TNPSC Current Affairs December 14-15, 2019 - View and Download PDF

TNPSC Current Affairs December 14, 2019 and December 15 2019 for forthcomong various TNPSC and Governmnet exams 2020.

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 14-15, 2019
சர்வதேச நிகழ்வுகள்
உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல்: ஏஞ்சலா மொ்கெல் முதலிடம் 
 • உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை ‘ஃபோர்ப்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தொடா்ந்து 9-ஆவது ஆண்டாக ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் முதலிடத்தில் உள்ளார். 
 • ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவா் கிறிஸ்டீனா லகார்ட் 2-ஆவது இடத்தையும், அமெரிக்க நாடாளுமன்ற கீழவை தலைவா் நான்சி பெலோஸி 3-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனா்.
 • நிர்மலா சீதாராமன் (34): இந்தப் பட்டியலில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன், 34-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ரோஹிங்கயா இனப்படுகொலை/ஆங் சான் சூகி 
 • மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் வசித்து வரும் சிறுபான்மை ரோஹிங்கயா இனத்தினருக்கு அந்த நாட்டு அரசு குடியுரிமை மறுத்து வருகிறது. 2017-ஆம் ஆண்டில் ராணுவம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கையில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனா். வன்முறைக்கு அஞ்சி 7.4 லட்சம் ரோஹிங்கயாக்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனா்.
 • மியான்மரில் இன அழிப்பு நடைபெற்றதாக குற்றம் சாட்டி நெதா்லாந்திலுள்ள சா்வதேச நீதிமன்றத்தில் ஆப்பிரிக்க நாடான காம்பியா வழக்குத் தொடா்ந்தது. ரோஹிங்கயா முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யும் நோக்கில் மியான்மா் ராணுவம் செயல்படவில்லை என்று அந்த நாட்டு அரசின் ஆலோசகா் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் 'உலகின் மிகப் பழைமையான ஓவியம்' கண்டுபிடிப்பு
 • இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் இரு ஆண்டுகளுக்கு முன்னா் கண்டறியப்பட்ட குகை ஓவியம் 43,900 ஆண்டுகளுக்கு முன்னா் வரையப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சுமாா் 13 அடி அகலத்தில் வரையப்பட்டுள்ள அந்த ஓவியத்தில், மிருகங்களை பறவைகள் மற்றும் விலங்குகளின் தலையைக் கொண்டுள்ள மனிதா்கள் வேட்டையாடுவைப் போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
உலகின் முதல் முழுமையான மின்னணு விமானம் - சோதனை 
 • உலகின் முதல் முழுமையான மின்னணு விமானம் (First Fully Electronic Flight) சமீபத்தில் கனடா நாட்டிலிருந்து இயக்கப்பட்டு, டிசம்பர் 10, 2019 அன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
 • உலகின் முதல் முழுமையான மின்னணு விமானம் தனது சோதனை விமானத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இது கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து அருகிலுள்ள தீவுகளுக்கு இயக்கப்பட்டது.
இந்திய நிகழ்வுகள்
‘பாஸ்டேக்’ முறை - அமல் 
 • நாடு முழுவதும், வாகன நெருக்கடியை குறைக்கும் வகையில், டிசம்பர் 15 முதல் ‘பாஸ்டேக்’ (FASTag) முறையில் கட்டணம் வசூலிக்கும் முறை டிசம்பர் 15-முதல் (தேசிய மின்னணு சுங்கவரி வசூல் திட்டம்) அமலாகிறது. தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.
குடியுரிமை சட்டம் 2019 - மாநிலங்களுக்கு நிராகரிக்க அதிகாரம் இல்லை
 • 2019 குடியுரிமை சட்டதிற்கு நவம்பர் 12-அன்று குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார். இதனால் அது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. 
 • இந்தச்சட்டத்தை, சத்தீஸ்கார், கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் அமல்படுத்தமாட்டோம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த சட்டம் அரசியல் சாசனத்தின் 7-வது அட்டவணையின் கீழ் மத்திய அரசு சட்டங்களில் வகைப்படுத்தப்பட்டு உள்ளதால், மாநிலங்களால் அதை நிராகரிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடா் 2019 
 • நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடா் நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 14-அன்று நிறைவுபெற்றது.
 • இது மாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத்தொடா் என்பது தனிச் சிறப்பாகும். 
