TNPSC Current Affairs August 13-16, 2020 - Download as PDF

TNPSC Current Affairs August 13-16,  2020 - Download as PDF
 

சர்வதேச நிகழ்வுகள்
இஸ்ரேலுடன் தூதரக உறவு: முதல் வளைகுடா நாடு, 3-வது அரபு நாடு - ஐக்கிய அரபு அமீரகம் 
  • 1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வளைகுடா நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. எனினும் இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் 1979-ம் ஆண்டு எகிப்தும், 1994-ம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.
  • அமெரிக்கா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் இடையே ஆகஸ்டு 14-அன்று நடந்த பேச்சுவார்த்தை அடிப்படையில், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே வரலாற்று சிறப்புமிக்க தூதரக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவு உருவாகியுள்ளது.
  • இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்திக்கொண்ட முதல் வளைகுடா நாடு மற்றும் 3-வது அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. இந்த தூதரக ஒப்பந்தத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாலஸ்தீனம் இது ஒரு தேசத்துரோக நடவடிக்கை என தெரிவித்துள்ளது.
அமெரிக்க துணை அதிபா் தேர்தல் - இந்திய அமெரிக்கர் கமலா ஹாரிஸ் போட்டி
  • அமெரிக்க துணை அதிபா் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்திய அமெரிக்கரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபா் மைக் பென்ஸை எதிர்த்து அவா் தோதலில் களம் காண்கிறார்
  • அமெரிக்க அதிபா் தேர்தல் 2020 நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் அந்நாட்டின் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
  • கமலா தேவி ஹாரீஸ்: கமலா ஹாரீஸின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள் ஆவர். அவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். தாயார் இந்தியர் ஆவார். கலிபோர்னியா மாகாணத்தில் அட்டார்னி ஜெனராலாக தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண் கமலா ஹாரீஸ் தான் ஆவார். அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் தென் ஆசிய பாரம்பரியத்தை கொண்ட முதல் பெண் என்ற பெருமையையும் கமலா ஹாரீஸ் பெற்றுள்ளார்.
  • அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ், தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாட்டை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் .
இந்திய நிகழ்வுகள்
74-வது சுதந்திர தினவிழா 2020 
  • இந்தியாவின் 74-வது சுதந்திர தினவிழா 2020 ஆகஸ்டு 15-அன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நடைபெற்ற நிகழ்வுகள் விவரம்:
  • டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, தேசியக்கொடியை ஏற்றினார். 7-வது முறையாக பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றியுள்ளார். தனது 86 நிமிட உரையில், சுயசார்பு இந்தியா திட்டம், எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு, தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டம், அனைத்து கிராமங்களுக்கும் அதிகவேக தொலைத்தொடா்பு இணைய வசதி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை தொடா்பான அறிவிப்புகளை வெளியிட்டார். 
  • தேசிய மின்னணு சுகாதார திட்டம்: தேசிய மின்னணு சுகாதார திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அட்டையில், ஒருவருடைய நோய், அவா் மேற்கொண்ட பரிசோதனைகள், எடுத்துக் கொண்ட மருத்துவ சிகிச்சைகள், சாப்பிட்ட மருந்துகள் ஆகியவை தொடா்பான விவரங்கள் சேமித்து வைக்கப்படும்.
  • தேசிய சுகாதார ஆணையம் நடைமுறைப்படுத்தும் இந்த திட்டம், சண்டீகா், லடாக், புதுச்சேரி, அந்தமான் நிகோபார், தாத்ரா நகா் ஹவேலி- டையூ டாமன், லட்சத்தீவுகள் ஆகிய 6 யூனியன் பிரதேசங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது. 
  • சுயச்சார்பு இந்தியா திட்டங்கள்: இந்தியாவை சா்வதேச உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என்பதே சுயச்சார்பு இந்தியா திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையாகும். இதற்காக, ரூ.110 லட்சம் கோடி செலவில், தேசிய அளவில் சுமார் 7,000 உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன. 
  • கொரானா தடுப்பூசி: இந்தியாவில் 3 கரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வெவ்வேறு நிலைகளில் பரிசோதனைகளில் உள்ளன. 
