TNPSC Current Affairs November 28, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 28, 2019
தேசிய நிகழ்வுகள்
அரசியல் சட்ட தின விழா - நாடாளுமன்ற கூட்டு கூட்டம்
  • 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, நாட்டின் அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் 70-வது ஆண்டு விழா நவம்பர் 26-அன்று கொண்டாடப்பட்டது.
  • இதையொட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடங்கிய கூட்டு கூட்டம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • அரசியல் சட்டத்தை புனித நூல் எனவும், வழிகாட்டும் ஒளிவிளக்கு எனவும் பிரதமர் தெரிவித்தார். 
  • நாணயம் வெளியீடு: மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடரை குறிக்கும்வகையில், ரூ.250 மதிப்புள்ள வெள்ளி நாணயத்தையும், ரூ.5 மதிப்புள்ள தபால் தலையையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். 
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகல் 
  • மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் நவம்பர் 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ் அரசு நவம்பர் 27-அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
  • உத்தவ் தாக்கரே: மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. நவம்பர் 28-அன்று மும்பை தாதர் சிவாஜிபார்க் மைதானத்தில் நடக்கும் விழாவில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.
குழந்தை திருமணங்களை பற்றி தகவல்-மசோதா 
  • சட்டபூர்வ திருமண வயது, பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தெரிவிப்பது கட்டாயம் என்று ‘போக்சோ’ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதுபோல், குழந்தை திருமணங்கள் குறித்தும் தகவல் தெரிவிப்பதை கட்டாயம் ஆக்க குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா கொண்டுவர உள்ளது.
சுங்கச்சாவடிகளில் ’பாஸ்டேக்’ ஸ்டிக்கர் தொழில்நுட்பம் - டிசம்பர் 1 முதல் அமல் 
  • நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் சுங்கச்சாவடிகளில் தானியங்கி முறையில் கட்டணம் வசூலிப்பதற்கு வகை செய்யும் வரும் டிசம்பர் 1-ந் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஸ்டிக்கர் தொழில்நுட்பதுடன் கூடிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அமலுக்கு வருகிறது. இதற்கு ’பாஸ்டேக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 
சிறப்புப் பாதுகாப்புப் படை (SPG) சட்டத் திருத்த மசோதா 2019
  • சிறப்புப் பாதுகாப்புப் படை (SPG) சட்டத் திருத்த மசோதா, மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி அவர்களால் மக்களவையில் நவம்பர் 25-அன்று தாக்கல் செய்யப்பட்டது.
  • இந்தப் புதிய மசோதாவின்படி, தற்போது பதவியில் இருக்கும் பிரதமருக்கும், அவருடன் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினா்களுக்கும் SPG பாதுகாப்பு அளிக்கப்படும்.
  • முன்னாள் பிரதமருடன் வசிக்கும் குடும்ப உறுப்பினா்களுக்கு, அவா் பதவியில் இருந்து விலகிய பிறகு 5 காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த SPG படையின் பாதுகாப்பை மத்திய அரசு அண்மையில் விலக்கிக் கொண்டது.
அங்கீகாரம் இல்லாத குடியிருப்பு - பட்டா வழங்கும் மசோதா
  • தலைநகர் டில்லியில், அங்கீகாரம் இல்லாத குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் மசோதா, மக்களவையில் நவம்பர் 26-அன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர் புற விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.
திருநங்கைகள் உரிமை மசோதா நிறைவேற்றம்: 
  • திருநங்கைகளுக்கு சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில், அதிகாரமளிக்க வழி செய்யும் திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதா, மக்களவையில் ஆகஸ்ட் 5-அன்று நிறைவேற்றப்பட்டது.மாநிலங்கவையில் இந்த மசோதா நவம்பர் 26-அன்று நிறைவேற்றப்பட்டது. 
