TNPSC Current Affairs July 28-29, 2020 - Download as PDF

 
TNPSC Current Affairs July 28-29,  2020 - Download as PDF
சர்வதேச நிகழ்வுகள்
சீனாவின் ஹாங்காங் ஒப்படைப்பு ஒப்பந்தம் - 4 நாடுகள் நிறுத்திவைப்பு
  • கனடா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான ஹாங்காங் தொடர்பான ஒப்படைப்பு ஒப்பந்தங்களை (Hong Kong Extradition Treaty) தற்காலிகமாக நிறுத்துவதாக சீனா ஜூலை 28, 2020 அன்று அறிவித்தது.
  • இந்த இடைநீக்கத்தை சீனா தனது புதிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹாங்காங்கில் கொண்டு வந்துள்ளது. இச் சட்டத்தின்படி, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் ஹாங்காங்கின் பாதுகாப்பு ஆகியவற்றில் சீனா தனது கட்டுப்பாட்டைப் பெற்றது.
  • ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் மற்றும் நியூசிலாந்து நாடுகள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்திவைத்துள்ளன.
வங்கதேசத்துக்கு 10 இரயில் இன்ஜின்கள் வழங்கல்
  • வங்கதேசத்தின் ரயில்வே கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டுக்கு 10 அகலப்பாதை டீசல் என்ஜின்களை இந்தியா ஜூலை 27-அன்று வழங்கியது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில், டீசல் என்ஜின்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
  • இந்த என்ஜின்களை வங்கதேசத்திடம் நேரில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டம் கெடி ரயில் நிலையத்தில் நடந்தது.
  • காளி கோவில் புனரமைப்பு பணி: வங்கதேசத்தின், நாத்தோர் மாவட்டத்தில், 300 ஆண்டுகள் பழமையான காளி கோவில் புனரமைப்பு பணி ஜூலை 27-அன்று துவக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை புனரமைக்க, இந்தியா தரப்பில், 85 லட்சம் ரூபாய் நிதியுடன் வங்கதேச அரசு ஒதுக்கியுள்ள ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் நிதியுடன் சேர்த்து இந்த புனரமைப்பு பணிகளுக்கு செலவிடப்பட உள்ளது. 
இந்தியா-இந்தோனேசியா "பாதுகாப்புத் துறை தொடர்பான பேச்சுவார்த்தை"
  • இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் இராஜ்நாத் சிங், இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சா் பிரபோவோ சுபயந்தோ இடையே டெல்லியில் ஜூலை 27-அன்று நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் (India-Indonesia Defence Ministers Dialogue), பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் 
  • தொழிற்சாலைகள் பிரிவில் ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்ய இந்தியா-இந்தோனேசியா நாடுகள் முடிவு செய்துள்ளன.
  • பேச்சுவார்த்தையில் இந்தோனேசியாவுக்கு பிரமோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வது, கடல்சார் பாதுகாப்பு ஆகியவை இடம்பெற்றன. 
ஹூஸ்டன் சீனத்தூதரகம், செங்டு அமெரிக்க தூதரகம் மூடல்
  • அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன துணைத் தூதரகத்தைப் பயன்படுத்தி அந்நாடு உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி அமெரிக்க அரசால் அத்தூதரகம் ஜூலை 25-ஆம் தேதி மூடப்பட்டது.
  • இதற்குப் பதிலடியாக சிசுவான் மாகாணத் தலைநகரான செங்டு நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை சீனா ஜூலை 27-அன்று மூடியுள்ளது.
இந்திய நிகழ்வுகள்
"கனவு காண தைரியம்" போட்டி - அறிவிப்பு
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு "கனவு காண தைரியம்" (Dare to Dream) என்ற புதுமையான போட்டியை, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் மறைவு நினைவுதினத்தையொட்டி ஜூலை 27-அன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங் தொடங்கி வைத்தார்.
  • இந்த சவால் தனிநபர்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களில் புதுமைக்கான தொடக்க-நிலை நிறுவனங்களையும் ஊக்குவிக்கிறது. இந்தப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு விருது பணம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
  • ஷில்லாங் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் சொற்பொழிவு நிகழ்த்தியபோது இருதயக் கோளாறு காரணமாக டாக்டர் கலாம் 2015 ஜூலை 27-அன்று காலமானார்.
