TNPSC Current Affairs July 17-19, 2020 - Download as PDF

TNPSC Current Affairs July 17-19,  2020 - Download as PDF

சர்வதேச நிகழ்வுகள்
ஐக்கிய நாடுகளின் பல பரிமாண வறுமை அட்டவணை 2020
  • ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் 2020-இல் பல்பரிமாண வறுமைக் குறியீட்டு (UN Multidimensional Poverty Index) அட்டவணையை வெளியிட்டது.
  • ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் (UNDESA) தரவுகளில் இருந்து இந்த அட்டவணை பெறப்பட்டது.
  • இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி (OPHI) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.
  • இந்த குறியீட்டின்படி, சுமார் 273 மில்லியன் மக்கள் 10 ஆண்டுகளில் பல பரிமாண வறுமையிலிருந்து வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா 2015-19 காலகட்டத்தில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் குறைத்துள்ளதாக பதிவு செய்துள்ளது.
  • UNDESA: United Nations Department of Economic and Social Affairs.
  • OPHI: Oxford Poverty and Human Development Initiative.
இந்தியா-இஸ்ரேல் இடையே "சைபர் பாதுகாப்பு ஒப்பந்தம்"
  • இந்தியாவும் இஸ்ரேலும் இணைய அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் தங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக சைபர் பாதுகாப்பு (Cyber Security) தொடர்பான ஒப்பந்தத்தில் 2020 ஜூலை 15-அன்று கையெழுத்திட்டன.
  • இஸ்ரேலின் தேசிய சைபர் இயக்குநரக இயக்குநர் ஜெனரலுக்கும் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் சஞ்சீவ் சிங்லாவுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தம் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பு மற்றும் துறையில் சிறந்த நடைமுறைகளின் பரஸ்பர பரிமாற்றம் ஆகியவற்றைக் குறிக்கிறது.
  • உலகளாவிய இணைய தாக்குதல்களில் (cyber-attacks) இந்தியா 11-வது இடத்தில் உள்ளது. முதல் காலாண்டில் மட்டும், இந்தியாவில் கண்டறியப்பட்ட உள்ளூர் இணைய அச்சுறுத்தல்களின் எண்ணிக்கை 40 லட்சம் ஆகும்.
கொரோனா பரிசோதனை - அமெரிக்கா முதலிடம்
  • உலக அளவில் அமெரிக்காவும் இந்தியாவும்தான் அதிக அளவு கொரோனா பரிசோதனைகளை செய்வதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 
  • உலக அளவில் அமெரிக்காவில் தான் இவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் 4.2 கோடிக்கும் அதிகமாக செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில் 1.2 கோடி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 
இந்தியா-அமெரிக்கா "அமைச்சர்கள்சார் எரிசக்தி கூட்டாண்மை" சந்திப்பு 2020
  • இந்தியா அமெரிக்கா இடையிலான இரண்டாவது அமைச்சர்கள்சார் மூலோபாய எரிசக்தி கூட்டாண்மை சந்திப்பை (SEP), ஜூலை 17-அன்று மெய்நிகர் தளம் வாயிலாக நடத்தின
  • இந்த அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தின் முக்கிய விளைவு, பலதரப்பு தளமான ACT அமைப்பில் இந்தியா பங்கேற்பது என்பதாகும். CCUS தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை எளிதாக்குவதற்கான ஒரு சர்வதேச திட்டம் ACT ஆகும்.
  • உலகெங்கிலும் இருந்து சுமார் 14 நாடுகள் இந்த ACT அமைப்பில் இணைந்து செயல்படுகின்றன. உலகத்தரம் வாய்ந்த திட்டங்களுக்கு நிதியளிப்பதே ACT-இன் முக்கிய நோக்கம் ஆகும்.
சர்வதேச விமான போக்குவரத்துக்கான இந்தியாவின் "காற்று குமிழி" ஒப்பந்தம்
  • மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சர்வதேச வர்த்தக விமானங்களின் செயல்பாட்டை இந்தியா மீண்டும் தொடங்கப்போவதாக 2020 ஜூலை 16-அன்று அறிவித்தார். 
  • இதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா "காற்று குமிழி" (Air Bubble) என்ற ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டு குடிமக்கள், இந்தியர்கள் மற்றும் அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் வணிக மற்றும் இராஜதந்திர விசாக்கள் கொண்ட ஒரு குறிப்பிட்ட வகை மக்களை மட்டுமே இந்தியா அனுமதிக்கப்படுவர், வேண்டும். சுற்றுலா விசா உள்ளவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • Air Bubble: "ஏர் பப்பில்" என்பது கொரானா தொற்று நேரங்களில் உருவாக்கப்பட்ட சொல் ஆகும். இது உலகின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு இடையிலான விமானப்போக்குவரத்து மற்றும் மக்கள் இணைப்பைக் குறிக்கிறது. "ஏர் பப்பில்" திட்டம் "வந்தே பாரத் மிஷன்" என்றும் அழைக்கப்படுகிறது.
தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பாக ஐ.நா. அறிவிப்பு
  • பாகிஸ்தான் தலிபான் என அழைக்கப்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான நூர் வாலி மெஹ்சுத்தை (Noor Wali Mehsud) உலகளவில் பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது.
  • அல்-கொய்தாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு நிதியளித்தல், சதித் திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஐ.நா., பாதுகாப்புக் குழு, இந்த அமைப்புக்கு தடையும் விதித்துள்ளது.
  • TTP: Tehreek-e-Taliban Pakistan.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி - இரட்டை பாதுகாப்பு அம்சங்கள்
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் கொரானா தடுப்பூசியில் (Oxford vaccine) இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் (Double Protection) உள்ளன.முதலாவதாக இந்த ஊசியை செலுத்தும் நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது; இரண்டாவதாக மனித உடலில் வைரசை உருவாக்கும் 'செல்'களை அழிக்கும். 'கில்லர் டி செல்' என்ற செல்லும் இதில் உள்ளது.
  • பிரிட்டன் அரசின் உதவியுடன் ஆக்ஸ்போர்டு பல்கலையின் ஜென்னர் பயிற்சி மையம் அஸ்டரா ஜெனகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி வருகின்றன.
இந்தியா-பூடான் இடையே புதிய வர்த்தக வழி திறப்பு
  • இந்தியா பூடான் நாடுகள், இணைந்து மேற்கு வங்காளத்தின் ஜெய்கோன் மற்றும் பூடானில் பசாகா-விற்கும் இடையே ஒரு புதிய வர்த்தக வழியை (Trade Route) 2020 ஜூலை 16-அன்று திறந்தன.
  • பசகா தொழிற்பேட்டைக்கு தொழில்துறை மூலப்பொருட்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்ல இந்த நில பாதை உதவும். இந்த பாதை வர்த்தகத்தை அதிகரிக்கவும் வாகன போக்குவரத்தை குறைக்க வழிவகுக்கும்.
இந்திய நிகழ்வுகள்
உத்தரகண்ட் மாநிலத்தில் "மண்டல முதன்மை திட்டம்" அறிவிப்பு
  • "சர்தாம் சாலை திட்டத்தின்" மறுஆய்வுக் கூட்டம் உத்தரகண்ட் மாநிலத்தில் 2020 ஜூலை 17 அன்று நடைபெற்றது, இதில் உத்தரகண்டில் உள்ள பாகிரதி சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தின் (Bhagirathi Eco-Sensitive Zone) மண்டல முதன்மை திட்டத்திற்கு (Zonal Master Plan) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். 
  • இந்த மண்டல முதன்மை திட்டம், சர்தாம் சாலை திட்டத்தை (Chaar Dhaam Road Project) நிறைவெற்றுவதற்கான நீர்நிலை அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட முதன்மை திட்டம் ஆகும். இத்திட்டத்தில் வனவிலங்குகள், காடு, நீர்ப்பாசனம், எரிசக்தி, சாலை உள்கட்டமைப்பு மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்டவற்றில் நிர்வாகம் அடங்கும்.
  • இந்த திட்டத்தின் மூலம், பாகீரதி பகுதி இயற்கை பேரழிவுகளுக்கு மிகவும் பாதிக்கக்கூடும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2015-ஆம் ஆண்டில் நடந்த கேதார்நாத் சோகத்தை முன்வைத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
  • பாகீரதி சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல அறிவிப்பை சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை அமைச்சகம்ர் 2012-இல் வெளியிட்டார். பின்னர் இந்த அறிவிப்பு 2018-இல் திருத்தப்பட்டது.
  • சார்தாம் நெடுஞ்சாலை திட்டம்: இந்த திட்டம், 889 கி.மீ. நீளத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை மற்றும பாலங்கள் மூலம் பத்ரிநாத் தாம், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய ஆன்மீக தளங்களை இணைக்கும் விதமாக மேற்கொள்ளப்படுகிறுது. மேலும் கைலாஷ் மன்சரோவர் யாத்திரைக்கு செல்லும் பாதையின் ஒரு பகுதியை இணைக்கிறது.
