நாட்டின் தனியார் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.
- தனியார் நிறுவனத்தின் ராக்கெட்டில் விண்வெளி வீரா்கள் விண்வெளிக்குச் செல்வது இதுவே முதல் முறை ஆகும். இதன் மூலம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (International Space Station), NASA-வின் இரண்டு வீரர்களை (NASA Astronauts) மே 30-அன்று, புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளது.
- சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ள இரு NASA-வின் விண்வெளி வீரர்கள் விவரம்: டக் ஹர்லி (வயது 53) மற்றும் பாப் பெஹன்கென் (வயது 49)
- இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த பயணம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான 19 மணி நேர பயணம் ஆகும்.
- 2011-ம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்க விண்வெளி வீரர்கள், ரஷியா சென்று அங்கிருந்துதான் விண்வெளிக்கு சோயுஸ் விண்கலம் மூலம் செல்லும் நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க மண்ணில் இருந்து எந்தவொரு விண்வெணி வீரரும் 2011-முதல் 9 ஆண்டுகளாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது இல்லை.
- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் - எலன் மஸ்க்
- NASA: National Aeronautics and Space Administration.
CRPF வீரர்களுக்கு 'குண்டு துளைக்காத உடைகள், கவச வாகனங்கள்' வழங்க ஒப்புதல்
- முக்கியமான துணை ராணுவப்படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 70 ஆயிரம் வீரர்கள் காஷ்மீரிலும், 90 ஆயிரம் வீரர்கள் நக்சல் பாதிப்பு நிறைந்த மாநிலங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம்
- முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதன்படி, CRPF வீரர்களுக்கு 42 ஆயிரம் குண்டு துளைக்காத உடைகளும், 176 குண்டு துளைக்காத கவச வாகனங்களும் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
இர்ராவடி டால்பின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு
- சென்னையில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (IIT Madras), மேற்கொண்ட ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், ஒடிசாவின் சிலிக்கா ஏரியில் உள்ள இர்ராவடி டால்பின்களின் (Irrawaddy Dolphin) எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
- ஆசியாவின் மிகப்பெரிய இயற்கை நீர் ஏரி சிலிக்கா ஏரி ஆகும். 4,000 ஆண்டுகள் பழமையான இந்த ஏரி, ஒடிசாவின் பூரி, குர்தா மற்றும் கஞ்சாம் மாவட்டங்களில் பரவியுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடக்கம்
- தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது ஜூன் 1-ந்தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஜூன் 2-ஆம் தேதி புயலாகவும் மாறுகிறது. இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்படுகிறது.
மன்னார் வளைகுடாவில் 'பேண்ட் டெயில் ஸ்கார்பியன் மீன்' கண்டுபிடிப்பு
- இந்திய அளவில் முதன்முறையாக மன்னார் வளைகுடா கடலில் பேண்ட் டெயில் ஸ்கார்பியன் வகை மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஆராய்ச்சிக்காக கொச்சியில் உள்ள கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் முதல் தூத்துக்குடி வரை உள்ள மன்னார் வளைகுடா கடல் 21 தீவுகளை உள்ளடக்கி உள்ளது. இதில் 1,400 வகையான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. மண்டபம் அடுத்துள்ள மரைக்காயர் பட்டணம் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் உள்ளது.
புத்தக வெளியீடு
பிரதமர் மோடி பற்றிய 'புதிய வாழ்க்கை வரலாற்று நூல்' வெளியீடு
- பிரதமர் மோடி பற்றிய‘நரேந்திர மோடி-வளமையின் முன்னோடி மற்றும் உலக அமைதியின் தூதர்’என்ற பெயரிலான (Narendra Modi-Harbinger of Prosperity & Apostle of World Peace) புதிய வாழ்க்கை வரலாற்று நூல் புத்தகத்தை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்வில் மே 31-அன்றஉ வெளியிட்டார்.
- இந்த புத்தகத்தை அகில இந்திய பார் அசோசியேசன் தலைவர் ஆதிஷ் சி.அகர்வாலா (Adish C Aggarwala), அமெரிக்க எழுத்தாளர் எலிசபெத் ஹோரன் (Elisabeth Horan) ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர்.
