TNPSC Current Affairs May 25, 2024

தேசிய நிகழ்வுகள் 

உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறிய இளம் இந்தியர் 

  • காம்யா கார்த்திகேயன் (வயது 16) வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி "உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறிய இளம் இந்தியர்" என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். 

  • மேலும் "உலக அளவில் இரண்டாவது இளம் பெண்" என்ற பெருமையையும் காம்யா (Kaamya Karthikeyan) பெற்றுள்ளார்.

சுற்றுசுழல் நிகழ்வுகள்

யானைகள் கணக்கெடுப்பு 2024

  • தென்னிந்திய அளவிலான இரண்டாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி (Elephant Population Estimation 2024) மே 25, 2024 முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் 3 நாட்களுக்கு இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகின்றன. 

  • இந்தக் கணக்கெடுப்பு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.

  • தமிழ்நாட்டில் மொத்தம் 26 வனக்கோட்டங்களில், 697 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளில் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பு பணியில் 1,836 வன ஊழியர்கள், 342 தன்னார்வலர்கள் என மொத்தம் 2,178 பேர் ஈடுபட்டுள்ளனர். 

  • 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனப்பகுதிகள், அதையொட்டிய கர்நாடக, கேரள எல்லைகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 2,961 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இரீமெல் புயல் - குறிப்புகள்

  • வங்காளவிரிகுடா கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மே 24, 2024 அன்று 'இரீமெல்' புயலாக உருவாகியது. இந்த புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்த "இரீமெல்' (Cyclone Remal) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

  • இரீமெல் என்றல் அரபு மொழியில் 'மணல்' (SAND) என்று பொருள்படும்.

Post a Comment (0)
Previous Post Next Post