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5.6 சதவீதம்: மூடிஸ் கணிப்பு 
 • 2019-ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியானது 2018-ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து குறையத் தொடங்கியது. ஜிடிபியானது 8 சதவீதத்திலிருந்து 2019-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன) 5 சதவீதமாக குறைந்து போனது. இது, ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மேலும் வலுவிழந்து 4.5 சதவீதமாக சரிந்தது. 
ICAR-NABARD புரிந்துணர்வு ஒப்பந்தம் 
 • பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான உழவர் மாதிரிகளின் செயல் ஆராய்ச்சி மற்றும் அளவை மேம்படுத்துவதற்கு ICAR மற்றும் NABARD அமைப்புகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நோவேம்பே ர் 3-அன்று கையெழுத்திட்டன.
 • ICAR: Indian Council of Agricultural Research.
 • NABARD: Indian Council of Agricultural Research.
e-Nam திட்டம்
 • 2019 டிசம்பர் 08 நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 1,65,77,210 விவசாயிகள் தேசிய வேளாண் சந்தை (e-Nam platform) மேடை திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 
 • தேசிய வேளாண் சந்தை அல்லது e-NAM என்பது இந்தியாவில் விவசாய பொருட்களுக்கான ஆன்லைன் வர்த்தக தளமாகும்.
 • e-Nam திட்டம், ஏப்ரல் 14, 2016-அன்று தொடங்கப்பட்டது.
ஆந்திர அரசின் 'திஷா' சட்டம் 
 • ஆந்திராவில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் 'ஆந்திரப் பிரதேச திஷா மசோதா-கிரிமினல் சட்டம்' (Disha Bill) இயற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீதான புலன் விசாரணையை 7 நாட்களில் முடித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அடுத்த 14 நாட்களில் நீதிமன்றம் விசாரணையை முடிக்க வேண்டும்.
 • ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெண்களையும், குழந்தைகளையும் பலாத்காரம் செய்பவர்களுக்கு 21 நாட்களில் மரண தண்டனை விதிக்கும் விதமாக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
கட்டாயம் பார்க்க வேண்டிய '138 நினைவுச்சின்னங்கள்'
 • இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI), இந்தியாவில் 138 நினைவுச்சின்னங்களை ‘கட்டாயம் பார்க்க வேண்டிய நினைவுச்சின்னங்கள்’ என அடையாளம் கண்டுள்ளது.
அதிக வேலை செய்யக்கூடிய திறமை உள்ள மாநிலம் - 
 • இந்தியா திறன் அறிக்கையின்படி (India Skill Report), மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக வேலை செய்யக்கூடிய திறமை (highest employable talent) உள்ளது. CII, AICTE, UNDP ஆகியவை இந்த அறிக்கையை இணைந்து வெளியிட்டுள்ளன.
UAE அமெரிக்கா கூட்டு இராணுவப் பயிற்சி 'Iron Union 12'
 • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் அமெரிக்காவின் தரைப்படைகளுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான 'Iron Union 12' என்ற பெயரில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அல்-ஹம்ரா பகுதியில் 2019 டிசம்பர் 10 அன்று தொடங்கியது.
இந்திய-இலங்கை கூட்டு இராணுவப்பயிற்சி 'மித்ரா சக்தி-VII' 
 • இந்திய-இலங்கை ராணுவத்துக்கு இடையே ஏழாவது கூட்டு இராணுவப்பயிற்சி, 'மித்ரா சக்தி' (Exercise Mitra Shakti- VII) என்ற பெயரில், டிசம்பர் 1 முதல் 14 வரை புனேவின் ஆந்த் ராணுவ நிலையத்தில் நடைபெற்றது.
துணை ராணுவப் படைகளுக்கு 'காதி' வகை சீருடை கட்டாயம் 
 • இந்தியாவில் CRPF, BSF, CISF and the NSG உள்ளிட்ட துணை ராணுவப் படைகளுக்கு 'காதி' வகை சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி
 • ஆப்கானிஸ்தான் ராணுவப் பெண் அதிகாரிகளுக்கு சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவா்களுக்கு நான்கு வார காலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த அகாதெமி, ஆப்கானிஸ்தான் பெண் அதிகாரிகளுக்குத் தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக பயிற்சி வழங்கப்படுகிறது.