- பெரிதும் அறியப்படாத மோடியின் இளமைப்பருவம் குறித்த தகவல்களும், புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ் உள்ளிட்ட 10 இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 10 வெளிநாட்டு மொழிகளிலும் நூல் கிடைக்கிறது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
ஐந்தாம் கட்ட ஊரடங்கு - தளர்வுகளுடன் - தொடக்கம்
- தமிழ்நாட்டில் புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 5-வது கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
- பேருந்து போக்குவரத்து - தொடக்கம்
- தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
- 8 மண்டலங்களாக பிரிப்பு
- தமிழ்நாடு மாநிலத்தில் பொது பஸ் போக்குவரத்தை ஜூன் 1-ந் தேதி முதல் நடைமுறைப் படுத்துவதற்காக தமிழ்நாடு 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
- முதலாம் மண்டலம்: கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள்
- 2-ம் மண்டலம்: தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி
- 3-ம் மண்டலம்: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி
- 4-ம் மண்டலம்: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை
- 5-ம் மண்டலம்: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்
- 6-ம் மண்டலம்: தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி
- 7-ம் மண்டலம்: காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
- 8-ம் மண்டலம்: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்.
- 7-ம் மண்டலத்துக்கு உட்பட்ட காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் 8-ம் மண்டலத்தில் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்படும்.
- 7 மற்றும் 8-ம் மண்டல பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்துக்கு தடை தொடர்கிறது.
பொது இடங்களில் துப்பினால் அபராதம் + தண்டனை
- தமிழ்நாட்டில் காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு பஸ்சில் அனுமதி இல்லை என்றும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் மது அருந்துவது, பான், குட்கா, புகையிலை ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 'ரூ.2,500 மதிப்பூதியம்'
- சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் களப்பணி ஆற்றி வரும் 33 ஆயிரம் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை
- பணியாளர்களின் சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் சிறப்பினமாக ரூ.2,500 மதிப்பூதியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இசைமேதை "விளாத்திகுளம் ஸ்ரீ நல்லப்பசாமி" நினைவுத்தூண் திறப்பு
- தமிழ் மற்றும் கர்நாடக சங்கீதத்தில் இசை மேதையாக திகழ்ந்த விளாத்திகுளம் ஸ்ரீ நல்லப்பசாமியின் நினைவை போற்றும் விதத்தில், விளாத்திகுளத்தில் இசைமேதை நல்லப்பசுவாமி நினைவுத்தூண் திறப்பு விழா ஜூன் 1-அன்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நினைவுத்தூணை திறந்துவைத்தார்.
விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டு விருதுகள் - வீர்ர் வீராங்கனைகள் பெயர்கள் பரிந்துரை
- விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான ராஜீவ்காந்தி கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கின்றன. இதற்கான கடைசி நாள் 2020 ஜூன் 3-ந்தேதி ஆகும்.
- ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள வீர்ர்/வீராங்கனைகள் விவரம்:
- ரோகித் சர்மா (கிரிக்கெட் வீரர்)
- நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல் வீரர்)
- அஞ்சும் மோட்ஜில் (துப்பாக்கி சுடுதல் வீராங்கனை)
- வினேஷ் போகத் (மல்யுத்தம்).
போர்ப்ஸ் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியல் 2020: ரோஜர் பெடரர் முதலிடம்
- அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்த 2020-ஆம் ஆண்டில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் பெற்றுள்ளார்.
- இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி ரூ.196 கோடியுடன் 66-வது இடம் பெற்றுள்ளார்.
- அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ வணிக இதழ் ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இதன்படி 2019-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் 2020-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் சம்பாதித்த பரிசுத்தொகை, ஊதியம், போனஸ், போட்டிக்கட்டணம், விளம்பர ஒப்பந்த வருமானம், காப்புரிமைத் தொகை ஆகியவற்றை மதிப்பிட்டு உலக அளவில் கடந்த ஓராண்டில் அதிக வருவாய் ஈட்டிய வீரர், வீராங்கனைகளின் முதல் 100 பேர் பட்டியலை தயாரித்து தற்போது வெளியிட்டுள்ளது. எப்போதும் போல கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கோல்ப், குத்துச்சண்டை, கார்பந்தய வீரர்களே இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
- முதல்முறையாக ரோஜர் பெடரர் முதலிடம்
- கால்பந்து நட்சத்திரங்கள் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார். அவர் ஓராண்டில் குவித்த தொகை ரூ.802 கோடி. இதில் பரிசுத்தொகை ரூ.48 கோடியாகவும், விளம்பர ஒப்பந்த தொகை ரூ.754 கோடி அளவிலும் உள்ளது.
- 38 வயதான பெடரர் கடந்த 2 ஆண்டுகளாக எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை. ஜப்பான் ஆடை தயாரிப்பு நிறுவனமான யுனிக்லோ 10 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் பெடரருடன் ரூ.2,265 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வகையில் மட்டும் பெடரருக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் கிடைக்கிறது. இந்த ஒப்பந்தம் தான் அவருக்கு ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
- ‘போர்ப்ஸ்’ 30 ஆண்டுகளாக இத்தகைய பட்டியலை வெளியிடுகிறது. இதில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஒருவர் முதலிடம் பெற்றிருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.
- கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லயோனல் மெஸ்சி
- 2-வது இடத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரரும், இத்தாலியின் யுவென்டஸ் கிளப்புக்காக விளையாடுபவருமான கிறிஸ்டியானா ரொனால்டோ உள்ளார். அவரது ஓராண்டு சம்பாத்தியம் ரூ.792 கோடியாகும். போட்டியில் பங்கேற்பதற்காக அவர் பெற்ற ஊதியம் மற்றும் பரிசு மட்டும் ரூ.452 கோடியாகும்.
- அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி ரூ.784 கோடியுடன் 3-வது இடத்திலும், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் ரூ.720 கோடியுடன் 4-வது இடத்திலும், அமெரிக்க கூடைப்பந்து வீரர் லிப்ரோன் ஜேம்ஸ் ரூ.666 கோடியுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
- இரு வீராங்கனைகள் இடம் பிடிப்பு
- இந்த பட்டியலில் வீராங்கனைகளில் 2 பேர் மட்டுமே அங்கம் வகிக்கிறார்கள். டென்னிஸ் பிரபலங்களான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ரூ.282 கோடியுடன் 29-வது இடத்திலும், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ரூ.272 கோடியுடன் 33-வது இடத்திலும் உள்ளனர்.
- ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) ரூ.336 கோடி தொகையுடன் 23-வது இடத்தில் இருக்கிறார்.
- விராட் கோலி - 66-வது இடம்
- இந்த விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பில், கிரிக்கெட்டில் இருந்து ஒரே ஒரு வீரர் மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, இந்திய கேப்டன் விராட் கோலி தான். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் விராட் கோலி 66-வது இடம் வகிக்கிறார். ‘போர்ப்ஸ்’ இதழ் கணக்கீட்டின்படி ஒரு ஆண்டில் அவர் ஈட்டிய வருமானம் ரூ.196 கோடியாகும். இதில் பரிசு மற்றும் சம்பளம் மூலம் ரூ.15 கோடியும், விளம்பர ஒப்பந்த வாயிலாக ரூ.181 கோடியும் குவித்து இருக்கிறார்.
- 31 வயதான விராட் கோலி இந்த பட்டியலில் 2018-ம் ஆண்டில் 83-வது இடத்திலும், 2019-ம் ஆண்டில் 100-வது இடத்திலும் இருந்தார். இப்போது மேலும் முன்னேற்றம் கண்டுள்ளார்.
- 2020 ஜூலை மாதத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்புடன் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்புடன் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நபர்கள்
ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவன தலைவர் 'எலான் மஸ்க்'
- அமேரிக்காவை சேர்ந்த 'ஸ்பேஸ் எக்ஸ்' தனியார் நிறுவனம் 'பால்கன்- 9' ராக்கெட் மூலம், இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களை, சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வரலாறு படைத்துள்ளது. இந்த 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) ஆவார்.
- மின்னல் வேக, 'ஹைப்பர் லுாப்' பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என, கனவு திட்டங்களின் நாயகனாக திகழ்கிறார்,
- எலான் மஸ்க், தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியாவில் 1971-இல் பிறந்தார். இளம் பருவத்திலேயே விண்வெளி ஆய்வில் ஆர்வமாக இருந்தார். அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த இவர், இணையதளத்தில் பணபரிவர்த்தனை செய்யும், 'பேபால்' நிறுவனத்தை துவக்கினார். விரைவில் கோடீஸ்வரரானார். தொழிலதிபர்,
- முதலீட்டாளர், பொறியாளர், கார், ராக்கெட் வடிவமைப்பாளர், கண்டுபிடிப்பாளர் என, பன்முகம் கொண்டவராக மாறினார்.
- ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி மையம்
- 2002-இல், 'ஸ்பேஸ் எக்ஸ்' தனியார் விண்வெளி மையத்தை துவக்கினார். 2013-இல் இவர் உருவாக்கிய பால்கன் ராக்கெட்டுகள், வழக்கம் போல எரிந்து விழாமல், பணி முடித்து பத்திரமாக கீழே இறங்கின. தன் ராக்கெட்டுகள் மூலம், சர்வதேச விண்வெளி மையத்துக்கு பொருட்களை அனுப்ப உதவினார்
- மனிதர்கள் பயணத்துக்கான, BFR எனும் ராக்கெட்டை உருவாக்கினார். இதன் மூலம் பூமியின் எந்த ஒரு பகுதிக்கும், ஒரு மணி நேரத்தில் செல்லலாம்
- BFR (Big Falcon Rocket) ராக்கெட்டுகள் மூலம், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார். இங்கு, 2024ல் மனிதர்கள் தங்குவதற்கான காலனிகள் அமைக்கப்படும். 10 லட்சம் மக்கள் தொகை கொண்டதாக செவ்வாய் கிரகம் மாறும் என நம்புகிறார்
- மூன்று 'பால்கன் 9' வகை ராக்கெட்டுகளை இணைத்து, வலிமையான 'பால்கன் ஹெவி' (Falcon Heavy) ராக்கெட் உருவாக்கினார்.
