TNPSC Current Affairs November 4, 2019

TNPSC Current Affairs November 4, 2019நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 5, 2019
தேசிய நிகழ்வுகள்
அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்துடன் இணைந்த 'ஒடிசா அரசு' 
  • அமெரிக்காவை சேர்ந்த MIT-கல்வி நிறுவனத்தை தளமாகக் கொண்ட அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்துடன் (J-PAL) கூட்டு சேர, ஒடிசா மாநில அரசு அண்மையில் முடிவு செய்துள்ளது. அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகம் என்பது உலகளாவிய ஆராய்ச்சி மையமாகும், இது விஞ்ஞான ஆதாரங்களை கொண்டு வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. 
  • J-PAL: Abdul Latif Jameel Poverty Action Lab.
IIT டெல்லியின் 'உலகளாவிய முன்னாள் மாணவர் அறக்கட்டளை நிதியம்' 
  • IIT டெல்லி கல்வி நிறுவனம், ரூ .250 கோடி அளவிலான உலகளாவிய முன்னாள் மாணவர் அறக்கட்டளை நிதியத்தை (Global Alumni Endowment Fund), தொடங்கியுள்ளது. இந்த நிதியத்தை குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த அக்டோபர் 31-அன்று தொங்கிவைத்தார்.
  • Each One Teach One Initiative: இதனுடன், நாட்டின் அனைத்து ஐ.ஐ.டி.களிலும் அதிக எண்ணிக்கையிலான தொடக்க நிறுவனங்களுக்காக அறியப்பட்ட டெல்லி ஐ.ஐ.டி, 'ஒவ்வொருவரும் ஒருவருக்கு கற்பிப்போம்' என்ற முன்முயற்சியை தொடங்கியுள்ளது. இதில் முன்னாள் மாணவர்கள், செல்வந்தர்கள் மற்றும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
ஜபல்பூரில் அமையும் சீக்கிய அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் 
  • மத்திய பிரதேச அரசு, ஜபல்பூர் நகரத்தில் சீக்கிய அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை (Sikh Museum and Research Centre, Jabalpur) அமைக்க முடிவு செய்துள்ளது. சீக்கிய குரு குருநானக் தேவின் 'பிரகாஷ் பர்வ்' (Prakash Parv) என்ற 550-வது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை அமைக்கப்படுகிறது.
பாதுகாப்பு/விண்வெளி
இந்தோ-பிரெஞ்சு பயிற்சி 'சக்தி-2019': பிகானீர் (இராஜஸ்தான்)
  • 2019-ஆண்டுக்கான இந்தோ-பிரெஞ்சு கூட்டு ராணுவப்பயிற்சி, 'சக்தி -2019' (Shakti-2019) என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் பிராந்தியத்தில், அக்டோபர் 31 முதல் 2019 நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. 
  • இந்தியா-பிரான்ஸ் நாடுகள் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி  'சக்தி' என்ற பெயரில் கூட்டு ராணுவப்பயிற்சி நடத்தப்படுகிறது.
  • இந்தியா-பிரான்ஸ்  இடையே நடைபெறும் பாதுகாப்பு பயிற்சிகள்: வருணா - கடற்படைப் பயிற்சி, கருடா - விமானப்படைப் பயிற்சி, சக்தி - இராணுவப் பயிற்சி.
விருதுகள்
2019 இலக்கியத்திற்கான JCB பரிசு - மாதுரி விஜய்
  • அமெரிக்க-இந்திய எழுத்தாளர் மாதுரி விஜய் தனது அறிமுக நாவலான ‘தி ஃபார் ஃபீல்ட்’ (The Far Field) படைப்பிற்கு, 2019-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான JCB பரிசை (2019 JCB prize for Literature) பெற்றுள்ளது.  
  • எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிகவும் விலையுயர்ந்த இந்திய விருது JCB பரிசு ஆகும். திருமதி மாதுரி விஜய் (Madhuri Vijay), பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர், இப்போது அமெரிக்காவின் ஹவாயில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
2019 சாஸ்தாரம் விருது - கே பி நந்தகுமார்
  • பிரபல கொடையாளர் கே பி நந்தகுமார் (K P Nandhakumar), 2019-ஆம் ஆண்டிற்கான சாஸ்தாரம் விருதை (2019 Sasthaaram Award) வென்றுள்ளார். சாஸ்தாரம் விருது தாமரக்குளம் ஸ்ரீ சபரிமலை அய்யப்பா ஸ்வா என்ற அறக்கட்டளை நிறுவியுள்ளது.
மாநாடுகள்  
2019 ஆசியான் உச்சி மாநாடு (தாய்லாந்து)
  • 35-வது ஆசியான் உச்சி மாநாடு (35th ASEAN Summit 2019), அக்டோபர் 31 முதல் நவம்பர் 4 வரை தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நொந்தபுரி பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் புரவலர் தலைவராக (Host leader) தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா (Prayut Chan-o-cha) செயல்பட்டார்.
  • 16-வது ஆசியான்-இந்தியா உச்சி 2019: இந்த மாநாட்டின் இடையே ,16-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு (16th India-ASEAN Summit 2019) நவம்பர் 3-ஆம் தேதி பாங்காக் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியகுழு பங்கேற்றது. 
  • ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் பொன்விழா நிகழ்வு முன்னதாக பாங்காக்கில் உள்ள ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தெரிவித்த குறிப்புகள்: 
    • இந்தியா தற்போது 5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார கனவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2014-ம் ஆண்டில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2 டிரில்லியன் டாலர்கள், 5 ஆண்டுகளில் சுமார் 3 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 286 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது. 
இந்தியாவின் முதல் கலை கண்காட்சி “eCAPA 2019” 
  • திறமையான அறிவுசார் அறைகூவலர்களுக்கான (Talents with Intellectual Challenges), இந்தியாவின் முதல் கலை கண்காட்சி “eCAPA 2019 - Art from the Heart” என்ற பெயரில் அக்டோபர் 2-அன்று தொடங்கி நவம்பர் 14 வரை, புதுதில்லி சத்தர்பூர் STIR கேலரி பகுதியில் நடைபெறுகிறது.
தேசிய கடல்வள தொழில்நுட்ப கழக வெள்ளி விழா 2019
  • தேசிய கடல்வள தொழில்நுட்ப கழகம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன் வெள்ளிவிழா கொண்டாட்டம் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்வள தொழில்நுட்ப வளாகத்தில் நவம்பர் 3-அன்று நடந்தது. இந்த விழாவில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். 
விளையாட்டு நிகழ்வுகள்
டென்னிஸ்

