TNPSC Current Affairs November 5, 2019


நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 5, 2019
தேசிய நிகழ்வுகள்
டெல்லியில் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் - அமல் 
 • டெல்லியில் நவம்பர் 4-முதல் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, ஒற்றைப் படை இலக்க எண்களான 1,3,5,7,9 வாகனங்கள் நவம்பா் 1,3,5,7,9 ஆகிய ஒற்றைப் படை தேதிகளில் சாலைகளில் அனுமதிக்கப்படும். அதேபோல, இரட்டைப் படை இலக்க எண்களான 0,2,4,6,8 எண்களை இறுதியில் கொண்ட வாகனங்கள் 0,2,4,6,8 ஆகிய இரட்டைப் படைத் தேதிகளில் சாலைகளில் அனுமதிக்கப்படும். 
 • டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவுகிறது. இந்நிலையில், காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் டெல்லி அரசால் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னையில் 'ரெட் அட்லஸ் செயல் திட்ட வரைபடம் வெளியீடு 
 • 'ரெட் அட்லஸ் செயல் திட்ட வரைபடம் ’ (Red Atlas Action Plan Map) மத்திய புவிஅறிவியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
 • துணை குடியரசுத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு அவர்களால் நவம்பர் 3-அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. 'ரெட் அட்லஸ் செயல் திட்ட வரைபடம், 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு உதவுவதற்காக புவிஅறிவியல் அமைச்சகத்தால் (Ministry of Earth Sciences) தயாரிக்கப்பட்ட முதல் வகையான கணக்கீட்டு வரைபடம் ஆகும். 
பாதுகாப்பு/விண்வெளி
SCO பூகம்ப மீட்பு கூட்டுப்பயிற்சி 2019: டெல்லி 
 • 2019 பூகம்ப மீட்பு குறித்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (2019 SCO Joint Exercise on Earthquake Rescue) நாடுகளின் கூட்டுப்பயிற்சி, நவம்பர் 4 அன்று டெல்லி ஜன்பாத்தில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.
 • தேசிய பேரிடர் மீட்புப்படை: இந்த SCO பூகம்ப மீட்பு கூட்டுப்பயிற்சியை, பேரிடர் மீட்பு வழிமுறைகளை ஒத்திகை பார்ப்பதற்கும் அறிவு, அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த பயிற்சியை தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF: National Disaster Response Force) நடத்துகிறது.
இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சி - டஸ்ட்லிக்-2019
 • இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகள் இடையேயான முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சி - டஸ்ட்லிக்-2019 (Dustlik-2019) என்ற பெயரில் நவம்பர் 4 முதல் 13 வரை, -உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் நகரில் உள்ள சிர்ச்சி பகுதியில் நடைபெறுகிறது.
 • இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உஸ்பெகிஸ்தான் பிரதிநிதி மேஜர் ஜெனரல் பகோதிர் நிசாமோவிச் குர்பனோவ் ஆகியோர் இராணுவ பயிற்சியை தலைமை தாங்கி தொடங்கிவைத்தனர்.
ககன்யான் திட்டத்தின் பரிசோதனை ஓட்டம் 
 • மனிதா்களை விண்வெளிக்கும் அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பரிசோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது, மேலும் இந்த திட்டத்துக்கான வீரா்கள் தோ்வு நடைபெற்று வருகிறது. தோ்வு செய்யப்படும் வீரா்கள் ரஷியாவுக்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்படுவாா்கள், என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவா் கே. சிவன் தெரிவித்தார்.
 • கிரையோஜெனிக் என்ஜின்கள்: தற்போது கிரையோஜெனிக், செமி கிரையோஜெனிக் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. வருங்காலத்தில் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் ராக்கெட் மற்றும் மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்கும் திட்டத்தையும் கொண்டு வரப்படவுள்ளது
விருதுகள்
2019 'எழுத்தச்சன் புராஸ்காரம்' விருது - எழுத்தாளர் ஆனந்த் தேர்வு 
 • 2019-ஆம் ஆண்டுக்கான 'எழுத்தச்சன் புராஸ்காரம்' விருதுக்கு எழுத்தாளர் ஆனந்த் (27th Ezhuthachan Puraskaram) தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருது 'எழுத்தச்சன் புராஸ்காரம்' ஆகும், 
 • மலையாள மொழி மற்றும் இலக்கியத்துக்கான ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக, இந்த விருது வழங்கப்படுகிறது. ஆனந்த் என்ற புனைபெயரில் எழுதிவரும் இவரின், உண்மையான பெயர் பி.சச்சிதானந்தன் (P.Satchidananda) என்பதாகும். 