MOSPI அறிக்கை: 403 திட்டங்கள் பாதிப்பு
  • மத்திய புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MOSPI சமீபத்தில் நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டது. 
  • அறிக்கையின்படி, 150 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களை புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கண்காணிக்கிறது.
  • கண்காணிக்கப்படும் 1,686 திட்டங்களில் 403 செலவுகள் அதிகரித்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 530 திட்டங்களின் நேரம் அதிகரித்துள்ளதாரகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உள்கட்டமைப்பு திட்டங்களின் அசல் செலவில் சுமார் 19.60% இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 1,686 திட்டங்களை செயல்படுத்த மொத்த அசல் செலவு ரூ.20,66,771 கோடி ஆகும்.
  • MOSPI: Ministry of Statistics and Programme Implementation.
வந்தே பாரத் திட்டம் - ஐந்தாம் கட்டம் தொடக்கம்
  • மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான 5-ம் கட்ட சேவை ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 2.5 லட்சம் பேர் ஏற்கெனவே இந்தியா அழைத்து வரப்பட்டனர். 
வானிலை முன்னறிவிப்புக்கான "மௌசம்" செயலி
  • வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக 'மௌசம்' (Mausam Application) என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • புவி அறிவியல் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் ஜூலை 27-அன்று இந்த செயலியின் பயன்பாட்டை டெல்லியில் அறிமுகப்படுத்தினார். 
  • இந்த செயலி நாட்டின் 200 நகரங்களின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், திசை உள்ளிட்ட தற்போதைய வானிலைத் தகவல்களை உடனுக்குடன் வழங்கும். நாள்தோறும் 8 முறை தகவல்கள் புதுப்பிக்கப்படும். 
  • இச்செயலியை வட வெப்ப மண்டலங்களுக்கான சா்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம், புணேயிலுள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம், இந்திய வானிலை ஆய்வுத்துறை ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
கேரளா, கர்நாடகாவில் ISIS பயங்கரவாதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஐ.நா. அறிக்கை 
  • இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை கணிசமான அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை சமீபத்தில் எச்சரித்துள்ளது. அந்த அறிக்கையின் தலைப்பு “ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான பகுப்பாய்வு ஆதரவு மற்றும் பொருளாதாரத் தடைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை” என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
பாதுகாப்பு நிகழ்வுகள்
இரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை
  • பிரான்ஸிடம் இருந்து 36 இரஃபேல் போர் விமானங்களை (Rafael Jets) வாங்க ரூ.60,000 கோடியில் மத்திய அரசு 2016-ல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, பிரான்ஸில் முதற்கட்டமாக தயாரிக்கப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை 27-அன்று பிரான்ஸில் இருந்து இந்தியாவை நோக்கி பயணத்தைத் 
  • தொடங்கியுள்ளன. ஜூலை 29-ஆம் தேதி ஹரியாணா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை இவை வந்தடைகின்றன. 
  • ஜூலை 29-முதல் இந்திய விமானப்படையில் அவை இயக்கப்படும். இந்த 5 ரஃபேல் விமானங்களில் 3 விமானங்களில் ஒரு இருக்கையும், 2 விமானங்களில் இரண்டு இருக்கைகளும் உள்ளன.
புத்தகங்கள்/ ஆசிரியர்கள்
Quest for Restoring Financial Stability in India - Viral V.Acharya
  • முன்னாள் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் வி.ஆச்சார்யா எழுதிய “இந்தியாவில் நிதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான தேடல்” என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை SAGE பப்ளிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் நிதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது தேடலை இந்த புத்தகம் சித்தரிக்கிறது, மேலும் நிலையான முன்னேற்றத்திற்கான உறுதியான திட்டத்தை வழங்குகிறது. 
தமிழ்நாடு நிகழ்வுகள்
8 நிறுவனங்களின் தொழிற்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டல்
  • தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடும் வகையில், 8 தொழில் திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு 
  • காணொலிக் காட்சி மூலமாகவும் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் ஜூலை 28-அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 8 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 2,368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட்டம் 
  • நியாய விலைக் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஜூலை 27-அன்று தொடங்கி வைத்தார். 
