GK Tamil Current Affairs March 13-14, 2020 (Tamil) - Download as PDF

GK Tamil/TNPSC Link Current Affairs March 13-14, 2020 (Tamil) PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge 13 and 14 March 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

Our Current Affairs March 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021. 
சர்வதேச நிகழ்வுகள்
WEF உலகளாவிய இளம் தலைவர்கள் பட்டியல் 2020 
  • 5 இந்தியர்கள் இடம்பிடிப்பு: உலக பொருளாதார மன்றம் (WEF), மார்ச் 11-அன்று, தனது 115 இளம் தலைவர்கள் இடம்பெற்ற, 2020-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய இளம் தலைவர்கள் (WEF Young Global Leaders 2020) பட்டியலை அறிவித்துள்ளது. இப்பட்டியலில் 5 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் விவரம்: (இளம் தலைவர்கள் - நிறுவனங்கள்)
  1. பைஜு ரவீந்திரன் (Byju Raveendran) - BYJU’S கற்றல் செயலி நிறுவனம்.
  2. கௌரவ் குப்தா (Gaurav Gupta) - Zomato உணவு தொழில்நுட்ப தொடக்க நிறுவனம்.
  3. ஸ்வப்பன் மெஹ்ரா (Swapan Mehra) - Iora சூழலியல் தீர்வுகள் நிறுவனம்.
  4. வினாட்டி முத்ரேஜா (Vinati Mutreja) - Vinati Organics, சிறப்பு இரசாயன நிறுவனம். 
  5. தாரா சிங் வச்சனி (Tara Singh Vachani) - Antara Senior Living மூத்தோர் வாழ்க்கை தொடர்பான நிறுவனம்.
கொரோனா வைரஸுக்கு எதிராக 'COVID செயல் தளம்' உருவாக்கம் 
  • 2020 மார்ச் 11 அன்று, உலக சுகாதார மன்றம் (WEF) உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் வெல்கம் டிரஸ்ட் (Wellcome Trust) ஆகியவை இணைந்து, கொரோனா வைரஸுக்கு எதிராக செய்ல்படுவதற்கான 'COVID செயல் தளத்தை' (COVID Action Platform) உருவாக்கியுள்ளன.
  • கொரோனா வைரஸின் (COVID-19) ஆபத்து மற்றும் தாக்கத்தைத் தணிக்க, உலகளவில் செயல்படும் ஒருங்கிணைந்த மற்றும் தனியார் துறை இணைந்த தளம் இதுவாகும்.
  • கொரோனா வைரஸ் தொற்று நோய்: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் மார்ச் 11-அன்று, கொரோனா வைரசை (கோவிட்-19) தொற்று நோய் என வகைப்படுத்த முடியும் என்றும், இதுபோன்ற நோய் தொற்றை இதற்கு முன் பார்த்தது இல்லை என்று தெரிவித்தார்.
  • சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. 
  • WEF: World Economic Forum, WHO: World Health Organization.
இந்திய நிகழ்வுகள்
பிரதான் மந்திரி உஜ்வால யோஜனா (PMUY) - சில தகவல்கள் 
  • நாட்டில் மொத்தம் 3 மாநிலங்கள் மற்றும் 5 ஒன்றிய பிரதேசங்களில் மட்டுமே இலவச-மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
  • பாரதீய ஜனதா உறுப்பினர் ரமேஷ் பிதுரி (Ramesh Bidhuri) தலைமையிலான பெட்ரோலியம் தொடர்பான நாடாளுமன்றக் குழு அறிக்கையை அளித்துள்ளது. அறிக்கை விவரம்: 
  • நாட்டில் மொத்தம் 3 மாநிலங்கள் மற்றும் 5 ஒன்றிய பிரதேசங்களில் மட்டுமே இலவச-மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. 2019 செப்டம்பர் வரையில் அரசாங்கம் 8 கோடி LPG இணைப்பு இலக்கை எட்டியுள்ளது. பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் (PMUY) நிறைவடைந்துள்ளது.
  • நாடு முழுவதும் மண்ணெண்ணெய் தொடர்ந்து பயன்படுத்துவதையும், 97% LPG இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
    1. இலவச-மண்ணெண்ணெய் வழங்கும் மாநிலங்கள்: ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஆந்திரா.
    2. ஒன்றிய பிரதேசங்கள்: டெல்லி, சண்டிகர், டாமன் & டியு-தாதர் & நகர் ஹவேலி, அந்தமான் & நிக்கோபார் தீவு மற்றும் புதுச்சேரி.
