TNPSC Current Affairs December 16-17, 2019 - View and Download PDF

TNPSC Current Affairs December 16, 2019 and December 17, 2019 for forthcomong various TNPSC and Governmnet exams 2020.

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 16-17, 2019
சர்வதேச நிகழ்வுகள்
உலக அழகி 2019 - டோனி-அன் சிங்
  • 2019-ஆம் ஆண்டுக்கான உலக அழகி (Miss World 2019) போட்டி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது. அதில், ஜமைக்கா நாட்டை சேர்ந்த டோனி-அன் சிங் (Toni-Ann Singh) உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018-ஆம் ஆண்டின் உலக அழகியான வனேஸ்சா கிரீடம் அணிவித்தார்.
  • முதல் 3 இடங்களை பெற்றவர்கள் விவரம்: 
    1. டோனி-அன் சிங் (Toni-Ann Singh) - ஜமைக்கா
    2. ஒபேலி மெசினோ (Ophély Mézino) - பிரான்ஸ்
    3. சுமன் ராவ் (Suman Rao) - இந்தியா
  • 20 வயதான சுமன் ராவ், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.
miss world 2020

2019 ஆண்டின் சிறந்த நபர் - கிரெட்டா துன்பெர்க் 
  • டைம் பத்திரிகை 2019-ஆம் ஆண்டின் சிறந்த நபராக ( 2019 Person of the Year) கிரெட்டா துன்பெர்க் (Greta Thunberg) என்பவரை தேர்வு செய்துள்ளது.
  • கிரெட்டா துன்பெர்க், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16-வயது பெண் சுற்றுச்சுழல் ஆர்வலர் ஆவார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரஃப்-க்கு 'தூக்கு தண்டனை'
  • பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரஃப் (வயது 76) மீதான தேசத் துரோக வழக்கில் தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய நிகழ்வுகள்
தேசிய சுற்றுலா செலவினங்கள் ஆய்வு 2020 
  • தேசிய சுற்றுலா செலவினங்கள் ஆய்வு ஜனவரி 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி 2020 -ஆம் ஆண்டு டிசம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், நாடு முழுவதும் 14ஆயிரம் பேரிடம் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த ஆய்வு முடிவுகள் சுற்றுலாவை மேம்படுத்த பயன்படுத்தப்படவுள்ளன.
3 சமஸ்கிருத மத்திய பல்கலைக்கழகங்கள் 
  • 2019 மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதாவின் கீழ், 3 சமஸ்கிருத நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்றப்படுகிறது.
  • அவை: ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான், போபால், ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீத், புது தில்லி மற்றும் ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீத் திருப்பதி.
கர்நாடக பட்டியல் பழங்குடியினர்: பரிவாரா, தல்வாரா மற்றும் சித்தி 
  • 2019 டிசம்பர் 12 அன்று மாநிலங்களவை 2019 அரசியலமைப்பு (பட்டியல் பழங்குடியினர்) ஆணை (இரண்டாம் திருத்தம்) மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது. 
  • இந்த மசோதா கர்நாடகாவில் உள்ள பட்டியல் பழங்குடியினரின் பட்டியலில், தர்வாட் மற்றும் பெலகாவி மாவட்டங்களைச் சேர்ந்த பரிவர, தல்வாரா மற்றும் சித்தி சமூகத்தைச் சேர்ந்த மூன்று 
  • பழங்குடியினரை சேர்க்க அரசியலமைப்பு (பட்டியல் பழங்குடியினர்) ஆணை முயல்கிறது.
உலக வடிவமைப்பு புரோபோலிஸ் - பெங்களூரு
  • உலக வடிவமைப்பு அமைப்பு (World Design Organization ) தனது உலக வடிவமைப்பு புரோபோலிஸை (World Design Propolis) பெங்களூரு நகரத்தில் தொடங்க உள்ளது. கொச்சி வடிவமைப்பு வாரம் (Kochi Design Week) என்ற பெயரில் கொச்சியில் உள்ள போல்கட்டி தீவில் நடைபெற்ற இந்தியாவின் மிகப்பெரிய வடிவமைப்பு மாநாட்டில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 'InvIT டிரஸ்ட்'
  • சமீபத்தில் நிறுவப்பட்ட “InvIT டிரஸ்ட்” NHAI என்ற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சொந்தமானதாகும்.
  • பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) வழங்கிய வழிகாட்டுதல்களின்படி உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை (InvIT) அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அங்கீகாரம் வழங்கும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • SEBI: Securities and Exchange Board of India, InvIT: Infrastructure Investment Trust(s).