  • மாநிலத்தில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரா்களின் 6.74 கோடி குடும்ப உறுப்பினா்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு விலையில்லாத தரமான மறுபயன்பாட்டு முகக் கவசங்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன.
விளையாட்டு நிகழ்வுகள்
கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2021 - ஹரியானா 
  • 2021-ஆம் ஆண்டில் நான்காவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு (KIYG) போட்டிகளை ஹரியானா மாநிலம் நடத்த உள்ளது. இந்த விளையாட்டுக்கள் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா நகரில் நடைபெறவுள்ளது. 
  • மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் இதனை ஜூலை 27-அன்று கூட்டாக அறிவித்தனர்.
  • இந்த விளையாட்டு போட்டிகள் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு நடைபெறும், முந்தைய ஆண்டைப் போலவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு கூட்டாளராக இருக்கும்.
முக்கிய தினங்கள்
உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் - ஜூலை 28 
  • ஆண்டுதோறும் ஜூலை 28 அன்று உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் (Nature Conservation Day) கடைபிடிக்கப்படுகிறது
  • இயற்கை வளங்கள் என்பது மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், காடுகள், மலைகள், அருவிகள், நதிகள், கடல்கள், கனிம வளங்கள், வளிமண்டலத்தில் உள்ள நீர், காற்று, சூரிய ஒளி மற்றும் சக்தி அளிக்கும், வளங்கள் என அனைத்தும் உள்ளடக்கியதாகும்.
  • இந்திய-நிலப்பரப்பு உலக நாடுகளில் இந்தியா, ஏழாவது பெரிய நாடாகும், இந்தியாவின் நிலப்பரப்பு 3,287,267 சதுர கி. மீ. நீளம் கொண்டதாகும். 
  • இந்த நிலப்பரப்பு, வடக்கிலிருந்து தெற்கு வரை 3,214 கி.மீ., கிழக்கிலிருந்து மேற்கு வரை 2,993 கி.மீ. தூரம் கொண்டதாகும்.
உலக கல்லீரல் அழற்சி நோய் தினம் - ஜூலை 28 
  • ஆண்டுதோறும் உலக கல்லீரல் அழற்சி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக கல்லீரல் அழற்சி நோய் தினம் (World Hepatitis Day) கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 உலக கல்லீரல் அழற்சி நோய் தின மையக்கருத்து: “Hepatitis-free future” என்பதாகும்.
சர்வதேச புலிகள் தினம் - ஜூலை 29 
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29-அன்று உலகளாவிய புலிகள் தினமாக (Global/International Tiger Day) கொண்டாடப்படுகிறது. 2010-ஆம் டடடடட
  • ஆண்டில் கையெழுத்திடப்பட்ட புலி பாதுகாப்பு தொடர்பான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தில் (Saint Petersburg Declaration) இந்த நாளைக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. 
  • புலிகள் பாதுகாப்புத் திட்டம் (1973): இந்தியாவில் வாழும் புலிகளைப் பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973-ல் தொடங்கப்பட்டது. அப்போது 1,220 புலிகள் தான் இருந்தன. 
  • அரசு எடுத்த பல்வேறு சீரிய பாதுகாப்பு நடவடிக்கைகளால் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இந்தியாவில் தற்போது 2226-ஐ எட்டியுள்ளது. 
  • உலகில் மொத்த புலி எண்ணிக்கையில் 70% இந்தியா உள்ளது. தமிழ்நாட்டில் 4 புலிகள் காப்பகங்களில் 226 புலிகள் உள்ளன.
  • 2022-ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த ஆசிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. அதாவது, ஆண்டிற்கு 27 சதவீதம் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
  • புலிகளின் உடல் பாகங்கள் கடத்தல்: ஐக்கிய நாடுகள் சபையின் உலக வனவிலங்கு குற்ற அறிக்கை (UN Office on Drugs and Crime Repoit) புலிகளின் உடல் பாகங்களை மிகப் பெரிய அளவில் வழங்கும் நாடாக இந்தியா உள்ளதாக தெரிவித்துள்ளது. புலிகளின் உடல் பாகங்கள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவதில் 82 சதவீதம் இந்தியா மற்றும் தாய்லாந்து மூலமாக நடப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post