  • பிரதான் மந்திரி உஜ்வால யோஜனா (PMUY), பிரதமர் நரேந்திர மோடியால் 2016 மே 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. 
  • PMUY: Pradhan Mantri Ujjwala Yojana.
உள்துறை அமைச்சகம் சார்பில் இரண்டு சிறப்புக் குழுக்கள் அமைப்பு
  • மத்திய ஆயுத காவல் படை (CAPF) தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஒப்புதல்களைக் கையாள்வதற்காக 2020 மார்ச் 11 ஆம் தேதி உள்துறை அமைச்சகத்தால் (MHA) இரண்டு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
  • முதல் குழு: முதல் குழு உள்துறை செயலாளர் தலைமையில் செயல்படும், உள்துறை அமைச்சகம் மற்றும் CAPF இடையே முடிவு செய்யப்பட வேண்டிய பிரச்சினைகளை இது கையாளும்.
  • இரண்டாவது குழு: இரண்டாவது குழு எல்லை மேலாண்மை செயலாளர் (Border Management) தலைமையில் செயல்படும்,, கொள்முதல் தொடர்பான விஷயங்களை இக்குழு தீர்க்கும்.
  • இவ்விரு குழுக்கள் அசாம் ரைஃபிள்ஸ் (Assam Rifles) தொடர்பான சிக்கல்களையும் கையாளும்.
  • CAPF: Central Armed Police Force, MHA: Ministry of Home Affairs.
கர்நாடகா பட்டியல் பழங்குடியினர் திருத்த மசோதா - சிறு மாற்றங்கள் 
  • 2019 கர்நாடகாவின் பட்டியல் பழங்குடியினர் ஆணை திருத்த மசோதாவில், மக்களவை மசோதாவில் மேற்கொள்ள பட்ட மாற்றங்களை மாநிலங்களவை அங்கீகரிதுள்ளது
  • 2020 மார்ச் 11 அன்று, 2019 அரசியலமைப்பு (பட்டியல் பழங்குடியினர்) ஆணை திருத்த மசோதாவில் (Constitution (Scheduled Tribes) Order Amendment Bill, 2019) , மக்களவையால் முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தங்கள் விவரம்:
  • முதல் பக்கத்தில் ‘எழுபதாவது’ (seventieth) என்ற வார்த்தையை ‘எழுபது முதல்’ (seventy-first) என்றும், ‘2019’ ஐ ‘2020’ என்றும் மாற்றபட்டுள்ளது.
  • இந்த மசோதா, கர்நாடகாவின் பரிவரா (Parivara) மற்றும் தலவாரா (Talawara) பழங்குடி சமூகங்களை (Scheduled Tribes) பிரிவில் சேர்க்கவும், அவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் இட ஒதுக்கீடு மற்றும் பிற சலுகைகளைப் பெறுவதை உறுதிசெய்கிறது.
IIT மாண்டி-யில் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் (TIH) அமைக்க ரூ. 7.25 கோடி அனுமதி 
  • 2020 மார்ச் 11 அன்று, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கு (IIT Mandi), இணைய-இயற்பியல் அமைப்புகளுக்கான தேசிய இடைநிலை திட்டத்தின் (NM-ICPS) கீழ் ரூ .7.25 கோடியை அனுமதித்துள்ளது. 
  • NM-ICPS: National Mission on Interdisciplinary Cyber-Physical Systems.
தனியார் பல்கலைக்கழகங்கள் தர வரிசை பட்டியல்: வி.ஐ.டி. முதலிடம்
  • இங்கிலாந்து நாட்டின் QS தரவரிசை அமைப்பு, 2020-ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டின் வேலூர் வி.ஐ.டி. (VIT) பல்கலைக்கழகம் 450 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. இந்திய அளவில் தனியார் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் வி.ஐ.டி.க்கு முதலிடம் கிடைத்துள்ளது. 
பஞ்சாப் அரசின் “கோவா பஞ்சாப்” (Cova Punjab) மொபைல் செயலி 
  • பஞ்சாப் அரசு “கோவா பஞ்சாப்” (Cova Punjab) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • கொரோனா வைரஸ் (Corona virus) நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த செயலி ஆகும்.
ஷாதி பாக்யா திட்டம்
  • சமீபத்தில் செய்திகளில் வெளிப்பட்ட ‘ஷாதி பாக்யா திட்டம்’ (Shaadi Bhagya Scheme) கர்நாடகா மாநிலத்தின் திட்டமாகும். 
