டாக்டர் சாந்தா - மறைவு

  • புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா (வயது 93) அவர்கள் ஜனவரி 19-அன்று அதிகாலை உயிரிழந்தார்.
  • ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். 
  • அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 1955-ம் ஆண்டு பணியில் இணைந்த அவர் 65 ஆண்டுகளுக்கு மேலாக அந்த மருத்துவமனையில் பணியாற்றினார். 
  • புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இந்திய அளவில் முன்னோடியாக டாக்டர் சாந்தா கருதப்படுகிறார். புற்றுநோயியல் துறையில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தவர். 
  • டாக்டர் சாந்தா 1927-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். உலக புகழ்பெற்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா ஆவார். 
  • இந்தியாவின் முதல் பெண் டாக்டரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில், டாக்டராக பணியில் சேர்ந்தார். 
  • 12 படுக்கைகளுடன் இயங்கி வந்த அடையாறு மருத்துவமனையை தனது குரு டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து உலகத்தரம் வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார். 
  • மருத்துவ துறையில் சிறப்பான பணிக்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே விருது, இந்தியாவின் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், நாயுடம்மா நினைவு விருது, தமிழக அரசின் அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட விருதுகளை பெற்றுள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post