  • தேசிய போர் நினைவிடம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்தில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி இந்தியா கேட் வளாகத்தில் தேசிய போர் நினைவிடம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 40 ஏக்கரில் அமைந்துள்ள இந்த நினைவு சின்னத்தில் நான்கு சக்கரங்கள் அமைந்துள்ளன. அவை அமர் சக்ரா, வீர்தா சக்ரா, தியாக் சக்ரா, ரக்‌ஷக் சக்ரா ஆகியவை ஆகும். இதில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடத்தின் மத்தியில் 15.5 மீட்டர் உயரத்தில் தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு அணையா விளக்கு, இந்திய ராணுவத்தின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
  • இந்த நிகழ்வில் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே, கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் தலைமை மார்ஷல் ஆர்.கே.எஸ் பதவுரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • திருமண வயது: பெண்களின் திருமண வயதை 18-இல் இருந்து 21-ஆக உயா்த்துவது குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. 
  • கார்பன் வெளியேற்றமில்லாத பிரதேசம்: சிக்கிம் மாநிலத்தைப் போல், லடாக்கை முற்றிலும் இயற்கை சார்ந்த இடமாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லடாக்கில் சூரிய மின்சக்தி, காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியை கார்பன் வெளியேற்றமில்லாத பிரதேசமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • ஆசிய சிங்கங்களைப் பாதுகாக்கவும், டால்ஃபின்களைப் பாதுகாக்கவும் புதிய திட்டங்கள் தொடங்கப்படும்.
  • 3 ஆண்டுகளில், அனைத்து கிராமங்களிலும் அதிவேக தொலைத்தொடா்பு இணையவசதி ஏற்படுத்தப்படும். கடல்வழி கேபிள் மூலம் லட்சத் தீவுகளிலும் இந்த தொலைத்தொடா்பு வசதி ஏற்டுத்தப்படும்.
  • எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியாக இருந்தாலும் (பாகிஸ்தான்), உண்மையான எல்லைக் கோட்டுப் பகுதியாக இருந்தாலும் (சீனா), நாட்டின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்க நினைப்பவா்களுக்கு பாதுகாப்புப் படைகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன.
  • 14,000 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி: கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ள லடாக் பகுதியில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் தேசியக்கொடி ஏற்றினர்.
  • அமிர்தசரஸில் உள்ள அட்டாரி - வாகா எல்லையிலும் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் எஸ் எஸ் தேஸ்வேல் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்தார். 
மக்களவையில் பாடத்திட்டம் - தொடக்கம்
  • இந்திய நாடாளுமன்ற மக்களவை, புதிய பிரெஞ்சு பாடத்திட்டத்தை (New French Course) ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் தொடங்கியுள்ளது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் பிரெஞ்சு மொழி குறித்த அறிவைப் பெறுவதற்கு இது அவசியம் என்பதால் இந்த பாடநெறி தொடங்கப்படுகிறது.
  • இந்த திட்டத்தை PRIDE என் ஜனநாயகத்திற்கான நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
  • PRIDE: Parliamentary Research and Training Institute for Democracy.
அசாம் மாநில அரசின் "அருணோதய்" திட்டம் 
  • 2020 ஆகஸ்ட் 17-அன்று, அசாம் மாநில அரசு பெண்கள் நிதியுதவி அளிக்கும் "அருணோதய்" (ORUNODOI) என்ற புதிய திட்டத்தை தொடங்க உள்ளது.
  • இந்த நேரடி பணப் பரிமாற்றம் (டிபிடி) திட்டத்தில் மாதம் 19.7 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.830 நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
நீண்ட காலம் பதவி வகித்த "நாலாவது பிரதமர் நரேந்திர மோடி"
  • 2014 மே 26-ஆம் நாள் நாட்டின் 14-வது பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோடி. தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019 மே-30 ஆம் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார்.
  • 74-வது சுதந்திர நாளைக் கொண்டாட உள்ள நிலையில் நீண்ட காலம் பிரதமராக இருந்த நாலாமவர் என்ற தகுதியைப் பெறுகிறார் மோடி. 
  • நாட்டில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் ஜவாஹர்லால் நேரு. ஏறத்தாழ 17 ஆண்டுகள். அவருக்கு அடுத்தபடியாக அவருடைய மகள் இந்திரா காந்தி, 11 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். டாக்டர் மன்மோகன் சிங் தொடர்ந்தாற்போல 10 ஆண்டுகள்.
