TNPSC Current Affairs November 29, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 29, 2019
சர்வதேச நிகழ்வுகள்
உலகின் அதிக தூதரகங்கள் கொண்ட நாடு - சீனா 
  • சீனா, உலகிலேயே அதிக அளவாக 276 தூதரகங்கள்  (Diplomatic Missions in the World) கொண்டுள்ளதாக சிட்னியை தளமாகக் கொண்ட லோவி நிறுவன (Lowy Institute) ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா 273 தூதரகங்களை கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. 
  • இந்தியா 12-வது இடத்தில் உள்ளது, இந்தியா உலகம் முழுவதும் 123 தூதரகங்களையும் மற்றும் 54 துணை தூதரகங்கள் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவத் தலைவர் 'கமர் ஜாவேத் பஜ்வா' - பதவி நீட்டிப்பு 
  • பாகிஸ்தான் நாட்டின் இராணுவத் தலைவர் கமர் ஜாவேத் பஜ்வா (Qamar Javed Bajwa) அவர்களின்   பதவிக்காலம் 6 மாதங்களுக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் - முத்தையா முரளிதரன் 
  • இலங்கை நாட்டின் சுழற்பந்து கிரிக்கெட் வீரர்  முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan) அவர்கள் நாட்டின் தமிழர்கள் ஆதிக்கம் கொண்ட வடக்கு மாகாணத்தின் (Northern Province) ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
QS உலக ஆசியா பல்கலைக்கழக தரவரிசை 2020
  • 2020-ஆம் ஆண்டிற்கான குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (Quacquarelli Symonds 2020) உலக ஆசியா பல்கலைக்கழக தரவரிசையில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (National University of Singapore) முதலிடம் பெற்றுள்ளது.
தேசிய நிகழ்வுகள்
E-சிகரெட் தடை மசோதா நிறைவேற்றம் 
  • எலக்ட்ரானிக் சிகரெட் (Electronic cigarette) எனப்படும் E-சிகரெட்டுகளை தடை செய்யும் ‘எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை (தயாரிப்பு, உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, வினியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரப்படுத்துதல்) மசோதா’ மக்களவையில்  நிறைவேறியது.
  • E-சிகரெட்டுகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டு சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.
உத்தரபிரதேச அரசின் 'கழுகு சரணாலயம்' 
  • உத்தரபிரதேச அரசு தனது முதல் கழுகு சரணாலயத்தை (Vulture Conservation) மகாராஜ்கஞ்ச் (Maharajganj) மாவட்டத்தில் ஃபரேண்டா (Farenda) பகுதியில் அமைக்க முடிவு செய்துள்ளது. 
  • நாட்டிலேயே முதல் முறையாக இந்திய கழுகுகளை பாதுகாக்கும் மையமான, ஹரியானாவின் பிஞ்சூரில் உள்ள ஜடாயு பாதுகாப்பு இனப்பெருக்கம் (Jatayu Conservation Breeding Centre at Pinjore) மையத்தின் மாதிரியில்  அமைக்கப்படஉள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் - உத்தரபிரதேசம் முதலிடம்
  • சமீபத்திய Child Relief and You-2019 அறிக்கையின்படி, குழந்தைகளுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்களில் எந்த மாநிலம் உத்தரபிரதேசம் முதலிடமும், மத்தியபிரதேசம் இரண்டாம் இடமும் வகிக்கின்றன.
குலசேகரப்பட்டினத்தில் அமையும் 'இராக்கெட் ஏவுதளம்' 
  • தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் (Kulasekarapattinam) பகுதியில் இராக்கெட் ஏவுதளத்தை (Rocket Launching Pad) அமைப்பதற்கான முன்மொழிவை அறிவித்துள்ளது. இந்த தகவலை நவம்பர் 28-அன்று அணுசக்தி மற்றும் விண்வெளி இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்கவையில் தெரிவித்துள்ளார். 