தாத்ரா-நாகா் ஹவேலி, டாமன்&டையூ இணைப்பு மசோதா-2019
  • தாத்ரா-நாகா் ஹவேலி, டாமன்&டையூ யூனியன் பிரதேசங்களை நிர்வாக வசதிகளுக்காக ஒன்றாக ஒன்றாக இணைப்பதற்கான மசோதா Dadra and Nagar Haveli and Daman and Diu (Merger of Union Territories) Bill 2019) மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி (G Kishan Reddy) அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.
  • புதிய யூனியன் பிரதேசம், ‘தாத்ரா&நாகா் ஹவேலி மற்றும் டாமன்&டையூ’ என்று அழைக்கப்படவுள்ளது. குஜராத்துக்கு அருகே அமைந்துள்ள தாத்ரா&நாகா் ஹவேலி, டாமன்&டையூ யூனியன் பிரதேசங்கள், போா்ச்சுக்கீசியா்களின் ஆளுகைக்கு உள்பட்டிருந்தன. 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 10-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக தாத்ரா&நாகா் ஹவேலி பகுதி, யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
  • டாமன்&டையூ பகுதி, கோவாவுடன் சோ்த்து 12-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. 1987-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 56-ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் கோவா தனி மாநிலமாகவும், டாமன்&டையூ தனி யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்பட்டன.
  • டாமன்&டையூவில் இரண்டு மாவட்டங்களும், தாத்ரா&நாகா் ஹவேலியில் ஒரு மாவட்டமும் உள்ளன. தாத்ரா&நாகா் ஹவேலி மற்றும் டாமன்&டையூ யூனியன் பிரதேசத்துக்கு மக்களவையில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய யூனியன் பிரதேசத்துக்கான நீதிமன்றமாக மும்பை உயா்நீதிமன்றம் செயல்படும். 
  • ஜம்மு-காஷ்மீா் மாநிலம், ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தன. அதன் மூலம் யூனியன் பிரதேசங்களின் மொத்த எண்ணிக்கை 9-ஆக உயா்ந்தது. தற்போது, தாத்ரா&நாகா் ஹவேலி, டாமன்&டையூ யூனியன் பிரதேசங்கள் ஒன்றாக இணைக்கப்பட உள்ளதால், யூனியன் பிரதேசங்களின் மொத்த எண்ணிக்கை 8-ஆகக் குறையவுள்ளது.
பெட்ரோலிய விற்பனை கொள்கை-2019: கிராமப்புறங்களில் 5% பெட்ரோல் நிலையங்கள்
  • பெட்ரோலிய விற்பனைக்கான புதிய தாராளமய கொள்கையை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. நாட்டில் 100 பெட்ரோல் நிலையங்களை ஒரு நிறுவனம் தொடங்கும்பட்சத்தில் அதில் 5 சதவீதம் கிராமப்புறங்களில் இருக்க வேண்டும் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெட்ரோலிய நிறுவனங்களை நடத்த உரிமம் பெற்றவா்கள் அடுத்த தலைமுறைக்கான மாற்று எரிபொருள்களான இயற்கை எரிவாயு, LPG, பேட்டரி இருசக்கர வாகனங்கள் சாா்ஜ் செய்வதற்கான பிரிவு ஆகியவற்றை பெட்ரோல் நிறுவனம் தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் ஏற்படுத்த வேண்டும்.
சத்தீஸ்கரில் 'ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு மாற்றுத்திறனாளி உறுப்பினர்' 
  • ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் குறைந்தது ஒரு மாற்றுத்திறனாளி உறுப்பினரை நியமிக்க சத்தீஸ்கர் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • 1993-ஆம் ஆண்டு மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம், சத்தீஸ்கர் அமைச்சரவை ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் குறைந்தது ஒரு மாற்று திறன் கொண்ட உறுப்பினராவது இருப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் அமையும் 'எட்டலின் நீர்மின் திட்டம்' 
  • அருணாச்சல பிரதேச மாநிலத்தில், 3,097 மெகாவாட் எட்டலின் நீர்மின் திட்டத்தை (Etalin Hydroelectric Project) மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதற்கான பல்லுயிர் ஆய்வுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த திட்டம் ரூ .25,296.95 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே நிதி மேலாண்மை நிறுவனம் (ஐதராபாத்)
  • இந்திய ரயில்வே நிதி மேலாண்மை நிறுவனம் (IRIFM), தெலுங்கானா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் நகரின் செகந்திராபாத் பகுதியில் மௌலா-அலி என்ற இடத்தில் 14 ஏக்கர் அளவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • IRIFM: Indian Railway Institute of Financial Management.
