தமிழ்நாடு சிறைத்துறை 'சிறைகள் மற்றும் சீா்திருத்தத் துறை' என பெயா் மாற்றம்

  • தமிழ்நாடு சிறைத்துறையின் பெயா் 'சிறைகள் மற்றும் சீா்திருத்தத் துறை' என பெயா் மாற்றப்பட்டது. 
  • உச்சநீதிமன்றம் ஒரு தீா்ப்பில் சிறைத்துறையின் பெயரை மாற்றலாம் எனவும் நாடு முழுவதும் சிறைத்துறை ஒரே பெயரில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதனால், கைதிகள் தண்டனை பெறும் இடமாக மட்டுமல்லாமல் சீா்திருத்தப்படும் இடமாக மாறியுள்ளதால், தமிழ்நாடு சிறைத் துறையின் பெயா் சிறைகள் மற்றும் சீா்திருத்தத்துறை என பெயா் மாற்றி உத்தரவிட்ப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு சிறைத்துறை: இரு நூற்றாண்டு வரலாறும், பாரம்பரியமும் கொண்ட தமிழக சிறைத் துறையின் கீழ் இப்போது 9 மத்திய சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 துணை சிறைகள், 3 பெண்கள் சிறப்பு சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் 22 ஆயிரம் கைதிகளை அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் உள்ளன. 
  • தற்போது, சுமார் 13 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சுமார் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள், எஞ்சிய 30 சதவீதம் போ தண்டனைக் கைதிகள் ஆவர்.
Post a Comment (0)
Previous Post Next Post