TNPSC Current Affairs June 2, 2020 - Download as PDF

 நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2, 2020 
 
TNPSC Current Affairs June 2, 2020 - Download as PDF
இந்திய நிகழ்வுகள்
பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பார் நிதி திட்டம்
  • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 1-அன்று நடைபெற்றது. அதில், 50 லட்சத்துக்கு மேற்பட்ட சாலையோர, நடைபாதை வியாபாரிகளுக்கு பலனளிக்கும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • ரூ.20 ஆயிரம் கோடி திட்டம்: மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (MSME) ரூ.20 ஆயிரம் கோடி தொகுப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டது.
  • வரையறை மாற்றம்:நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.50 கோடிவரை முதலீடும், ரூ.250 கோடிவரை விற்றுமுதலும் கொண்டவை நடுத்தர நிறுவனங்களாக கருதப்படும்.
  • குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு: 2020-2021 சாகுபடி ஆண்டில், நெல், பருத்தி, பருப்பு, எண்ணெய் வித்துகள், தானியங்களின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • அதன்படி, சாதாரண ரக நெல் மற்றும் கிரேடு ஏ ரக நெல்லின் ஆதார விலை குவிண்டாலுக்கு தலா 53 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பருத்திக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.260 உயர்த்தப்பட்டது.
  • MSME: Micro, Small and Medium Enterprises.
தெருவோர விற்பனையாளர்களுக்கான 'பிரதமரின் சுவாவிதி திட்டம்'
  • இந்திய அரசு 2020 ஜூன் 1-அன்று, தெருவோர அல்லது நடைபாதை விற்பனையாளர்களுக்கு என, பிரதான் மந்திரி சுவாவிதி திட்டத்தை (PM SVANidhi) அறிமுகப்படுத்தியது.
  • 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புற தெரு விற்பனையாளர்களுக்கு உதவும் கடன் வசதி திட்டமாகும். இந்த திட்டத்திற்காக ரூ .10,000 கடன் தொகையையும் மத்திய அமைச்சரவை அனுமதித்துள்ளது. தெரு விற்பனையாளர்கள் ஒரு வருடத்திற்குள் இந்த தொகையை மாதத் தவணைகளாக திருப்பித் தரவேண்டும்.
  • PM SVANidhi: PM Street Vendors Atmanirbhar Nidhi 
நாடாளுமன்ற மாநிலங்களவை (18) உறுப்பினர்கள் தேர்தல் ஜூன்-2020
  • நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 18 இடங்களுக்கு உறுப்பினர்களை (M.P.) தேர்ந்து எடுப்பதற்காக 2020 மார்ச் 26-ந் தேதி நடைபெற இருந்த தேர்தல் கொரோனா பாதிப்பின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த தேர்தலை ஜூன் 19-ந் தேதி நடத்தப்படும் என என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
  • இந்த 18 இடங்களுக்கு ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 4 உறுப்பினர்களையும், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து தலா 3 உறுப்பினர்களையும், ஜார்கண்டில் இருந்து 2 உறுப்பினர்களையும், மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் இருந்து தலா ஒரு உறுப்பினரையும் தேர்ந்து எடுக்கப்பட்வுள்ளது.
இந்தியாவில் கொரானா இறப்பு விகிதம் - 2.82% 
  • இந்தியாவில் கொரானா இறப்பு விகிதம் 2.82 சதவிகிதமாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் ஜூன் 2-அன்று தெரிவித்துள்ளார். உலகளாவிய இறப்பு விகிதம் 6.13 சதவீதமாக உள்ளது.
  • கொரானா மீட்பு விகிதம் தற்போது 48.07 சதவீதமாக ஆக உள்ளது, கடந்த ஏப்ரல் 15 அன்று இது 11.42 சதவீதமாக இருந்தது.
பெங்களூரு அருகே 120 அடி உயரத்தில் 'விவேகானந்தரின் சிலை'
  • கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள முத்யாலயா மதுவி நீர்வீழ்ச்சிக்கு அருகே 120 அடி உயரத்தில் விவேகானந்தர் சிலையை கர்நாடக அரசு அமைக்கவுள்ளது. 
  • விவேகானந்தர் சிலை முத்யாலயா மதுவி நீர்வீழ்ச்சிக்கு அருகில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும். இது சுமார் பன்னர்கட்டா தேசிய பூங்காவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் - 2021 மார்ச் மாதம் அமல்
  • ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021-ஆம் ஆண்டு மார்சில் அமல்படுத்தப்படவுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இது வரையில் 17 மாநிலங்கள் இணைந்துள்ளன. 
