GK Tamil Current Affairs March 11-12, 2020 (Tamil) - Download as PDF

GK Tamil/TNPSC Link Current Affairs March 11-12, 2020 (Tamil) PDF

TNPSC Tamil Current Affairs March 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

GK Tamil Current Affairs Today - 13-14 March 2020 (Tamil) PDF 
சர்வதேச நிகழ்வுகள்
பாகிஸ்தான் சுனஹரி மசூதியில் 'பெண்கள் தொழுகை நடத்த' முதல் முறையாக அனுமதி
  • பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுனஹரி மசூதியில் பெண்கள் தொழுகை நடத்துவதற்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அனுமதி மார்ச் 6-அன்று அளிக்கப்பட்டுள்ளது. 
  • கைபா் பாக்துன்கவா மாகாணத் தலைநகா் பெஷாவரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுனஹரி மசூதியில் பெண்கள் நுழைய கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னா் தடை விதிக்கப்பட்டது.
கோஸ்சியஸ்கோ சிகரத்தில் ஏறி 'பாவனா டெஹரியா' சாதனை
  • மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பாவனா டெஹரியா, 2,228 மீட்டா் உயரம் கொண்ட ஆஸ்திரேலியாவின் மிக உயா்ந்த சிகரமான கோஸ்சியஸ்கோ மலையின் உச்சியை மார்ச் 9-அன்று அடைந்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய நிகழ்வுகள்
குஜராத்தில் அமையும் 'பால் - வி' (PAL-V) பறக்கும் கார் நிறுவனம்
  • ஐரோப்பிய நாடான நெதர்லாந்தை சேர்ந்த 'பால் - வி' (PAL-V) என்ற பறக்கும் கார் தயாரிப்பு நிறுவனம், குஜராத்தில், தனது தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. மாநில அரசு இதற்கான அனுமதியை அளித்துள்ளது. 
சென்னை IIT - ரோல்ஸ் ராய்ஸ் ஆராய்ச்சி ஒப்பந்தம் 
  • சர்வதேச அளவில், முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான, 'ரோல்ஸ் ராய்ஸ்' நிறுவனம், உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை IIT கல்வி நிறுவனத்துடன் இணைந்து, ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஆந்திர அரசுப் பள்ளிகளுக்கு 'ஸ்மார்ட் டிவி'
  • ஆந்திர அரசுப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
  • ஜெகனண்ணா கொருமுட்டா மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது, மற்றும் ஜெகனண்ணா வித்யா கணுகா திட்டத்தின் கீழ் இலவசமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
உத்தரப் பிரதேச அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'வங்கி திறன் வளர்ப்புப் பயிற்சி'
  • உத்தரப் பிரதேச அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் திறன் வளர்ப்பாக 2 மற்றும் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வங்கி தொடர்பான திறன் வளர்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கேரள அரசின் ‘I am also digital' டிஜிட்டல் கல்வியறிவு திட்டம் 
  • கேரள மாநிலம் ஒரு பெரிய டிஜிட்டல் கல்வியறிவு பிரச்சாரத்தை (Digital Literacy Programme) ‘நானும் டிஜிட்டல்’ (I am also digital) என்ற தலைப்பில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டம் திருவனந்தபுரம் சிட்டி கார்ப்பரேஷனில் பைலட் திட்டமாக தொடங்கப்படுகிறது.
விலங்குகள் போக்குவரத்து நினைவுச்சின்னம் (பெங்களூரு) 
  • புதுப்பிக்கப்பட்ட விலங்குகள் போக்குவரத்து நினைவுச்சின்னம் (Animal Transport Memorial) இந்திய இராணுவத்தால் சமீபத்தில் பெங்களூரு நகரத்தில் திறக்கப்பட்டது.
  • இந்த நினைவுச்சின்னம். இந்திய இராணுவத்தின் கழுதைகள் மற்றும் குதிரைகளின் இமயமலையில் நடந்த போரின்போது பங்களிப்பு மற்றும் சேவையை குறிக்கிறது. 