“லோக்பால்” அமைப்பிற்கான இலச்சினை - அறிமுகம் 
    Lokpal Logo 2019
  • “லோக்பால்” அமைப்பிற்கான இலச்சினையை (Lokpal Logo, motto) உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் மிஸ்ரா (Prashant Mishra) என்பவர் வடிவமைத்துள்ளார்.  லோக்பால் தலைவர் நீதிபதி (ஓய்வு பெற்ற) பினாக்கி சந்திர கோஸ் (Pinaki Chandra Ghose) , இந்த புதிய  இலச்சினையை வெளியிட்டார்.
நீதிபதி முகுந்தகம் சர்மா - நிபுணர் குழு 
  • தேசிய விளையாட்டு குறியீட்டு வரைவை மதிப்பாய்வு செய்ய, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி முகுந்தகம் சர்மா (Mukundakam Sharma) தலைமையில் 13 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி 
கார்ட்டோசாட்-3 செயற்கை கோள் - தகவல் தொகுப்பு 
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO), ‘கார்ட்டோசாட்-3’ (Cartosat-3) என்ற புவியுணர்வு செயற்கை கோளை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, PSLV-C47 இராக்கெட் மூலம் நவம்பர் 27-அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • PSLV-C47 ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடம் 46 வினாடிகளில் பூமியில் இருந்து 509 கிலோ மீட்டர் உயரத்தில் சூரிய சுற்றுவட்ட பாதையில் திட்டமிட்ட இலக்கில் ‘கார்ட்டோசாட்-3’ செயற்கைகோளை நிலை நிறுத்தியது.
  • பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டில் ‘கார்ட்டோசாட்-3’ செயற்கை கோளுடன், அமெரிக்க நாட்டின் வணிக ரீதியிலான 13 ‘நானோ’ செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டன.
  • கார்ட்டோசாட்-3: ISRO செலுத்தியுள்ள ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கை கோள்களில் 9-வது செயற்கைகோள்  ‘கார்ட்டோசாட்-3’ ஆகும்.
  • 1,625 கிலோ எடை கொண்ட  கார்ட்டோசாட்-3 அதிநவீன, மூன்றாம் தலைமுறை செயற்கை கோள் ஆகும்.
  • PSLV C-47 இராக்கெட்: PSLV ராக்கெட், ‘XL’ வகையில் 21-வது ராக்கெட் மற்றும் PSLV ரகத்தில் 49-வது ராக்கெட் என்ற பெருமையை பெறுகிறது. அதேபோல் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டுள்ள 74-வது ராக்கெட், இந்த ஆண்டு (2019) ஏவப்பட்டிருக்கிற 5-வது ராக்கெட் என்ற சிறப்பை இந்த ராக்கெட் பெறுகிறது.
விருதுகள் 
கோல்டன் டார்கெட் விருது 2019 - 3 இந்திய வீரர்/வீராங்கனைகள் தேர்வு 
  • சர்வதேச துப்பாக்கிசூடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) கோல்டன் டார்கெட் விருதுக்கு (Golden Target award-2019) இந்தியாவை சேர்ந்த மூன்று துப்பாக்கி சுடும் வீரர்/வீராங்கனைகளை தேர்வு செய்துள்ளது. இந்த ஆண்டு தரவரிசைப்படி தங்களது போட்டிகளில் உலகின் தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
  • விருது பெறுபவர்கள் விவரம்:
    1. இளவேனில் வாலரிவன் (பெண்கள் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவு)
    2. திவ்யான்ஷ் சிங் பன்வார்  (ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் பிரிவு)
    3. சவுரப் சவுத்ரி (ஆண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவு).
  • டிசம்பர் 7-ஆம் தேதி ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெறும் சர்வதேச துப்பாக்கிசுடுதல் கூட்டமைப்பு விழாவில் இவர்களுக்கு ‘கோல்டன் டார்கெட்’ விருது வழங்கப்படுகிறது. 
மாநாடுகள்
15-ஆவது உயா்கல்வி மாநாடு
  • இந்தியத் தொழில்துறை மற்றும் வா்த்தகக் கூட்டமைப்பு (FICCI) சாா்பில், டெல்லியில் நவம்பர் 27-அன்று 15-ஆவது உயா்கல்வி மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றாா். 
