நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 30, 2019
சர்வதேச நிகழ்வுகள்ஃபோா்ப்ஸ்’ உலக கோடீஸ்வரா் பட்டியல் 2019
- 2019-ஆம் ஆண்டுக்கான உலகின் முதல் 10 கோடீஸ்வரா்களின் பட்டியலை ஃபோா்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
- முகேஷ் அம்பானி 9-ஆவது இடம்: இந்தியாவைச் சோ்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவா் முகேஷ் அம்பானி 6,000 கோடி டாலா் (ரூ.4.20 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். அவருடைய நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு நவம்பர் 28-அன்று வா்த்தகத்தில் ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் அதிகரித்து சாதனை படைத்தது.
- முதல் இரு இடங்கள்:
- ஜெஃப் பெஸோஸ் - அமேசான் நிறுவனம் (சொத்து மதிப்பு 11,300 கோடி டாலர்)
- பில் கேட்ஸ் - மைக்ரோசாஃப்ட் நிறுவனம் (10,740 கோடி டாலா் சொத்து மதிப்பு).
இந்தியா-இலங்கை இரு தரப்பு பேச்சுவார்த்தை (நவம்பர் 29-2019)
- இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்காக 400 மில்லியன் டாலர் (ரூ.2,880 கோடி) கடன் உதவி, பயங்கரவாத சவால்களை சந்திப்பதற்காக தனி உதவியாக 50 மில்லியன் டாலரும் (ரூ.360 கோடி) ஆக மொத்தம் 450 மில்லியன் டாலர் (ரூ.3,240 கோடி) வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
- இந்திய வீட்டு வசதி திட்டத்தின்கீழ் இப்போது 14 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. சூரிய மின் திட்டங் களை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு இந்தியா 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.720 கோடி) கடன் கொடுத்துள்ளது.
இந்தியா-ஜப்பான் 2+2 பேச்சுவாா்த்தை 2019
- இந்தியா-ஜப்பான் நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்களிடையேயான பேச்சுவாா்த்தை (2+2 பேச்சுவாா்த்தை) டெல்லியில் நவம்பர் 30-அன்று நடைபெறுகிறது.
IN
2021 முதல் தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம்
- தங்க நகைகளுக்கு வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் ஆகிறது என்ற அறிவிப்பை மத்திய அரசு நவம்பர் 29-அன்று வெளியிட்டது.
- ஹால்மார்க் முத்திரை: தங்கநகைகளின் சுத்த தன்மையை சான்றளிப்பதுதான் ‘ஹால்மார்க்’ முத்திரை. இது தேசிய தர மதிப்பு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. ஹால்மார்க் முத்திரை 4 முத்திரைகளை கொண்டது. அவை BISமுத்திரை, தங்கத்தின் சுத்த தன்மையை குறிக்கும் முத்திரை, ஹால்மார்க் மையத்தின் முத்திரை, நகைக்கடையின் முத்திரை ஆகியவை ஆகும்.
- நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர்: இராம்விலாஸ் பஸ்வான்.
‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் முறை
- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க கட்டணம் வசூலிக்கும் மையங்களில் வாகனங்கள் மின்னணு முறையில் தானியங்கி கட்டணம் செலுத்தும் வகையில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 15-ந் தேதி வரை ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகிறது.
ஆயுதச் சட்டத்திருத்த மசோதா 2019
- பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக,1959-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஆயுதச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மசோதா மக்களவையில் நவம்பர் 28-அன்று தாக்கல் செய்யப்பட்டது.
- தற்போது ஒருவர் 3 துப்பாக்கிகள் வரை வைத்துக்கொள்ளலாம் என்று இருப்பது 2 துப்பாக்கிகளாக குறைக்கப்படுகிறது. கள்ளத்தனமாக துப்பாக்கி தயாரிப்பது, விற்பது போன்ற குற்றங்களுக்கு வழக்கமான ஆயுள் தண்டனைக்கு (14 வருடங்கள்) பதிலாக ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்படும். தற்போது துப்பாக்கி அனுமதி 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுவது 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுவதுடன், மின்னணு முறையில் அனுமதி வழங்கப்படும்.
