TNPSC Current Affairs July 5, 2020 - Download as PDF

 Current Affairs and GK Today July 5th 2020
இந்திய நிகழ்வுகள்
சம்பல் விரைவுச்சாலைத் திட்டம்
  • உத்தரபிரதேசத்தையும் ராஜஸ்தானையும் இணைக்கும் வகையில் 404 கி.மீ. தொலைவுக்கு சம்பல் விரைவுச்சாலையை (Chambal Expressway), ரூ.8,250 கோடி செலவில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
  • சம்பல் விரைவுச்சாலைத் திட்டம், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குப் பெரும் பலனளிக்கும்.
  • தில்லி-கொல்கத்தாவை இணைக்கும் தங்க நாற்கரச் சாலை, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை, தில்லி-மும்பை விரைவுச்சாலை உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையில் சம்பல் விரைவுச்சாலைத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • 404 கி.மீ நீளமுள்ள அதிவேக நெடுஞ்சாலை, கான்பூர் மற்றும் கோட்டா நகரத்தை இணைக்கும் மத்தியப்பிரதேசம் வழிக்கு மாற்று வழியை வழங்குகிறது, மேலும் டெல்லி-மும்பை நடைபாதையில் இணைகிறது.
பிரதமா் நரேந்திர மோடியின் "இலடாக் பயணம்"
  • கிழக்கு இலடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே கடந்த 7 வாரங்களாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. 
  • இலடாக் எல்லைப் பகுதியில் பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 3-அன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு கடல் மட்டத்தில் இருந்து 11,000 அடி உயரத்தில் உள்ள நீமு பகுதிக்குச் சென்று பாதுகாப்பு சூழலைப் பார்வையிட்ட அவா், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினா், விமானப் படை வீரா்கள், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
  • நாடுகளின் எல்லை விரிவாக்கக் கொள்கை வீழ்ச்சியடைந்துவிட்டது. அக்கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாடுகள் தோல்வியடையும் அல்லது அழிவுக்கு உள்ளாகும் என்பதற்கு வரலாறே உதாரணமாக உள்ளது. இது வளா்ச்சிக்கான சகாப்தம் என்று தெரிவித்தார்.
அகில இந்திய வானொலியின் முதலாவது சமஸ்கிருத செய்தி நிகழ்ச்சி ‘சமஸ்கிருத சப்தஹிகி’
  • ஜூலை 4, 2020 முதல், அகில இந்திய வானொலியின் FM செய்தி சேனல் தனது, முதல் சமஸ்கிருத மொழி செய்தி நிகழ்ச்சியை 20 நிமிட காலத்திற்கு ஒளிபரப்பவுள்ளது. இந்த செய்தி நிகழ்ச்சிக்கு ‘சமஸ்கிருத சப்தஹிகி’ (Sanskrit Saptahiki) என்று பெயரிட்டுள்ளது.
  • சமஸ்கிருத சப்தஹிகி ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒளிபரப்பப்படும். மறுஒளிபரப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும்.
மகாராஷ்டிரா அரசு - UKIBC புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில் மற்றும் மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (MIDC) ஆகியவற்றுக்கு இடையே 2020 ஜூலை 4-அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • மகாராஷ்டிர மாநிலத்தில் வணிகச் சூழலை விரைவாக மேம்படுத்தவும், இங்கிலாந்துடனான வணிகத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • UKIBC: UK India Business Council. 
மது பாபு பென்ஷன் யோஜனா திட்டத்தில் திருநங்கைகள் - சேர்ப்பு
  • சமூக நலத்திட்டத்தின் கீழ் மாநில அரசால் வழங்கப்படும் 'மது பாபு பென்ஷன் யோஜனா' ஓய்வூதியத் திட்டத்தில் திருநங்கைகளையும் சேர்ப்பதென்று ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.
நாகலாந்தில் நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பு
  • இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகலாந்து மாநிலத்தில் நாய்களை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாய் இறைச்சி ஏற்றுமதி, நாய் இறைச்சி சந்தைகள், சமைக்கப்பட்ட நாய் இறைச்சி உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அரசியலமைப்பின் 371 (A) பிரிவின் கீழ் நாகாலாந்துக்கு சில சிறப்பு விதி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாநில மக்களின் பாரம்பரிய பழக்கங்களை பாதுகாக்க சட்டம் வகை செய்கிறது. 