  • கர்நாடகாவில் உள்ள மாநில அரசு சமீபத்தில் 2013-ல் மாநிலத்தில் தொடங்கப்பட்ட ஷாதி பாக்யா திட்டத்தை நிறுத்தியது. இத்திட்டத்தின் கீழ், முஸ்லீம் மணப்பெண்கள் தங்கள் ஆதார் மற்றும் பிபிஎல் அட்டைகளை சமர்ப்பிக்கும் போது திருமண செலவுகளுக்காக ரூ .50,000 நிதி உதவி வழங்கப்பட்டது. 
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் 'e-VBAB' நெட்வொர்க் திட்டம் 
  • இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இ-வித்யபாரதி (e-VidyaBharati) மற்றும் இ-ஆரோகிய பாரதி (e-AarogyaBharati) ஆகியவை இணைந்த 'e-VBAB' நெட்வொர்க் திட்டத்தில் சமீபத்தில் 16-வது உறுப்பினராக காம்பியா நாடு இணைந்தது.
  • தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (TCIS) சமீபத்தில் திட்டங்களுக்காக காம்பியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • TCIL என்பது 'e-VBAB' நெட்வொர்க் திட்டத்திற்கான செயல்படுத்தும் நிறுவனம் ஆகும், இது ஆப்பிரிக்க நாடுகளுக்கு தோலை-மருந்து மற்றும் தொலை கல்வி சேவைகளை (Tele-medicine and Tele-Education Services) வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • TCIL: Telecommunications Consultants India Ltd.
தாரமதி (Taramati), பிரேமமதி (Premamati) கல்லறைகள் புனரமைப்பு திட்டம் 
  • சமீபத்தில் செய்திகளில் வந்த தாரமதி (Taramati) மற்றும் பிரேமமதி (Premamati) ஆகிய கல்லறைகள் எந்த தெலுங்கானா மாநிலத்தில் உள்ளன. 
  • தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டின் குத்ப் ஷாஹி கல்லறைகளை, அமெரிக்க நிதியுதவியுடன் புனரமைக்கும் திட்டம் அண்மையில் நிறைவு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் அறிவித்தார்.
ஒடிசா அரசின் சுய உதவிக்குழுக்களுக்கான பிரத்யேக துறை “மிஷன் சக்தி” 
  • “மிஷன் சக்தி” (Mission Shakti) என்று அழைக்கப்படும் சுய உதவிக் குழுவிற்கான தனிப்பட்டத் துறையை ஒடிசா மாநிலம் அமைக்கவுள்ளது.
  • சுய உதவிக்குழுக்களுக்கான பிரத்யேக துறை அமைக்கும் முதல் மாநிலம் என்ற சிறப்பை ஒடிசா பெற்றுள்ளது.
ஆந்திரா அரசின் மொபைல் செயலி ‘நைகா’ (NIGHA) 
  • தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்கான மொபைல் செயலி ‘நைகா’ (NIGHA) ஆந்திரா மாநில அரசின் முன்முயற்சி திட்டமாகும்.
உச்சநீதிமன்றத்தில் 'A4 காகித மனுக்கள் மட்டும் ஏற்பு 
  • இரு பக்கங்களும் அச்சடிக்கப்பட்ட A4 அளவு காகிதங்களில் அளிக்கப்படும் மனுக்கள் மட்டுமே ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 
பெண்களால் இயக்கப்படும் ‘பிங்க்’ நிற பேருந்துகள் 
  • 1 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெரிய நகரங்களில், முழுவதும் பெண்களுக்காக இயக்கப்படும் ‘பிங்க்’ நிற பேருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டும். இதில் ஓட்டுநா், நடத்துனா் பணியிலும் பெண்களே இருப்பாா்கள். 
  • இந்தப் பேருந்துகள் இப்போது உத்தரப் பிரதேசத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனை பிற மாநிலங்களிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி யோசனை தெரிவித்துள்ளாா்.
கரோனா வைரஸ் - இந்தியாவில் முதல் மரணம்
  • சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் மொஹம்மது ஹூசைன் சித்திக் சிகிச்சைப் பலனின்றி மார்ச் 11-அன்று உயிரிழந்தார். கரோனா வைரஸால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு முதல் பலியாக இது கருதப்படுகிறது. 