ஆந்திர அரசின் ஊழல் புகார்களுக்கு 'உதவி தொலைபேசி எண் '14400'
  • ஊழல் தொடர்பான புகார்களுக்காக ஆந்திர மாநில அரசு குடிமக்களுக்கான உதவி தொலைபேசி எண் 14400-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
  • குடிமக்கள் நேரடியாக, அரசாங்கத் துறையிலும் ஊழலுக்கு எதிராக புகார் அளிக்கலாம். அனைத்து புகார்களும் 15 முதல் 30 நாட்களில் விசாரிக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நியமனங்கள்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் - என்.பஞ்சநாதம் 
  • தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக என்.பஞ்சநாதம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். இவருடைய பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் வீசிய '5 புயல்கள்' 
  • கஜா புயல் தொடா்பான ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் அண்மையில் சமா்ப்பித்தது. இந்த ஆய்வறிக்கையில், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வீசிய புயல்கள், அதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களும் தரப்பட்டுள்ளன. 
  • 10 ஆண்டுகளில் தமிழகத்தில் புயல்களில் சிக்கி 359 போ் வரை உயிரிழந்துள்ளனா். 
  • 2018-ஆம் ஆண்டில் மட்டும் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் 13 காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவாகின. 
  • 2000-ஆம் ஆண்டு காலத்தில் இருந்து தமிழகத்தில் ஆறு மிகப்பெரிய புயல்கள் உருவாகின. 
  • 2005-ஆம் ஆண்டில் மட்டும் ப்யாா், பாஸ் மற்றும் பனூஸ் என மூன்று புயல்கள் உருவாகி சேதங்களை ஏற்படுத்தின. 
புயல்கள் (ஆண்டு) - உயிரிழப்புகள் 
  • நிஷா (2008) - 186 போ் 
  • தானே (2011) - 57 போ் 
  • வாா்தா (2016) - 22 போ் பலி.
  • ஒக்கி (2017) - 42 போ் பலி.
  • கஜா (2018)- 52 போ் பலி.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் - தொடக்கம் (நவம்பர் 26, 2019)
  • தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் நவம்பர் 26 அன்று உதயமானது. கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தொடங்கிவைத்தார். 
  • விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக் குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 
  • தலைநகர் கள்ளக்குறிச்சி: புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகராக கள்ளக்குறிச்சி நகராட்சி விளங்கும் 
  • மொத்த மக்கள் தொகை: 13, 70, 281.
  • மாவட்டத்தின் பரப்பளவு: 3, 520.37 சதுர கி.மீ.
  • கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைகள்: கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய 2 வருவாய் கோட்டங்களும், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் புதிய தாலுகாவான கல்வராயன்மலை ஆகிய 6 தாலுகாக்கள் மற்றும் 558 கிராமங்களை, உள்ளடக்கியுள்ளது கள்ளக் குறிச்சி மாவட்டம்.
  • 5 சட்டமன்ற தொகுதிகள்: சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
  • கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் தெரிவித்த திட்டங்கள் விவரம்:
  • பொங்கல் பரிசு தொகுப்பு: அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.1,000 வழங்கப்படும் இந்த தொகுப்புடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். 
  • கால்நடை பூங்கா: ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்ட எல்லையில் 1,866 ஏக்கரில் அமைய உள்ளது. 