WTA இறுதிச்சுற்று 2019 - ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா) சாம்பியன்
  • WTA இறுதிச்சுற்று எனப்படும் 49-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஷென்ஜென் நகரில் நடைபெற்றது. தரவரிசையில் உள்ள முதல் 8 வீராங்கனைகள் மட்டும் இந்த போட்டியில் பங்கேற்றனர். 
  • இந்த போட்டியில், ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்டி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்டி, உக்ரைன் நாட்டின் எலினா ஸ்விடோலினா அவர்களை, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • ஒரு தொடரில் வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை-ரூ.31 கோடி
  • இந்த சாம்பியன் பட்டத்திற்காக, ஆஷ்லி பார்டி (வயது 23) மொத்தம் ரூ.31 கோடியை பரிசுத்தொகையாக பெற்றார். டென்னிஸ் வரலாற்றில் ஒரு தொடரில் வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுவாகும்.
  • இரட்டையர் பிரிவு: WTA இறுதிச்சுற்று, இரட்டையர் பிரிவில் டைமியா பாபோஸ் (ஹங்கேரி)- கிறிஸ்டினோ மிலாடெனோவிச் (பிரான்ஸ்) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. 
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் 2019: ஜோகோவிச் சாம்பியன் 
  • பிரான்சில் நடந்த, பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் முதல் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோ அவர்களை வீழ்த்தி 5-வது முறையாக இங்கு கோப்பையை கைப்பற்றினார்.
  • ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய ATP மாஸ்டர்ஸ் தொடரை ஜோகோவிச் வெல்வது இது 34-வது முறையாகும். இந்த வகையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் முன்னணியில் (35 பட்டம்) இருக்கிறார்.
கிரிக்கெட்

இந்தியா-வங்காளதேசம் T20 கிரிக்கெட் தொடர் 2019 - சாதனைகள்
  • முதல் போட்டி-வங்காளதேசம் வெற்றி: இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, டெல்லியில் நவம்பர் 3- அன்று நடந்தது. சர்வதேச அளவில் இது 1000-வது 20 ஓவர் ஆட்டமாகும். இந்த போட்டியில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.
  • ஷிவம் துபே அறிமுகம்: இந்திய அணியில் அறிமுக வீரராக ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே இந்த போட்டியில் இடம் பிடித்தார். இவர் இந்தியாவின் 82-வது சர்வதேச 20 ஓவர் போட்டி வீரர் ஆவார். வங்காளதேச அணியில் மொஹ்மது நைம் அறிமுக வீரராக பங்கேற்றார்.
  • வங்காளதேச அணியின் முஷ்பிகுர் ரஹீம் ஆட்டநாயகன் விருது வென்றார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக வங்காளதேச அணியின் முதலாவது வெற்றி இதுவாகும்.
  • சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்-ரோகித் சர்மா: இந்த போட்டியில், 9 ரன் எடுத்தபொது, ரோகித் சர்மா, சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை பெற்றார். 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா இதுவரை 2,452 ரன்கள் சேர்த்துள்ளார். விராட் கோலி 2,450 ரன்களுடன் (72 ஆட்டம்) 2-வது இடத்தில் உள்ளார்.
  • சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் பங்கேற்ற இந்தியர்-ரோகித் சர்மா: சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் பங்கேற்ற இந்தியர் என்ற சிறப்பையும் (99-வது ஆட்டம்) ரோகித் சர்மா பெற்றார். டோனி 98 ஆட்டங்களில் ஆடியதே முந்தைய அதிகபட்சமாக இருந்தது. 
  • சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் பங்கேற்ற வீரர்கள் 
    • 1. சோயிப் மாலிக் (111 ஆட்டம்), 2. ஷாஹித் அப்ரிடியுடன் (99 ஆட்டம்) 3. ரோகித் சர்மா (99 ஆட்டம்) 
பேட்மிண்டன்

சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் 2019 
  • ஜெர்மனியில் நடந்த சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில்,இந்திய வீரர் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டத்தை வென்றார். இறுதி ஆட்டத்தில் லக்‌ஷயா சென் 17-21, 21-18, 21-16 என்ற செட் கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.
கோல்ப் 

சோசோ சாம்பியன்ஷிப் 2019 - டைகர் வுட்ஸ் சாம்பியன்
  • ஜப்பானில் நடைபெற்ற 2019 சோசோ சாம்பியன்ஷிப் (2019 Zozo Championship) போட்டியில் கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் (Tiger Woods) சாம்பியன் பட்டம் வென்றார். 
Post a Comment (0)
Previous Post Next Post