National Librarians Day - August 12, 2021

 ஆகஸ்டு 12: தேசிய நூலகர் தினம் 

  • இந்திய நூலக அறிவியலின் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன்

    • இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்த தினம் ஆகஸ்டு 12 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 

    • டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்த தினம் 'தேசிய நூலகர் தினமாக கொண்டாடப்படுகிறது.

  • கோலன் பகுப்பு முறை

    • டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன், நூலகங்களில் புத்தகங்களை பாதுகாப்பாக சேமிக்கும் கோலன் பகுப்பு முறையை உருவாக்கியவர். இந்தியாவில் நூலகத்துறையின் வளர்ச்சிக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். 

    • டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன், இந்திய நூலக அறிவியல் ஆவணக்காப்பக மற்றும் தகவல் அறிவியலின் தந்தை என்று போற்றப்படுகிறார். 

  • சீர்காழி டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன்

    • இரங்கநாதன் 1892-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி நாகை மாவட்டம் சீர்காழியில் ராமாமிர்தம், சீதாலட்சுமி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

  • சென்னை பல்கலைக்கழக நூலகர்

    • 1924-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் நூலகராக பணியில் சேர்ந்தார். 

    • இங்கிலாந்தில் லண்டன் பல்கலைக்கழக நூலகம் சமூக வாசிப்பு நடுவங்களாக செயல்படுவதை கண்டு அகம் மகிழ்ந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தின் நூலகவியல் பள்ளியில் நூலக அறிவியலில் பயிற்சி பெற்றார். 

    • சென்னை பல்கலைக்கழகத்தில் நூலகத்தை தனிமனிதனாக முன்னின்று சீர்படுத்திய ரங்கநாதன் தான் உருவாக்கிய கோலன் நூற்பகுப்பு முறையை அதில் வெற்றிகரமாக பயன்படுத்தினார்.

  • நூலக அறிவியலின் ஐந்து விதிகள்

  • டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் தன்னுடைய உலகப் புகழ் பெற்ற புத்தகமான “நூலக அறிவியலின் ஐந்து விதிகள்” என்ற புத்தக தொகுதியை 1931-ம் ஆண்டு வெளியிட்டார். இதுவே அவரது முதல் புத்தகம் ஆகும். நூலக அறிவியலின் ஐந்து விதிகள் பின்வருமாறு:

  1. புத்தகங்கள் பயன்படுத்துவதற்கு, 

  2. ஒவ்வொரு வாசகருக்கும் புத்தகம், 

  3. ஒவ்வொரு புத்தகத்திற்கும் வாசகர், 

  4. வாசகரின் நேரத்தை பாதுகாத்தல், 

  5. நூலகம் ஒரு வளரும் அமைப்பு.

  • புத்தகங்கள் மக்களைச் சென்று சேர்ந்தால் தான் அதிக அளவில் கல்வி வளர்ச்சி உருவாகும் என்கிற அரிய சிந்தனையின் வடிவமாக முதன் முதலாக 1931-ம் ஆண்டில் மன்னார்குடி மேலவாசல் கிராமத்தைச் சேர்ந்த கனகசபை பிள்ளை என்பவரால் உருவாக்கப்பட்ட மாட்டு வண்டியினால் ஆன நடமாடும் நூலகத்தினை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் தொடங்கிவைத்தார். 

  • இதுதான் இந்தியாவில் மாட்டு வண்டியால் ஆன முதல் நடமாடும் நூலகம் ஆகும். 

  • அந்த காலகட்டத்தில் வாகன வசதி இல்லாத நிலையில் மாட்டு வண்டியில் நூல்களை அடுக்கிக்கொண்டு மன்னார்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள 98 கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 

  • மேலும் கும்பகோணம் நகரில் சைக்கிள் சக்கரத்துடன் கூடிய கை வண்டியிலும் நடமாடும் நூலகம் இயங்கியிருக்கிறது. நடமாடும் மாட்டு வண்டி நூலகம் தற்போதும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

  • இந்தியா சுதந்திரம் அடைந்து பத்தாவது ஆண்டான 1957-ம் ஆண்டு  பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. 27.9.1972 அன்று எஸ்.ஆர்.ரங்கநாதன் மரணம் அடைந்தார்.

Post a Comment (0)
Previous Post Next Post