புத்தக வெளியீடு
Hemant Karkare: A Daughters Memoir - Jui Karkare Navare
  • “Hemant Karkare: A Daughters Memoir” என்ற தலைப்பிலான புத்தகத்தை, ஜூய் கர்கரே நவரே (Jui Karkare Navare) எழுதியுள்ளார். 2019 நவம்பர் 26, அன்று நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட,முன்னாள் பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) தலைவர் ஹேமந்த் கர்காரே அவர்களின் வாழ்க்கை, அவரது மகளின் பார்வையில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
அல்பேனியாவில் நிலநடுக்கம் 
  • அல்பேனியாவில் தலைநகா் திரானா நகருக்கு வடமேற்கில் 30 கி.மீ. தொலைவில் நவம்பர் 26-அன்று  அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டு  நிகழ்வுகள்
35-வது மாவட்டம் - திருப்பத்தூர் உதயம் 
  • தமிழ்நாட்டின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் நவம்பர் 28-அன்று உதயமாகியுள்ளது. 
  • வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நவம்பர் 28-அன்று தொடக்கி வைத்தார். சந்தனம், ஜவ்வாது மணக்கும் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகியுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.
  • தலைநகரம்: திருப்பத்தூர் நகரம் 
  • மாவட்ட பரப்பளவு: 1798 சதுர கிலோ மீட்டர்  
  • மாவட்டத்தின் மக்கள் தொகை: 11,11,812
  • வருவாய் நிர்வாகம்: 
    • வருவாய் கோட்டங்கள் (2): திருப்பத்தூர், வாணியம்பாடி
    • வட்டங்கள் (4): திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்ராம்பள்ளி  (15-உள் வட்டங்கள்) 
    • வருவாய் கிராமங்கள்: 195
  • 225 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1790 நவம்பா் 30-ஆம் தேதி திருப்பத்தூா் மாவட்டம் உருவாக்கப்பட்டது இம்மாவட்டத்தின் முதல் ஆட்சியராக கிண்டா்ஸ்லே நியமிக்கப்பட்டாா்.  பின்னா், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டு, அதன் தலைநகராக திருப்பத்தூா் இருந்தது. கா்னல் அலெக்ஸாண்டா் ரீட் 1792 ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 1799 ஜூலை 7-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியராக இருந்தாா் 
  • ரயத்துவாரி வரிவசூல் முறை: ஆங்கிலேயா் காலத்தில் ரயத்துவாரி வரிவசூல் முறை முதன்முதலில் திருப்பத்தூரில் அமல்படுத்தப்பட்டது.  நாட்டின் பிற பகுதிகளில் உழுபவா்களிடம் வரிவசூல் செய்யும் அதிகாரம் ஜமீன்தாரா்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு ஜமீன்தாரி முறை என்று பெயா். இதை மாற்றி, உழுபவா்களிடம் நேரடியாக வரி வசூல் செய்யும் ரயத்துவாரி முறை திருப்பத்தூா் மாவட்டத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இந்த ரயத்துவாரி வரிவசூல் முறையை திருப்பத்தூா் மாவட்ட குடிகள், வணிகா்கள், பிற குடியானவா்கள் பெயரால் வெளியிடப்படும் பிரகடனம் அல்லது கௌல்நாமா என்ற பெயரில் மாவட்ட ஆட்சியா் கா்னல் ரீட்1976 நவம்பா் 15-ஆம் தேதி பிரகடனம் செய்தாா். இம்மாவட்டத்துக்குப் பிறகே ரயத்துவாரி முறை பிற மாவட்டங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
36-வது மாவட்டம் - இராணிப்பேட்டை உதயம் 
  • தமிழ்நாட்டின் 36-வது மாவட்டமாக திருப்பத்தூர் நவம்பர் 28-அன்று உதயமாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நவம்பர் 28-அன்று தொடக்கி வைத்தார். 