  • தற்போது மேலும் ஒடிசா ,சிக்கிம், மிசோரம் மாநிலங்கள் இணைந்துள்ளன இதனையடுத்து இத்திட்டத்தில் இணைந்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து உள்ளது என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து உள்ளார்.
மருத்துவமனை வசதிகளை தெரிவிக்கும் 'தில்லி கரோனா' செயலி
  • மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை வசதி, வென்டிலேட்டர் வசதிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் 'தில்லி கரோனா' (Delhi Corona App) என்ற செயலியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஜூன் 2-அன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
DRDO உருவாக்கிய கிருமி நீக்கம் செய்யும் அலகு “அல்ட்ரா ஸ்வாச்” 
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) அல்ட்ரா ஸ்வாச் (Ultra Swachh Booth) என்ற கிருமிநாசினி அலகு பிரிவை உருவாக்கியுள்ளது. 
  • பாதுகாப்பு கவச உடைகள் (PPEs), மின்னணு பொருட்கள், துணிகள் போன்ற பொருட்களை கிருமி நீக்கம் செய்ய இந்த அலகு பயன்படுத்தப்படுகிறது.
  • உருப்படிகளை கிருமி நீக்கம் செய்ய, இந்த ஓசோனேட்டட் ஸ்பேஸ் டெக்னாலஜி (Ozonated Space Technology) எனப்படும் மேம்பட்ட ஆக்ஸிஜனேற்ற செயல்முறையைப் பயன்படுத்துகிறது.
பாதுகாப்பு/ விண்வெளி
அமெரிக்காவின் THAAD ஏவுகணை - சிறு தகவல்
  • THAAD ஏவுகணை என்பது அமெரிக்காவின் உயர் முனையப்பகுதி பாதுகாப்பு ஏவுகணை அமைப்பாகும். இந்த ஏவுகணை தென் கொரியாவில் அமெரிக்கா அமைத்துள்ளது. THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தென் கொரியாவில் இருப்பதைப் பற்றி சீனா தனது நீண்டகால ஆட்சேபனைகளை மீண்டும் வலியுறுத்தி வருகிறது. 
  • தென் கொரியா மற்றும் ஜப்பான் மீது அமெரிக்கா தனது செல்வாக்கை இதன்மூலம் செலுத்துகிறது என்றும், இது பிராந்தியத்தில் சீனாவின் நீண்டகால இராஜதந்திர, இராணுவ மற்றும் பொருளாதார நலன்களை பாதிக்கும் என சீனா கருதுகிறது.
  • THAAD: Terminal High Altitude Area Defense.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் 'இணைந்த NASA வீரர்கள்'
  • அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, 'க்ரூ டிராகன்' (Crew Dragon) விண்கலத்தை ஏந்திச் செல்லும், 'பால்கன் 9' ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது. 
  • புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவு தளத்தில் இருந்து, இந்திய நேரப்படி, மே 31-அன்று பால்கன் 9 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • அந்த விண்கலத்தில், NASA விண்வெளி வீரர்களான, பாப் பென்கென் (வயது 49), மற்றும் டக் ஹர்லி (வயது 53), இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விண்கலம், 19 மணி நேர பயணத்திற்குப் பின் விண்வெளியில் நிலைகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டது. 
  • வீரர்கள் இருவரும், சர்வதேச விண்வெளி மையத்திற்குள் நுழைந்துள்ளனர். அவர்களை, அங்குள்ள NASA விண்வெளி வீரர் கிரிஸ் கேசிடி உட்பட, 63-வது விண்வெளி ஆய்வு குழுவை சேர்ந்தவர்கள் வரவேற்றனர். 
  • வரலாற்றில் முதன் முறையாக, தனியார் ராக்கெட் மூலம், விண்ணிற்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள், பாப் பென்கெனும், டக் ஹர்லியும், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்து உள்ளனர்.
'எனது வாழ்க்கை - எனது யோகா' வீடியோ பிளாக்கிங் போட்டி
  • ஆறாவது சர்வதேச யோகா தினம் (International Day of Yoga) 2020 ஜூன் 21-அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு “எனது வாழ்க்கை - எனது யோகா” (My Life, My Yoga/Jeevan Yoga) என்ற வீடியோ பிளாக்கிங் போட்டியை, ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ICCR) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. போட்டியாளர்கள், ஆசனம், கிரியா, பந்தா, பிராணாயாமம், முத்ரா போன்ற யோகப் பயிற்சிகள் தொடர்பாக, மூன்று நிமிட வீடியோவை பதிவேற்ற வேண்டும். 