முதியோர்கள் குறைகளை தெரிவிக்க உதவி எண்கள்-அறிவிப்பு 
  • முதியோர்களுக்கு தேவையான உதவிகளை பெற கட்டணமில்லா உதவி எண்ணாக சென்னைக்கு மட்டும் 1253 என்ற எண்ணும், சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு 18001801253 என்ற எண்ணும் பொது சேவை எண்ணாக ‘ஹெல்ப் ஏஜ்’ இந்தியா என்ற தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர்களும் பயனடையும் நோக்கில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, முதியோர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற 044-24350375 என்ற தொலைபேசி எண்ணும், 9361272792 என்ற செல்போன் எண்ணும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஜப்பானிய 'மியாவாக்கி' நகர்புற காடுகள் வளர்ப்பு முறை
  • நகர்புற காடுகள் முறையானது ஜப்பானிய தாவரவியல் நிபுணர் ‘அகிரா மியாவாக்கி’ என்பவரால் கண்டறியப்பட்ட ஒரு சிறந்த தாவரவியல் தொழில்நுட்ப முறையாகும். சென்னையில் சுற்றுச்சூழல் மாசு அடைவதை குறைக்க ‘மியாவாக்கி’ எனப்படும் ஜப்பானிய முறையில் மரம் வளர்க்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
  • அதன்படி, கோட்டூர்புரம் பறக்கும் ரெயில் நிலையம் அருகில் சுமார் ½ ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் நிலத்தில் நகர்புற காடுகள் முறையில் அடர்த்தியான மரங்கள் அடங்கிய பசுமை நிலபரப்பு உருவாக்கப்படவுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை (சால்காம்ப்) மீண்டும் திறப்பு
  • காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலையை பின்லாந்து நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ‘சால்காம்ப்’ நிறுவனம் வாங்க உள்ளதால் அந்த ஆலை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது.
  • நோக்கியா நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, ‘சால்காம்ப்’ நிறுவனம் 2020 மார்ச் மாதம் முதல் மின்னணு சாதனங்கள் உற்பத்தியை தொடங்க உள்ளது. இந்த நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் சுமாா் ரூ.1,300 கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளது.
பின்லாந்து கல்வி குழுவினர் சென்னையில் பயிற்சி 
  • பின்லாந்து நாட்டு கல்வி குழுவினர் சென்னைக்கு வந்துள்ளனர். தமிழகத்தில் பள்ளிகளின் கற்பிக்கும் முறையை பார்வையிடும் அவர்கள் அதற்கேற்றபடி ஆலோசனைகளை வழங்குகின்றனர். அதற்கு முன்னோட்டமாக சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பர் 26-அன்று சிறப்பு பயிற்சி அளித்தனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேசும் பயிற்சி
  • தமிழ்நாடு அரசு பள்ளிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறனை வளர்க்க பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை வாரத்துக்கு 90 நிமிடத்துக்கான பாடவேளையிலும், 6 முதல் 9-ம் வகுப்பு வரை வாரத்துக்கு 45 நிமிடத்துக்கான பாடவேளையிலும் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்
தெற்காசிய விளையாட்டு போட்டி 2019 (காத்மாண்டு) 
  • 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் (2019 South Asian Games), டிசம்பர் 1 முதல் 10 வரை, நேபாள நாட்டின் காத்மாண்டு, பொகாரா ஆகிய இரு நகரங்களில் நடைபெறுகிறது.
வில்வித்தை

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2019
  • ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்/வீராங்கனைகள் வென்ற பதக்கங்கள் விவரம்: 
  • அதானு தாஸ் - வெண்கலப்பதக்கம் (ஆண்கள் ரிகர்வ் தனிநபர் பிரிவு)
  • அதானு தாஸ், தருண்தீப் ராய், ஜெயந்தா தலுக்தர் - வெண்கலப்பதக்கம் (ரிகர்வ் ஆண்கள் அணிகள் பிரிவு)
  • தீபிகா குமாரி, பாம்பல்யா தேவி, அங்கிதா பகத் - வெண்கலப்பதக்கம் (ரிகர்வ் பெண்கள் அணிகள் பிரிவு).