  • தங்களுடைய பதவிக் காலத்தை முடிக்காத காங்கிரஸ் அல்லாத மற்ற பிரதமர்கள்: மொரார்ஜி தேசாய் (மார்ச் 24, 1977 - ஜூலை 28, 1979), சரண் சிங் (ஜூலை 28, 1979 - ஜனவரி 14, 1980), வி.பி. சிங் (டிசம்பர் 2, 1989 - நவம்பர் 10, 1990), சந்திரசேகர் (November 10, 1990 - ஜூன் 21, 1991), எச்.டி. தேவெ கௌட (ஜூன் 1, 1996 - ஏப்ரல் 21, 1997) மற்றும் ஐ.கே. குஜ்ரால் (ஏப். 21, 1997 - மார்ச் 19, 1998).
கேப்டன் எஸ்.எஸ்.சாஹா் குழு
  • கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த 5 நபா் குழுவை அமைத்துள்ளதாக விமான விபத்து விசாரணை வாரியம் (AAIB) வியாழக்கிழமை தெரிவித்தது.
  • விமான போக்குவரத்து தலைமை இயக்குநரக முன்னாள் அதிகாரி கேப்டன் எஸ்.எஸ்.சாஹா் தலைமையிலான இந்தக் குழு 5 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.
மின்கலன் பொருத்தாத மின்சார வாகன விற்பனை - மத்திய அரசு அனுமதி
  • மின்கலன்கள் (பேட்டரிகள்) பொருத்தாத மின்சார வாகனங்களை விற்பனை செய்வதற்கும், அவற்றைப் பதிவு செய்வதற்கும் அனுமதியளிக்கபடுவதாக மத்திய அரசு ஆகஸ்டு 12-அன்று அறிவித்தது.
  • மின்சார வாகனத்துக்கான மொத்த விலையில் 30 முதல் 40 சதவீதம் அளவு மின்கலன்களுக்கானதாக உள்ளது.
  • இந்த புதிய அறிவிப்பு காற்று மாசு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது மட்டுமன்றி, மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் வளா்ச்சியடையவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜஸ்தான் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
  • இராஜஸ்தான் சட்டசபையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் அரசு ஆகஸ்டு 15-அன்று வெற்றி பெற்றது. 
  • ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே அதிகார மோதலைத் தொடர்ந்து இந்த நம்பிக்கை நடத்தப்பட்டது. 
  • 200 உறுப்பினர் சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 107 உறுப்பினர்களும், பா.ஜனதாவுக்கு 72 உறுப்பினர்களும் உள்ளனர்.
காஷ்மீர் சுதந்திர தின பாதுகாப்புப் பணி - முதன்முறையாக CRPF பெண்கள் பங்கேற்பு
  • காஷ்மீரில், சுதந்திர தின விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணிகளில், முதன் முறையாக, CRPF எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
  • ஸ்ரீநகரின் கோதிபாக் காவல் நிலையப் பகுதிக்கு உள்பட்ட எல்லைகளில் முதன்முறையாக 232-வது மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த பெண் காவலர்கள் சுதந்திர தின பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மத்தியப்பிரதேசத்தில் 25 அடி உயர "வெண்கல பாரதமாதா" சிலை திறப்பு
  • மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகர் போபால் நதரில், 13 ஏக்கர் பரப்பளவில், 'ஷவுர்ய ஸ்மாரக்' என்ற போர் நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள, 25 அடி உயர பாரத மாதாவின் வெண்கல சிலையை, நாட்டின், 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 2020 ஆகஸ்டு 15-அன்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் திறந்து வைத்தார்.
திட்டங்கள்
நேர்மையாக வரி செலுத்துபவர்களை கௌரவிக்கும் திட்டம் - தொடக்கம்
  • ‘ஒளிவு மறைவற்ற வரி விதிப்பு-நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கௌரவம்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி ஆகஸ்டு 13-அன்று டெல்லியில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறது.
  • வரி செலுத்தும் முறையை எளிமையாக்கும் வகையிலும், நேர்மையாக வரி செலுத்துபவர்களை கவுரவிக்கும் வகையிலும் பல்வேறு சீர்திருத்தங்களுடன் இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. ஆன்லைன் மூலமாக நேர்மையாகவும், அச்சமின்றியும் வரி செலுத்த இது வகை செய்கிறது.
  • இந்த திட்டம் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2½ கோடியாக அதிகரித்துள்ளது. 
