TNPSC Current Affairs May 30-31, 2020 - Download as PDF

நடப்பு நிகழ்வுகள் மே 30-31, 2020 

TNPSC Current Affairs May 30-31, 2020 - Download as PDF
 
சர்வதேச நிகழ்வுகள்
கொரோனா பாதிப்பு: உலக உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி இழப்பு
 • கொரோனா வைரஸ் தொற்றுநோயானது உலகளவில் உற்பத்தியில் 8½ டிரில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.637 லட்சம் கோடி) இழப்பை ஏற்படுத்தி விடும். இது 1930-களில் ஏற்பட்ட பெருமந்த நிலைக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலை ஆகும் என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கணித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு - அமெரிக்கா அறிவிப்பு
 • கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் இருப்பதால் அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்ளவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 
 • அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிற்கு ஆண்டிற்கு 450 மில்லியன் டாலர் வழங்கி வந்ததாகவும், இந்த நிதியை வேறு சுகாதார அமைப்பிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 
G7 செயற்கை நுண்ணறிவு குழுவில் இணைந்த அமெரிக்கா 
 • செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டிற்கான நெறிமுறை வழிகாட்டுதல்களை அமைப்பதற்காக அமெரிக்கா, G7 குழுவின் சர்வதேச குழுவில் (G7 partnership on Artificial Intelligence) இணைந்துள்ளது. உறுப்பு நாடுகளின் தொழில்நுட்ப அமைச்சர்களின் மெய்நிகர் சந்திப்பின் பின்னர் இந்தக்குழு தொடங்கப்பட்டது.
 • இந்த குழுவின் நோக்கம் சிவில் சுதந்திரத்தை அச்சுறுத்தும் வழிகளில் சீனாவின் திருகல் தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளும் வகையில் இந்த குழுவில் அமெரிக்காவின் ஈடுபாடு முக்கியமானது ஆகும்.
 • ஜி 7 என்பது உலகின் ஏழு பெரிய பொருளாதாரவள நாடுகளை உள்ளடக்கிய ஒரு சர்வதேச அரசுகளுக்கிடையேயான பொருளாதார அமைப்பாகும், உறுப்பு நாடுகள், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா. 
இந்திய நிகழ்வுகள்
இந்தியாவின் சூரியசக்தி மின்சார விநியோக கட்டமைப்பு திட்டம் - 'ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு கட்டம்' 
 • 'OSOWOG' என்ற 'ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு கட்டம்' என்ற இந்தியாவின் புதிய திட்டத்தை மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான சூரியசக்தி மின்சார விநியோக கட்டமைப்பிற்கான முதலாவது பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
 • மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் 140-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் சூரிய வளங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒன்றோடொன்று இணைக்க மத்திய மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ‘ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு கட்டம்’ என்ற திட்டத்தை இந்தியா முன்மொழிந்தது.
 • இந்த திட்டத்தில் ஒரு பொதுவான பரிமாற்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் சூரிய ஒளி இல்லாத நாடுகளுக்கு சூரியசக்தியை வழங்குவதே இதன் நோக்கம் ஆகும்..
 • OSOWOG: One Sun One World One Grid.
'சிபெட்' நிறுவனத்தின் பெயர் மாற்றம் 
 • 2020 மே 28-அன்று, தமிழ்நாட்டின் சென்னையே தலைமையிடமாக கொண்டு இயங்கும் 'சிபெட்' (CIPET) எனப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் & டெக்னாலஜி (Central Institute of Plastics Engineering & Technology), 'மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி' (Central Institute of Petrochemicals Engineering and Technology) என பெயர் மாற்றப்பட்டுள்ளது. சிபெட் என்பது இந்திய அரசின் வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு முதன்மை தேசிய நிறுவனமாகும்.