பாதுகாப்பு/ விண்வெளி நிகழ்வுகள்
இந்தியாவின் முதல் NPNT இணக்க ட்ரோன் விமானம் - தயாரிப்பு 
  • மும்பையைச் சேர்ந்த க்விடிச் இன்னோவேஷன் லேப்ஸ் என்ற தனியார் நிறுவனம், இந்தியாவின் முதல் "NPNT" இணக்க ட்ரோன் விமான"த்தை வெற்றிகரமாக தயாரித்து முடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் தனித்துவமான அடையாள எண் (UIN) வழங்கப்பட்ட முதல் ட்ரோன் இதுவாகும். இதற்கு UIN-U0000001 A200 மைக்ரோ ட்ரோன் எனப்படுகிறது.
  • NPNT அல்லது "No Permission - No Take-off" என்பது ஒரு மென்பொருள் நிரல் அமைப்பாகும்.
  • இந்த NPNT, இது ஒவ்வொரு ட்ரோனுக்கும் இந்தியாவில் செயல்படுவதற்கு முன்பு டிஜிட்டல் ஸ்கை இயங்குதளத்தின் மூலம் செல்லுபடியாகும் அனுமதிகளைப் பெற உதவுகிறது.
செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவு "போபோஸ்"
  • செவ்வாய் கிரகத்தின் மிக நெருக்கமான மற்றும் மிகப்பெரிய நிலவு போபோஸின் (Phobos) படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (Mangalyaan Mars Orbiter Mission) படம் பிடித்துள்ளது
  • 2020 ஜூலை 1 ம் தேதி மார்ஸ் ஆர்பிடர் மிஷன் செவ்வாய் கிரகத்தில் இருந்து 7,200 கி.மீ தொலைவிலும், போபோஸிலிருந்து 4,200 கி.மீ தூரத்திலும் இருந்தபோது இந்த படம் எடுக்கப்பட்டது. போபோஸ் பெரும்பாலும் கார்பனேசிய காண்டிரைட்டுகளால் ஆனது என்று நம்பப்படுகிறது.
  • போபோஸின் மிகப்பெரிய பள்ளம் ஸ்டோக்னி மற்றும் பிற பள்ளங்களான ஷ்க்லோவ்ஸ்கி, ரோச் & கிரில்ட்ரிக் ஆகியவையும் இந்த படத்தில் காணப்படுவதாக கூறி உள்ளது.
  • மங்கள்யான் விண்கலம் (2013): செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் (ஆர்பிட்டர் மிஷன்) பி.எஸ்.எல்.வி- சி25 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
திருநங்கைகளை அதிகாரிகளாக பணியமர்த்த ஆயுதப்படைகள் ஒப்புதல்
  • மத்திய அரசு சார்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழிலக பதுகாப்புப் படை (CISF), இந்தோ-திபெத் எல்லை போலீஸ் (ITBP), சஹஸ்த்ர சீமா பால் (SSB) ஆகிய 5 துணை ராணுவ படைகள் உள்ளன. திருநங்கைகளை அதிகாரிகளாக பணியமர்த்த இந்த ஆயுதப்படைகள் ஒப்புதல் அளித்துள்ளன.
பொருளாதார நிகழ்வுகள்
என்.எல்.சி - கோல் இந்தியா இணைந்து உருவாக்கும் கூட்டு நிறுவனம்
  • இந்திய அரசாங்கத்தின் நவரத்னா நிறுவனம் என்.எல்.சி. இந்தியா லிமிடெட் (NLC India), மகாராத்னா கம்பெனி-கோல் இந்தியா லிமிடெட் (Coal India) நிறுவனத்துடன் இணைந்து சூரிய மற்றும் வெப்ப மின் வளங்களை வளர்ப்பதற்காக ஒரு கூட்டு நிறுவனத்தை (Joint Venture Company) உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த கூட்டு நிறுவனம் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்படுகிறது.
  • இந்தக் கூட்டு துணிகர நிறுவனத்தில், என்.எல்.சி மற்றும் கோல் இந்தியா ஆகிய இரண்டும் சமமாக 50:50 பங்குகளைக் கொண்டிருக்கும். 5000 மெகாவாட் (5 ஜிகாவாட்) சூரிய மற்றும் வெப்ப மின் வளம் இந்தக் கூட்டு நிறுவனத்தால் உருவாக்கப்படுவுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம்
இந்தியாவின் முதல் சமூக ஊடக சூப்பர் செயலி "எலிமென்ட்ஸ்"
  • முதல் இந்திய சமூக ஊடக சூப்பர் செயலியான "எலிமென்ட்ஸ்" செயலியை (Elyments), துணைக் குடியரசுத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு 2020 ஜூலை 5-அன்று தொடங்கிவைத்தார்.