  • கொவைட்-19 பெருந்தொற்றுநோய்: கரோனா வைரஸ் "கொவைட்-19 பெருந்தொற்றுநோய்" என்று ஹரியாணா அரசு மார்ச் 12-அன்று அறிவித்துள்ளது. 
இந்தியாவின் முதல் டிஜிட்டல் பார்சல் லாக்கர் சேவை - கொல்கொத்தாவில் தொடக்கம் 
  • இந்திய அஞ்சல்துறை, இந்தியாவின் முதல் டிஜிட்டல் பார்சல் லாக்கர் சேவையை (Digital Parcel Locker Service) மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தியது. 
  • சால்ட் லேக் சிட்டியின் பிரிவு 5-இல் உள்ள நபாடிகாந்தா IT தபால் அலுவலகம் மற்றும் நியூ டவுன் ஆக்ஷன் பகுதி அலுவலகம்-I ஆகிய இரு தபால் அலுவலங்களில் துவக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிகழ்வுகள் 
SBI வங்கியில் 'குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்க தேவையில்லை' அறிவிப்பு
  • பாரத ஸ்டேட் வங்கி (SBI) எல்லா சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்க தேவையில்லை என்று மார்ச் 11-அன்று அறிவித்தது. எஸ்.எம்.எஸ். கட்டணத்தையும் ரத்துசெய்துள்ளது. 
  • சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதத்தை ஒரே மாதிரியாக 3 சதவீதமாக குறைத்துள்ளது. 
அறிவியல் தொழில்நுட்பம் 
உலகின் முதல் டிஜிட்டல் தீர்வுகள் பரிமாற்ற மேகக்கனிணி 'GOKADDAL'
  • உலகின் முதல் டிஜிட்டல் தீர்வுகள் பரிமாற்ற மேகக்கனிணி 'கோகடால்' (GOKADDAL) இந்தியாவில் தொடங்கப்பட்டது.
  • மேகக்கனிணி அடிப்படையிலான பரிமாற்ற தீர்வுகள் தளமான இந்த www.gokaddal.com வலைத்தளம் முக்கியமாக ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, அனலிட்டிக்ஸ் மற்றும் ஆக்மென்டேடிவ் டெக்னாலஜிஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • மார்ச் 11-அன்று ரவீந்தர் பால் சிங் (Ravinder Pal Singh) தலைமையிலான துபாயை தளமாகக் கொண்ட 'கோகடால்' நிறுவனம் உலகின் முதல் டிஜிட்டல் தீர்வுகள் பரிமாற்ற மேகக்கனிணி அமைப்பை உருவாக்கியுள்ளது. கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள மெகாடோ குழுமத்தின் (Mekado Group) ஒரு பகுதி நிறுவனம் GOKADDAL ஆகும்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
தமிழ்நாட்டில், வனப்பரப்பு அதிகரிப்பு
  • தமிழ்நாட்டில், தீவிர காடு வளர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக வனப்பரப்பு 2017-ம் ஆண்டில் 26 ஆயிரத்து 281 ச.கி.மீட்டரில் இருந்து 2019-ம் ஆண்டில் 26 ஆயிரத்து 364 ச.கி.மீ ஆக அதிகரித்துள்ளது. 
  • மரங்கள் பரப்பளவு 2017-ம் ஆண்டில் 4,671 ச.கி.மீட்டரில் இருந்து 2019-ம் ஆண்டில் 4,830 ச.கி.மீ ஆக அதிகரித்துள்ளது.
  • 2017-ம் ஆண்டின் இந்திய வன நிலை அறிக்கையுடன் ஒப்பிடுகையில் 2019-ம் ஆண்டில் 83.02 ச.கி.மீ. வனப்பரப்பு அதிகரித்துள்ளது.
  • தமிழ்நாட்டில் புலிகள் எண்ணிக்கை - அதிகரிப்பு: மாநிலத்தில் பல்லுயிர் மற்றும் உயிர்ப் பன்மையை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நடப்பு 2020-21-ம் ஆண்டில் ரூ.920.56 கோடி நிதியில் தொடங்கப்பட உள்ளது.
