2021-ஆம் ஆண்டுக்கான குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தகளுக்கு அனுமதி இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் டெல்லி விஜய் சவுக்கில் ஆரம்பித்து, தேசிய மைதானம் வரை 8.2 கி.மீ. தூரத்திற்கு நடைபெறும் அணிவகுப்பு இந்த ஆண்டு 3.3 கி.மீ. ஆக குறைக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் இந்திய விமானப்படையின் 38 போர் விமானங்களும், ராணுவத்தின் 4 விமானங்களும் விண்ணில் அணிவகுக்கவுள்ளன.
முதல் முறையாக இந்த ஆண்டு இந்த விமான அணிவகுப்பில், ரபேல் போர் விமானம் இடம் பெற உள்ளன.
"வெர்டிகல் சார்லி பார்மேஷன்" என்று சொல்லப்படுகிற வகையில், ஒற்றை விமானமாக இந்த ரபேல் போர் விமானம் குறைவான உயரத்தில் பறந்து மேலே செல்லும். அது அதிக உயரத்தில் நிலைபெறுவதற்கு முன்பாக சாகசங்களை செய்யும். ரபேல் போர் விமானம், பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.
Tags:
National Affairs