TNPSC Current Affairs July 1, 2020 - Download as PDF

சர்வதேச நிகழ்வுகள்
இந்தியாவில் 50 ஆண்டுகளில் 4.58 கோடி பெண்கள் மாயம் - ஐ.நா. அறிக்கை
  • ஐ.நா. மக்கள் தொகை நிதியம், சர்வதேச மக்கள் தொகை குறித்த அறிக்கை அண்மையி்ல் வெளியிட்டது. அதில், இந்தியாவில் மட்டும் 1970-2020-ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகளில் 4.58 கோடி பெண்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலக அளவில், 1970-ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டு காலத்தில் 6.10 கோடி பெண்களும், 1970-2020-ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகளில் 14.26 கோடி பெண்களும் காணாமல் போயுள்ளனர்.
  • 2013 - 17-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 4.60 லட்சம் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் மாயமாகியுள்ளனர். மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவில், இதே 50 ஆண்டு காலத்தில் 7.23 கோடி பெண்கள் மாயமாகியுள்ளனர்.
சீனாவில் புதிய பன்றிக் காய்ச்சல் வைரஸ் 'G4 virus'
  • சீனாவில் ஒரு புதிய வைரஸ் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது உலகளாவிய தொற்றுநோயை ஏற்படுத்திய 2009 பன்றிக் காய்ச்சல் வைரஸுடன் (Swine Flu Virus) ஒத்துள்ளது. இந்த புதிய வைரஸ் திரிபுக்கு ‘G4 EA H1N1 (பொதுவாக G4 virus)’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இது மனிதர்களில் தொற்றுநோயை உருவாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு சீனா ஒப்புதல் 
  • இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங் கடந்த 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தொடங்கி தற்போது வரை ஹாங்காங், சீனாவின் காட்டுப்பாட்டில் இருக்கிறது. 
  • தற்போது வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் ஹாங்காங்கின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் சீனாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன, மீதமுள்ளவை அதன் சொந்த நிர்வாக, சட்டமன்ற மற்றும் சுயாதீன நீதி அதிகாரத்தைக் கொண்டுள்ளன.
  • 2020 மே 28 அன்று, ஹாங்காங்கிற்கான பாதுகாப்பு சட்டங்களை (Hong Kong security law) உருவாக்க சீன நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை சீன அரசு நிறைவேற்றியது.
  • சர்ச்சைக்குரிய இந்த ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு சீனா ஜூன் 30-அன்று ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம் செயல்படுத்தப் படும்போது, ஹாங்காங்கில் தற்போது இருக்கும் சட்டங்களை இது மீறக்கூடும். இதன்மூலம் ஹாங்காங்கில் சீனா தனது பிடியை இறுக்கிக் கொண்டிருக்கிறது, 
இந்திய நிகழ்வுகள்
உலகின் முதல் உலகின் முதல் இணையதள பட்டப்படிப்பு - IIT மெட்ராஸில் தொடக்கம்
  • உலகின் முதல் இணையதள பி.எஸ்சி. நிரலாக்க மற்றும் தரவு அறிவியல் பட்டப்படிப்பு (B.Sc. Degree in Programming and Data Science), சென்னையில் உள்ள மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தால் (IIT Madras), உருவாக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
  • இணையதள பாடநெறிமுறை, மத்திய மனித வள மேம்பாட்டு (HRD) அமைச்சர் இரமேஷ் போக்ரியால் அவர்களால் ஒரு மெய்நிகர் நிகழ்வின் மூலம் ஜூன் 30-ஆம் தேதி தொடங்கப்பட்டது
  • உலகில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றான தரவு அறிவியல் ஆகும். புள்ளிவிவர கணக்குகள், உண்மைகள் மற்றும் போக்குகளை கொண்டு உருவாக்கப்படும் தரவு அறிவியல் முக்கிய நிர்வாக முடிவுகளை எடுக்க வகை செய்கிறது. 
‘மத்ஸ்ய சம்பதா’ - மீன்வள மற்றும் மீன்வளர்ப்பு செய்திமடல் வெளியீடு
  • 2020 ஜூன் 30-அன்று, மீன்வள மற்றும் மீன்வளர்ப்பு செய்திமடலின் முதல் பதிப்பு ‘மத்ஸ்ய சம்பதா’ (Matsya Sampada) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. முதல் பதிப்பில்.PMMSY-திட்டத்திற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • இந்த செய்திமடலை மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தொடங்கி வைத்தார். காலாண்டு அடிப்படையில் இந்த செய்திமடல் வெளியிடப்படவுள்ளது.