  • விலங்கு போக்குவரத்து நினைவு தினம்: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26-அன்று விலங்கு போக்குவரத்து நினைவு தினமாக (Animal Transport Remembrance Day) பரிந்துரைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஜெட்டி சீனிவாஸ் குழு 
  • தீவிர மோசடி புலனாய்வு அலுவலகத்திற்கான (SFIO) விசாரணை கையேட்டை தயாரிப்பதற்காக அரசாங்கம் சமீபத்தில் 12 உறுப்பினர் கொண்ட உயர் மட்ட குழுவை அமைத்தது. கார்ப்பரேட் விவகார செயலாளர் இன்ஜெட்டி சீனிவாஸ் (Injeti Srinivas) இந்த குழுவின் தலைவராக செயல்படவுள்ளார். 
  • வெள்ளை காலர் குற்றங்களுக்கு எதிராக பயனுள்ள விசாரணைகள் (white-collar crimes) மற்றும் ஆய்வுகள் செய்வதற்கான விரிவான கையேட்டை இந்த குழு உருவாக்கும்.
விருதுகள்
துாய தமிழ் பற்றாளர் விருது-2020
  • தமிழ்நாடு அரசின் 'துாய தமிழ் பற்றாளர் விருது'க்கு, மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்: 
  • சி.மணிகண்டன் (கோவை), இரா.அரிதாசு (அரியலுார்), த.ஆரோக்கிய ஆலிவர் ராசா (திருச்சி).
பிசினஸ் லைன் சேஞ்ச்மேக்கர் விருது 2020 - டூட்டி சந்த்
  • புதுடில்லியில் நடந்த 2020 பிசினஸ் லைன் சேஞ்ச்மேக்கர் விருது, சமுதாயத்தில் விரிவான மாற்றத்தைக் கொண்டுவந்ததற்காக இந்திய தடகள வீராங்கனை டூட்டீ சந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) மற்றும் பிசினஸ் லைன் இணைந்து இந்த விருதை வழங்கின. 
  • 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 11.22 வினாடிகளில் தேசிய சாதனை படைத்த இந்தியாவின் வேகமான பெண் டூட்டீ சந்த் ஆவார். 
நியமனங்கள்
பாதுகாப்புத் துறை உளவு அமைப்பு இயக்குநர் - கே.ஜே.எஸ்.தில்லான்
  • பாதுகாப்புத் துறை உளவு அமைப்பின் இயக்குநராக (Defence Intelligence Agency) லெப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ்.தில்லான் (KJS Dhillon) நியமிக்கப்பட்டுள்ளார். 
திட்டக்குழு துணைத்தலைவராக 'சி.பொன்னையன்' நியமனம் 
  • தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத்தலைவராக சி.பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மாநில திட்டக்குழு என்பது முதலமைச்சர் கீழ் இயங்கும் குழு ஆகும். முன்னுரிமை இனங்களில் தமிழக அரசுக்கு ஆலோசனை கூறும் வகையில் மாநில திட்டக்குழு துணை தலைவரை நியமிப்பது வழக்கம் ஆகும்.
மாநாடுகள்
பெண் தொழில்முனைவோரை மேம்படுத்தும் மாநாடு 2020
  • புதுடில்லியில் உள்ள FICCI-flo, CII, India SME Forum போன்ற பல்வேறு தொழில் அமைப்புகளுடன் MSME அமைச்சகம் இணைந்து பெண் தொழில்முனைவோரை மேம்படுத்தும் மாநாடு (Conference on Empowering Women Entrepreneurs) என்ற மூன்று நாள் மாநாடு மார்ச் 8-அன்று நடைபெற்றது. 
பொருளாதார நிகழ்வுகள் 
ஆசியாவின் முதல் பெரும் பணக்காரர் 'ஜேக் மா'
  • மார்ச் 9-அன்று ஒரே நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,942 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. முகேஷ் அம்பானி ஆசியாவின் முதல் பெரும் பணக்காரர் அந்தஸ்தை இழந்தார். அலிபாபா குழுமத்தின் ஜேக் மா மீண்டும் முதலிடம் பிடித்தார்.
புத்தக வெளியீடு 
Adventures of a Daredevil Democrat - நவீன் பட்நாயக் 
  • முன்னாள் ஒடிசா முதலமைச்சர் பிஜு பட்நாயக் அவர்களின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த ‘ஒரு டேர்டெவில் ஜனநாயகவாதியின் சாகசங்கள்’ (Adventures of a Daredevil Democrat) என்ற காமிக் புத்தகம், சமீபத்தில் தற்போதைய முதல்வரும் முன்னாள் மகனும் 'நவீன் பட்நாயக்' அவர்களால் வெளியிடப்பட்டது.