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு உள்நாட்டு சமூக ஊடக செயலி பயன்பாடு ஆகும். 
  • ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் தன்னார்வலர்களான 1,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த பயன்பாட்டை உருவாக்க இணைந்து பணியாற்றியுள்ளனர்.
ஆத்மநிர்பார் பாரத் செயலி கண்டுபிடிப்பு சவால் - தொடக்கம்
  • ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான, ஒரு செயலி கண்டுபிடிப்பு சவால் (Aatmanirbhar Bharat App Innovation Challenge), 2020 ஜூலை-4 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • நிதி ஆயோக் அமைப்பு அடல் புதுமை மிஷன் அமைப்புடன் இணைந்து, செயலி கண்டுபிடிப்பு சவாலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
மாநாடுகள் 
சிந்து தரிசனம் விழா 2020
  • ஆண்டுதோறும் பௌர்ணமி தினத்தில் சிந்து நதிக்கரையில், சிந்து தரிசனம் விழா (Sindhu Darshan Festival) கொண்டாடப்படுவது வழக்கம். 2020 சிந்து தரிசனம் விழா ஜூனா 12-முதல் 14 வரை மூன்று நாள்கள் நடைபெற்றுது. இந்த விழாவில், நாட்டின் ஒற்றுமை, அமைதி, ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடையாளமாக சிந்து நதியைக் கருதி பொதுமக்கள் வழிபடுகின்றனா்.
பொருளாதார நிகழ்வுகள்
உலக வங்கியின் நாடுகளின் வருமான வகைப்பாடு 2020-21 
  • ஒவ்வொரு ஆண்டும், உலக வங்கி அமைப்பு உலக நாடுகளை நான்கு வருமானக் குழுக்களாக வகைப்படுத்துகிறது (World Bank’s Country Classification) அவை:
  • 1. குறைந்த வருமானம், 2. கீழ்-நடுத்தர வருமானம், 3.மேல்-நடுத்தர வருமானம், 4.அதிக வருமானம். 
  • இந்த வகைப்பாடு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி உலக வங்கியால் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
  • 2020 வகைப்பாட்டின் படி, இந்தியா குறைந்த-நடுத்தர வருமான நாடாக உள்ளது.
  • கீழ்-நடுத்தர வருமான பொருளாதாரமாக இருந்த நேபாளத்தின் பொருளாதாரம் மேல்-நடுத்தர வகைக்கு நகர்ந்துள்ளது, அதே நேரத்தில் இலங்கையின் பொருளாதாரம் கீழ்-நடுத்தர வருமான பொருளாதாரமாக கீழ் இறங்கியுள்ளது.
2020-21-இல் பங்கு விலக்கல் நடவடிக்கை - ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட இலக்கு
  • நடப்பு 2020-21 நிதியாண்டில் மத்திய அரசு பங்கு விலக்கல் நடவடிக்கைகளின் மூலம் ரூ.2.10 லட்சம் கோடியை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், ரூ.1.20 லட்சம் கோடி பொது துறை நிறுவன பங்கு விற்பனை மூலமாகவும், எஞ்சிய ரூ.90,000 கோடியை எல்ஐசி உள்ளிட்ட நிதி நிறுவன பங்கு விற்பனை மூலமாகவும் திரட்டிக் கொள்ளப்படவுள்ளன.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
தேசிய தூய்மை காற்று திட்டம் 2024 - 74 நாட்களில் எட்டப்பட்ட இலக்கு 
  • நாட்டில் உள்ள 4 பெருநகரங்களில் 2024-ஆம் ஆண்டு தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் (NCAP 2024), சுத்தமான காற்று என்ற இலக்கு வெறும் 74 நாள்களில் எட்டப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
  • தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், காற்றில் மாசை அதிகரிக்கும் எட்டு முக்கிய அம்சங்களில், நான்கு அம்சங்கள் முற்றிலும் குறைந்துவிட்டன என்றும், வாகனப் போக்குவரத்துக்குத் தடை, தொழிற்சாலைகள் இயங்காதது, கட்டுமானப் பணிகள் மற்றும் செங்கல் சூளைகள் போன்றவை முற்றிலும் நின்று போனதால் காற்று மாசு மிக விரைவாக சீரடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
  • உலக சுகாதார அமைப்பின் படி PM 2.5 அளவுக்கான வருடாந்திர பாதுகாப்பான தரநிலை (annual safe standard) 10 μg/m3 ஆகவும், தேசிய தரநிலை 40μg/m3 ஆகவும் உள்ளது.