கொரோனா தடுப்பூசி ‘கோவேக்சின்’ 
  • ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் (Bharat Biotech) ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு ‘கோவேக்சின்’ (COVAXIN) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி விலங்குகளுக்கு செலுத்தி பார்க்கப்பட்டுள்ளது. அந்த சோதனையில், இது பாதுகாப்பானது மற்றும் சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, கொரோனா வைரசின் திரிபுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படி கொரோனா வைரஸ் திரிபுகளில் இருந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை. இந்த தடுப்பூசியை இந்தியாவின் தேசிய வைரலாஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்க்க ஏற்பாடு ஆகி உள்ளது.
PMGKY இலவச ரேஷன் பொருள் திட்டம் - மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு
  • இரண்டாம் கட்ட பொது முடக்க விடுப்பு (UNLOCK-2) ஜூலை 1-முதல் தொடங்கும் நிலையில், ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின் (PMGKY) கீழ், 80 கோடிக்கும் அதிகமானோருக்கு இலவச ரேஷன் பொருள் வழங்குவதை வரும் 2020 நவம்பா் மாதம் வரை நீட்டிப்பதாக, பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 30-அன்று அறிவித்தார்.
  • PMGKY: Pradhan Mantri Garib Kalyan Yojana
வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுக்கான ஹெலிகாப்டர் சேவைகள் - தொடக்கம்
  • வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுக்கான ஹெலிகாப்டர் சேவைகள் (Helicopter Services for Locust Control), மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களால், 2020 ஜூன் 30-அன்று உத்தரபிரதேசத்தின் கௌதம் புத்தா நகரில் உள்ள ஹெலிபேட் தளத்தில் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது.
  • இராஜஸ்தான் பாலைவன பகுதிகளில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுக்காக, பார்மர் நகரில் உள்ள விமானப்படை நிலையத்தில், தெளிப்பு உபகரணங்களுடன் 'Bell 206-B3' என்ற இந்த ஹெலிகாப்டர் நிறுத்தப்படும். 
  • இந்த தெளிப்பு ஹெலிகாப்டர், மாவட்டங்கள் நாகார், ஜோத்பூர், பார்மர், பிகானேர், ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூர் மாவட்டங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளது. 
  • இந்த ஹெலிகாப்டர் சுமார் 25 முதல் 50 ஹெக்டேர் பரப்பளவில் 250 லிட்டர் பூச்சிக்கொல்லியை எடுத்துச் செல்லும் தெளிக்கும் திறன் பெற்றது.
SBI வங்கியின் டிஜிட்டல் வங்கி சேவைக்கான 'யோனா' கிளைகள்' திறப்பு
  • பாரத ஸ்டேட் வங்கி (SBI), நவி மும்பை, இந்தூா், குருகிராம் ஆகிய இடங்களில் 'யோனா' கிளைகளை (Yono branches) தொடங்கியுள்ளது. 
  • டிஜிட்டல் வங்கி சேவையை (digital banking) மேம்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக இந்த கிளைகளை SBI வங்கி தொடங்கியுள்ளது. இந்த கிளைகளில் வங்கிப் பணியாளா்கள் யாரும் இல்லாமல் வங்கிச் சேவைகளை டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளா்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • 65-ஆவது நிறுவன நாள்: 2020 ஜூலை 1-அன்று பாரத ஸ்டேட் வங்கியின் 65-ஆவது நிறுவன நாள் (SBI foundation day) விழாவை முன்னிட்டு இந்த கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் SBI வங்கி, 1955 ஜூலை 1-அன்று நிறுவப்பட்டது. 
மகாராஷ்டிர அரசின் "சிவ போஜன் தாளி திட்டம்'
  • மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.10-க்கு மதிய உணவு வழங்கும் "சிவ போஜன் தாளி திட்டம்" 2020 ஜனவரி 26-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் கரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக, ரூ.10-க்கு வழங்கப்பட்ட உணவு ரூ.5 ஆகக் குறைத்து அறிவிக்கப்பட்டது. 
