TNPSC Current Affairs August 1-2, 2020 - Download as PDF

TNPSC Current Affairs August 1-2,  2020 - Download as PDF
 
சர்வதேச நிகழ்வுகள்
அரபு உலகின் முதல் அணு உலை "பராகா" 
  • எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகம் (UAE), அபுதாபி கடற்கரையில் "பராகா" (Barakah) என்ற பெயரிலான தனது முதல் அணு உலையை தொடங்குகிறது. அரபு உலகின் முதல் அணுஉலை இதுவாகும். 
  • தென்கொரிய நாட்டுத் தொழில்நுட்ப உதவியுடன் இந்த அணுஉலை அமைக்கப்பட்டுள்ளது. பராகா என்றால் அரபியில் "ஆசீர்வாதம்" என்று பொருள் ஆகும்.
உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் "ஆப்பிள்"
  • ஆப்பிள் நிறுவனம், உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் (world’s most valuable company) என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் (Apple Inc) பங்குகள் காலாண்டு முடிவில் 10% அதிகரித்தது.
  • இதன் மூலம் உலகின் மிக மதிப்புமிக்க பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக உயர்ந்தது. 2020 மார்ச் மாதத்தில் தொற்றுநோய்களின் போது குறைந்த புள்ளியில் இருந்து இந்நிறுவனம் பெரும் மீட்சியைக் பெற்றுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதனத்தை 82 1.82 டிரில்லியனாக உள்ளது.
சீனா உரிமை கோரும் "டயோயு தீவுகள்"
  • டயோயு தீவுகள் சீனப் பிரதேசம் என்றும், அப்பகுதியில் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிமை உண்டு என்றும் சீனா சமீபத்தில் அறிவித்தது. 
  • கிழக்கு சீனக் கடலில் அமைந்துள்ள ‘தியோயு தீவுகளை’ (Diaoyu islands) ஜப்பான் அரசால் பல ஆண்டுகளாக உரிமை கோரிவருகிறது. ஜப்பான் இந்த பிராந்தியத்தை சென்காகு (Senkaku) என்றும், சீனா டயோயு (Diaoyu) என்றும் அழைக்கின்றன.
காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மரபுகளை ஊக்குவிக்கும் அமெரிக்கச் சட்டம்
  • அமெரிக்க பிரதிநிதிகள் சபை சமீபத்தில் காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் மரபுகளை மேம்படுத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்றியது.
  • இந்த மசோதா (legacies of Gandhi, Martin Luther King Jr) இரண்டு சிறந்த தலைவர்களைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு கல்வி மன்றத்தையும் இந்திய மற்றும் அமெரிக்க மாணவர்களுக்கு ஒரு பரிமாற்ற திட்டத்தையும் அமைக்க முயல்கிறது.
  • இது அகிம்சை கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொழில்முறை மேம்பாட்டு பயிற்சி முயற்சியை உருவாக்க முயல்கிறது.
இந்திய நிகழ்வுகள்
ஒரே நாடு ஒரே கார்டு திட்டம்: 24 மாநிலங்களில் - அறிமுகம்
  • ஒரே நாடு ஒரே கார்டு திட்டம் (One Nation One Card Scheme) மேலும் நான்கு மாநிலங்கள், ஒன்றியப்பிரதேசங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. 
  • அவை: ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் உத்தரகண்ட் ஆகியவை ஆகும். இந்த புதிய நகர்வு மூலம், இந்த திட்டம் தற்போது நாடு முழுவதும் 24 
  • மாநிலங்கள், ஒன்றியப்பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது.
  • ஒரே நாடு ஒரே கார்டு (One Nation One Card Scheme) திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைப் பயனாளிகள் தங்களது இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA), நாட்டில் எந்த இடத்தில் உள்ள ரேஷனை் கடைகளில் பொருட்களைப் பெற முடியும்.
  • NFSA: National Food Security Act.
