TNPSC Current Affairs November 6, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 6, 2019
சர்வதேச நிகழ்வுகள் 
பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீடு 2019
 • ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (GIWPS), பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்புக் குறியீடு குறித்த தனது இரண்டாவது அறிக்கையை (GIWPS-Women, Peace, and Security Index 2019) வெளியிட்டுள்ளது. 
 • இந்தியா 133-வது இடம்: இந்த புதிய 2019 அறிக்கையில், GIWPS அமைப்பு, 167 நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 133-வது இடத்தில் உள்ளது. இதன் குறியீட்டு மதிப்பெண் 0.625 ஆகும். நார்வே நாடு, குறியீட்டு பட்டியல்படி 0.904 மதிப்பெண்களைக் கொண்டு முதலிடம் பெற்றுள்ளது.
 மிஸ் ஆசியா குளோபல் தலைப்பு 2019 - சாரா டாம்ஜனோவிக்
 • 2019 மிஸ் ஆசியா குளோபல் தலைப்பு 2019 செர்பியாவின் சாரா டாம்ஜனோவிக் (Sara Damnjanovic) தேர்வு பெற்றுள்ளார். கேரளாவின் கொச்சியில் உள்ள கோகுலம் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ‘மிஸ் ஆசியா குளோபல் தலைப்பு 2019 அழகி போட்டியில் செர்பியாவைச் சேர்ந்த 'சாரா டாம்ஜனோவிக்' மகுடம் சூட்டப்பட்டார்.
தேசிய நிகழ்வுகள்
இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு '70 ஆண்டுகள் நிறைவு' 
 • இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2019 நவம்பர் 26-ஆம் தேதி 26-ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டம் நடைபெறவுள்ளது.
 • அரசியல் நிா்ணய சபையால் கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் பின்னா், 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
 • 1997-ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடுவதற்காகவும், 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் GST-யை அறிமுகப்படுத்துவதற்காகவும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் உரையாற்றவுள்ளனா்.
தரிசு நிலங்கள் அட்லஸ் 2019 - வெளியீடு 
 • 5-வது  தரிசு நிலங்கள் அட்லஸ் 2019 (Wastelands Atlas 2019) பதிப்பை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  வெளியிட்டார்.  நில வளங்கள் துறை (Department of Land Resources) மற்றும் தேசிய தொலைநிலை உணர்திறன் மையம் (National Remote Sensing Centre) இணைந்து வெளியிட்டுள்ள அட்லஸ், தரிசு நிலம் குறித்த வலுவான புவியியல் தகவல்களை வழங்குகிறது.
திறன்கள் உருவாக்குத்தளம் (SkillsBuild platform) - தொடக்கம் 
 • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE), IBM நிறுவனத்துடன் இணைந்து ஸ்கில்ஸ் திறன்கள் உருவாக்குத்தளளத்தை (SkillsBuild platform) அறிமுகம் செய்துள்ளது. 
 • இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நெட்வொர்க்கிங் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு (AI) இல் திறன்களை வளர்ப்பது ஆகியவற்றில் இரண்டு ஆண்டு,  டிப்ளோமா பயிற்சி, இது தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் ITIs) மற்றும் தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் (NSTIs) ஆகியவற்றில் வழங்கப்படுகிறது.
குஜராத் தலைவர்களுக்கான ‘பாம்பா்டைா் சேலஞ்சா் 650’ ரக விமானம்
 • குஜராத்தில் முதல்வா், துணை முதல்வா், ஆளுநா் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களின் பயன்பாட்டுக்காக ரூ.191 கோடியில் ‘பாம்பா்டைா் சேலஞ்சா் 650’ ரக விமானம் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. இந்த சிறிய ரக சொகுசு விமானத்தில் 12 போ் வரை பயணிக்க முடியும். தொடா்ந்து 7,000 கி.மீ. தொலைவு வரை பறக்கும் திறனுடையது.
பாதுகாப்பு/விண்வெளி
புனேவில் HEMRL பற்றவைப்பு வளாகம் - தொடக்கம் 
 • மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (HEMRL) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), பற்றவைப்பு வளாகத்தை (Igniter Complex) மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் அண்மையில் திறந்து வைத்தார். 