  • ICCR: Indian Council for Cultural Relations.
நியமனங்கள்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக 'பேரா. இரா.சந்திரசேகரன்' நியமனம்
  • சென்னை தரமணியில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் (CICT) இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் (வயது 47) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்தப் பதவியில் தொடருவார். 
  • சென்னையில் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது முதல் கடந்த 12 ஆண்டுகளாக நிரந்தர இயக்குநர் எவரும் நியமிக்கப்படாத நிலையில் தற்போது அந்தப் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது.
  • செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (2008)
    • 2008-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி முதல் சென்னை தரமணியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனம் ஆகும்.
    • தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் உலகறியச் செய்யும் வகையில் பல்வேறு பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
    • செம்மொழி நிறுவனத்தின் ஆட்சிக்குழு தலைவராக தமிழக முதல்வர் இருக்கிறார். துணைத் தலைவராக பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். 
  • பேராசிரியர் இரா. சந்திரசேகரன்: 
    • பேராசிரியர் சந்திரசேகரனின் சொந்த ஊர் நாமக்கல் அருகில் உள்ள முத்துடையார்பாளையம் ஆகும். கடந்த 20 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் இவர், தற்போது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
    • ஆய்வு நூல்கள், பாடநூல்கள் என 10-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ்,வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல், சமயமும்-தத்துவமும் ஆகிய ஐந்து துறைகளில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார். 
    • தமிழ், சமயம் ஆகிய துறைகளில் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழாய்வுக்காக 2009-ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றுள்ளார்.
  • CICT: Central Institute of Classical Tamil.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
அரபிக்கடலில் "நிசர்கா" புயல் - தகவல்கள்
  • அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஜூன் 2-ஆம் தேதி புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த புயலுக்கு "நிஷர்கா" (Cyclone Nisarga) என்று பெயரிடப்பட்டுள்ளது. 
  • ஜூன் 4-ஆம் தேதிக்குள் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நிசர்கா என்றால் இயற்கை: 
    • பங்களாதேஷ் நாட்டால் இந்த புயலுக்கு 'நிசர்கா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிசர்கா (Nisarga) என்றால் இயற்கை Nature) என்று பொருள்படும்.
    • 2019 மே 3, 2019 அன்று ஒடிசாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய 'ஃபானி' புயலின் பெயரையும் பங்களாதேஷ் பரிந்துரைத்தது. 
  • தென்மேற்கு பருவமழை 2020: 
    • இந்த ஆண்டு வழக்கம் போல் 2020 ஜூன் 1-ஆம் தேதி கேரளாவில் தேன்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இயற்கை வேளாண்மை/ கார்பன் வரவுகள் - தகவல்கள் 
  • இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் அறிவியலைப் பரப்புவதன் மூலம் '50-60 பில்லியன்' அமெரிக்க டாலர் மதிப்புள்ள கார்பன் வரவுகளை (Carbon Credits) இந்தியா அணுக முடியும் என்று நிதி ஆயோக் (NITI Aayog) துணைத்தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
  • மெய்நிகர் வட்ட-மேசை மாநாடு
    • டெல்லியில் மே 29-அன்று நடந்த 'வேளாண் அறிவியல் மற்றும் மீளுருவாக்கம் வேளாண்மை' (Agroecology and Regenerative Agriculture) குறித்த மெய்நிகர் உயர் மட்ட வட்ட-மேசை மாநாட்டின் போது இதை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் விவரம்:
    • இந்தியாவில், பாரம்பரிய மற்றும் சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மைக்கான நீண்ட வரலாறு உள்ளது.
  • இயற்கை விவசாய மாநிலம்-சிக்கம்
    • சிக்கிம் மாநிலம் உலகின் முதலாவது இயற்கை விவசாய மாநிலமாக (Organic State) விளங்குகிறது. இதற்காக ஐ.நா. எதிர்கால கொள்கை தங்க விருதை (UN Future Policy Gold Award), 2018-ஆம் ஆண்டு பெற்றது.
    • உலகளாவிய நிலப்பரப்பில் வேளாண் உற்பத்தி 40 சதவீதமாக உள்ளது, பூமியின் பல்லுயிர் பெருக்கத்தில் 70 சதவீத திட்டமிடப்பட்ட இழப்புகளுக்கு இது பொறுப்பாகிறுது. 