காற்றாலை மின் திட்டங்களை முதலில் முடித்த நிறுவனம் "செம்ப்கார்ப் எனர்ஜி இந்தியா"
  • சிங்கப்பூரை தளமாகக் கொண்ட செம்ப்கார்ப் எனர்ஜி இந்தியா நிறுவனம் (SEIL) தனது சமீபத்திய 800 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களை முடித்துள்ளதாக அறிவித்தது.
  • இந்திய சூரிய ஆற்றல் கழகம் (SECI) வழங்கிய அனைத்து காற்றாலை மின் திட்டங்களையும் முதன்முதலில் முடித்த முதல் மின் உற்பத்தி நிறுவனம் என்ற சிறப்பை "செம்ப்கார்ப் எனர்ஜி இந்தியா நிறுவனம்" (Sembcorp Energy India) பெற்றுள்ளது.
ஸ்மார்ட் நகரங்கள் - "லே மற்றும் கார்கில்" நகரங்கள் சேர்ப்பு 
  • லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே மற்றும் கார்கில் இரு நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்ற மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம் அண்மையில் தேர்வு செய்தது. இந்த இரு நகரங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 100 ஸ்மார்ட் நகரங்களுடன் கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • உள்கட்டமைப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, இரு நகரங்களுக்கும் திட்ட அறிக்கைகளை குழு உருவாக்க, ஸ்மார்ட் சிட்டிஸ் இயக்குனர் ராகுல் கபூரின் கீழ் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஐந்து பேர் கொண்ட மத்திய குழுவை அமைத்துள்ளது.
ICMR உருவாக்கும் கொரானா நோயாளிகளின் "புதிய தேசிய மருத்துவ பதிவேடு" 
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட கொரானா தொற்று (COVID-19) நோயாளிகளின் புதிய தேசிய மருத்துவ பதிவேட்டை (National Clinical Registry of COVID-19 patients) வெளியிட உள்ளது.
  • தொடங்கப்படவுள்ள இந்த விரிவான தரவுத்தளம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சுகாதார அமைச்சகம் மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளது.
  • இந்த தரவுத்தளம் மருத்துவமனைகளில் சிகிச்சையை மேம்படுத்தவும், மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவும், புதிய சிகிச்சையின் செயல்திறனைப் மேம்படுத்தவும் அனுமதிக்கிறது. 
வடக்கு காஷ்மீரின் 3 கிராமங்களுக்கு முதன்முறையாக மின் வசதி
  • பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகும் வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன், முன்டைன், பட்ரூ ஆகிய 3 கிராமங்களுக்கு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக 73 ஆண்டுகளுக்குப் பிறகு மின் வசதி அளிக்கப்பட்டுள்ளது. 
  • இங்கு சுமார் 14 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் கேரன் கிராமம் அமைந்திருக்கிறது. 
  • காஷ்மீர் மின்சார வழங்கல் வாரியத்தின் இரண்டு ஆண்டு கால திட்டம் தற்போது நிறைவடைந்து. 
KVIC ஆணையத்திடமிருந்து பொருட்களைக் கொள்முதல் செய்யும் "இந்தோ திபெத்திய எல்லை காவல்துறை"
  • காதி மற்றும் கிராம தொழில்துறை ஆணையத்திலிருந்து (KVIC) பொருட்களைக் கொள்முதல் செய்யும் முதல் மத்திய ஆயுத போலீஸ் படை என்ற சிறப்பை 
  • இந்தோ திபெத்திய எல்லை காவல்துறை (ITBP) அமைப்பு பெற்றுள்ளது.
  • மொத்தம் 1200 குவிண்டால் கடுகு எண்ணெய், துணிகள், யோகா கிட், மருத்துவமனை படுக்கை விரிப்புகள், ஊறுகாய் போன்றவை KVIC-இடமிருந்து ITBP வாங்குகிறது.
  • KVIC: Khadi & Village Industries Commission, ITBP: Indo Tibetan Border Police. 
