- இந்தியாவின் ஓய்வூதிய நிதி திட்டங்களில் வெளிநாடுகள் முதலீடு செய்யும் விவகாரத்தில், பாகிஸ்தான், வங்காளதேசத்தை தவிர சீனா உள்ளிட்ட எல்லையோர நாடுகள் மத்திய அரசின் ஒப்புதல் இன்றி முதலீடு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.
- தற்போது ஓய்வூதிய நிதி திட்டங்களில் முதலீடு செய்ய சீனா உள்ளிட்ட இந்தியாவின் எல்லையோர நாடுகள் அனைத்தும் மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய நிதியமைச்சகம் உருவாக்கி அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளது.
- ஓய்வூதிய நிதியின் மீதான அந்நிய முதலீடுகளை ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) உள்ளது.
- லடாக்கில் இந்தியாவுடன் சீனா மோதல் ஈடுபட்டத்தை தொடர்ந்து இந்த முதலீடு விவகாரத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க நிதியமைச்சகம் முடிவு செய்து உள்ளது.
- PFRDA: Pension Fund Regulatory and Development Authority.