  • கார்பன் வரவு: 
    • கார்பன் வரவு (carbon credit) என்பது ஒரு அனுமதி ஆகும், அதை வைத்திருக்கும் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவு கார்பன் டை ஆக்சைடு அல்லது பிற கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியேற்ற அனுமதிக்கிறது. ஒரு வரவு ஒரு டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான வெகுஜன உமிழ்வை வெளியேற்ற அனுமதிக்கிறது.
அறிவியல் தொழில்நுட்பம்
தேசிய செயற்கை நுண்ணறிவு (AI) இணையதளம் - தொடக்கம் 
  • 2020 மே 30-அன்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் இந்தியாவின் தேசிய செயற்கை நுண்ணறிவு (AI) இணையதளத்தை www.ai.gov.in என்ற பெயரில் தொடங்கி வைத்தார். இந்த போர்ட்டலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்-ஆளுமை பிரிவு மற்றும் நாஸ்காம் (NASSCOM) நிறுவனம் இணைந்து உருவாக்கியது
  • செயற்கை நுண்ணறிவு பொறுப்பு தேசிய திட்டம்: தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டுவிழா அன்று, இளைஞர்களுக்கான ஒரு தேசிய திட்டத்தை “இளைஞர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பொறுப்பு” (Responsible AI for Youth) என்ற பெயரில் தொடங்கி வைத்தார்.
  • இந்த திட்டத்தின் நோக்கம் இளைஞர்களை ‘AI ready’ ஆக மாற்றுவதும், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு திறன் இடைவெளியைக் குறைக்க உதவுவதும் ஆகும். 
  • www.ai.gov.in: National Artificial Intelligence(AI) Portal.
  • NASSCOM: National Association of Software and Service Companies.
'சாம்பியன்ஸ்' தொழில்நுட்ப தளம் - தொடக்கம்
  • பிரதமர் நரேந்திர மோடி 'சாம்பியன்ஸ்' (CHAMPIONS) என்ற தொழில்நுட்ப தளத்தை 2020 ஜூன் 1-அன்று, தொடங்கிவைத்தார். இந்த இணையதளம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் குறைகளுக்கான (MSME sector) ஓரிடத் தீர்வுமையமாக செயல்படும்.
  • CHAMPIONS: Creation and Harmonious Application of Modern Processes for Increasing the Output and National Strength.
தமிழ்நாடு நிகழ்வுகள்
பட்டாபிராம் 'டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா' - அடிக்கல் நாட்டல்
  • தமிழ்நாடு தொழில் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, ஜூன் 1-அன்று சென்னை தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
  • இப்புதிய டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவானது 10 ஏக்கர் நிலப்பரப்பில், 5.57 லட்சம் சதுரஅடி கட்டட பரப்பளவில், 21 அடுக்குமாடிக் கட்டடமாக அமையவுள்ளது. இப்பூங்கா நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், தொழில் மையங்கள், பொது கட்டமைப்புகள், ஆகாயப் பூங்கா என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.
  • தமிழ்நாட்டின் ஒரு முக்கிய அடையாளமாகவும், சென்னையின் வடபகுதியில் உள்ள இடங்களில் சமூக, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அடித்தளமாகவும் இந்த திட்டம் அமையவுள்ளது.
கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம்
  • கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் ‘கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம்’ என்ற திட்டத்தினை எடப்பாடி பழனிசாமி ஜூன் 1-அன்று தொடங்கி வைத்தார்.
  • இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அவரவர் இருப்பிடத்தில் இருந்தே இணையதளம் மூலம் விரைவாக ரூ.25 லட்சம் வரை 6 சதவீத வட்டி மானியத்துடன் பிணை சொத்து இன்றி கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நல்லப்ப சுவாமி நினைவுத்தூண் திறப்பு 
  • கரகரப்பிரியா ராகத்தின் சக்கரவர்த்தி: வீரபாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்தவரும், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் இசைஞான குருவாக விளங்கியவரும், இந்திய விடுதலை போராட்டத்தின் போது பாரதியாரை போல் ஆங்கில அரசால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டவரும், 'கரகரப்பிரியா ராகத்தின் சக்கரவர்த்தி' என்று போற்றப்பட்டவரும், பாரதியார் கவிதைகள் எழுத ராகங்களை எடுத்து கொடுத்தவரும் பல்வேறு பட்டங்களும், பரிசுகளும் பெற்றவரும், 
  • வாழ்நாள் முழுவதும் இசைக்காகவே தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர் இசைமேதை நல்லப்பசுவாமி ஆவார்.