நியமனங்கள் 
பிரிட்டன் பிரதாரமாக மீண்டும் 'போரிஸ் ஜான்ஸன்'
 • பிரிட்டனில் நவம்பர் 12-அந்தியூர் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தலைமையிலான கன்சா்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து போரிஸ் ஜான்ஸன் மீண்டும் பிரதமராகிறாா்.
அமெரிக்க நாடாளுமன்றக் குழுதலைவர் 'அமி பேரா' 
 • அமெரிக்காவின், ஆசிய பசிபிக் விவகாரங்களுக்கான நாடாளுமன்ற துணைக் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமி பேரா நியமிக்கப்பட்டுள்ளாா்.
NADA பிராண்ட் தூதர் 'சுனில் ஷெட்டி' 
 • பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி (Suniel Shetty) தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் (NADA) பிராண்ட் தூதராக தேர்ந்தெடுத்துள்ளது.
 • NADA: National Anti-Doping Agency.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
கோயில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் 2019
 • தமிழ்நாட்டில் உள்ள கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் டிசம்பா் 15 அன்று தொடங்குகிறது. 
மாநாடுகள்
தேசிய கங்கை பாதுகாப்புக் குழு கூட்டம்-2019
 • கங்கை நதியை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ‘நமாமி கங்கே’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்வதற்கு, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய கங்கை பாதுகாப்புக் குழு கூட்டம் உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் சந்திரசேகா் ஆஸாத் வேளாண் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 14-அன்று நடைபெற்றது.
இந்தியா-அமெரிக்கா ‘2+2’ பேச்சுவாா்த்தை 2019 
 • இந்தியா-அமெரிக்கா நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்களிடையேயான பேச்சுவாா்த்தை (2+2 பேச்சுவாா்த்தை) வாஷிங்டனில் டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தியா-மாலத்தீவு இடையே 6-ஆவது கூட்டு குழு கூட்டம்-2019
 • இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே 6-ஆவது கூட்டு குழு கூட்டம் (6-th Joint Commission Meeting), நவம்பர் 13-ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்றது. மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்துல்லா சாஹித், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தினர். 
உலகத் தமிழிசை மாநாடு 2019
 • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து நடத்தும், முதலாவது உலகத் தமிழிசை மாநாடு 2019, நவம்பர் 14-15 தேதிகளில் மதுரை உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெறுகிறது. 
மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் துணை வேந்தர்கள் கூட்டம்-2019
 • டெல்லியில் பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் துணை வேந்தர்கள் கூட்டம் நவம்பர் 15-அன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். 
பயோ ஏசியா மாநாடு 2020 
 • இந்தியா-சுவிட்சர்லாந்து நாடுகள் இணைந்து நடத்தும் பயோ ஏசியா-2020 (BioAsia-2020) என்ற பெயரில், 2020 பிப்ரவரி 17 முதல் 19 வரை, ஐதராபாத் நகரில், 'இன்றைக்கான நாளை' (Today for Tomorrow) என்ற மையகருத்தில், நடைபெற உள்ளது.
இந்திய அரசியலமைப்பு வரலாறு குறித்த எண்ணிம கண்காட்சி
 • 'இந்திய அரசியலமைப்பு வரலாறு குறித்த எண்ணிம கண்காட்சி' (Digital Exhibition on History of Constitution of India) புதுடில்லியில் டிசம்பர் 9-10 தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
காலநிலை மாற்ற செயல்திறன் தரவரிசை 2019 - இந்தியா 11-வது இடம்
 • 2019-ஆம் ஆண்டிற்கான காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு (CCPI) தரவரிசையில் இந்தியா 11-வது இடம் பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களை எந்த நாட்டிற்கும் தரப்படவில்லை, நான்காவது 
 • இடம், ஸ்வீடன் நாட்டுக்கும், 5-வது இடம் மொராக்கோ-வுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 
 • 56 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றியம் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலை, ஜேர்மன்வாட்ச் (Germanwatch) நியூகிளைமேட் மற்றும் காலநிலை நடவடிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 • போலந்தின் கட்டோவிஸ் நகரில் நடைபெற்ற, புவி வெப்பமடைதல் தொடர்பான ஐ.நா.வின் காலநிலை உச்சிமாநாட்டின் (COP 24), ஒரு பகுதியாக CCPI 2019 வெளியிடப்பட்டது.
 • CCPI: Climate Change Performance Index.
 • COP 24: 24th Conference of the Parties.