  • ஒடிசா மாநிலம், அவரது பிறந்த நாளை மார்ச் 5 அன்று பஞ்சாயத்து ராஜ் தினமாக (Panchayat Raj Divas) கொண்டாடியது.
Kids Vaayu & Korona புத்தகம் வெளியீடு 
  • கரோனாவில் இருந்து சிறுவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து காமிக்ஸ் புத்தகத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
  • ''குழந்தைகள், வாயு, கரோனா'' (Kids Vaayu & Korona) என்ற பெயரில் முழுக்க முழுக்க காமிக்ஸ் வடிவில் 22 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகம் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. 
அறிவியல் தொழில்நுட்பம் 
அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தின் புதிய திட்டங்கள் 'KIRAN IPR & Vigyan Jyoti' 
  • மகளிர் விஞ்ஞானி திட்டம் 'C' (KIRAN IPR) மற்றும் விக்யான் ஜோதி (Vigyan Jyoti scheme) ஆகியவை எந்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் திட்டங்கள் ஆகும்.
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஒரு புதிய ஹெல்ப்லைன் எண் 011-26565285-ஐ அறிமுகப்படுத்தினார், இது பெண்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் திட்டங்கள் தொடர்பான கேள்விகளுக்கு விடைபெற உதவுவதை நோக்கமாகக் கொண்டது.
விளையாட்டு நிகழ்வுகள்
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்-2020
  • ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, ஆண்டுதோறும் இங்கிலாந்தில் நடத்தப்பட்டு வருகிறது. 2020 சீசனுக்கான போட்டி பர்மிங்காம் நகரில், மார்ச் 11 முதல் 15 வரை நடக்கிறது.
  • பெண்கள் பிரிவில் பி.வி.சிந்து சாய்னா நெவால், மற்றும் ஆண்கள் பிரிவில் ஸ்ரீகாந்த், சாய் பிரணீத், பாருபல்லி காஷ்யப், இளம் வீரா் லக்ஷயா சென் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
  • ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியர்களில் இதுவரை பிரகாஷ் படுகோனே (1980-ம் ஆண்டு), கோபிசந்த் (2001-ம் ஆண்டு) ஆகியோர் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
பெண்கள் T20 கிரிக்கெட் தரவரிசை 10-3-2020
  • பெண்கள் T20 கிரிக்கெட் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது, முதல் 5-இடங்கள் விவரம்:
    1. பெத் மூனி (ஆஸ்திரேலியா)
    2. சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து)
    3. ஷஃபாலி வர்மா (இந்தியா)
    4. சோஃபி டெவின் (நியூஸிலாந்து)
    5. அலிஸா ஹீலி (ஆஸ்திரேலியா)
முக்கிய நபர்கள் 
முன்னாள் மத்திய அமைச்சர் 'ஹன்ஸ் ராஜ் பரத்வாஜ்'
  • இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்த ஹன்ஸ் ராஜ் பரத்வாஜ் (Hans Raj Bhardwaj) சமீபத்தில் காலமானார். அவர் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒன்பது ஆண்டுகள் மாநில அமைச்சராக இருந்தார்.
  • ஹான்ஸ் ராஜ் பரத்வாஜ் இந்தியாவில் கிராமப்புற நீதிமன்றங்கள் (Gram Nyayalayas) என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார். கர்நாடக மற்றும் கேரள ஆளுநராகவும் பணியாற்றினார்.
முக்கிய தினங்கள் 
மார்ச் 12, 2020 - உலக சிறுநீரக தினம் (மார்ச் மாத இரண்டாவது வியாழக்கிழமை)
  • சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை (மார்ச் 12, 2020) உலக சிறுநீரக தினம் (World Kidney Day) கடைப்பிடிக்கப்படுகிறது. 
  • 2020 உலக சிறுநீரக தின மையக்கருத்து: 'Kidney Health for Everyone Everywhere- from Prevention to Detention and Equitable Access to care'.
மார்ச் 12 - தண்டி யாத்திரை தொடங்கிய தினம்
  • 1930 மார்ச் 12, அன்று 80 தொண்டர்களுடன் 386 கி.மீ. குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரையை நோக்கி காந்தி அடிகள் உப்பை எடுக்க யாத்திரை (உப்பு சத்தியாகிரகம்) தொடங்கினார். 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார். 1930 ஏப்ரல் 6-ந் தேதி காந்தியடிகள் கைப்பிடி அளவு உப்பை எடுத்தார்.
Download this article as PDF Format
Previous Post Next Post