திட்டங்கள்
AIM iCREST - தொடக்க-நிலை நிறுவனங்களுக்கான இன்குபேட்டர் திறன் மேம்பாட்டுத் திட்டம்
  • AIM iCREST என்ற பெயரிலான "வலுவான சுற்றுச்சூழல் அமைப்பிற்கான, செயல்திறன் மிக்க தொடக்க-நிலை நிறுவனங்களை உருவாக்கும் இன்குபேட்டர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை" நிடி ஆயோக் அமைப்பின் அடல் புதுமைப் பணித்திட்டம் (AIM) ஜூலை 30-அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • நிடி ஆயோக், உலகளாவிய நிபுணத்துவத்திற்காக, பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் வாத்வானி அறக்கட்டளையுடன் இணைந்து, இந்தியாவில் அளவில் புதுமை முன்னேற்றுவதற்கான ஒரு புது வகையான திட்டத்தை மேற்கொள்கின்றன.
மின் விலைப்பட்டியல் திட்டம் - அறிமுகம்
  • 500 கோடிக்கும் அதிகமான வருவாய் கொண்ட வணிகத்திற்கான மையப்படுத்தப்பட்ட மின்-விலைப்பட்டியல் திட்டத்தை (E-invoicing) மத்திய அரசு கொண்டு வருகிறது
  • சமீபத்திய இந்த திட்டத்தின் படி, 500-கோடிக்கும் அதிகமான வருவாய் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும், 2020 அக்டோபர் 1 முதல், ஒரு மையப்படுத்தப்பட்ட அரசாங்க இணையதளம் மூலம், தங்களது அனைத்து B2B விலைப்பட்டியல்களை உருவாக்குவது கட்டாயமாகும்.
  • நுகர்வோருக்கு எளிதாகும் வகையில், நிறுவனத்திற்கு நிறுவனம் வேறுபடும் விலைப்பட்டியல்களையும், மோசடிகளையும் களைய மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC) இந்த திட்டத்தை மேற்கொள்கிறது.
  • CBIC: Central Board of Indirect Taxes and Customs.
உன்னத் பாரத் அபியான் (UBA) திட்டம் - முத்தரப்பு ஒப்பந்தம்
  • இந்தியாவின் கிராமப்புற மேம்பாட்டுக்காக உன்னத் பாரத் அபியான் (UBA) திட்ட நடவடிக்கைகாக, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), உன்னத் பாரத் அபியான்-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டெல்லி (UBA-IITD) மற்றும் புது தில்லியில் உள்ள விஜன பாரதி (VIBHA) இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.
  • உன்னத் பாரத் அபியான் என்பது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின், கல்வி நிறுவனங்களை உள்ளூர் சமூகங்களுடன் இணைக்கும் ஒரு முக்கிய திட்டமாகும்.
உதான் திட்டத்தின் கீழ் உத்தராகண்டில் "ஹெலிகாப்டர் சேவை" தொடக்கம்
  • உத்தராகண்டில் உள்ள டெஹ்ராடூன்-நியூ தெஹ்ரி-ஸ்ரீநகர்-கௌச்சார் வழித்தடத்தில் உதான் திட்டத்தின் கீழ் பிராந்திய இணைப்புத் திட்டத்தின் (UDAN-RCS) கீழ் மலிவு விலை ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பவன் ஹான்ஸ் நிறுவனம் இந்த சேவையை இயக்கவிருக்கிறது. 
  • UDAN-RCS: Ude Desh ka Aam Nagrik- Regional Connectivity Scheme.