ஆந்திராவில் அமையும் 'மெய்நிகர் காவல் நிலையம்'
  • மெய்நிகர் காவல் நிலையம் (VPS) அமைக்க ஆந்திரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. மெய்நிகர் காவல் நிலையம் ஆந்திர பல்கலைக்கழகத்தில் அமையவுள்ளது.
  • VPS: Virtual Police Station
பாதுகாப்பு/விண்வெளி   
பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரச் சோதனை
  • தரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கக்கூடிய, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பிரம்மோஸ் சூப்பா்சானிக் ஏவுகணையை DRDO அமைப்பு, ஒடிசாவின் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள பலசோர் எனும் கடற்கரைப் பகுதியில், டிசம்பர் 17-அன்று வெற்றிகரமாகச் சோதித்தது. தரை, கடல் மற்றும் வான் ஆகிய 3 நிலைகளில் இருந்து இந்த ஏவுகணையைப் செயல்படுத்த முடியும். 
நியமனங்கள்
புதிய ராணுவ தளபதி 'மனோஜ் முகுந்த் நாராவனே' 
  • இந்திய ராணுவ தளபதியாக உள்ள பிபின் ராவத் வருகிற 31-ந் தேதி ஓய்வுபெறுகிறார். புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நாராவனே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 13 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர்.
மேகாலய மாநில ஆளுநா் (கூடுதல் பொறுப்பு) - ஆா்.என். ரவி
  • நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகிக்கும் ஆா்.என். ரவிக்கு, கூடுதல் பொறுப்பாக மேகாலய மாநில ஆளுநா் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேகாலய ஆளுநா் ததாகத ராய் விடுப்பில் இருக்கிறாா்.
மாநாடுகள்
போலிஸ் பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள் மாநாடு-2019
  • 37-வது போலிஸ் பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள் மாநாடு (National Symposium of Heads of Police Training Institutions 2019), புது தில்லியில் டிசம்பர் 12-13 தேதிகளில் நடைபெற்றது.
தேசிய பழங்குடி நடன விழா 2019
  • சத்தீஸ்கர் தனது முதலாவது தேசிய பழங்குடி நடன விழாவை மாநில தலைநகர் ராய்ப்பூரில் டிசம்பர் 27 முதல் 29 வரை நடத்த உள்ளது.
சர்வதேச புவியியல் காங்கிரஸ் 2020
  • 2020 மார்ச் முதல் வாரத்தில் இந்தியா 36-வது சர்வதேச புவியியல் மாநாட்டை (International Geological Congress) புதுதில்லியில் 2020 மார்ச் 2-8 வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு 'புவி அறிவியல்: ஒரு நிலையான வளர்ச்சிக்கான அடிப்படை அறிவியல்' (Geosciences: The Basic Science for a Sustainable Development) என்ற மையக்கருத்தில் நடைபெறுகிறது.
விருதுகள்
BBC-யின் சிறந்த விளையாட்டு வீரர் விருது 'பென் ஸ்டோக்ஸ்' 
  • 2019-ஆம் ஆண்டுக்கான BBC-யின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை (BBC Sports Personality of the Year 2019) இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பெற்றார். 
  • லீவிஸ் ஹாமில்டன் (பார்முலா-1 கார் பந்தய வீரர்), டினா ஆஷெர் சுமித் (இங்கிலாந்து தடகள வீராங்கனை) ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தனர்.
  • 2018-ஆம் ஆண்டுக்கான BBC-யின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை, சைக்கிள் பந்தய வீரர் 'ஜெரண்ட் தாமஸ்' (Geraint Thomas), பெற்றார்.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
ஐ.நா. பருவநிலை மாநாடு 2019 (COP25)
  • பூமி வெப்பமயமாகும் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக, ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நகரில், ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை-2019 'COP25 Chile' என்ற பெயரில் டிசம்பர் 2-13 வரை நடைபெற்றது.