  • NCAP: National Clean Air Programme.
தமிழ்நாடு நிகழ்வுகள்
கீழடி அகழாய்வில் "பழங்கால எடைக்கற்கள்" கண்டெடுப்பு
  • சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணியின் போது பழங்கால எடைக்கற்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன. 
  • அகழாய்வுக் குழி ஒன்றில் இரும்பு உலை அமைப்பு உள்ளது. அந்த அகழாய்வுக் குழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகளில் பல்வேறு அளவுகளில் கருங்கல்லில் ஆன நான்கு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை உருளை வடிவில் அமைந்துள்ளது. அதனின் கீழ்ப்பகுதி தட்டையாக உள்ளன. இவை ஒவ்வொன்றும் முறையே 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டுள்ளன.
கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு - அடிக்கல் 
  • கள்ளக்குறிச்சியில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரியைக் கட்டுவதற்கான அடிக்கல்லை, சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வழியாக முதல்வா் பழனிசாமி ஜூலை 4-அன்று நாட்டினார். 
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாங்கூா் கிராமத்தில் 8.328 ஹெக்டோ பரப்பில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்
பார்முலா1 கார்பந்தயம் 2020 - தொடக்கம்
  • 2020-ஆம் ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் ஜூலை 5-அன்று ஆஸ்திரியாவில் தொடங்குகிறது. ஆஸ்திரியா கிராண்ட்பிரி என்ற பெயரில் அங்குள்ள ஸ்பில்பேர்க் ஓடுதளத்தில் நடக்கும் இந்த போட்டியில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்கிறார்கள். பந்தய தூரம் 306.452 கிலோமீட்டர் ஆகும்.
  • பார்முலா1 கார்பந்தயம் இந்த ஆண்டு உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றால் 15 முதல் 18 சுற்றுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • லீவிஸ் ஹாமில்டன்: நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி), 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தொடர்ந்து 3 ஆண்டுகளாக பட்டம் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளார். 
  • இந்த சீசனிலும் பட்டம் வென்றால் அதிகமுறை பார்முலா1 பட்டத்தை கைப்பற்றிய ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்வார். 
ஜெய்ப்பூரில் கட்டப்படும் "உலகின் 3-வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்"
  • ஜெய்ப்பூரில் உலகின் 3-வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஜெய்ப்பூரில் கட்டப்படுகிறது. 100 ஏக்கர் நிலப்பரப்பில் 75 ஆயிரம் இருக்கை வசதியுடன் அமைய உள்ள இந்த கிரிக்கெட் மைதானம் ஆமதாபாத், மெல்போர்ன் மைதானங்களுக்கு அடுத்தபடியாக உலகின் 3-வது பெரிய ஸ்டேடியமாக விளங்கும். 
  • ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலை பகுதியில் அமைய இருக்கும் இந்த ஸ்டேடியத்தின் கட்டுமான பணி அடுத்த 4 மாதத்துக்குள் தொடங்கப்பட உள்ளது.
  • இராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் ஏற்கனவே சவாய் மான்சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. 
கால்பந்து போட்டியில் 700 கோல்கள் - "லயோனல் மெஸ்சி" சாதனை
  • கால்பந்து போட்டியில் 700 கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பார்சிலோனா அணியின் கேப்டன் அர்ஜென்டினாவை சேர்ந்த லயோனல் மெஸ்சி இடம் பிடித்துள்ளார்.
  • 33 வயதான மெஸ்சி 861 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அவர் பார்சிலோனா அணிக்காக 630 கோலும் (723 ஆட்டம்), அர்ஜென்டினா அணிக்காக 70 கோலும் (138 ஆட்டம்) அடித்து இருக்கிறார். 
  • போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த இலக்கை (700 கோல்கள், 973 ஆட்டங்களில்) கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடந்து இருந்தார். 
  • தற்போது விளையாடி வரும் வீரர்களில் இந்த இருவர் மட்டுமே இந்த இலக்கை தாண்டியவர்கள் ஆவர்.