 • சிபெட் தலைமையகம்: கிண்டி, சென்னை, 
கார்கிலில் முதலாவது சூரிய இறைவைப்பாசன ஆலை - திறப்பு 
 • இலடாக்கின் ஒன்றியப்பிரதேசத்தின் கார்கில் பகுதியின் முதலாவது சூரிய இறைவைப்பாசன ஆலையை (Solar Lift Irrigation Plant) தொடங்கிவைக்கபட்டது. இகு ஐந்து கிலோவாட் திறன் கொண்டது ஆகும். 
இந்தியாவில் முதன்முதலாக கர்நாடகா அரசின் 'மாநில சுகாதார பதிவேடு' 
 • COVID-19 நெருக்கடிக்கு பின்னர் குடிமக்களின் சுகாதாரத்தை தரப்படுத்த 'மாநில சுகாதார பதிவேடு' (State Health Register) என்ற சுகாதார களஞ்சியத்தை தொடங்கும் மாநிலம் என்ற சிறப்பை கர்நாடக அரசு பெற்றுள்ளது. 
 • ஆரம்ப சுகாதார மைய அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள், கல்வித் துறை ஊழியர்கள் மற்றும் ஆஷா (Accredited Social Health Activist) தொழிலாளர்கள் இணைந்து இந்தப்பணியை மேற்கொள்கின்றனர்.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கருக்கு ரூ. 445 கோடி வழங்க ஒப்புதல் 
 • 2020-21-ஆம் ஆண்டிற்கான சத்தீஸ்கர் மாநிலத்திற்கான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் (Jal Jeevan Mission), ரூ. 445 கோடியை அளிக்க 2020 மே 29-அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
 • 2023-24 க்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் நீர் இணைப்பை வழங்கும் நோக்கத்தை சத்தீஸ்கர் அடைய உதவும் வகையில் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
மத்தியப் பிரதேச அரசின் "ரோஸ்கர் சேது திட்டம்"
 • 2020 மே 28-அன்று, மத்திய பிரதேச அரசு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ரோஜ்கர் சேது யோஜனா (Rojgar Setu Yojana) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது
பராசிட்டமால் மருந்துகள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் 
 • பாராசிட்டமால் செயல் மருந்து பொருட்களின் (Active Pharmaceutical Ingredients) ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்திய அரசு 2020 மே 28-அன்று நீக்கியுள்ளது.
 • தடையை நீக்குவது இப்போது COVID-19 சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது. இதை அடைவதற்காக, 1992-ஆம் ஆண்டின் வெளிநாட்டு வர்த்தக (அபிவிருத்தி மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் பிரிவு 3-ஐ அரசாங்கம் திருத்தியுள்ளது.
ஆதார் அடிப்படையிலான உடனடி 'E-KYC' வழங்கும் முறை அறிமுகம்
 • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதார் அடிப்படையிலான உடனடி 'E-KYC' வழங்கும் முறையை 2020 மே 27-அன்று, அறிமுகப்படுத்தினார். பான் எண் (PAN) ஒதுக்கீடு செய்வதற்கான செயல்முறை காகிதமற்ற மற்றும் கட்டணமின்றி இந்த முறையில் செயல்படுத்தப்பட உள்ளது.
 • E-KYC: Electronic-Know Your Customer.
பாதுகாப்பு/விண்வெளி
INS கலிங்கா கப்பற்படை தளத்தில் ‘அக்னீப்ராஸ்தா’ ஏவுகணை பூங்கா - அடிக்கல்
 • ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள INS கலிங்கா கப்பற்படை தளத்தில் 'அக்னீப்ராஸ்தா' (Agneeprastha) என்ற ஏவுகணை பூங்கா அமைக்கப்படவுள்ளது இந்த பூங்காவிற்கு 2020 மே 29-அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
 • சூரிய சக்தியை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் முன்முயற்சியின் படி 2 மெகாவாட் ஆலையும் இங்கு தொடங்கப்பட்டது. 