ஆந்திர அரசின் "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏற்றுமதி கொள்கை 2020" 
  • ஆந்திர மாநில அரசு 2020 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏற்றுமதி கொள்கையை சமீபத்தில் அறிவித்தது. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு மின்சாரம் விற்க இந்தக் கொள்கை அனுமதிக்கிறது. இந்தக் கொள்கையை NREDCAP அமைப்பு செயல்படுத்த உள்ளது.
  • NREDCAP:New and Renewable Energy Development Corporation of AP Limited. 
PM SVANidhi செயலி பயன்பாடு அறிமுகம்
  • மத்திய நகர விவகார அமைச்சகம் PM SVANidhi என்ற செல்பொன் செயலி பயன்பாட்டை 2020 ஜூலை 17-அன்று அறிமுகப்படுத்தியது.
  • செல்பொன் செயலி மூலம் தெரு விற்பனையாளர்களின் தங்களது கடன் விண்ணப்பங்களை செயலாக்கவும், வணிகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்.
  • PM SVANidhi திட்டம் என்பது தெருவோர விற்பனையாளர்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டது. நாட்டில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு விற்பனையாளர்கள் உள்ளனர்.
ஆத்மா நிர்பர் பாரத் அபியான் திட்டத்திற்கான 5 இணையதளங்கள் அறிமுகம்
  • இந்தியாவில் ஆத்மா நிர்பர் பாரத் அபியான் திட்டத்தினை மேம்படுத்தவும் புதுமைகளை மேம்படுத்துவதற்காகவும், ஐந்து இணையதளங்களை வெவ்வேறு அமைப்புகளால் (5 Portals for Atma Nirbhar Bharat Abhiyan), உருவாக்கி வருவதாக 2020 ஜூலை 17-அன்று இந்திய அரசு அறிவித்தது.
  • குறிப்பிட்ட துறைகளுக்காக இணையதளங்கள் உருவாக்கப்படுகின்றன, அவை பின்வருமாறு: 
  • BHEL நிறுவனம் - மின் துறை 
  • CMFTI - உற்பத்தி துறை - 
  • HMT - இயந்திர கருவிகள்
  • ICAT மற்றும் ARAI - வாகனத்துறை.
கொச்சின் கப்பல் கட்டும்தளத்திற்கான "மின்சார படகுகள்" உருவாக்கம்
  • கொச்சின் கப்பல் கட்டும்தளம் (Cochin Shipyard) இரண்டு தன்னாட்சி மின்சார படகுகளை (Electric Ferries) உருவாக்குவதற்காக, நோர்வே நாட்டின் அஸ்கோ மாரிடைம் ஏ.எஸ் (ASKO Maritime) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இந்த திட்டம், உமிழ்வில்லா போக்குவரத்தை (Emission Free) வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • முழுவதும் மின்தாரம் மூலம் இயங்கும் இந்த மின்சார படகுகள் 67 மீட்டர் நீளம் கொண்டவை.
கேரளாவில் உறுதிப்படுத்தப்பட்ட "கொரானா சமூக பரிவல் நிலை" 
  • கேரள மாநில அரசின் கூற்றுப்படி, தலைநகர் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள இரண்டு கடலோர குக்கிராமங்களில் கொரானா தொற்று சமூக பரவுதல் 
  • நிகழ்ந்துள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேரளாவில் கொரானா தொற்றின் சமூக பரவல் நிலையை (Community Transmission of COVID-19) உறுதிப்படுத்தியுள்ளார்.
  • இந்திய மருத்துவ சங்கத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் கொரானா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 30,000-க்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது, இது ஒரு அதிவேக வளர்ச்சி என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரானா பாதிப்பு - 10 இலட்சம்
  • இந்தியாவில் ஒரே நாளில் 34 ஆயிரத்து, 956 பேருக்கு வைரஸ் தொற்று ஜூலை 17-அன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வைரசால் பாதிக்கப்பட்டோர் 
  • எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. மொத்தம், 10 லட்சத்து, 3,832 பேர், கொரானா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
விமானப்போக்குவரத்துத் துறையில் முதலீடு - "அம்பா் துபே அனுமதி குழு" அமைப்பு
  • விமானப் போக்குவரத்துத் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைகளை ஆராய்ந்து விரைவில் முடிவெடுப்பதற்காக ஒற்றைச் சாளர முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • முதலீ்ட்டுக்கான அனுமதிகள், அவற்றுக்கு அளிக்க வேண்டிய சலுகைகள் உள்ளிட்ட விவகாரங்களை விரைவுபடுத்தும் நோக்கில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச்செயலா் அம்பா் துபே தலைமையில் முதலீட்டு அனுமதி குழுவை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அமைத்துள்ளது.