ஆரம்பகால தொழில் ஆராய்ச்சியாளர் விருது 2019 - நீரஜ் ஷர்மா
 • ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ‘2019-ஆம் ஆண்டின் ஆரம்பகால வாழ்க்கை ஆராய்ச்சியாளர்’ விருதை (Early career researcher of the year 2019), நீரஜ் ஷர்மா (Neeraj sharma) என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பெற்றுள்ளார். 
 • குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் சோடியம் அயன் பேட்டரி போன்ற அடுத்த தலைமுறை பேட்டரி அமைப்புகளை உருவாக்கியற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. நீரஜ் ஷர்மா, சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் (UNSW) வேதியியல் பள்ளியில் பேராசிரியராக உள்ளார்.
நியமனங்கள்
இந்திய நில துறைமுக ஆணையத் தலைவர் - ஆதித்யா மிஸ்ரா 
 • இந்திய நில துறைமுக ஆணையத்தின் (LPAI) தலைவராக ஐ.பி.எஸ் அதிகாரி ஆதித்யா மிஸ்ரா Aditya Mishra) நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் சர்வதேச எல்லைகளில் நியமிக்கப்பட்ட புள்ளிகளில் பயணிகள் மற்றும் பொருட்களின் எல்லை தாண்டிய இயக்கத்திற்கான வசதிகளை (LPAI:Land Ports Authority of India) உருவாக்குகிறது, மற்றும் நிர்வகிக்கிறது.
மாநாடுகள்  
ஐ.நா.வின் காலநிலை மாற்ற மாநாடு 2019, மாட்ரிட் (ஸ்பெயின்)
 • ஐ.நா.வின் காலநிலை மாற்ற மாநாடு (COP25) 2019, டிசம்பர் 2 முதல் 13 வரை ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெறுகிறது. சிலி நாட்டில் நடைபெறவிருந்த இந்த மாநாடு, அங்கு அமைதியின்மை காரணமாக நடத்துவதில் இருந்து சிலி விலகியது.
கிழக்கு ஆசிய நாடுகள் உச்சி மாநாடு 2019 - பாங்காக்
 • 2019 ஆசியான் உச்சி மாநாட்டின் இடையே, கிழக்கு ஆசிய நாடுகளின் 14-ஆவது உச்சி மாநாடு, தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நவம்பர் 4-அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டாா். இந்த மாநாட்டில், கிழக்கு ஆசிய நாடுகள் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
 • இந்த கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில், ஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் தலைவா்களும், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, ரஷியா ஆகிய 8 நாடுகளின் தலைவா்களும் கலந்து கொண்டனா்.
 • கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பு, 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது முதல் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு சவால்களுக்கு எதிராக இந்த அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை-2019 
 • தாய்லாந்தின் பாங்காக் நகரில், அக்டோபர் 31-முதல் நவம்பர் 4 வரை நடைபெற்ற, 35-வது ஆசியான் உச்சி மாநாட்டின் இடையே, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பான 16 நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் நவம்பர் 4 அன்று நடைபெற்றது. இந்த பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் சேர இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
 • பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (RECP): ஆசியான் அமைப்பின் 10 உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 6 நாடுகள் என மொத்தம் 16 நாடுகள் இடையே தடையில்லா வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையில் ‘பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை’,உருவாக்க இந்த நாடுகளிடையே, 2012-ம் ஆண்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
 • RECP: Regional Comprehensive Economic Partnership
இந்திய சர்வதேச அறிவியல் விழா 2019 (கொல்கத்தா)
 • ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் விழா கொல்கத்தா நகரில், நவம்பர் 5 முதல் 8 வரை நடைபெறுகிறது. உதயமாகும் இந்தியா - ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் அதிகாரமளிக்கும் தேசம் என்ற கருப்பொருளில் (RISEN India-Research, Innovation, and Science Empowering the Nation) நடைபெறுகிறது.
SACEP ஆளும் குழுவின் 15 வது கூட்டம் 2019 (டாக்கா) 
 • தெற்காசியா கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்ட (SACEP) ஆளும் குழுவின் 15 வது கூட்டம் (15th meeting of the Governing Council of SACEP), நவம்பர் 7-அன்று பங்களாதேஷ் தலைநகர் டாக்கா நகரில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் இந்தியக்குழு பங்கேற்றது. 
 • தெற்காசியா கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டம் (SACEP) 1982 ஆம் ஆண்டில் தெற்காசிய அரசாங்கங்களால் பிராந்தியத்தில் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது.
 • SACEP: South Asia Co-operative Environment Programme.
