இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் - தகவல் குறிப்புகள்

Palk Bay Dugong Conservation Reserve, Tamil Nadu
 • India gets its first Dugong Conservation Reserve in Tamil Nadu, the 448 square kilometers in Palk Bay covering coastal waters of Thanjavur and Pudukkotai districts.
 • Dugongs are the largest herbivorous marine mammals in the world thriving primarily on seagrass beds, a major carbon sink of the oceans. 
 • Dugongs are protected under Schedule 1 of the Wild Life (Protection) Act, 1972. However, their population is on the decline due to habitat loss.
இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் - பாக்விரிகுடா “கடற்பசு பாதுகாப்பகம்
 • 1972 ஆம் ஆண்டின் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் , அட்டவணை 1-இன் கீழ் இந்தியாவில் கடற்பசு இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், வாழ்விட இழப்பு காரணமாக கடற்பசு இனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. 
 • தற்போது சுமார் 240 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது.
 • பெரும்பான்மையான கடற்பசுக்கள் தமிழ்நாட்டின் பாக்விரிகுடா கடற்கரை பகுதிகளில் காணப்படுகின்றன.
 • இவற்றை பாதுகாக்க பாக்விரிகுடாவில் “கடற்பசு பாதுகாப்பகம்” அமைக்க தமிழக அரசு முடிவு செய்து, தமிழகத்தில் அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மன்னார்வளைகுடா, பாக்விரிகுடா (Palk Bay) பகுதியில் “கடற்பசு பாதுகாப்பகம்" அமைக்கப்படும் என்று 2021 செப்டம்பர் 3ம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தது.
 • இதனைத் செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செப்டம்பர் 21-ந்தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. 
 • இந்த அரசாணையின்படி 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடா கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation Reserve) அறிவிக்கப்பட்டுள்ளது.
 • பாக்வளைகுடாவில், தமிழக அரசு அறிவித்துள்ள இந்தக் கடற்பசு பாதுகாப்பகம், இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்படும் பாதுகாப்பகம் எனும் சிறப்பைப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் எந்த ஒரு புதிய கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ அங்கு வாழும் மீனவ மக்களுக்கு விதிக்கப்படாது.
 • கடற்பசுக்களும், அவற்றின் முக்கியத்துவமும்: 
  • உலகின் மிகப்பெரிய தாவரவகை கடல் பாலூட்டிகளான, கடற்பசுக்கள் (Dugong), முதன்மையாக கடற்புற்களை உண்டு வளர்ந்து வருகின்றன. 
  • கடற்பசு இனங்களை பாதுகாப்பதனால், கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடற்புற்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்தவும் உதவுகிறது. 
  • கடல்புல் படுகைகள் வணிகரீதியாக மதிப்புமிக்க பல மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகவும், உணவளிக்கும் இடமாகவும் உள்ளது.
Palk Bay Dugong Conservation Reserve, Tamil Nadu, Source: The New Indian Express
Post a Comment (0)
Previous Post Next Post