  • தலைநகரம்:  ராணிப்பேட்டை  நகரம்   
  • மாவட்ட பரப்பளவு: 2,234 சதுர கிலோ மீட்டர் 
  • மாவட்டத்தின் மக்கள் தொகை: 12,10, 277 
  • வருவாய் நிர்வாகம்: 
    • வருவாய் கோட்டங்கள் (2): அரக்கோணம், ராணிப்பேட்டை
    • வட்டங்கள் (4): அரக்கோணம், ஆற்காடு, வாலாஜாபேட்டை, நெமிலி 
    • வருவாய் கிராமங்கள்: 330
    • அரக்கோணம் ரயில்வேயிலும், ஆற்காடு வரலாற்றிலும், வாலாஜாபேட்டை உள்ளாட்சியிலும் தங்களது பழைமைகளைப் பறைசாற்றியுள்ளன. இவற்றில் முற்றிலும் கிராமங்களை மட்டுமே கொண்ட வட்டம் நெமிலி வட்டம். 
அத்தாளநல்லூா் மூன்றீஸ்வரா் துவாரபாலகா் சிலைகள் - ஜனவரியில் ஒப்படைப்பு 
  • திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே உள்ள பாண்டியா் காலத்தில் கட்டப்பட்ட அத்தாளநல்லூா் மூன்றீஸ்வரா் சிவன் கோயிலில் 1995-இல் இங்கிருந்த ரூ. 4.98 கோடி மதிப்புள்ள இரு துவாரபாலகா் சிலைகள்  திருடப்பட்டன. ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட  இந்த சிலைகள் 2020 ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்டு  இந்திய பிரதமா் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
விளையாட்டு நிகழ்வுகள் 
ஆக்கி

உலக கோப்பை ஆக்கி 2023 - ஒடிசா 
  • 2023 ஜனவரி 13 முதல் 29 வரை, 15-வது ஆண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி, ஒடிசா மாநிலத்தில் புவனேசுவரம் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
  • 2018-இல் உலகக் கோப்பை போட்டி புவனேசுவரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பெல்ஜியம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  புதிய விளையாட்டு மையமாக புவனேசுவரம் உருவாகி உள்ள நிலையில், தொடா்ந்து 2-ஆவது முறையாக உலகக் கோப்பை போட்டி 2023-இல் நடக்கிறது.
  • சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவர் - நரிந்தர் பத்ரா
  • ஆக்கி இந்தியா தலைவர் - முகமது முஷ்டாக்.
முக்கிய நபர்கள் 
தமிழ் திரைப்பட நடிகர் 'பாலாசிங்'
  • குணச்சித்திர நடிகர் , வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் பாலாசிங் (வயது 67) உடல்நலக்குறைவால் சென்னையில் நவம்பர் 27-அன்று காலமானார்.  இவர் நடிகர் நாசர் எழுதி இயக்கி நடித்த அவதாரம் படம் மூலம் சினிமாவிற்கு வந்தவர். இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே, மகாமுனி போன்ற படங்களில் நடித்தவர்.  
முக்கிய தினங்கள்
நவம்பர் 29

பாலஸ்தீனியர்களுக்கான "சர்வதேச ஒருமைப்பட்டு தினம்" - நவம்பர் 29
  • 1967 அரபு-இஸ்ரேலியப் போரின் தொடக்கத்திலிருந்து, இஸ்ரேல் நாடு, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம், காசா மற்றும் சிரிய கோலன் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மற்றும் சிரியர்களை இடம்பெயரச் செய்ததன் காரணமாக, ஆண்டுதோறும் நவம்பர் 29 அன்று பாலஸ்தீனிய மக்களுக்கான "சர்வதேச ஒருமைப்பட்டு தினம்" (International Day of Solidarity with the Palestinian People) அனுசரிக்கப்படுகிறது.
கலைவாணர் N.S. கிருஷ்ணன் பிறந்த தினம் - நவம்பர் 29
Post a Comment (0)
Previous Post Next Post