பேட்மிண்டன்

பிரீமியர் பேட்மிண்டன் லீக்-2020 - வீரர்கள் ஏலம் 
  • 5-வது பிரீமியர் பேட்மிண்டன் லீக் (PBL) போட்டி 2020 ஜனவரி 20 முதல் பிப்ரவரி 9 வரை சென்னை, பெங்களூரு, ஐதராபாத், லக்னோ ஆகிய நகரங்களில் நடக்கிறது
  • பங்கேற்கும் அணிகள்: இந்த போட்டியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ், அவாதே வாரியர்ஸ் (லக்னோ), ஐதராபாத் ஹன்டர்ஸ், பெங்களூரு ராப்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ், புனே 7 ஏசஸ் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன. 
  • இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் ஏலம் டெல்லியில் நவம்பர் 26-அன்று நடந்தது. 
  • வீரர்/வீராங்கனை ஏலத்தொகை (அணிகள்)
  • ஒற்றையர் பிரிவு 
    • பி.வி.சிந்து (இந்தியா) - ரூ.77 லட்சம் (ஐதராபாத் ஹன்டர்ஸ் அணி)
    • தாய் ஜூ யிங் (சீனதைபே) - ரூ.77 லட்சம் (பெங்களூரு ராப்டர்ஸ் அணி)
    • சாய் பிரனீத் (இந்தியா) - ரூ.32 லட்சம் ((பெங்களூரு ராப்டர்ஸ் அணி)
  • இரட்டையர் பிரிவு 
    • சுமீத் ரெட்டி (ரூ.11 லட்சம், சென்னை அணி)
    • சிராக் ஷெட்டி (ரூ.15½ லட்சம், புனே அணி) 
    • சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி (ரூ.62 லட்சம், சென்னை அணி).
கால்பந்து

பெண்கள் உலகக் கோப்பை (U-17) கால்பந்து 2020 - FIFA குழு ஆய்வு 
  • சா்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA), 2020-ஆம் ஆண்டு 17 வயது பெண்கள் உலகக் கோப்பை போட்டி 2020 நவம்பா் 2 முதல் 21-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
  • 17 வயது மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக FIFA பிரதிநிதி ஒலிவியா் வோட் தலைமையில் 8 போ் கொண்ட FIFA அதிகாரபூா்வ குழு நவம்பர் 27-அன்று கொல்கத்தா வந்தது. 2017-இல் ஆண்கள் 17 வயது உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்தியது.
செஸ்

ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் 2019: காா்ல்ஸன் சாம்பியன்
  • கிராண்ட் செஸ் டூா் சுற்றின் ஒரு பகுதியாக 2019 டாடா ஸ்டீல் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.  உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்ஸன், 27 புள்ளிகளை குவித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.
  • ஹிகாரு நகமுரா (அமெரிக்கா), அகிஷ் கிரி (நெதா்லாந்து),வெஸ்லி சோ (அமெரிக்கா) முறையே அடுத்தடுத்தா இடங்களை பெற்றனா். விஸ்வநாதன் ஆனந்த் ஏழாவது இடம் பெற்றார்.
முக்கிய நபர்கள்
கார்ட்டூன் ஆளுமை 'சுதீர் தர்' 
  • கார்ட்டூன் துறையின் புகழ்பெற்ற ஆளுமை 'சுதீர் தர்' (வயது 87) குர்கானில் நவம்பர் 26, 2019 அன்று காலமானார். சுதீர் தர் (Sudhir Dhar) அவர்களின் கார்ட்டூன்கள், டெல்லி டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்றவற்றில் வெளிவந்துள்ளன.
Post a Comment (0)
Previous Post Next Post