  • தமிழ்நாட்டில் “காடுகளின் வளம் காட்டி” என அழைக்கப்படும் புலிகளின் எண்ணிக்கை 2014-ம் ஆண்டில் 229-ல் இருந்து 2018-ம் ஆண்டில் 264-ஆக அதிகரித்துள்ளது. மேற்கொண்ட தகவல்களை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021
  • இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 
  • தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொருவரும் 31 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு 'இணைய வழியில் பயிற்சி'
  • பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு பின், ‘இ-பாக்ஸ்’ எனும் நிறுவனம் இணையவழி வாயிலாக நீட் தேர்வுக்காக, 412 பயிற்சி மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தவுள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்
இரஞ்சி கோப்பை கிரிக்கெட் 2020: 'செளராஷ்டிரா அணி' சாம்பியன் 
  • 2019-2020-ஆம் ஆண்டுக்கான 86-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் (டெஸ்ட்) கோப்பையை சௌராஷ்டிரா அணி வென்றது. (2019–20 Ranji Trophy).
  • பெங்கால்-சவுராஷ்டிரா அணிகள் இடையே ராஜ்கோட்டில் நடைபெற்ற இறுதி ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் ‘சாம்பியன்’ பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றியது.
  • செளராஷ்டிரா முன்பு நவநகர், மேற்கு இந்தியா என்ற பெயரில் ஒருங்கிணைந்த அணியாக இருந்த போது முறையே 1936-37 மற்றும் 1943-44-ம் ஆண்டுகளில் ரஞ்சி கோப்பையை கைப்பற்றி இருந்தது.
  • 2019 டிசம்பர் 9-முதல் 2020 மார்ச் 13 வரை நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 38-அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றன.
  • அதிக ரன்கள்: ராகுல் தலால் (1,340)
  • அதிக விக்கெட்டுகள்: ஜெய்தேவ் உனட்கட் (67), ரஞ்சி போட்டியில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை ஜெய்தேவ் உனட்கட் பெற்றார். 
ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது
  • உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடக்கிறது. 
  • ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மார்ச் 12-அன்று நடைபெற்றது. ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஒலிம்பியாவில் நேற்று பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நடிகை ஸாந்தி ஜியார்ஜிவ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். ஒலிம்பிக் ஜோதி அடுத்த 7 நாட்கள் கிரீஸ் நாட்டில் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும். 
  • முதல் நபராக கிரீஸ் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அன்ன கோராககி தீபத்தை ஏந்தி வந்தார். மார்ச்19-ந்தேதி டோக்கியோ போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
டோக்கியோ ஒலிம்பிக்: தகுதி பெற்ற இந்தியர்கள் 
  • குத்துச்சண்டை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்தது. இதில் 9 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர். 
  • 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு 8 இந்தியர்கள் தகுதி பெற்றதே அதிகபட்சமாக இருந்தது. அவர்கள் விவரம்:
  • மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), வீரர்கள் அமித் பன்ஹால் (52 கிலோ), மனிஷ் கவுசிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோ).
  • ஒலிம்பிக் விளையாட்டு போட்டி (2020 Tokyo Olympics) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
  • ஈட்டி எறிதல்: இந்திய வீரர் ஷிவ்பால் சிங் ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 2-வது இந்தியர் ஷிவ்பால் சிங் ஆவார். ஏற்கனவே இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்ததுள்ளார்.
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் 2021 (நியூசிலாந்து)
  • 8 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 2021 பிப்ரவரி 6-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை நியூசிலாந்தில் 6 இடங்களில் நடைபெறுகிறது. 
  • இந்த போட்டிக்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளன.
ICC பெண்கள் T20 உலகக்கோப்பை கனவு அணி: 'பூனம் யாதவ்' இடம்பிடிப்பு 
  • ICC பெண்கள் T20 உலகக்கோப்பை போட்டியின் கனவு/எதிர்கால அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பூனம் யாதவ் பெற்றுள்ளார்.
  • மேலும் கனவு அணியின் 12-வது உறுப்பினராக மற்றொரு இள வயது இந்திய வீரர் ஷஃபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய தினங்கள் 
மார்ச் 14 - உலக பை (π) தினம் 
  • கணிதத்தில் பை (π) யின் மதிப்பு ஏறத்தாழ 3.14 ஆகும். மார்ச் 14 ஆம் தேதி உலக பை ( (π) நாளாக கணிதவியளாலர்களால் உலகம் முழுக்க கடைபிடிக்கப்படுகிறது. 
சா்வதேச யோகா தினம் 2020
  • ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினம் (2020 6th International Day of Yoga Day) கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. லடாக் யூனியன் பிரதேச தலைநகா் லே-வில் 2020 நிகழாண்டு சா்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.
Download this article as PDF Format
    Previous Post Next Post