கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டம் - தொடக்கம்

  • 2020 ஜூன் 20-அன்று, பிரதமர் நரேந்திர மோடி பாரிய கிராமப்புற பொதுப்பணித் திட்டமான கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் (Garib Kalyan Rojgar Abhiyan) என்ற திட்டத்தை காணொலி காட்சி வழியாக தொடங்கிவைத்தார்.  இந்த கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தின் கீழ் 25 திட்டங்கள் ஒன்றிணைக்கப்படுகிறது.  
  • பிகாரில், ககரியா மாவட்டத்தில் உள்ள தேலிகா் கிராமத்தில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 
  • புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஆதரவை வழங்குவதன் மூலம் நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக நாட்டின் கிராமப்புறங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார தாக்கத்தை குறைப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிராமப்புற பொதுப் பணி திட்டங்களில் அவா்களுக்கு 125 நாள்கள் வேலை வழங்கப்படவுள்ளது. பிகாா், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், ஒடிஸா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இந்த திட்டப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளுக்காக, 25,000 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தோந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • அதன்படி, புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு 125 நாள்களில் 25 வகையான வேலைகள் வழங்கப்படும். அவா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன் ரூ.50,000 கோடியில் கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
  • ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், சாலைப் போக்குவரத்து, சுரங்கம், குடிநீா் மற்றும் துப்புரவுத் துறை, சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம், மரபுசாரா எரிசக்தி, எல்லைச் சாலைகள், தொலைத்தொடா்பு, விவசாயம் ஆகிய 12 துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்தத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்படவுள்ளன.
  • கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான், 2020 மே மாதத்தில் மத்திய அரசு அறிவித்த 20 டிரில்லியன் நிவாரணப் தொகுப்பு திட்டமான ஆத்மநிர்பார் திட்டத்தின்  ஒரு பகுதியாகும்.
Post a Comment (0)
Previous Post Next Post