  • ‘இசை அறிஞர்களாலும், வித்வான்களாலும், இசை மகா சமுத்திரம் என்றும், மாமேதை என்றும் போற்றி புகழப்பட்ட இசைமேதை நல்லப்ப சுவாமிக்கு நினைவுத்தூண் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. 
  • நல்லப்ப சுவாமியின் நினைவுத்தூணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் ஜூன் 1-அன்று திறந்து வைத்தார்.
திரைப்படத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் திட்டம்: அடிக்கல் நாட்டல் 
  • சென்னையை அடுத்த பையனூரில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) உறுப்பினர்களின் நலனுக்காகச் சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 1000 குடியிருப்புகள் கட்டும் பணிகளுக்கு முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஜூன் 1-அன்று அடிக்கல் நாட்டினார்.
  • மேலும், அம்மா படப்பிடிப்பு அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாம் கட்டமாக ரூ. 50 லட்சத்திற்கான காசோலை இன்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியின் வழங்கப்பட்டது.
மரவள்ளிக்கிழங்கு பயிர்களில் 'மாவுப்பூச்சி தாக்குதல்'
  • தமிழகத்தில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ஹெக்டரில் மரவள்ளி பயிரானது.
  • ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறுது. நிகழாண்டில் இதுவரை 70 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி பயிரிடப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மாவுப்பூச்சி தாக்குதலால் மரவள்ளி பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. இந்த பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விளையாட்டு நிகழ்வுகள்
இந்திய விளையாட்டு விருதுகள் - பரிந்துரை விவரம்
  • இந்திய விளையாட்டு வட்டாரத்தில் சிறந்த வீரா், வீரா்களுக்கு ராஜீவ் கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 2016 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பா் 31 தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு சம்மந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்களுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. பரிந்துரை செய்யப்பட்டுள்ள வீர்ர/வீராங்கனைகள் விவரம்:
  • கேல்ரத்னா விருது 
    • அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன் (குத்துச்சண்டை வீரர்)
    • ராணி ராம்பால் (ஆக்கி வீராங்கனை)
  • அர்ஜூனா விருது
    • லவ்லினா போர்கோஹைன், சிம்ரன்ஜித் கவுர், வீரர் மனிஷ் கவுசிக் (குத்துச்சண்டை வீராங்கனைகள்)
    • மோனிகா, ஹர்மண்ப்ரீத் சிங் (ஆக்கி வீராங்கனைகள்).
முக்கிய நபர்கள்
கொரோனா தடுப்பூசி குழுவில் இந்திய விஞ்ஞானி 'சந்திரபாலி தத்தா'
  • இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கொரோனா வைரஸை தடுக்கும் 'ChAdOx1 nCoV-19' என்ற தடுப்பூசியை உருவாக்கி பரிசோதனையில் வைத்துள்ளது. இந்த தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மனித சோதனைகள் இங்கு நடத்தப்படுகின்றன.
  • இத்தடுப்பூசியை உருவாக்கிய வல்லுநர் குழுவின் ஒரு அங்கமாக இந்தியாவைச் சேர்ந்த 34 வயது, சந்திரபாலி தத்தா (Chandrabali Datta) என்பவர் இருந்துள்ளார். இத்தடுப்பூசி பணியில் சந்திரபாலி தர உறுதி மேலாளராக (Quality Assurance Manager) உள்ளார். 
இந்தி திரைப்பட இசையமைப்பாளர் 'வஜித் கான்' மறைவு
  • பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் வஜித் கான் (வயது 42) மும்பையில் ஜூன் 1-அன்று கொரானா பாதிப்பால் காலமானார். சஜித் - வஜித் இரட்டை இசையமைப்பாளர்களாக சல்மான் கானின் Pyaar Kiya To Darna Kya என்கிற படத்தின் மூலம் சஜித் - வஜித் திரையுலகில் இசையமைப்பாளர்களாக அறிமுகமானார்கள்.
முக்கிய தினங்கள்
ஜூன் 2 - தெலுங்கானா மாநில தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கானா மாநிலம் தனது மாநிலம் உருவான தினத்தை (Telangana Statehood Day) ஜூன் 2 அன்று கொண்டாடுகிறது. 
  • இந்திய ஒன்றியத்தின் 28-வது மாநிலமாக தெலுங்கானா மாநிலம், 2014 ஜூன் 2-அன்று உருவாக்கப்பட்டது. 
Download this article as PDF Format
Post a Comment (0)
Previous Post Next Post