ஒடிசா அரசின் 'மைக்ரோ உரம் தயாரிக்கும் மையம்'
- தமிழ்நாட்டை பின்பற்றி மைக்ரோ உரம் தயாரிக்கும் மையத்தை (Micro Composting Centre) அமைக்க ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது
- ஒடிசா அரசு தனது ‘ஸ்வச்சா ஒடிசா சுஸ்தா ஒடிசா’ பிரச்சாரத்தின் (Swachha Odisha Sustha Odisha) ஒரு பகுதியாக, ஈரமான கழிவுகளை முறையாக பிரித்து நிர்வகிப்பதற்காக மைக்ரோ உரம் தயாரிக்கும் மையத்தை (MCC) அமைக்கிறது.
காந்திபீடியா 'இணைய களஞ்சியம்'
- மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் காந்திபீடியா என்ற இணைய களஞ்சியத்தை உருவாக்கப்படவுள்ளது.
- இந்த காந்தியடிகள் பற்றிய இணைய களஞ்சியத்தை IIT காந்திநகர் மற்றும் IIT கரக்பூர் மற்றும் தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சில் (NCSM) ஆகியவை இணைந்து உருவாக்குகின்றன.
நியமனங்கள்
மகாராஷ்டிர முதல்வர் - உத்தவ் தாக்கரே
- மகாராஷ்டிரத்தின் 18-ஆவது முதல்வராக சிவசேனை கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே (வயது 59) நவம்பர் 29 அன்று பதவியேற்றாா். மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். உத்தவ் தாக்கரே உடன் 6 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.
- சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து ‘மகா விகாஷ் முன்னணி’ (மராட்டிய வளர்ச்சி முன்னணி) என்ற பெயரில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன.
- உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray): வனஉயிா் புகைப்படக் கலைஞரான உத்தவ் தாக்கரே, சிவசேனா கட்சி நிறுவனர் பால் தாக்கரேயின் மகன் ஆவார். 2012-ஆம் ஆண்டு பால் தாக்கரே மறைவைத் தொடா்ந்து சிவசேனை தலைவரானாா்.
- மகாராஷ்டிரத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிவசேனையைச் சோ்ந்தவா் மீண்டும் முதல்வராகிறாா். இதற்கு முன்பு சிவசேனை சாா்பில் மனோகா் ஜோஷி (1995), நாராயண் ரானே (1999) ஆகியோா் மகாராஷ்டிர முதல்வராக இருந்துள்ளனா். பால் தாக்கரேவின் பேரன் ஆதித்ய தாக்கரே போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவரே தாக்கரே குடும்பத்தில் இருந்து தோ்தலில் போட்டியிட்ட முதல் நபா்.
பாதுகாப்பு/விண்வெளி
‘டோா்னியா்’ ரக போா் விமான கடற்படைப் பிரிவு - தொடக்கம்
- குஜராத் மாநிலம், போா்பந்தர் நகரில் ‘டோா்னியா்’ ரக போா் விமானங்கள் இடம்பெற்றுள்ள ஆறாவது கடற்படைப் பிரிவு தொடங்கி நவம்பர் 29-அன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய படைப் பிரிவில் 4 ‘டோா்னியா்’ ரக போா் விமானங்கள் இடம்பெற்றுள்ளன.
- இந்தியக் கடற்படையின் 314-ஆவது பிரிவான இந்த ஆறாவது கடற்படைப் பிரிவை அப்படையின் துணைத் தளபதி எம்.எஸ். பவாா் தொடக்கிவைத்தாா்.
- இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் மூலம் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் ‘டோா்னியா்’ ரக போா் விமானங்கள், கடல்சாா் கண்காணிப்பில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
‘ஸ்பைக்’ ரக பீரங்கி எதிா்ப்புஏவுகணை சோதனை
- இஸ்ரேலிடமிருந்து புதிதாக வாங்கப்பட்டுள்ள எதிரிகளின் பீரங்கி வாகனங்களை தாக்கி அழிக்கும் ‘ஸ்பைக்’ ரக ஏவுகணைகளை (Spike LR Missile) மத்தியப் பிரதேசத்தின் மோவ் பகுதியில், இந்திய ராணுவம் வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த ஏவுகணைகள், நான்காம் தலைமுறை ஏவுகணைகளாகும். இவை, 4 கி.மீ. வரை பாய்ந்து, இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
ரூ.22,800 கோடிக்கு போர் தளவாடங்கள், ஆயுதங்கள்
- நமது நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு ரூ.22 ஆயிரத்து 800 கோடிக்கு போர் தளவாடங்களையும், ஆயுதங்களையும் வாங்குவதற்கு ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய கடற்படைக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானம் ‘பி-81’ வாங்கவும் ராணுவ அமைச்சகம் ஒப்புதல் கொடுத்துள்ளது.
மிகப்பெரும் கருந்துளை 'LB-1'
- லாமாஸ்ட் (LAMOST) எனும் தொலைநோக்கியைப் பயன்படுத்தி சீன அறிவியல் கழகத்தின் தேசிய வானியல் நிலைய ஆய்வுக் குழு, LB-1 என்ற மீகப்பெரும் கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
- இந்த கருந்துளையின் எடை சூரியனைவிட கிட்டத்தட்ட 70 மடங்கு பெரியதாகும், இந்த தகவல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நேச்சர் எனும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆதித்யா-எல் 1’ திட்டம்
- சூரியனை பற்றி ஆராயும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) திட்டம், ‘ஆதித்யா-எல் 1’ திட்டம் ஆகும்.
விருதுகள்
ஞானபீட விருது 2019 - அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி (மலையாளம்)
- 2019-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது மலையாள மொழிக் கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீட பரிசுத் தொகை ரூ.11 லட்சமாகும்.
- பிரதிபா ராய்: 55-ஆவது ஞானபீட விருதை மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு அளிக்க பிரதிபா ராய் தலைமையிலான தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
- அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி: அக்கித்தம் என்ற பெயரில் கேரளத்தில் அறியப்படும் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி 55 நூல்கள் எழுதியுள்ளார். இவற்றில் 45 கவிதை நூல்கள். "இருபதாம் நூற்றாண்டிண்டே இதிஹாசம்' என்ற இவரது நீண்ட கவிதை மலையாள இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது. மலையாள இலக்கியத்துறையில் இந்த விருதை பெறும் 6-வது கவிஞர் ஆவார்.
சிறப்பான செயல்பாடு: தமிழ்நாடு காவல் துறைக்கு 4 SKOCH விருதுகள்
- தமிழ்நாடு காவல் துறையின் சிறப்பான பணிகளுக்காக மாநிலத்துக்கு ஒரு தங்கப்பதக்கம், 3 வெள்ளிப் பதக்கம் என மொத்தம் 4 ‘ஸ்கோச்’ விருதுகள் (SKOCH) கிடைத்துள்ளன. நாடு முழுவதும் அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுமையான மக்கள்சாா் முன்னெடுப்புகளுக்கு ஸ்கோச் (SKOCH) அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
FICCI விருது
- இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பின் இந்த ஆண்டிற்கான சிறந்த பல்கலைக் கழகத்திற்கான விருது எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
மாநாடுகள்
அகில இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு-2019
- 47-வது அகில இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு (AIPSC-2019) லக்னோ நகரில் நவம்பர் 29-30 தேதிகளில் நடைபெற்றது. உத்திரபிரதேச மாநில காவல்துறை இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தது.
பொருளாதார நிகழ்வுகள்
பொருளாதார வளா்ச்சி 4.5 சதவீதமாக குறைவு
- இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (2019 ஜூலை-செப்டம்பர்) 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் காணப்படாத சரிவு நிலையாகும்.
- தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நவம்பர் 29-அன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு பொருள்களின் ஏற்றுமதி ரூ. 61,908 கோடி-ஆக உயர்வு
- நாட்டில், ‘2018-19 ஆம் நிதியாண்டில் மின்னணு பொருள்களின் ஏற்றுமதி ரூ. 61,908 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ. 20 ஆயிரம் கோடி அதிகமாகும். கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவில் செல்லிடப்பேசி மற்றும் அதன் பாகங்கள் தயாரிக்கும் 268 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
தமிழ்நாட்டின் 37-வது மாவட்டம் - செங்கல்பட்டு
- தமிழ்நாட்டின் 35-வது மாவட்டமாக செங்கல்பட்டு நவம்பர் 29-அன்று உதயமாகியுள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நவம்பர் 29-அன்று தொடக்கி வைத்தார்.
- தலைநகரம்: செங்கல்பட்டு
- மாவட்ட பரப்பளவு: 2945 சதுர கிலோ மீட்டர்
- மக்கள்தொகை: 25,56,424 பேர்
- வருவாய் நிர்வாகம்:
- வருவாய் கோட்டங்கள் (3): மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம்
- வட்டங்கள் (8): திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், (40 உள்வட்டங்கள்)
- ஊராட்சி ஒன்றியங்கள்: 8 பேரூராட்சிகள்:12
- வருவாய் கிராமங்கள்: 636 வருவாய் கிராமங்கள்
- சட்டப்பேரவைத் தொகுதிகள்: செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர்.
- தமிழ்நாட்டின் மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு - தொடங்கிவைப்பு
- தமிழ்நாட்டின் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 ரொக்கம், அரிசி, சா்க்கரையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நவம்பர் 29-அன்று தொடக்கி வைத்தாா்.
- இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசின் சாா்பில் ரூ.2,363.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- பரிசு தொகுப்பு விவரம்: ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய்.
- வேட்டி, சேலை திட்டம்: பொங்கல் தினத்தையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு ஏழைகளுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடக்கி வைத்தாா்.
- இந்த திட்டத்தின் மூலம் 1.67 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெருவர்.இதற்காக தமிழக அரசு ரூ.484.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னையில் எம்-மின்சார ஆட்டோக்கள் (M-AUTO) - அறிமுகம்
- சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னையில் 100 மின்சார ஆட்டோக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நவம்பர் 29-அன்று தொடங்கி வைத்தார்.
- M ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தால் பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றியமைக்கப்பட்டு, முதற்கட்டமாக சென்னையில் எம்-எலக்ட்ரிக் ஆட்டோக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த எம்-மின்சார ஆட்டோக்களை ஒருமுறை முழுமையாக மின்னேற்றம் (சார்ஜ்) செய்வதன் மூலம் சுமார் 100 கி.மீ. தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் - தொடக்கம்
- சென்னை கோயம்பேட்டில் 486 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 29-அன்று திறந்து வைத்தார்.
- இந்தியாவிலேயே மிகப்பெரிய மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை கடந்த அக்டோபர் 1-ந் தேதி கொடுங்கையூரில் தொடங்கி வைக்கப்பட்டது.
- கழிவுநீர் இணைப்பு பெறுவதை எளிமைப்படுத்தும் வகையில் ‘அழைத்தால் இணைப்பு’ மற்றும் ‘இல்லந்தோறும் இணைப்பு’ ஆகிய 2 திட்டங்கள் வருகிற டிசம்பர் 2-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை - 33-ஆக உயர்வு
- தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூா் ஆகிய இடங்களில் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33-ஆகவும், அவற்றில் எம்பிபிஎஸ் இடங்கள் 4,700-ஆகவும் அதிகரிக்கவுள்ளன. இதன் மூலம் நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ இடங்களும் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.
- தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அங்கு மொத்தம் 3,350 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில், திருப்பூா், நீலகிரி (உதகை), ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகா் ஆகிய 6 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
- சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலையான ICF, ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ், 160 கிலோ மீட்டா் வேகத்தில் செல்லக்கூடிய இந்திய அதிவிரைவு ரயில் ஆகியவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
உலகளாவிய காலநிலை & சுற்றுச்சூழல் அவசரநிலை - EU அறிவிப்பு
- உலகளாவிய காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அவசரநிலையை (global climate and environmental emergency) ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
- ஐக்கிய நாடுகளின் COP25 எனப்படும் காலநிலை உச்சிமாநாடு ஸ்பெயின் நாட்டின் டிசம்பர் 2 ஆம் தேதி மாட்ரிட்டில் தொடங்குகிறது. இதற்காக, ஒரு குறியீட்டு நடவடிக்கையாக சுற்றுச்சூழல் அவசரநிலை அறிவித்துள்ளது.
முக்கிய நபர்கள்
மலையேற்ற வீரர் - பிராட் கோப்ரைட்
- அமெரிக்காவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பிராட் கோப்ரைட் (Brad Gobright), பிராட் கோப்ரைட், நவம்பர் 29, 2019 அன்று வடக்கு மெக்ஸிகோவில் மலையேறும் முயற்சியில் இறந்தார்.
விளையாட்டு நிகழ்வுகள்
வில்வித்தை
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2019
- 21-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதில் இந்திய வீரர்கள் வென்ற பதக்கங்கள் விவரம்:
- அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா ஜோடி - தங்கப்பதக்கம் (காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு)
- அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான், மோகன் பரத்வாஜ் - வெள்ளிப்பதக்கம் ( (காம்பவுண்ட் ஆண்கள் அணிகள் பிரிவு)
- ஜோதி சுரேகா, முஸ்கன் கிரார், பிரியா குர்ஜார் - வெள்ளிப்பதக்கம் (காம்பவுண்ட் பெண்கள் அணிகள் பிரிவு).
- தீபிகா குமாரி - தங்கப்பதக்கம் (பெண்கள் ரிகர்வ் தனிநபர் பிரிவு)
- இந்த போட்டியில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப்பதக்கத்தை வென்றது.
- இந்த போட்டியில் பூடான் வீராங்கனை கர்மா, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் . இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற பூடான் நாட்டை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை கர்மா பெற்றார்.
கால்பந்து
மும்பை சிட்டி கால்பந்து அணியை வாங்கிய சிட்டி கால்பந்து குரூப்
- இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றான மும்பை சிட்டி எப்.சி. அணியின் 65 சதவீத பங்குகளை, இங்கிலாந்து தலைநகர் லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்படும் சிட்டி கால்பந்து குரூப் நிறுவனம் வாங்கியுள்ளது. இங்கிலாந்து பிரீமியர் லீக் சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அணி இந்த நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும்.
கிரிக்கெட்
மூன்று வடிவ உள்நாட்டு போட்டிகளில் 'ஹாட்ரிக்': அபிமன்யு மிதுன் சாதனை
- குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெறும் சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் ஹாட்ரிக் உள்பட ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
- இதன் மூலம் உள்நாட்டில் நடக்கும் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அதாவது சையத் முஸ்தாக் அலி (20 ஓவர்), விஜய் ஹசாரே (50 ஓவர்), ரஞ்சி கோப்பை (4 நாள் முதல்தர போட்டி) ஆகிய போட்டிகளில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை 30 வயதான அபிமன்யு மிதுன் படைத்தார்.
முக்கிய தினங்கள்
நவம்பர் 30
இரசாயன ஆயுதப்போரால் பாதிக்கப்பட்டவர்கள் தினம் - நவம்பர் 30
- இரசாயன ஆயுதப்போரால் பாதிக்கப்பட்டவர்கள் நினைவு தினம் (Day of Remembrance for all Victims of Chemical Warfare) ஆண்டுதோறும் நவம்பர் 30 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
அறிவியலறிஞர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்தநாள் - நவம்பர் 30