விருதுகள்
இங்கிலாந்தின் பிரதமர் விருது 2020 - இராஜீவ் குப்தா
  • இந்திய வம்சாவளி நடனக் கலைஞர் இராஜீவ் குப்தா அவர்களுக்கு இங்கிலாந்தின் உயரிய விருதான பிரதமர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பாங்க்ரா நடனத்தை கற்றுக் கொடுத்து வருகிறார். ஊரடங்கு காரணமாக ராஜீவ் குப்தா பாங்க்ரா நடன பயிற்சி வீடியோக்களை ஆன்லைனில் நேரலையில் ஒளிபரப்பினார். ராஜீவ் குப்தாவின் இந்த சேவையைப் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
மாநாடுகள்
ஆறாவது பிரிக்ஸ் சுற்றுச்சூழல் கூட்டம் 2020, இரஷ்யா
  • ஆறாவது பிரிக்ஸ் சுற்றுச்சூழல் கூட்டம் (BRICS Environment meeting), இரஷ்யாவில் காணோலி காட்சி வாயிலாக ஜூலை 30-அன்று நடைபெற்றது. 
  • இரஷ்யா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
CII தேசிய மெய்நிகர் மாநாடு 2020
  • ஆத்மநிர்பர் பாரத் திட்டத்திற்கான வணிகத்தை எளிதாக்குதல் (Easing Doing Business for Atmanirbhar Bharat) குறித்த, 2020 தேசிய மெய்நிகர் மாநாட்டை (CII National Digital Conference), மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் ஜூலை 30-அன்று தொடங்கி வைத்தார்.
  • தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையுடன் (DPIIT) இணைந்து இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) இம்மாநாட்டை ஏற்பாடு செய்தது.
பொருளாதார, வணிக நிகழ்வுகள்
ரிலையன்ஸ்-ஜெரா இணைந்து பங்களாதேஷில் அமைக்கும் "மின் உற்பத்தி நிலையம்"
  • இந்தியாவின் ரிலையன்ஸ் பவர் மற்றும் ஜப்பானின் ஜெரா (JERA) ஆகிய நிறுவனங்கள் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், பங்களாதேஷ் நாட்டில் ரிலையன்ஸ் பங்களாதேஷ் எல்.என்.ஜி மற்றும் பவர் (Reliance Bangladesh LNG and Power) என்ற பெயரிலான மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க உள்ளன.
  • சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி (JBIC) உள்ளிட்ட வங்கிகளின் குழு மொத்தம் 642 மில்லியன் டாலர் நிதியை இத்திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது.
ஜூலை மாத GST வசூல் - ரூ.87422 கோடி 
  • 2020 ஜூலை மாதத்தில், 87,422 கோடி ரூபாய் GST வரி வசூலாகி உள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.16,147 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.21,418 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.42,592 கோடி, கூடுதல் ‘செஸ்’ வரி ரூ.7,265 கோடி அடங்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் GST வரி விதிப்பு முறை 2016-ம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது.
கைவினைஞர்களுக்கான பிளிப்கார்ட்டின் "சமர்த் திட்டம்"
  • வால்மார்ட்டுக்குச் சொந்தமான இணையவழி விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட்டின் சமர்த் திட்டம் (Samarth Programme), இந்தியா முழுவதும் 6 லட்சம் கைவினைஞர்களை தங்கள் தயாரிப்புகளை ஐந்து அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்சது இணையதளம் மூலம் விற்பனை செய்ய உதவுகிறது.
  • சமர்த் திட்டம் என்பது இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்டால் 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, 
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
2100-க்குள் அழிவின் விளிம்பில் உள்ள "துருவ கரடிகள்" 
  • கடந்த சில பத்தாண்டுகளாக, துருவ கரடிகள் (Polar bears) காலநிலை மாற்றத்தின் எங்கும் நிறைந்த அடையாளமாக விளங்குகின்றன. புவி வெப்பமடைதல் தடையின்றி தொடர்ந்தால் இந்த கம்பீரமான உயிரினம் இந்த நூற்றாண்டின் இறுதியில் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • 2020 ஜூலை நேச்சர் காலநிலை மாற்ற (Nature Climate Change) இதழில் வெளியிடப்பட்ட ஒரு அண்மை ஆய்வில், ஆர்க்டிக் பிராந்தியத்தில் பெரும்பாலான துருவ கரடிகள் 2100-ஆம் ஆண்டளவில் பசுமை இல்ல வாயு உமிழ்வு தற்போதைய பாதையில் இருந்தால் அழிந்துவிடும் என்று கணித்துள்ளது.