தேசிய பழங்குடியினர் விழா 2019 (புது டெல்லி)
 • ஆதி மகோத்சவ் (Aadi Mahotsav) என்ற பெயரில் 2019 தேசிய பழங்குடியினர் விழா (National Tribal festival), புது டெல்லி நகரத்தில் நவம்பர் 16 முதல் மொத்தம் 15 நாட்களுக்கு நடைபெறுகிறது. பழங்குடி கலாச்சாரத்தின் ஆத்மா, கைவினை, உணவு மற்றும் வர்த்தகம் என்ற மையகருதில் இந்த விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் 27 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1000 பழங்குடி கைவினைஞர்கள் பங்கேற்கின்றனர்.
‘சாத்’ பூஜை 2019
 • வடமாநிலங்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘சாத்’ பூஜை (Chhath Pooja) நவம்பர் 2-முதல் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நீர்நிலைகளில் ஒன்று கூடும் மக்கள், சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது வழக்கம் ஆகும்.
அறிவியல் தொழில்நுட்பம்
ICEDASH மற்றும் ATITHI - முன்முயற்சிகள் அறிமுகம் 
 • ICEDASH மற்றும் ATITHI என்ற இரு தகவல் தொழில்நுட்ப முன்முயற்சிகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தொடங்கிவைத்தார். 
 • ICEDASH என்பது இந்திய சுங்கத்தின் வணிக (EoDB) கண்காணிப்பு டாஷ்போர்டு ஆகும், இது பல்வேறு துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இறக்குமதி சரக்குகளின் தினசரி சுங்க அனுமதி நேரங்களைக் காண பொதுமக்களுக்கு உதவுகிறது.
 • ATITHI மொபைல் செயலி, சர்வதேச பயணிகள் சுங்க சுங்க பிரகடனத்தை முன்கூட்டியே தாக்கல் செய்ய உதவுகிறது.
IIT சென்னை உருவாக்கியுள்ள ‘'ARISE" என்ற நிற்கும் சக்கர நாற்காலி
 • ஊனமுற்றோருக்காக ‘'Arise" என்ற பெயரிலான நிற்கும் சக்கர நாற்காலியை (Standing Wheelchair), IIT சென்னை கல்வி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்  
தலைவாசலில் அமையும் 'ஆசியாவிலே பெரிய கால்நடை பூங்கா'
 • சேலம் மாவட்டம், தலைவாசலில், 396 கோடி ரூபாயில் ஆசியாவிலே பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய, கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை, விவசாயிகளுக்கு விளக்குவதற்கான கறவை மாட்டு பண்ணை. உள்நாட்டு மாட்டினங்களான, காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள் மற்றும் கோழியின பிரிவுகளும் அமைக்கப்பட உள்ளன.
ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் 'சென்னை-கன்னியாகுமரி மின்வழிப்பாதை' 
 • தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் மரபுசாரா எரிசக்தி மற்றும் அனல் மின்நிலைய மின்சாரத்தை வடமாவட்டங்களுக்கு கொண்டுவரும் வகையில் சென்னை - கன்னியாகுமரி மின் வழிப்பாதை அமைக்கும் திட்டம் ரூ.4630 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு சுமார் ரூ.3200 கோடி கடனாக வழங்க மணிலாவை தலைமையிடமாக கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது.
தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூல் 
 • தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16-வது இந்தியா-ஆசியான் உச்சிமாநாட்டின் இடையே , நவம்பர் 4-ந் தேதி தாய்லாந்து மொழியில் (தாய்) மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை முன்னாள் செயலாளர் மூ.ராசாராம் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டிருந்தார். அந்த ஆங்கில நூல் தான், தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. 
விளையாட்டு நிகழ்வுகள்
கார் பந்தயம்

பார்முலா1 2019 - 'லீவிஸ் ஹாமில்டன்' (இங்கிலாந்து) சாம்பியன்
 • 2019-ஆம் ஆண்டுக்கான, பார்முலா1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். ஹாமில்டன் வெல்லும் 6-வது பார்முலா1 சாம்பியன் பட்டம் இதுவாகும்.
 • இதுவரை நடைபெற்ற 19-சுற்று போட்டிகளில் மொத்தம் 381 புள்ளிகள் குவித்து ஹாமில்டன் பார்முலா-1 கோப்பையை வென்றுள்ளார். இன்னும் 2 சுற்றுகள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. 
 • ஹாமில்டன் (34 வயது), தொடர்ந்து 3 ஆண்டுகளாக பட்டம் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளார். இந்த சீசனில் 10 சுற்றுகளில் வெற்றிகளை குவித்த ஹாமில்டன் 2008, 2014, 2015, 2017, 2018, 2019 ஆண்டுகளில் பார்முலா1 பட்டத்தை வென்றுள்ளார்.
 • கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமானது பார்முலா 1 பந்தயமாகும். 2019-ஆம் ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்பட்டது.