  • மாரத்தான் மாநாடு: கடந்த 25 ஆண்டுகளில் நீண்ட நாட்களாக நடந்த பருவநிலை பேச்சுவார்த்தை இதுவே ஆகும். 12 நாள்களாக நடைபெற்று வந்த ஐ.நா. மாநாடு எந்த ஒப்பந்தமும் இல்லாமல் தோல்வியில் முடிந்தது.. பூமி வெப்பமயமாதலுக்கு காரணமான பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதிலும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு உதவுவதிலும் பெரிய நாடுகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பேச்சுவார்த்தையின் இறுதியில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. 
  • 2020 மாநாடு (கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து: கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து அடுத்த ஆண்டு (2020) ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 26-ஆவது பருவநிலை மாற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
  • பாரீஸ் ஒப்பந்தம் (2015): உலகின் எதிா்காலத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், வளிமண்டலத்தில் வெளியேற்றும் கலக்கும் 
  • கரியமில வாயுவின் அளவை கணிசமாகக் குறைக்க ஒப்புக்கொண்டு, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் சா்வதேச நாடுகள் கடந்த 2015-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன.
  • புவியின் வெப்ப அதிகரிப்பை வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே கூடுதலாக இருக்கும் வகையில் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்கு.
புத்தக வெளியீடு 
Mind Master: Winning Lessons from a Champion’s Life - Viswanathan Anand
  • இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் “Mind Master: Winning Lessons from a Champion’s Life” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். ஹச்செட் இந்தியா நிறுவனம் டிசம்பர் 11 அன்று இந்த புத்தகத்தை வெளியிட்டது. செஸ் விளையாட்டில் அவர் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. 
பொருளாதார நிகழ்வுகள்  
மாநிலங்களுக்கு GST இழப்பீடு - ரூ.35,298 கோடி
  • மாநில அரசுகளுக்கு GST இழப்பீடாக ரூ.35,298 கோடியை நவம்பர் 16-அன்று மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்தியாவின் ஆறாவது பெரிய எண்ணெய் சப்ளையர் - அமெரிக்கா
  • இந்தியாவின் ஆறாவது பெரிய எண்ணெய் சப்ளையராக (sixth largest oil supplier) அமெரிக்கா மாறியுள்ளது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) நாடுகளுக்கு அப்பால், இந்தியா 2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்கியது.
அறிவியல் தொழில்நுட்பம் 
'Trakea' என்ற பார்கோடிங் மென்பொருள் 
  • ஹரியானா காவல் துறை 'Trakea' என்ற ஒரு தனித்துவமான பார்கோடிங் மென்பொருளை ஏற்றுக்கொண்டுள்ளது. டிஜிட்டல் தடயவியல் அறிக்கைகள் பாதுகாப்பாக சேமிக்கப்படுவதை இந்த மென்பொருள் உறுதிப்படுத்துகிறது. 
தமிழ்நாட்டு நிகழ்வுகள்  
நகராட்சி திடக்கழிவுகளை ஆன்லைன் பரிமாற்றம் செய்யும் முதல் நகரம் 'சென்னை' 
  • நகராட்சி திடக்கழிவுகளை ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்யும் முதல் நகரம் (online waste exchange for municipal solid waste) என்ற சிறப்பை 'சென்னை' நகரம் பெற்றுள்ளது.
  • தங்கள் கழிவுகளை ஆன்லைனில் விற்க விரும்பும் குடியிருப்பாளர்கள் நகரம் முழுவதும் 2,600 ஸ்கிராப் டீலர்களையும் பிற ஏஜென்சிகளையும் தொடர்பு கொள்ள முடியும்.
நாட்டிலேயே சிறந்த கிராமம் 'மொழுகம்பூண்டி'
  • மத்திய அரசால் ‘மிஷன் அந்தியோதயா’ திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டதாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொழுகம்பூண்டி கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பிடித்துள்ளது.
முக்கிய நபர்கள்  
அமெரிக்க பொறியியலாளர் 'ஜார்ஜ் லாரர்'
  • பார்கோடு (barcode) உருவாக்க உதவிய அமெரிக்க பொறியியலாளர் ஜார்ஜ் லாரர் (George Laurer) தனது 94 வயதில் காலமானார். லாரர் Universal Product Code (UPC) அல்லது பார்கோடு இணை கண்டுபிடிப்பாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் கொல்லபுடி மாருதி ராவ்
  • புகழ்பெற்ற தெலுங்கு நடிகரும் எழுத்தாளருமான கொல்லபுடி மாருதி ராவ் (Gollapudi Maruti Rao), டிசம்பர் 12,2019 அன்று சென்னையில் காலமானார்.
விளையாட்டு நிகழ்வுகள்
பேட்மிண்டன்