 • தேசிய சூரிய திட்டத்தின்படி, 2022-ஆம் ஆண்டில் 100 ஜிகாவாட் (GW) சூரியசக்தி இலக்கை அடைவதற்கான நோக்கமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விருதுகள்
ஐ.நா. இராணுவ பாலின வழக்கறிஞர் விருது பெற்ற 'இந்திய மேஜர் சுமன் கவானி'
 • ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு மே 29 அன்று, இந்திய மேஜர் சுமன் கவானி (Suman Gawani) மற்றும் பிரேசில் கடற்படை அதிகாரி கார்லா மான்டீரோ டி காஸ்ட்ரோ அராஜோ ஆகியோருக்கு 2019-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் இராணுவ பாலின வழக்கறிஞர் விருது வழங்கப்பட்டது.
 • முதல் முறையாக, இந்த விருதை இரண்டு அதிகாரிகள் பகிர்ந்து கொள்கின்றனர்.
 • UNMISS திட்டத்தில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக சுமனுக்கு விருது வழங்கப்படுகிறது.
 • UNMISS என்பது தெற்கு சூடான் நாட்டில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணித்திட்டம் ஆகும். இது 2011-இல் நிறுவப்பட்டது. 2019 மே மாத நிலவரப்படி, சுமார் 15,000 ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 • United Nations Military Gender Advocate of the year award 2019. 
மாநாடுகள்
வன் தன் யோஜனா: கோவிட்-19 பிறகான கற்றல் - இணையக்கருத்தரங்கம் 
 • இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, இராஜஸ்தான் அரசு மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்புடன் (TRIFED) இணைந்து உங்கள் திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள் எனும் திட்டப்படி பழங்குடி மக்களுக்கு உதவும் வகையில் “வன் தன் யோஜனா: கோவிட்-19 பிறகான கற்றல்” (Van Dhan Yojana : Learning For Post Covid-19) பற்றிய விரிவுரைத் தொடர் இணையக்கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளது. 
 • வன் தன் யோஜனா (Van Dhan Yojana) பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் திட்டம் ஆகும். பழங்குடியின பொருட்களின் மதிப்பு கூட்டல் மூலம் பழங்குடியினரின் வருமானத்தை மேம்படுத்துவதற்காக இது 2018 ஏப்ரல் 14-அன்று தொடங்கப்பட்டது.
 • TRIFED: Tribal Cooperative Marketing Development Federation of India.
பிரிக்ஸ் அமைப்பு வரி ஆணைய தலைவர்கள் மாநாடு-2020
 • பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் வரி ஆணைய தலைவர்கள் மாநாடு (BRICS Heads of Tax authorities Meet) காணோலி காட்சி வாயிலாக 2020 மே 29-அன்று நடைபெற்றது. 
 • இம் மாநாட்டை பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைமையான இரஷ்ய நாடு நடத்தியது.
 • இந்த கூட்டத்தில் ரஷ்யா, பிரேசில், இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் வரி ஆணைய தலைவர்கள் பங்கேற்றனர்.
 • இந்தியப் பிரதிநிதியாக நிதி செயலாளர் டாக்டர் அஜய் பூஷண் பாண்டே பங்கேற்றார்.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
வேளாங்கண்ணியில் புதிய நன்னீர் மீன் “புன்டியஸ் சாங்டஸ்” கண்டுபிடிப்பு
 • 2020 மே 25-அன்று, கேரளா சவரா பகுதியில் உள்ள பிஜேஎம் அரசு கல்லூரியில் விலங்கியல் துறையின் தலைவர் பேராசிரியர் மேத்யூஸ் பிளாமூட்டில், தமிழ்நாட்டில் வேளாங்கண்ணி பகுதியில் “புன்டியஸ் சாங்டஸ்” (Puntius sanctus) என்ற சைப்ரினிடே பேரினத்தின் புதிய வகை வெள்ளி நிற சிறிய நன்னீர் மீன் ஒன்றை கண்டுபிடத்துள்ளார்.
