8-வது இந்தியா சர்வதேச பட்டு கண்காட்சி 202

  • 8-வது இந்தியா சர்வதேச பட்டு கண்காட்சியை (India International Silk Fair 2021) புது டெல்லியில் இருந்து இந்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மெய்நிகர் தளத்தில் திறந்து வைத்தார்.
  • COVID-19 தொற்றுநோய் காரணமாக ஜனவரி 31 முதல் பெப்ரவரி 4-வரை ஐந்து நாட்கள் நிகழ்வு மெய்நிகர் முறையில் நடைபெறுகிறது. 
  • இந்திய பட்டு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த கண்காட்சி, இந்தியாவின் மிகப்பெரிய பட்டு கண்காட்சியாக கருதப்படுகிறது. 
  • இந்தியா பட்டு உற்பத்தியின் நீண்ட வரலாற்றைக் கொண்டது, உலகில்  பட்டு உற்பத்தியில் இந்தியா 
  •  இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகளவில் 4 முக்கிய பட்டு வகைகளை உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை: மல்பெரி, எரி, டாசர் மற்றும் முகா.
  • இந்தியாவில் சுமார் 11 புவிசார் குறியீடு பெற்ற ஜவுளி பொருட்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன. அவை: போச்சம்பள்ளி இகாட், சந்தர்பால் பட்டு, மைசூர் சில்க், காஞ்சிபுரம் பட்டு, முகா பட்டு, சேலம் பட்டு, ஆர்னி சில்க், சம்பா சில்க், பாகல்பூர் பட்டு, பனாரஸ் ப்ரோகேட் மற்றும் புடவைகள் போன்றவை ஆகும்.

Post a Comment (0)
Previous Post Next Post