 • DRDO-வின், முதன்மையான ஆய்வகமான HEMRL உள்ளது. இது ராக்கெட் மற்றும் துப்பாக்கிகள், பைரோடெக்னிக் சாதனங்கள், உயர் வெடிக்கும் அமைப்புகள் மற்றும் உயர் ஆற்றல் மூலக்கூறுகளின் தொகுப்பு ஆகியவற்றை உருவாக்குவதில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
 • HEMRL: High Energy Materials Research Laboratory.
 அமெரிக்கா-பங்களாதேஷ்  கூட்டுக் கடற்படைப்பயிற்சி 'CARAT-2019'
 • CARAT-2019 என்ற பெயரில் அமெரிக்க-பங்களாதேஷ் நாடுகளின் கூட்டுக் கடற்படைப்பயிற்சி, பங்களாதேஷின் சட்டோகிராம் பகுதியில் நவம்பர் 4 முதல் 7 வரை நடைபெறுகிறது. 
 • CARAT: Cooperation Afloat Readiness and Training. 
சீனா சூடானின் முதல் செயற்கைக்கோள் “SRSS-1” 
 • இராணுவ, பொருளாதார மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்கான சூடான் நாட்டின் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் 'SRSS-1' (Sudan’s remote-sensing satellite) என்ற முதல் செயற்கைக்கோள் சீனாவால் அண்மையில் ஏவப்பட்டது.
மாநாடுகள்  
காமன்வெல்த் நாடுகளின் சட்ட அமைச்சா்கள் மாநாடு-2019
 • 2019-ஆண்டின் காமன்வெல்த் நாடுகளின் சட்ட அமைச்சா்கள் மாநாடு (Commonwealth Law Ministers Meeting-2019), இலங்கைத் தலைநகா் கொழும்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் பங்கேற்றார்.
'விக்யான் சமகம்’ மெகா அறிவியல் கண்காட்சி (கொல்கத்தா)
 • உலகளாவிய மெகா அறிவியல் கண்காட்சியை ‘விக்யான் சமகம்’ (Vigyan Samagam) என்ற பெயரில், கொல்கத்தா நகரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அண்மையில் திறந்து வைத்தார்.
பெண்கள், அமைதி, பாதுகாப்பு மாநாடு 2019
 • ‘பெண்கள், அமைதி, பாதுகாப்பு’ என்ற தலைப்பிலான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நவம்பர் 4-அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரக் குழுவின் முதன்மைச் செயலா் பலோமி திரிபாதி பங்கேற்றார்.
தேசியப் பங்குச் சந்தை வெள்ளி விழா 2019
 • மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள தேசியப் பங்குச் சந்தை தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தேசிய பங்கு சந்தை வளாகத்தில் நவம்பர் 5-அன்று ‘வெள்ளி விழா’ கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், செபி தலைவா் அஜய் தியாகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Musical Excellence of Mridangam - புத்தகம் வெளியீடு 
 • துணை குடியரசுத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு, சென்னையில் உள்ள CLRI-மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் ‘மிருதங்கத்தின் இசை சிறப்பு’ (Musical Excellence of Mridangam) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.  இந்த புத்தகம் மிருதங்கம் மேஸ்ட்ரோ 'உமையாள்புரம் கே.சிவராமன், டி.ராமசாமி, எம்.டி. நரேஷ்' ஆகியோர் எழுதியுள்ளனர்.
பொருளாதார நிகழ்வுகள்
மொத்த உள்நாட்டு உற்பத்தி - புதிய அடிப்படை ஆண்டு 
 • மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) கணக்கிடுவதற்கு 2017-18-ஆம் ஆண்டை புதிய அடிப்படை ஆண்டாக நிா்ணயிப்பது தொடா்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை முடிவெடுக்கவுள்ளது. தற்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் தற்போது 2011-12 நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டு வருகின்றன. 
அறிவியல் தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளா் தகவல்கள்த் திருட்டு 
 • முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமான 'வாட்ஸ்அப்' செயலி வழியாக ‘பெகாசஸ்’ என்ற வேவு பாா்க்கும் மென்பொருளைப் பயன்படுத்தி, இஸ்ரேலைச் சோ்ந்த NSO நிறுவனம் பல்வேறு வாடிக்கையாளா்களின் தகவல்களைத் திருடியதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் இந்திய செய்தியாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள் உள்ளிட்ட பலரின் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக கட்செவி அஞ்சல் நிறுவனம் தெரிவித்திருந்தது. 