அறிவியல் தொழில்நுட்பம்
எஃகு, அலுமினியத்திற்கு மாற்றாக IIT மெட்ராஸ் உருவாக்கியுள்ள 'மெக்னீசியம் அலாய்' 
 • மெட்ராஸ், இந்திய அறிவியல் தொழில்நுட்பக்கழகத்தின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் இணை பேராசிரியர் டாக்டர் சுஷாந்தா குமார் பனிகிராஹியின் ஆய்வுக் குழு, வட டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜீவ் மிஸ்ரா மற்றும் அமெரிக்காவின் ராணுவ ஆராய்ச்சி ஆய்வகத்தின் கே. சொ ஆகியோர் இணைந்து, கார்களில் கார்பன் தடத்தை குறைக்கவும் மற்றும் எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கவும் ஆட்டோமொபைல் துறையில் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு மாற்றாக 'மெக்னீசியம் அலாய்' (Magnesium Alloy) ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்தியா அப்சர்வேட்டரியின் 'CoAST India' டாஷ்போர்ட் அறிமுகம்
 • இந்தியாவின் திறந்த மூல தரவுத்தளமான இந்தியா அப்சர்வேட்டரி, CoAST India என்ற புவியியல் தகவல் அமைப்புடன்-இயக்கப்படும் தகவல் பலகையை (GIS-enabled dashboard), ஆனந்த் நகரை தளமாக கொண்ட வன சூழலியல் பாதுகாப்பு (FES) அமைப்புடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
 • புலம்பெயரும் தொழிலாளர்களின் பாதுகாப்பின் பொருட்டு இந்த தளம் தொடங்கப்பட்டது.
 • CoAST: Collaboration/Covid Action Support Group.
கேரள அரசின் 'கே-ஃபோன்' திட்டம்
 • கேரள அரசின் கே-ஃபோன் திட்டம் (K-FON), 2020 டிசம்பர் மாதத்திற்குள் செயல்படுத்தப்பட உள்ளது என கேரள அரசு 2020 மே 30-அன்று அறிவித்தது. 
 • கே-ஃபோன் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளையும் அலுவலகங்களையும் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்குடன் இணைக்க கேரள அரசு இலக்கு கொண்டுள்ளது. இதை அடைவதற்காக மாநில அரசு ரூ .1548 கோடியை ஒதுக்கியுள்ளது.
 • K-FON: Kerala Fibre Optic Network.
செயற்கை நுண்ணறிவு மெய்நிகர் உதவியாளர் 'பை'
 • இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI), பை (Pai) எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்போட் (chatbot) என்ற மெய்நிகர் உதவியாளரை (Virtual Assistant), மே 27, 2020 அன்று அறிமுகப்படுத்தியது.
 • இந்த சாட்போட் இந்தியாவில் நிதி சேர்க்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • கேள்விகளை பயனர்கள் உரை அல்லது குரல் மூலம் அனுப்பலாம். தற்போது, PAI ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது.
 • இந்த சாட்போட்டை பெங்களூரை தளமாகக் கொண்ட தொடக்கநிறுவனம் கோரோவர் (CoRover) பிரைவேட் லிமிடெட் உருவாக்கியது.
 • NPCI: National Payment Corporation of India.
புத்தக வெளியீடு
‘தி இக்காபாக்’ - ஜே.கே.ரவுலிங்
 • புகழ்பெற்றல Harry Potter புத்தகங்களின் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் (JK Rowling) கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது குழந்தைகளை மகிழ்விப்பதற்காக ‘தி இக்காபாக்’ (The Ickabog) என்ற பெயரில் புதிய இணைய குழந்தைகள் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
 • இந்த புதிய கதை இணையதளத்தில் இலவசமாக 2020 மே 26 முதல் ஜூலை 10 வரை ஒவ்வொரு வாரமும் “தி இக்காபாக்” இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
விளையாட்டு நிகழ்வுகள்
உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பட்டியல்-2020 
 • 2019 ஜூன் 1 முதல் 2020 ஜூன் 1 வரையிலான கடந்த ஒரு வருடத்தில் உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பட்டியல் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. 