பாதுகாப்பு/ விண்வெளி
சீனாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி விண்கலம் "டியன்வென்-1"
  • சீனா நாடு ஜூலை 23-ஆம் தேதி, செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு, 'டியன்வென்-1' (Tianwen-1 Mars mission) என்ற விண்கலத்தை அனுப்ப உள்ளது. 
  • இதை, 'தி லாங் மார்ச்-5' (Long March 5)என்ற ராக்கெட் ஏந்திச் சென்று, விண்வெளியில் செலுத்தும். இந்த ராக்கெட், ஹைனன் மாகாணம், வென்சங் விண்வெளி மையத்தில் இருந்து, ஏவப்பட உள்ளது. 
விருதுகள்
டொரொன்டோ சர்வதேச திரைப்பட விழா 2020 - அஞ்சலி விருது பெறும் "கேட் வின்ஸ்லெட்"
  • டொரொன்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) 45-வது பதிப்பு, 2020 ஜூலை 16-அன்று மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்றது. 
  • இதில் ஆஸ்கார் விருது வென்ற நடிகை கேட் வின்ஸ்லெட் (Kate Winslet) அவர்களுக்கு அஞ்சலி நடிகர் விருது (TIFF Tribute Actor Award) அறிவிக்கப்பட்டது.
  • பிரான்சிஸ் லீ அவர்களின் அம்மோனைட் திரைப்படத்தில், கேட் வின்ஸ்லெட் ஒரு புதைபடிவ வேட்டைக்காரர் மேரி அன்னிங் வேடத்தில் நடித்ததற்காக இவ்விருதை பெறுகிறார்.
வன ஆய்வுக்கான தேசிய விருது 2019 - கண்ணன் வாரியர் 
  • கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் (IFGTB) முதுநிலை விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் முனைவர் கண்ணன் வாரியர் (Kannan C S Warrier) அவர்களுக்கு 2019-ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த வன ஆய்வுக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
  • உயிரிப் பன்மையைக் காப்பதில் ஆய்வு மேற்கொண்டதற்காக இந்த விருதினை பெற்றுள்ளார்.
  • ஆண்டுதோறும் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம் (ICFRE) இவ்விருதினை வழங்கி வருகிறது. 
  • முனைவர் கண்ணன் வாரியர் இந்திய தாவரவியல் கழகத்தால் வழங்கப்படும் ரோலா எஸ். ராவ் தேசிய விருதையும் பெற்றுள்ளார். 
  • IFGTB: Institute of Forest Genetics and Tree Breeding.
மாநாடுகள்
ஐ.நா. சபை பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உயர்மட்ட கூட்டம்
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து செயல்படும் ஐ.நா. சபை பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் மோடி ஜூலை 17-அன்று உரையாற்றினார். 
  • 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும். 50 கோடி இந்தியர்களை உள்ளடக்கி மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்துகிறது.
  • உலகில் ஆறில் ஒருவர் வாழும் இடமாக இந்தியா திகழ்கிறது. கரோனா பாதித்த 150 நாடுகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. உலகிலேயே கரோனாவிலிருந்து விரைவாக மீளும் நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
பொருளாதார நிகழ்வுகள்
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நபார்ட் வங்கியின் திட்டங்கள் அறிமுகம்
  • தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள திட்டங்களை ஜூலை 16, 2020 அன்று அறிமுகப்படுத்தியது.
  • சுய உதவிக்குழுக்களை உருவாக்குவதற்கும், பிரதேசத்தில் உள்ள சுய உதவிக்குழுக்களின் திறன் மேம்பாட்டிற்கும் இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
  • NABARD: National Bank for Agriculture and Rural Development.
தமிழ்நாடு நிகழ்வுகள்
திருக்குறள் அற்புதமான ஊக்குவிப்பு நூல் - மோடி தகவல்
  • திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூல் என்றும் இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையாளர் மாலன், வார இதழுக்கு எழுதிய கட்டுரை ஒன்றையும் இணைத்து சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். 
விளையாட்டு நிகழ்வுகள்
லா லிகா கால்பந்து 2020 - ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்
  • 20 அணிகள் பங்கேற்ற 2020 லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயின் நாட்டில் நடந்தது. ரியல் மாட்ரிட் அணி 37 ஆட்டத்தில் ஆடி 26 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 86 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தது. 
  • இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. லா லிகா கால்பந்து போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணி பட்டத்தை வெல்வது இது 34-வது முறையாகும்.
பாரா பாட்மிண்டன் வீரர் - ரமேஷ் திகாராம்
  • இந்தியாவில் அர்ஜூனா விருது பெற்ற முதல் பாரா பாட்மிண்டன் வீரர் என்கிற பெருமையைப் பெற்றவர் ரமேஷ் திகாராம். அவருக்கு கொரானா தொற்று காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் ரமேஷ் ஜூலை 17-அன்று காலமானார்.