- 'டெஸ்லா' நிறுவனம் (Tesla) மூலம் எலக்ட்ரிக் சூப்பர் கார்களை வடிவமைக்கிறார், எலான் மஸ்க். மின்னல் வேக, 'ஹைப்பர் லுாப்' பயணத்தை செயல்படுத்த உள்ளார். இதன்படி, காற்றழுத்தம் குறைக்கப்பட்ட உருளை வடிவ வாகனத்தில், மணிக்கு அதிகபட்சமாக, 1,200 கி.மீ., வேகத்தில் பறக்கலாம்
- அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிஸ் நகரத்தில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (George Floyd, வயது 46) போலீஸ் அதிகாரிகளின் பிடியில் மே 25-அன்று கொல்லப்பட்டார். இது தொடர்பாக வெளியான வீடியோவில், கார் டயருக்கு அடியில் அவர் சிக்கி இருந்ததும்,
- அவரது கழுத்தில் ஒரு போலீஸ் அதிகாரி தனது முழங்காலால் நெரித்ததும், அவர் மூச்சு விட முடியவில்லை என கதறியதும் காட்சிகளாகி இருந்து.
- அவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கருப்பு இன மக்கள் அமெரிக்காவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் 25 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
அமெரிக்க தடகள ஜாம்பவான் பாபி மோரோ - மறைவு
- அமெரிக்காவின் முன்னாள் ஓட்டப்பந்தய ஜாம்பவான் பாபி மோரோ (வயது 84) உடல்நலக்குறைவால் மே 31-அன்று மரணம் அடைந்தார். இவர் 1956-ம் ஆண்டு
- மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒரே ஒலிம்பிக்கில் இந்த மூன்று பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்ற 4 வீரர்களில் பாபி மோரோவும் ஒருவர். அமெரிக்காவின் ஜெசி ஓவன்ஸ், கார்ல் லீவிஸ், ஜமைக்காவின் உசேன் போல்ட் ஆகியோரும் இச்சாதனை பட்டியலில் உள்ளனர். 1956-ம் ஆண்டில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட பாபி மோரோ தனது காலத்தில் 11 உலக சாதனைகளை படைத்திருந்தார்.
முக்கிய தினங்கள்
ஜூன் 1 - உலக பால் தினம்
- உலகளாவிய உணவாகவுள்ள பாலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக, உணவு மற்றும் வேளாண் அமைப்பால், ஆண்டுதோறும் ஜூன் 1 ம் தேதி அன்று
- உலக பால் தினம் (World Milk Day) கடைபிடிக்கப்படுகிறது.
- 2020 கருப்பொருள்: 'The 20th Anniversary of World Milk Day'.
ஜூன் 1 - உலக பெற்றோர் தினம்
- ஐ. நா. அவை ஆண்டுதோறும் ஜூன் 1 ஆம் தேதி அன்று "உலக பெற்றோர் தினம்" (Global Day of Parents) கடைபிடிக்கப்படுகிறது.
- 2020 கருப்பொருள்: “Appreciate all parents throughout the world”.
ஜூன் 1, 1888 - சர் ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்த தினம்
- சர் ஏ.டி.பன்னீர்செல்வம், திருவாரூர் அருகேயுள்ள பெரும்பண்ணையூர் என்ற செல்வபுரத்தில், 1888 ஜூன் 1-ஆம் தேதி பிறந்தவர்.
- இங்கிலாந்தில் உள்ள, கேம்பிரிட்ஜ் பல்கலையில், 'பாரிஸ்டர்' பட்டம் பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.கடந்த, 1916-இல், நீதிக்கட்சி துவங்கப்பட்டபோது, அதில் இணைந்து செயல்படத் துவங்கினார். தஞ்சை நகராட்சி தலைவர், ஜில்லா போர்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
- 1930-1939-இல், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகவும், நிதி மற்றும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1930ல், லண்டனில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றார்.
- இரண்டாம் உலகப்போரின் போது, ஆங்கில அரசின் போர்க்கால அமைச்சரவைக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். ஆங்கில அரசு, அவருக்கு, 'ராவ் பகதுார், சர்' பட்டங்களை வழங்கி சிறப்பித்தது. 1940 மார்ச் 1-ஆம் தேதி, ஓமனில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.
Download this article as PDF Format