சத்தீஸ்கா் அரசின் "இராமா் வன வழித்தடம்" திட்டம்
  • சத்தீஸ்கா் மாநில அரசு இராமா் வன வழித்தடம் என்ற சுற்றுலா மேம்பாட்டு நிதித் திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. ராமா் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றபோது, சத்தீஸ்கா் வழியாகத்தான் அவா் சென்றார் என்று நம்பப்படுகிறது. 
இ-சஞ்சீவனி OPD திட்டம் - தமிழ்நாடு முதலிடம்
  • சாதாரண நோய்க்கு வீட்டில் இருந்தவாறே ஆலோசனை பெற, "இ-சஞ்சீவனிOPD" என்ற, இலவச காணொலி மருத்துவ ஆலோசனைத் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 2020 மே முதல், இ-சஞ்சீவனி திட்டத்தின் மூலம் மருத்துவ ஆலோசனை பெறுவதில், இந்திய அளவில், தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தினமும், 2,500 பேர் ஆலோசனை பெறுகின்றனர். இரண்டாம் இடத்தில் உத்தரப் பிரதேசம், மூன்றாம் இடத்தில் கேரளா உள்ளது. தற்போது எச்.ஐ.வி., நோயாளிகளுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
சென்னை-போர்ட் பிளேர் நீர்மூழ்கி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டம - தொடக்கம் 
  • தமிழநாட்டின் சென்னை மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேர் நகரை இணைக்கும் 2,300 கி.மீ கடலுக்கு அடியில் நீர்மூழ்கி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டத்தை (Submarine Optical Fibre Cable) பிரதமர் மோடி 2020 ஆகஸ்ட் 10-அன்று, தொடங்கிவைத்தார்.
  • இந்த நீர்மூழ்கி கேபிள் திட்டம் அந்தமானில் உள்ள முக்கிய தீவுகளான ஹேவ்லாக், கார் நிக்கோபார், கிரேட் நிக்கோபார், கமோர்டா, ரங்காட், லிட்டில் அந்தமான் ஆகியவற்றை இந்தியாவுடன் கடலுக்கடியில் இணைக்கிறது.
பாதுகாப்பு, விண்வெளி
இலடாக்கில் நிறுத்தப்படும் இரண்டு "LCH ஹெலிகாப்டர்கள்" 
  • 2020 ஆகஸ்ட் 12-அன்று, இந்திய விமானப்படை லடாக் பிராந்தியத்தில் எச்.ஏ.எல் நிறுவனம் தயாரித்த இரண்டு இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை (LCH) நிறுத்தியுள்ளது.
  • இந்தியா-சீனா எல்லை பதட்டங்களுக்கு இடையில் இந்த ஹெலிகாப்டர்கள் அதிக உயர மலைப்பகுதியில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன. 
  • இந்த LCH ஹெலிகாப்டர் இரட்டை இயந்திரங்களை கொண்டது
  • இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உலகின் மிக இலகுவான தாக்குதல் ஹெலிகாப்டர் ஆகும். 
  • LCH: Light Combat Helicopters, HAL: Hindustan Aeronautics Limited.
நிலவின் பள்ளத்துக்கு "விக்ரம் சாராபாய் பெயர் சூட்டல்"
  • நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள, 'சந்திரயான்-2' விண்கலம் கண்டுபிடித்த பள்ளத்துக்கு, இந்திய விண்வெளி ஆய்வின் தந்தையாக கருதப்படும், விக்ரம் சாராபாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • நிலவை ஆய்வு செய்வதற்காக, 2020 ஜூலை, 22-அன்று அனுப்பப்பட்ட, சந்திரயான்-2 விண்கலம், நிலவை சுற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விண்கலத்துடன் அனுப்பப்பட்ட, 'விக்ரம்' என்று பெயரிடப்பட்ட, 'லேண்டர்' என்ற ஆய்வு சாதனம், நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதி சேதமடைந்தது.
  • அதனால், நிலவின் மேற்பரப்பில், அது ஆய்வை மேற்கொள்ள முடியவில்லை.அதே நேரத்தில், சந்திரயான்-2 விண்கலம், தொடர்ந்து பல்வேறு தகவல்களை அனுப்பி வருகிறது. நிலவின் மேற்பரப்பில், மிகப் பெரிய பள்ளத்தை, சந்திரயான்-2 கண்டுபிடித்தது. மேற்பரப்பில் இருந்து, 1.7 கி.மீ., ஆழத்துக்கு அந்த பள்ளம் உள்ளது.
