தமிழ்நாட்டில் 6,26,74,446 வாக்காளர்கள்

  • தமிழ்நாட்டில் வருகிற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

  • இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். 

  • 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர் பெண் வாக்காளர்கள். 7 ஆயிரத்து 246 பேர் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள்.

  • அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி: தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி ஆகும். 

  • இங்கு 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்கள் உள்ளனர். 

  • குறைந்த வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி: குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதி சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதி ஆகும். இங்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர்.

Post a Comment (0)
Previous Post Next Post