BS-4 இன்ஜின் ரக வாகனங்களை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை
  • மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்.4 இன்ஜின் (BS-4) ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் ஜூலை 31-அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பி.எஸ்.4 ரக வாகனங்களை விட பி.எஸ்.6 ரக (BS-4) வாகனங்கள் குறைவான மாசுவை ஏற்படுத்தும் என்றும், பி.எஸ்.6 வாகனப் புகையில் புற்றுநோயை ஏற்படுத்து நச்சுப் பொருள் 80 சதவிகிதம் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
  • இதன் காரணமாக, பி.எஸ்.6 வாகனச் சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 2020 ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின்னர் பி.எஸ்.4 ரக வாகனங்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 
புத்தக வெளியீடு
Standard Treatment Guidelines for the Management of Substance Use Disorders (SUD) and Behavioural Addictions - மின் புத்தகம்
  • மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், "பொருள் பயன்பாட்டு கோளாறுகள் மற்றும் நடத்தை அடிமையாதலுக்கான நிலையான சிகிச்சை வழிகாட்டுதல்கள்" குறித்த ஆங்கில மின் புத்தகத்தை அண்மைில் வெளியிட்டார்.
  • COVID-19 நாட்டில் பல்வேறு கோளாறுகளைத் தூண்டும் என்று உலக மருந்து அறிக்கை 2020 தெரிவிக்கிறது, பொருள் பயன்பாடு இருதய, புற்றுநோய் மற்றும் மன ஆரோக்கியம் போன்ற தொடர்பு கொள்ள முடியாத கோளாறுகளுடன் தொடர்புடையது மற்றும் புகைபிடித்தல் கோவிட-19-க்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்றும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
தமிழ்நாடு நிகழ்வுகள் 
கிண்டி கிங்க் ஆய்வு மையத்தில் பி.சி.ஜி. மருந்து தயாரிக்கும் பணி - தொடக்கம்
  • சென்னை, கிண்டி கிங்க் ஆய்வு மையத்தில், காசநோய் தடுப்புக்கான, பி.சி.ஜி., மருந்து தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. கிங்க் ஆய்வு மையத்தில், காசநோய் 
  • தடுப்புக்கான, பி.சி.ஜி., மருந்து தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. குழந்தைகளுக்கு காசநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனால், குழந்தை பிறந்த உடன் முதலில், பி.சி.ஜி., தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி போட்டால், 14 ஆண்டுகள் காசநோய் வராமல் தடுக்கும். தற்போது, 11 ஆண்டுகளுக்கு பின், கிண்டியில் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.
  • கிங்க் ஆய்வு மையம்: கிண்டியில் உள்ள கிங்க் ஆய்வு மையத்தில், பி.சி.ஜி., ஆய்வகம், 1948ல் துவக்கப்பட்டது. இந்தியாவில், ஆண்டுக்கு, 700 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தேவைப்படுகிறது. இதில், 50 சதவீதத்தை, இந்த ஆய்வகம் பூர்த்து செய்து வந்தது.கடந்த, 2008ல், ஆய்வக கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாததால் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
விளையாட்டு நிகழ்வுகள் 
தேசிய விளையாட்டு விருதுகள் 2020 - தேர்வுக்குழு அமைப்பு
  • 2020-ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளுக்கு (National Sports Awards 2020), வீரர்/ வீராங்கனைகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழுவை மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஜூலை 31-அன்று அமைத்துள்ளது.
  • குழுத்தலைவர்: உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முகுந்தகம் சர்மா (Mukundakam Sharma) குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • குழு உறுப்பினர்கள்: வீரேந்திர சேவாக் (கிரிக்கெட்), சர்தார் சிங் (ஹாக்கி), மோனாலிசா பருவா மேத்தா (டேபிள் டென்னிஸ்), தீபா மாலிக் (பாரா-தடகளம்),  வெங்கடேசன் தேவராஜன் (குத்துச்சண்டை), மனிஷ் படேவியா (விளையாட்டு வர்ணனையாளர்), அலோக் சின்ஹா மற்றும் நீரு பாட்டியா (விளையாட்டு பத்திரிகையாளர்கள்).