  • கால்பந்து போட்டிகளில் 700 மற்றும் அதற்கு அதிகமான கோல் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்சி 7-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் ஜோசப் பிகான் (ஆஸ்திரியா), ரோமாரியோ (பிரேசில்), பீலே (பிரேசில்), பிரென்ச் புஸ்காஸ் (ஹங்கேரி), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), ஜெரார்டு முல்லர் (ஜெர்மனி) ஆகியோர் முறையே முதல் 6 இடங்களில் உள்ளனர்.
சீன பாட்மிண்டன் வீரர் லின் டேன் - ஓய்வு அறிவிப்பு
  • கடந்த 20 வருடங்களாக விளையாடி வரும் சீனாவைச் சேர்ந்த 36 வயது லின் டேன், சூப்பர் கிராண்ட் ஸ்லாம் என்று அழைக்கப்படும் 9 பெரிய பாட்மிண்டன் போட்டிகளையும் 28 வயதுக்குள் வென்று சாதனை படைத்தவர். +தரவரிசையில் நெ.1 வீரராகவும் இருந்துள்ளார் லின் டேன். 
  • 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸ் மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார். 5 முறை உலக சாம்பியனாகியுள்ளார்.
  • லின் டேன் தனது ஓய்வு அறிவிப்பை ஜூலை 4-அன்று வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் "ஷசாங் மனோகர்" - பதவி விலகல்
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் பதவியில் இருந்த இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் "ஷசாங் மனோகர்" பதவியில் இருந்து விலகியுள்ளார். புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை துணைத்தலைவர் இம்ரான் கவாஜா (சிங்கப்பூர்) இடைக்கால தலைவராக செயல்படவுள்ளார்.
இளம் விளையாட்டு வீரர்களுக்கான "TOPS திட்டம்" - அறிமுகம்
  • வரவிருக்கும் 2024 (பாரிஸ்) மற்றும் 2028 (லாஸ் ஏஞ்சல்ஸ்) ஒலிம்பிக் போட்டிகளில், நாட்டின் இளம் விளையாட்டு வீரர்கள் பதக்கம் வெல்வதற்காக, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இளம் விளையாட்டு வீரர்களுக்கான ஒலிம்பிக் போடியம் இலக்கு திட்டத்தை (TOPS) தொடங்கியுள்ளது. 
  • 2028 ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவை இடம் பெறும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
  • ‘ஃபிட் ஹை டு ஹிட் ஹை இந்தியா’ திட்டத்தை (Fit Hai to Hit Hai India program) அறிமுகப்படுத்தும் நிகழ்வில், 2020 ஜூலை 3-ஆம் தேதி மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு இந்த திட்டத்தை அறிவித்தார்.
  • TOPS: Target Olympic Podium Scheme.
முக்கிய நபர்கள் 
தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கை "ஜோயா கான்"
  • நாட்டிலேயே, முதன் முறையாக, குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில், ஜோயா கான் என்ற திருநங்கை, பொது சேவை மையம் மூலம், தொலை மருத்துவ சேவை வழங்கி வருகிறார். ஜோயா கான் நடத்தும் பொது சேவை மையத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தொலை துாரத்தில் உள்ள மருத்துவர்களிடம் மருத்துவ ஆலோசனைகள் பெறலாம்
முக்கிய தினங்கள்
தா்ம சக்கர தினம் - ஜூலை 4
  • புத்தா் ஞானம் பெற்று தன் சீடா்களுக்கு முதன் முதலாக போதனை வழங்கிய தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் 'தா்ம சக்கர தினம்' (Dhamma Chakra Day) கொண்டாடப்படுகிறது. 
  • மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சர்வதேச புத்த கூட்டமைப்பின் சார்பில் ஜூலை 4-அன்று தர்மசக்கர தினமாக கொண்டாடப்பட்டது.
  • இந்த ஆண்டுக்கான தா்ம சக்கர தின விழாவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தில்லியில் ஜூலை 4-அன்று தொடக்கி வைத்தார்.
  • உலகுக்கு அன்பு, அகிம்சையை போதித்த கவுதம புத்தர், துறவறம் மேற்கொண்ட தனது 5 சீடர்களுக்காக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள சாராநாத்தில் முதல் பிரசங்கத்தை மேற்கொண்டார். 
  • குரு பூர்ணிமா: புத்த மத்தவர்கள் தங்கள் குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், குரு பூர்ணிமா தினமாக கொண்டாடுகின்றனர்.
Download this article as PDF Format
Post a Comment (0)
Previous Post Next Post