அச்சுறுத்தப்படும் உயிரினங்களின் சிவப்பு பட்டியல் - 1840 உயிரினங்கள் சேர்ப்பு 
 • இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN), சமீபத்தில் '1840' அச்சுறுத்தப்படும் உயிரினங்களின் பெயர்களை சிவப்பு பட்டியலில் (Red List of Threatened Species) சேர்த்துள்ளது. இது அழிவுக்கு உள்ளாகும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பட்டியலாகும்.
 • IUCN: International Union for the Conservation of Nature.
ஐரேப்பிய ஒன்றிய நாடுகளின் 'கரியமில மாசு சமநிலை ஒப்பந்தம்-2050' 
 • பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டத்தில், 2050-ஆம் ஆண்டுக்குள் தங்களது நாடுகளில் வெளியேற்றப்படும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து நீக்கப்படும் அந்த வாயுவின் அளவையும் சமன்படுத்துவதற்கான கரியமில மாசு சமநிலை (Carbon Neutral by 2050) ஒப்பந்தத்தை, ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகள் நவம்பர் 13-அன்று மேற்கொண்டன. இந்த ஒப்பந்தத்தைப் பின்பற்ற, உறுப்பு நாடான போலந்து மறுத்துவிட்டது.
நியுசிலாந்து வெள்ளைத் தீவு எரிமலைச் சீற்றம் 
 • நியுசிலாந்து வெள்ளைத் தீவு எரிமலையில் (White Island Volcano) டிசம்பர் 9-அன்று சீற்றம் ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொருளாதார நிகழ்வுகள்  
சீன இறக்குமதிக்கான கூடுதல் வரிவிதிப்பு - நிறுத்திவைப்பு 
 • சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 16,000 கோடி டாலா் (சுமாா் ரூ.11.32 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்கள் மீதான முதல் கூடுதல் வரிவிதிப்பு டிசம்பர் 14-அன்று அமலுக்கு வருவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிடமிருந்து கூடுதலாக வேளாண் பொருள்களை இறக்குமதி செய்ய சீனா ஒப்புக் கொண்டது.
விளையாட்டு நிகழ்வுகள்
2019-இல் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் - லபுஸ்சேன்
 • டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை ஆஸ்திரேலிய வீரர் மார்நஸ் லபுஸ்சேன் (Marnus Labuschagne) பெற்றார். 
 • 2019-ம் ஆண்டில் அவர் 10 டெஸ்டில் விளையாடி 3 சதம், 6 அரைசதம் உள்பட 1,022 ரன்கள் குவித்துள்ளார். 2-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித்தும் (873 ரன்), 3-வது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் (774 ரன்) உள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணியின் தலைமைபயிற்சியாளா் - மார்க் பௌச்சா்
 • தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பா் மார்க் பௌச்சா் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 
முக்கிய தினங்கள் 
நாடாளுமன்ற தாக்குதல் தினம் - டிசம்பா் 13
 • 2001-ஆம் ஆண்டு டிசம்பா் 13 அன்று இந்திய நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புகளைச் சோ்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இந்தத் தாக்குதலில் 9 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதல் (2001 Parliament attack) நிகழ்ந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் - டிசம்பர் 14
 • இந்தியாவில், தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் (National Energy Conservation Day) டிசம்பர் 14 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
 • 29-வது தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள் டிசம்பர் 14, 2019-அன்று கடைபிடிக்கப்பட்டது.
 • 2019-ஆண்டுக்கான தேசிய எரிசக்தி பாதுகாப்பு வாரம் ('National Energy Conservation Week) டிசம்பர் 9 முதல் 14 வரை கடைபிடிக்கப்பட்டது.
சர்வதேச தேநீர் தினம் - மே 21
 • ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 21-ந்தேதியன்று சர்வதேச தேநீர் தினம் (International Tea Day) கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. பொதுச்சபை அறிவித்துள்ளது. 
 • சர்வதேச தேநீர் தினம் என ஒரு நாளை அறிவித்து கடைப்பிடிக்க வகை செய்ய வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது.
 • தேயிலையின் நிலையான உற்பத்தி, தேயிலை பயன்பாடுக்கு ஆதரவான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும், வளர்க்கும்; பசி மற்றும் வறுமையை எதிர்த்து போராடுவதில் அதன் முக்கியத்துவத்தைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். எனவே மே 21-ந் தேதி சர்வதேச தேநீர் தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
Previous Post Next Post