வீரர்கள் நாடு விளையாட்டு வருமானம் (USD)
  1. ரோஜர் ஃபெடரர் சுவிட்சர்லாந்து  டென்னிஸ்
106.3 M
 
2. கிறிஸ்டியானா   ரொனால்டோ போர்ச்சுக்கல் கால்பந்து                105 M                            
3. இலயேனல் மெஸ்ஸி அர்ஜெண்டினா  கால்பந்து104 M  
66.  விராட் கோலிஇந்தியா கிரிக்கெட் 26 M  
வீராங்கனைகள் நாடு  விளையாட்டு வருமானம் (USD) 
29. நவோமி ஒசாகா  ஜப்பான்டென்னிஸ் 37.4 M 
33. செரீனா வில்லியம்ஸ் அமெரிக்கா டென்னிஸ் 36 M  
 • விராட் கோலி-66-வது இடம்
 • 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர், விராட் கோலி. கடந்த ஒரு வருடத்தில் ரூ. 196 கோடி சம்பாதித்து 66-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த வருடம் அவர் 100-வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் இந்த வருடம் முன்னேற்றம் அடைந்துள்ளார். 
இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் "ஜெனரல் சந்தீப் முகுந்த் பிரதான்" - பணி நீட்டிப்பு
 • 2020 மே 27-அன்று, இந்திய விளையாட்டு ஆணையத்தின் (Sports Authority of India) இயக்குநர் ஜெனரல் சந்தீப் முகுந்த் பிரதன் அவர்களுக்கு 2 ஆண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது, இது 2020 ஜூன் 6 முதல் நடைமுறைக்கு வரும்.
 • இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) 2,749 கெலோ இந்தியா விளையாட்டு வீரர்களின் கணக்குகளில் 2020-21 முதல் காலாண்டிற்கான கைச்செலவு கொடுப்பனவிற்கு (out of pocket allowance), தலா ரூ. 30,000 டெபாசிட் செய்துள்ளது, 
முக்கிய நபர்கள்
இந்தி திரையுல பாடலாசிரியர் "யோகேஷ் கெளர்" மறைவு
 • இந்தி திரையுலகின் மூத்த பாடலாசிரியரான யோகேஷ் கெளர் (வயது 77) மும்பையில் மே 30-அன்று காலமானார். அவருக்கு .
 • 1943-ல் பிறந்த யோகேஷ் கெளர், 1962-ல் வெளியான Sakhi Robin என்கிற படத்தில் ஆறு பாடல்களை எழுதினார். Anand, Rajnigandha, Chhoti Si Baat, Manzil போன்ற படங்களில் பாடல்கள் எழுதி கவனத்துக்கு வந்தார். கடைசியாக 2018-ல் Angrezi Mein Kehte Hain என்கிற படத்துக்காகப் பாடல் எழுதினார்.
உருது மொழியின் 'மார்க் ட்வைன்' முஜ்தபா உசேன் மறைவு
 • 2020 மே 27-அன்று, தெலுங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல உருது எழுத்தாளர், நகைச்சுவையாளர் முஜ்தாபா உசேன் (வயது 84) காலமானார். இவர் பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்பியவர் ஆவார். ஹுசைன் உருது மொழியின் 'மார்க் ட்வைன்' என்று வர்ணிக்கப்பட்டார். 
முன்னாள் கால்பந்து வீரர் 'ஆர். சண்முகம்' மறைவு
 • மே 23, 2020 அன்று, தமிழ்நாட்டின் முன்னாள் கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான ஆர். சண்முகம் தனது 77 வயதில் காலமானார். சென்னையை சேர்ந்தவரான சண்முகம் 1943-இல் பர்மாவில் பிறந்தவர்.