 • அமெரிக்க கிராண்ட்பிரி-வால்ட்டெரி போட்டஸ் முதலிடம்: இந்த போட்டியின் 19-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி போட்டி டெக்சாஸ் மாகாணத்தில் நடந்தது. 308.405 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் பின்லாந்து வீரர் வால்ட்டெரி போட்டஸ் (மெர்சிடஸ் அணி) முதலிடம் பிடித்தார்.
டென்னிஸ்

உலக டென்னிஸ் தரவரிசை - நவம்பர் 4, 2019
 • 2019 நவம்பர் 4-அன்று சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் முதல் 5 இடங்களை பெற்ற வீரர்/வீராங்கனைகள் விவரம்: 
 • WTA பெண்கள் தரவரிசை - 'ஆஷ்லி பா்டி' முதலிடம் 
  • முதல் 5 இடங்களை பெற்ற வீராங்கனைகள் விவரம்: 1. ஆஷ்லி பா்டி ஆஸ்திரேலியா), 2. கரோலினா பிளிஸ்கோவா (செக். குடியரசு), 3. நவோமி ஒஸாகா (ஜப்பான்), 4. சிமோனா ஹலேப் (ருமேனியா), 5. பியான்கா ஆன்ட்ரிஸ்கு (கனடா).
 • ATP ஆண்கள் தரவரிசை: இரபெல் நடால் முதலிடம் 
  • முதல் 5 இடங்களை பெற்ற வீரர்கள் விவரம்: 1. இரபெல் நடால் (ஸ்பெயின்), 2. நோவக் ஜோகோவிச் (செர்பியா), 3. ரோஜர் படெரெர் (சுவிற்சர்லாந்து), 4. டேனியல் மெட்வெடேவ் (இரஷ்யா), 5. டொமோனிக் தியம் (ஆஸ்திரியா).
டேவிஸ் கோப்பை 2019, இஸ்லாமாபாத்
 • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான, ஆசியா/ஓசியானா முதல் சுற்று டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள், பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் நவம்பர் 29, 30-ந் தேதிகளில் நடக்கிறது. ரோகித் ராஜ்பால்: இந்த போட்டிக்கான இந்திய அணியின் விளையாடாத கேப்டனாக முன்னாள் வீரரும், தேசிய டென்னிஸ் சம்மேளன தேர்வு குழு தலைவருமான ரோகித் ராஜ்பால் (Rohit Rajpal) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் 

தியோதர் கோப்பை 2019: இந்திய ‘B’ அணி சாம்பியன்
 • தியோதர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது. நவம்பர் 4-ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான இந்திய ‘B’ அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ‘C’ அணியை வீழ்த்தி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது.
 • குறைந்த வயது கேப்டன்: தியோதர் கோப்பை இறுதிப்போட்டியில் குறைந்த வயதில் கேப்டனாக இருந்த வீரர் என்ற சிறப்பை இந்திய ‘C’ அணியின் கேப்டன் 'சுப்மான் கில்' (வயது 20) பெற்றார். 
IPL போட்டி 2020: ‘பவர் பிளேயர்’ முறை அறிமுகம் 
 • 2020-ஆம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ‘பவர் பிளேயர்’ என்ற முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த முறைப்படி, ஆடும் லெவன் அணியில் இடம் பெறாத வீரர் ஒருவர் ஆட்டத்தின் சூழலுக்கு தேவைப்படும் நிலை ஏற்படும் போது களம் இறங்கி விளையாட முடியும்.
தடகளம்

உலக முப்படை ராணுவ வீரா்கள் தடகளப் போட்டி 2019 
 • தமிழ்நாட்டின் ஆனந்தன் குணசேகரன் வென்ற 3 தங்கப்பதக்கங்கள்: சீனாவில் 144 நாடுகள் பங்கேற்ற 7-வது உலக முப்படை ராணுவ வீரா்களுக்கான தடகளப் போட்டிகள் அக்டோபேர் 17 முதல் 27 வரை நடைபெற்றது. இதில் ஊனமுற்றோா் பங்கேற்கும் பிரிவில் தமிழ்நாட்டின் கும்பகோணத்தை சோ்ந்த ஆனந்தன் குணசேகரன் (வயது 32) மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார். 100 மீட்டா், 200 மீட்டா், 400 மீட்டா் ஓட்டப் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.
தேசிய ஜூனியர் தடகளம் 2019: தபிதா புதிய சாதனை
 • 35-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்து வருகிறது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா 13.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.
முக்கிய தினங்கள்  
உலக சுனாமி விழிப்புணர்வு தினம் - நவம்பர் 5
 • உலக சுனாமி விழிப்புணர்வு தினம் (World Tsunami Awareness Day) ஆண்டுதோறும் நவம்பர் 5 அன்று கடைபிடிக்க படுகிறது. 
Post a Comment (0)
Previous Post Next Post