இந்தியாவில் முக்கிய பிரமுகர்களுக்கான "போயிங் 777 விமானங்கள்"
  • இந்தியாவில் தற்போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகிய மிக முக்கியமான பிரமுகர்கள் (VVIPs) ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த விமானங்கள் ஏர் இந்தியா ஒன் என்று அழைக்கப்படுகிறது.
  • நாட்டின் வி.வி.ஐ.பி.க்கள் பயன்பாட்டுக்காக 2 ஜம்போ விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 190 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1,422 கோடியே 99 லட்சத்து 36 ஆயிரம்) மதிப்பில் 2 போயிங் 777 விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனம் 2020 பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது. தற்போது, இந்தியாவுக்கான முதல் போயிங் 777 விமானம் தயாராகியுள்ளது.
விருதுகள்
தமிழ்நாடு அரசின் சுதந்திர தின விருதுகள் 2020
  • 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு சாதனைகளைப் புரிந்த சாதனையாளா்களுக்கு விருதுகளை முதல்வா் பழனிசாமி வழங்கினார். முக்கிய விருதுகள் விவரம்:
  • முதல்வரின் சிறப்பு விருது - செளமியா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவன முதன்மை ஆராய்ச்சியாளா். 
  • டாக்டா் ஆ,ப.ஜெ. அப்துல் கலாம் விருது - ச.செல்வகுமார், னந்தம் இளைஞா் அறக்கட்டளை
  • கல்பனா சாவ்லா விருது - செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவள்ளி (அத்தியூா்), முத்தம்மாள் (ஆதனூா் வடக்கு), (பெரம்பலூா் மாவட்டத்தில் கொட்டரை நீா்த்தேக்கப் பகுதியில் நீரில் தத்தளித்து உயிருக்குப் போராடிய நான்கு பேரை துணிச்சலுடன் மீட்டதற்காக இந்த விருது),
  • சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள்:
  • சிறந்த மாநகராட்சி - வேலூா் மாநகராட்சி 
  • சிறந்த நகராட்சிகள் வரிசை - 1. விழுப்புரம், 2. கரூா், 3. கூத்தநல்லூா்
  • சிறந்த பேரூராட்சிகள் வரிசை - வனவாசி, சேலம் மாவட்டம், 2. வீரபாண்டி, சேலம் மாவட்டம், 3. மதுக்கரை, கோவை மாவட்டம்.
தமிழ்நாடு நிகழ்வுகள்
கொந்தகை அகழாய்வு -மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
  • ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கியது.
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வில் 5 அடி உயர மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • கொந்தகையில் முதுமக்கள் தாழிகள், 4 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டன. 
உடல் உறுப்பு தானம் - ஐந்தாவது முறையாக தமிழ்நாடு முதலிடம்
  • உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தமிழ்நாடு முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது. சர்வதேச உடல் உறுப்பு தான நாள் (Organ Donation Day) ஆகஸ்டு 13-அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 
விளையாட்டு நிகழ்வுகள்
மகேந்திர சிங் தோனி - சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு 
  • இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (வயது 39) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக 2020 ஆகஸ்டு 15-அன்று அறிவித்துள்ளார். 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் தோனி பங்கேற்கவில்லை.
  • 2017 ஜனவரி 4 அன்று இந்திய ஒருநாள் மற்றும் T20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகினார். 2014-ல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கா தொடர்ந்து விளையாட திட்டமிட்டு உள்ளார். 
  • ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 39 வயதான டோனி 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். 
  • தோனியின் சாதனைகள்
  • கேப்டனாக சாதனைகள்: இந்திய அணியின் கேப்டனாக தோனி 2007-இல் நியமிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) அனைத்து வித கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சிறப்பை தோனி பெற்றுள்ளார். தோனி தலைமையில் இந்திய அணி வென்ற ICC கோப்பைகள் விவரம்:
    1. T20 உலக கோப்பை - 2007 
    2. ஒருநாள் உலக கோப்பை - 2011
    3. மினி உலக கோப்பை - 2013
  • 200 ஒருநாள் கிரிக்கெட், 60 டெஸ்ட் போட்டிகள், 72, T20 போட்டிகள் என மொத்தம் 332 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி கேப்டனாக இருந்துள்ளார்.  
  • தோனி கேப்டனாக 110 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.  