ஃபிஃபா உலகக் கோப்பை 2022 - கத்தார்
  • 2022 உலகக் கோப்பை கட்டார் (Qatar) நாட்டில் நடைபெறப்போவதாக 2020 ஜூலை 15 அன்று சர்வதேச கால்பந்து சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. போட்டிகளின் அட்டவணையையும் வெளியிட்டது.
  • 2022 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி (2022 FIFA World Cup), அரபு உலகில் நடைபெறும் முதல் உலகக் கோப்பையாகவும், முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட நாட்டில் நடைபெறும் முதல் உலகக் கோப்பையாகவும் உள்ளது.
  • இந்த உலகக் கோப்பையில் 32 அணிகள் பங்கேற்கின்றன, 2026 போட்டியில் அணிகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்த்தப்படவுள்ளது.
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் "பென் ஸ்டோக்ஸ்" - சாதனை
  • இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்றது முதல் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் "பென் ஸ்டோக்ஸ்", டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களும் 150 விக்கெட்டுகளும் எடுத்த வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். 
  • பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது 10 சதங்களும் 150 விக்கெட்டுகளும் எடுத்த 5-வது ஆல்ரவுண்டர் என்கிற பெருமையை தற்போது இரண்டாம் டெஸ்ட் போட்டியில் பெற்றுள்ளார், 
முக்கிய நபர்கள்
கணித மேதை சி.எஸ்.சேஷாத்ரி 
  • இந்தியாவின் மிகச்சிறந்த கணித மேதைகளில் ஒருவரான சி.எஸ்.சேஷாத்ரி (வயது 88) சென்னையில் ஜூலை 17-அன்று காலமானார்.
  • சி.எஸ்.சேஷாத்ரி (C.S. Seshadri), இயற்கணித வடிவவியலில் (algebraic geometry) சிறந்த மேதையாக விளங்கனார். 
  • 1984-இல் சென்னை கணித அறிவியல் கழகத்தில் (Chennai Mathematical Institute) தன்னை இணைத்துக் கொண்ட சி.எஸ்.சேஷாத்ரி , இதைத் தொடா்ந்து, 1989-ஆம் ஆண்டு கணிதப் பள்ளியை தொடங்கினார். 
  • 2009-ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் ராயல் சொசைட்டி விருது 1988-ஆம் ஆண்டு அவருக்கு அளிக்கப்பட்டது. 
மகாராஷ்டிராவின் முதல் பெண் தேர்தல் ஆணையர் காலமானார்
  • முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் மகாராஷ்டிராவின் முதல் பெண் தேர்தல் ஆணையருமான திருமதி நீலா சத்தியநாராயண் 2020 ஜூலை 16-அன்று மும்பையில் காலமானார். 1972 தொகுதி அதிகாரியான இவர் செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டு அனுமதிக்கப்பட்டார். 
முக்கிய தினங்கள்
சர்வதேச சுறா விழிப்புணர்வு தினம் - ஜூலை 14 
  • ஆண்டுதோறும் ஜூலை 14 ஆம் தேதி, சர்வதேச சுறா விழிப்புணர்வு தினம் (Shark Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த நாளில், சுற்றுச்சூழல் அமைப்பில் சுறாக்கள் விளையாடுவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சர்வதேச நீதிக்கான உலக தினம் - ஜூலை 17 
  • சர்வதேச அளவில் குற்றவியல் நீதியை மேம்படுத்துவதற்காகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court) பணிகளை ஆதரிக்கும் ஒரு வழியாகவும், சர்வதேச நீதிக்கான உலக தினம் (World Day for International Justice) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் - ஜூலை 18 
  • கருப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய நெல்சன் மண்டேலாவை பெருமைப்படுத்தும் விதமாக, ஐ.நா. சபையால் 2009-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான ஜூலை 18-ந்தேதி சர்வதேச மண்டேலா தினமாக (Nelson Mandela International Day) கொண்டாடப்படுகிறது. 
  • 27 ஆண்டு சிறை மண்டேலா சிறையில் 27 ஆண்டுகளைக் கழித்த அவர் 1990-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந்தேதி விடுதலை ஆனார்
  • 1990-ல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. அமைதியையும், நிலைத்தன்மையையும் ஏற்படுத்தியதற்காக 1993-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
  • 2020 சர்வதேச நெல்சன் மண்டேலா சர்வதேச தின மையக்கருத்து: "Tackling Inequality A New Social Contract for a New Era".
Post a Comment (0)
Previous Post Next Post