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் 2019 
  • சீனாவின் குவாங்ஜோவ் நகரில் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி (BWF World Tour Finals 2019) நடைபெற்றது. முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றனர்.
  • சாம்பியன்கள் விவரம்: 
  • பெண்கள் பிரிவு: சென் யூ பே (சீனா) 
  • ஆண்கள் பிரிவு: கென்டோ மோமோட்டா (ஜப்பான்) 
  • அதிக பட்டங்கள் வென்ற வீரர்: 25 வயதான ஜப்பான் வீரர் மோமோட்டா இந்த ஆண்டில் கைப்பற்றிய 11-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் ஒரு சீசனில் அதிக பட்டங்கள் வென்றவரான மலேசியாவின் லீ சோங் வெய்யின் (2010-ம் ஆண்டில் 10 பட்டம்) சாதனையை முறியடித்தார்.
வங்காளதேச பேட்மிண்டன் 2019 - லக்‌ஷயா சாம்பியன்
  • டாக்காவில் நடந்த வங்காளதேச சர்வதேச சேலஞ்சர் பேட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். கடைசியாக விளையாடிய 7 தொடர்களில் லக்‌ஷயா சென் வென்ற 5-வது பட்டம் இதுவாகும். 
கிரிக்கெட்

பாகிஸ்தான் வீரர் அபித் அலி - சாதனை 
  • அறிமுக போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர்: இரண்டு வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் (டெஸ்ட் & ஒருநாள்) அறிமுக போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
  • 10 ஆண்டுக்கு பிறகு நடந்த முதல் டெஸ்ட்: ராவல்பிண்டியில் தொடங்கி நடந்த பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபித் அலி (109 ரன்கள்)
  • சதம் அடித்தார். பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுக்கு பிறகு நடந்த முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
  • அபித் அலி 2019 மார்ச் மாதம் துபாயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக இறங்கி சதம் (112 ரன்) அடித்திருந்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் மற்றும் டெஸ்ட் இரண்டிலும் அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை 32 வயதான அபித் அலி படைத்தார்.
ICC டெஸ்ட் தரவரிசை 2019 

  • சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை டிசம்பர் 16-அந்தியூர் வெளியிட்டது. இந்திய கேப்டன் விராட் கோலி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 928 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்தை தக்க வைத்துள்ளாா். 
மட்டை வீச்சாளர் தரவரிசை (முதல் 3 இடங்கள்) 
  1. விராட் கோலி (இந்தியா), 2. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), 3. கனே வில்லியம்சன் (நியூஸிலாந்து). 
பந்துவீச்சாளர் தரவரிசை (முதல் 3 இடங்கள்
  1. பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), 2. காகிஸோ ரபடா (தென்னாபிரிக்கா), 3. நீல் வாக்னா் (நியூஸிலாந்து). 
ஆல் ரவுண்டா் தரவரிசை
  1. ஜேஸன் ஹோல்டா் (மே.இ.தீவுகள்), 2. ரவீந்திர ஜடேஜா (இந்தியா), 3. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) 
அணிகள் தரவரிசை (முதல் 5 இடங்கள்)
  1. இந்தியா, 2. நியூஸிலாந்து, 3. தென்னாபிரிக்கா, 4. இங்கிலாந்து, 5. ஆஸ்திரேலியா. 
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 360 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 
பெண்கள் (U-23) T20 கிரிக்கெட்: இந்தியா 'B' அணி சாம்பியன் 
  • புதுச்சேரியில் நடைபெற்றநடைபெற்ற பெண்கள் 23 வயதுக்குட்பட்டோா் சேலஞ்சா் கோப்பை T20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 'B' அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
முக்கிய தினங்கள்
வங்காளதேச போர் 'வெற்றி தினம்' - டிசம்பர் 16
  • 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் வெற்றி கொண்டதை நினைவுகூா்ந்தும், தாய் நாட்டுக்காக அா்ப்பணிப்புடன் பணியாற்றி இன்னுயிா் நீத்த முப்படை வீரா்களை நினைவுகூா்ந்தும் ஆண்டுதோறும் டிசம்பர் 16-ஆம் தேதி ‘விஜய் திவஸ்’ என்ற வெற்றி தினம் அனுசரிக்கப்படுகிறது. 
  • இந்த போரின் விளைவாக, கிழக்குப் பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதி ‘வங்காளதேசம்’ என்ற தனி நாடாக உருவானது. 
ஓய்வூதியர் தினம் - டிசம்பர் 17 

பாலியல் தொழிலாளர்கள் மீதான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம் - டிசம்பர் 17 
  • பாலியல் தொழிலாளர்கள் மீதான வன்முறைக்கு முடிவுகட்டும் சர்வதேச தினம் (International Day to End Violence Against Sex Workers) டிசம்பர் 17 அன்று ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.
PDF Download
Previous Post Next Post