  • தோனி 84 ஒருநாள் போட்டிகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நாட் அவுட் ஆக திகழ்ந்துள்ளார்.  
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்குகள் செய்த சாதனைக்கும் சொந்தக்காரர் தோனி. 350 போட்டிகளில் 123 ஸ்டம்பிங்குகளை தோனி செய்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டம்பிங்குகளை செய்த ஒரே விக்கெட் கீப்பர் தோனி மட்டுமே.
  • தோனி தலைமையில் இந்திய அணி டெஸ்டில் முதலிடம் பெற்றது. 
  • டோனியின் கடைசி சர்வதேச போட்டி, 2019 ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலககோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டமாகும். அந்த ஆட்டத்தில் கடைசி வரை போராடிய டோனி 50 ரன்னில் ரன் அவுட் ஆனார். இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தோனி தனது முதலாவது ஆட்டத்திலும் ரன்-அவுட் ஆனது நினைவு கூரத்தக்கது. 
  • தோனி "கேப்டன் கூல்" என்றும் சென்னை அணியில் "தல" என்றும் அழைக்கப்படுகிறார்.
  • தோனி எடுத்த ரன்கள் விவரம்:
    • டெஸ்ட் ஆட்டங்கள்: 90
      • 4,876 ரன்கள்:
      • பேட்டிங் சராசரி: 38.09
      • சதம் | அரைசதம்: 6 | 33
    • ஒருநாள் ஆட்டங்கள்: 350
      • ரன்கள்: 10,773
      • சதம் | அரைசதம்: 10 | 73
      • பேட்டிங் சராசரி: 50.57
    • T20 ஆட்டங்கள்: 98
      • ரன்கள்: 1,617
      • சதம் | அரைசதம்: 0 | 2
      • பேட்டிங் சராசரி: 37.60
சுரேஷ் ரெய்னா - ஓய்வு அறிவிப்பு
  • முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
  • இடது கை பேட்ஸ்மேனான 33 வயது நிறைந்த ரெய்னா 2005-ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5 ஆயிரத்து 615 ரன்கள் சேர்த்துள்ளார். 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 768 ரன்கள் எடுத்துள்ளார். 78 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா ஆயிரத்து 605 ரன்களை எடுத்திருக்கிறார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
டோக்கியோ ஒலிம்பிக் 2021: இந்திய அணியின் ஸ்பான்சர் - ஐநாக்ஸ் லீசர் நிறுவனம்
  • கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021 ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2020
  • "கிராண்ட்ஸ்லாம்" அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் 2020 ஆகஸ்டு 31-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் அரங்கேறும் இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. 
  • நடப்பு சாம்பியன்கள்: பியான்கா ஆன்ட்ரீஸ் (கனடா), ரபெல் நடால் (ஸ்பெயின்).
ICC சர்வதேச நடுவர் குழு - கே.என். அனந்த பத்மநாபன் சேர்ப்பு 
  • 2020-21-ம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பிரதான நடுவர் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த கே.என். அனந்த பத்மநாபன் இணைந்துள்ளார். 
  • கே.என். அனந்த பத்மநாபன், கேரள அணிக்காக 105 முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
  • அண்மையில் இக்குழுவில் நிதின் மேனன் சேர்க்கப்பட்டார். ஐசிசி சர்வதேச நடுவர் குழுவில் ஏற்கெனவே சம்சுதீன், அனில் செளத்ரி, விரேந்தர் சர்மா ஆகியோர் உள்ளனர்.
ஆளுமைகள் - சட்டம், அரசியலமைப்பு
பிரசாந்த் பூஷண்
  • பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 14-அன்று தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்திருந்த புகைப்படம் குறித்தும், உச்சநீதிமன்றத்தின் முந்தைய 4 தலைமை நீதிபதிகள் குறித்தும் பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. 
  • நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971 பிரிவு 2 (1) (C).
முக்கிய தினங்கள்
உலக இடதுகை பழக்கமுடையோர் நாள் - ஆகஸ்டு 13 
  • உலக இடதுகை பழக்கமுடையோர் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக உறுப்பு தானம் தினம் - ஆகஸ்ட் 13 
  • உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உலக உறுப்பு தானம் தினம் (World Organ Donation Day) அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனி நாடான நாள் - ஆகஸ்டு 14, 1947 
  • 74-வது இந்திய சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15, 2020.
Post a Comment (0)
Previous Post Next Post