  • மகாராஷ்டிரத்தில் சிவ போஜன் திட்டத்தால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர் என்று அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் தற்போது 848 சிவ போஜன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 
59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதிப்பு
  • செல்லிடப்பேசிகள் மற்றும் இதர மின்னணு கருவிகளில் பயன்படுத்தக் கூடிய டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், கேம் ஸ்கேனர், வீ சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள அந்தச் செயலிகளுக்கு தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69A-வின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இணைய வழி குற்றத்துக்கான இந்திய ஒருங்கிணைப்பு மையம் பரிந்துரையின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக "கே.கே.வேணுகோபால்" மீண்டும் நியமனம் 
  • இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த, 2020 ஜூன் 29-அன்ற, மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அவர்களை இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக (Attorney General for India) மீண்டும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
  • இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக உள்ள கே.கே.வேணுகோபால் (K.K.Venugopal) அவர்களின் தற்போதைய பதவிக்காலம் 2020 ஜூன் 30-அன்று முடிவடைந்தது. அவரது பதவிக்காலம் 2020 ஜூலை 1 முதல் 2021 ஜூன் 30 வரை ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • 30 ஜூன் 2021 அன்று, 2017 ஜூன் 30-அன்று, முகுல் ரோஹத்கிக்குப் பிறகு கே.கே. வேணுகோபால் இந்தியாவின் 15-வது அட்டர்னி ஜெனரலாக பொறுப்பேற்றார்.
தமிழ்நாடு நிகழ்வுகள்
கொடுமணலில் குஜராத் கல் பவளமணிகள் கண்யடெடுப்பு
  • ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே நொய்யல் நதிக்கரை கிராமமான கொடுமணலில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இதில், குஜராத் கல் பவளமணிகள் உள்பட பல்வேறு சான்றுகள், சின்னங்கள், பொருள்கள் கிடைத்துள்ளன. 
  • கல் பவளமணிகள் குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைப்பதால் இங்கிருந்து வணிகத் தொடா்பு குஜராத் வரை இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 
  • தொழிற்சாலைகள் இருந்த பகுதியில் நடைபெற்ற அகழாய்வில், இரண்டு தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய கறுப்பு, சிவப்பு நிறத்தில் ஒரு பானை, ஒரு வெள்ளி, நான்கு செம்பு நாணயங்கள், 69 கல்பவள மணிகள், கற்களை உடைக்கும் ஒரு கல் சுத்தியல், அணிகலன்கள் செய்வதற்கான சுடு மண்ணால் தயாரான ஒரு பானை, ஏராளமான உடைந்த ஓடுகள் கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டின் இரு திட்டங்களுக்காக 'இந்தியா-உலக வங்கி ஒப்பந்தம்'
  • உலக வங்கி குழுமத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையே, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நகர்ப்புற ஏழைகளுக்கு மலிவு விலை வீடுகளை வழங்குவதற்கான இரண்டு திட்டங்களுக்கான ஒப்பந்தம் 2020 ஜூன் 29-அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, இரு திட்டங்களுக்கும் 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி குழுமத்தின் சர்வதேச மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) கடன்களை வழங்குகிறது. 
  • கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இரண்டு திட்டங்கள்: 
    1. தமிழ்நாடு வீடமைப்புத் துறை வலுப்படுத்தும் திட்டம் மற்றும்
    2. தமிழ்நாடு வீடமைப்பு மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்.
விளையாட்டு நிகழ்வுகள்
"நாடா இந்தியா" மொபைல் செயலி பயன்பாடு - அறிமுகம்
  • இந்திய தடகள வீரர்களுக்கு உதவுவதற்காக, தடைசெய்யப்பட்ட பொருட்கள் குறித்த தகவல்களை கொண்ட புதுப்பிக்கப்பட்ட,‘நாடா இந்தியா’ (NADA INDIA) என்ற மொபைல் செயலி பயன்பாடு தொடங்கப்பட்டது. 
  • 2020 ஜூன் 30-அன்று தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (NADA) உருவாக்கியுள்ள இந்த மொபைல் பயன்பாட்டை, மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரீன் ரிஜிஜு அறிமுகம் செய்தார். 