தீக்‌ஷா செயலி 
 • இணைய வழிக்கற்றலுக்கு உதவும் தீக்‌ஷா (DIKSHA Apps) இணையதளத்தில், தமிழகமானது 313 பாடப்புத்தகங்களில், 9,064 விரைவு துலங்கல் குறியீடு (QR Code) மூலம் 10 ஆயிரத்து 199 கற்றல் வளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை இத்தளத்தினை 4.92 கோடி பேர் ஸ்கேன் செய்தும், 2.39 கோடி பேர் தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தியுள்ளனர். தீக்‌ஷா செயலியை பயன்படுத்துவதில் சிறந்த நான்கு மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது, இதற்காக முன்னோடி மாநிலத்திற்கான விருதை வழங்கி மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்  
கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை - தொடக்கம் 
 • கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அதிநவீன வசதியுடன் கூடிய 22 ஆம்புலன்ஸ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 5-அன்று தொடங்கிவைத்தார். தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குளிர்சாதன வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்ட 22 கால்நடை அவசர மருத்துவ ஊர்தியான ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவையை தொடங்கி வைக்கும் அடையாளமாக முதலமைச்சர் 7 டிரைவர்களுக்கு ஆம்புலன்ஸ் சாவிகளை வழங்கினார். 
 • இந்த ஆம்புலன்சில், கால்நடைகளின் நோய் தன்மையை அறிந்து அங்கேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான அனைத்து அத்தியாவசிய கருவிகள் மற்றும் உபகரணங்கள், மருந்துகள் வைக்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவை (ஆம்புலன்ஸ்) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 
சேலம்-வாணியம்பாடி நான்குவழிச் சாலை திட்டம்
 • சேலத்தில் இருந்து வாணியம்பாடிக்கு நான்கு வழிச் சாலை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சேலம்-திருப்பத்தூா்-வாணியம்பாடி வரை ரூ. 600 கோடியில் நான்குவழிச் சாலை திட்டப் பணிகள் தொடங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களிடம் நிதி திரட்ட புதிய இணையதளம்
 • தமிழ்நாடு அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பொதுமக்களிடம் நிதி திரட்டுவதற்காக புதிய https://contribute.tnschools.gov.in என்ற இணையதளத்தை முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 5-அன்று தொடங்கி வைத்தார்.
விளையாட்டு நிகழ்வுகள்
துப்பாக்கி சுடுதல்

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி 2019 
 • 2019 ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி, கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்றது, இதில் இந்திய வீரா்/வீராங்கனைகள் வென்ற பதக்கங்கள் விவரம்: 
  • மானு பாகா் - தங்கப் பதக்கம் (பெண்கள் 10 மீ ஏா் பிஸ்டல் பிரிவு)
  • விவான் கபூா், மனிஷா கீா் - - தங்கப் பதக்கம் (ஜூனியா் டிராப் கலப்பு அணி பிரிவு)
  • தீபக்குமாா் - வெண்கலப்பதக்கம் (ஆண்கள் 10 மீ ஏா் ரைபிள் பிரிவு)
  • இதன்மூலம், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
  • இந்திய பெண்கள் அணி - வெள்ளிப்பதக்கம் (10 மீ ஏா் ரைபிள் அணிகள் பிரிவு: இளவேனில், அஞ்சும் மொட்கில், அபூா்வி சந்தேலா).
  • இந்திய பெண்கள் அணி - வெண்கலப்பதக்கம் (10 மீ. ஏா் பிஸ்டல் அணிகள் பிரிவு (மானு பாக்கா், யஷ்ஹஸ்வினி தேஸ்வால், அன்னுராஜ் சிங்).
முக்கிய தினங்கள் 
நவம்பர் 6
 • போர்ச்சூழலில் சுரண்டலைத் தடுக்கும் சர்வதேச நாள் - நவம்பர் 6 (International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict 6 November).
Post a Comment (0)
Previous Post Next Post