  • விளையாட்டு விருதுகள்: இராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா விருது, அர்ஜுனா விருது, தியான் சந்த் விருது, ராஷ்டிரிய கேல் புரோட்சஹான் புருஸ்கர் விருது மற்றும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மக்கா) விருது.
150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் - அடில் ரஷித்
  • ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை அடில் ரஷித் பெற்றுள்ளார். இதை 102 ஒருநாள் ஆட்டங்களில் எட்டியுள்ளார்.
  • இங்கிலாந்து சௌதாம்ப்டனில் நடைபெற்ற இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தில், அடில் ரஷித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தச் சாதனையை படைத்தார். 
முக்கிய ஆளுமைகள் - இரங்கல்

தைவானின் ஜனநாயகத்தின் தந்தை "லீ டெங்-ஹுய்" - மறைவு 
  • தைவான் நாட்டில் ஜனநாயகம் செழிக்க உதவிய முன்னாள் அதிபர் லீ டெங்-ஹுய் (வயது 97) காலமானார்.
  • 1988 முதல் 2000 வரை தைவானின் அதிபராக பணியாற்றிய லீ டெங்-ஹுய் (Lee Teng-hui), "தைவானின் ஜனநாயகத்தின் தந்தை" (Father of Taiwan’s Democracy) என்றும் கருதப்பட்டார்.
  • சீனாவின் கடுமையான ஏவுகணை ஏவுதல்கள், கடற்படைத் தாக்குதல்கள் இருந்தபோதிலும் இவர் தேர்தல்கள் மூலம் தற்சார்பான தைவான் தீவுக்கான ஜனநாயக மாற்றங்களை கொண்டுவந்தார்.
முக்கிய தினங்கள்
முஸ்லிம் பெண்கள் உரிமை தினம் - ஆகஸ்ட் 1
  • இந்தியாவில் முத்தலாக் சட்டம் உருவான முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2020 ஆகஸ்டு 1-அன்று முஸ்லிம் பெண்கள் உரிமை தினம் (Muslim Women’s Rights Day) அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தலாக் (Triple Talaq) ஒரு கிரிமினல் குற்றமாகும்.
பக்ரீத் பண்டிகை - ஆகஸ்ட் 1, 2020
  • இஸ்லாமிய நாள்காட்டியின்படி துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாள் ஈத் அல் அதா எனப்படும் பக்ரீத் பண்டிகை ஆகஸ்ட் 1-அன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. 
இந்திய வாய் வழி சுகாதார தினம் - ஆகஸ்ட் 01 
  • புகழ்பெற்ற பல் மருத்துவ நிபுணர் மற்றும் இந்திய பல்மருத்துவ சங்க நிறுவியவரான டாக்டர் ஜி.பி.ஷங்க்வால்கர் (Dr. G.B. Shankwalkar) அவர்களின் நினைவாக, பல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆகஸ்ட் 1-ஆம் தேதி இந்தியாவில் 'வாய்வழி சுகாதார தினம்' (Indian Oral Hygiene Day) கொண்டாடப்படுகிறது. 
உலக தாய்ப்பால் வாரம் - ஆகஸ்ட் 1-7 
  • குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை “உலக தாய்ப்பால் வாரம்” (World Breastfeeding Week 2020) கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020-ஆம் ஆண்டின் மையகருத்து: “Support breastfeeding for a healthier planet”.
தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம் - ஆகஸ்டு 2 
  • ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. வண்ணங்களால் ஆனது வாழ்க்கை. நல்ல எண்ணங்களையும், நல்ல வண்ணங்களையும் ஏற்று நல்வாழ்வு வாழ்வோம்.
Post a Comment (0)
Previous Post Next Post