  • இந்த முன்முயற்சியின் மூலம், தூய்மையான விளையாட்டுகளை உருவாக்குவதற்கு நாடா அமைப்பு ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. 
  • விளையாட்டு வீரர்களுக்கு பொதுவாக பரிந்துரைக்கும் மற்றும் பயன்படுத்தும் மருந்துகள் பற்றிய தகவல்கள் இந்த செயலியில் கிடைக்கும்.
  • 2005 நவம்பர் 24-அன்று இந்தியாவில் அனைத்து வகையான விளையாட்டுகளிலும் ஊக்கமருந்து கட்டுப்பாட்டு திட்டங்களை கண்காணிக்கவும் ஊக்குவிக்கவும் நாடா அமைப்பு நிறுவப்பட்டது. நாடா அமைப்பின் தலைமையிடம் புதுதில்லியில் உள்ளது.
  • NADA: National Anti-Doping Agency.
ICC நடுவர் குழுவில் நிதின் மேனன் சேர்ப்பு
  • 2020-21-ம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் குழுவின் (ICC) நடுவர் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த நிதின் மேனன் சேர்க்கப்பட்டுள்ளார். 
  • 36 வயது நிதின் மேனன், 3 டெஸ்டுகள், 24 ஒருநாள், 16 டி20 ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். 
  • வெங்கட்ராகவன், சுந்தரம் ரவி ஆகியோருக்கு அடுத்து நடுவர் குழுவில் இடம்பெற்ற இந்தியர் என்கிற பெருமையை நிதின் மேனன் அடைந்துள்ளார்.
முக்கிய தினங்கள்
சரக்கு மற்றும் சேவை வரி தினம் - ஜூலை 1
  • சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகமாகி 3 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. 
  • ஒரு முனை வரி விதிப்பு முறை (GST):நாடு முழுவதும், ஒரு முனை வரி விதிக்கும் வகையிலான, மத்திய அரசின், சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திற்கு, 2016 செப்டம்பர் 8-ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். 
  • ஜூலை 1, 2017 - GST அறிமுகம்: சரக்கு மற்றும் சேவை வரி 2017 ஜூலை 1-ஆம் தேதி முதல், நாடு முழுவதும், GST வரி விதிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. ஜூலை 1-ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி தினம் (GST Day 2020) கடைபிடிக்கப்படுகிறது.
  • GST: Goods & Services Tax Act.
தேசிய மருத்துவர் தினம் - ஜூலை 1 
  • இந்தியாவில் தேசிய மருத்துவர் தினம் (National Doctors' Day 2020) ஜூலை 1-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 
  • புகழ் பெற்ற மருத்துவரும், மேற்கு வங்க முதலமைச்சருமாக இருந்த பி.சி. ராய் என்ற டாக்டர் பிதன் சந்திர ராய் (Dr. Bidhan Chandra Roy) பிறந்த தினத்தை (1-7-1882), நினைவுகூறும் வகையில், 1991-ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. 
  • சிறப்புமிக்க மருத்துவரான பிதான் சந்திர ராய், பீகார் மாநிலத்தில் 1882 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி பிறந்தார். 80 ஆண்டுகள் கழித்து இதே தினத்தில் அவர் மறைந்தார். 1948-ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 1962 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி வரை 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக செயல்பட்டார். இவரின் சேவையை பாராட்டிய மத்திய அரசு, அவரை கவுரவிக்கும் விதமாக 1961 ஆம் ஆண்டு பிதன் சந்திரா ராய்க்கு பாரத ரத்னா விருது வழங்கியது.
  • மருத்துவ சேவை-டாக்டர் பி.சி.ராய் விருது: இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு 1976 ஆம் ஆண்டு முதல் டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • 2020 மையக்கருத்து: "Lessen the Mortality of COVID 19".
பட்டயக் கணக்காளர்கள் தினம் - ஜூலை 1 
  • இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI), உருவாக்கப்பட்டதன் நினைவாக ஆண்டுதோறும், ஜூலை 1-ஆம் தேதி 'பட்டயக் கணக்காளர்கள் தினம்' (Chartered Accountants Day) கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 மையக்கருத்து: "Transforming the Future: Enabling Excellence, Augmenting Trust".
  • ICAI: Institute of Chartered Accountants of India.
Download this article as PDF Format
I Frame View  

Post a Comment (0)
Previous Post Next Post