ஹாங்காங்கின் “சூதாட்ட மன்னர்” ஸ்டான்லி ஹோ மறைவு
 • 2020 மே 26-அன்று, ஆசியாவின் பணக்காரர்களில் ஒருவரான ஸ்டான்லி ஹோ (வயது 98), சொசைடேட் டி ஜோகோஸ் டி மக்காவ் (எஸ்.ஜே.எம்) ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவரும், சூதாட்ட தலைநகர் மக்காவின் கேசினோ கிங்பின் என்று பிரபலமாக அறியப்பட்டவர் ஸ்டான்லி ஹோ (Stanley Ho). இவர் 1921 இல் ஹாங்காங்கில் பிறந்தார்.
முக்கிய தினங்கள்
மே 28 - உலக பசி தினம் (World Hunger Day).

மே 28 - உலக மாதவிடாய் சுகாதார தினம் (World Menstrual Hygiene Day).
 • 2020-ஆம் ஆண்டின் கருப்பொருள்: 'Periods in Pandemic – it is time to take action'.
மே 29 - சர்வதேச எவரெஸ்ட் தினம் 
 • சர்வதேச எவரெஸ்ட் தினம் (International Everest Day) ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று காத்மாண்டு, நேபாளம் மற்றும் எவரெஸ்ட் பிராந்தியத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
 • 1953 மே 29-அன்று நியூசிலாந்தைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கே ஷெர்பா ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர். இதன் நினைவாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
 • எவரெஸ்ட் சிகரம கடல் மட்டத்திலிருந்து 8,848 மீ உயரத்தில் நேபாள நாட்டில் அமைந்துள்ளது.
 • 1830 முதல் 1843 வரை இந்திய சர்வேயராக இருந்த ஜெனரல் சர் ஜார்ஜ் எவரெஸ்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த மலைக்கு ‘எவரெஸ்ட்’ என்று பெயரிடப்பட்டது.
மே 29 - உலக செரிமான சுகாதார தினம் (World Digestive Health Day).
 • 2020-ஆம் ஆண்டின் கருப்பொருள்: “Gut Microbiome – A Global Perspective”.
மே 30 - உலக வேப் தினம் 
 • உலகெங்கிலும் வாப்பர்கள் எனப்படும் மின்-சிகரெட் பயன்படுத்துபவர்களால் உலக வேப் தினம் (World Vape Day) கடைபிடிக்கப்படுகிறது. உலக புகையிலை இல்லாத தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மே 30 - கோவா மாநில தினம்
 • 2020 மே 30-அன்று, கோவா தனது மாநில தினத்தை (Goa Statehood Day) கொண்டாடியது. இந்திய ஒன்றியத்தில் 1987 மே 30-அன்று கோவா 25-வது மாநிலமாக இணைந்தது.
 • 1947 ஆகஸ்ட் 15-இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது போர்த்துகீசியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கோவா பிராந்தியத்தை இந்தியாவிற்கு விட்டுக்கொடுக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டது. இருப்பினும், போர்த்துகீசியர்கள் மறுத்துவிட்டனர். 
 • 1961-ஆம் ஆண்டில், இந்திய அரசு ஆபரேஷன் விஜய் நடவடிக்கையை துவக்கி, தாமன் மற்றும் டையு தீவுகள் மற்றும் கோவாவை இந்திய நிலப்பரப்புடன் இணைத்தது. 1987 மே 30-அன்று பிரதேசம் பிரிக்கப்பட்டு கோவா மாநிலம் உருவாக்கப்பட்டது.
 • தமன் மற்றும் டியு யூனியன் பிரதேசமாக இருந்தனர். கொங்கனி மாநிலத்தின் உத்தியோகபூர்வ மொழி.
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் 
 • உலக சுகாதார நிறுவனம் 1987-ம் ஆண்டு முதல் மே மாதம் 31-ந்தேதியை புகையிலை எதிர்ப்பு தினமாக (World No Tobacco Day) கடைபிடிக்கிறது. 
 • புகையிலை எதிர்ப்பு, புகைபிடிப்பதல் பற்றிய விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது. 
 • 2020-ஆம் ஆண்டின் கருப்பொருள்: “Protecting youth from industry manipulation and preventing them from tobacco and nicotine use”.
 Download this article as PDF Format
Post a Comment (0)
Previous Post Next Post