TNPSC Current Affairs June 28-30, 2020 - Download as PDF

சர்வதேச நிகழ்வுகள்
சூடான், எத்தியோப்பியா, எகிப்து இடையே 'நைல் ஆற்று அணை' உடன்பாடு
  • சூடான், எத்தியோப்பியா மற்றும் எகிப்து இடையே ஒன்பது ஆண்டுகளாக நீடித்த நீல நைல் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் ஜெயண்ட் எத்தியோப்பியன் மறுமலர்ச்சி அணை (Giant Ethiopian Renaissance Dam) தொடர்பாக சர்ச்சை, ஒரு முத்தரப்பு உடன்பாட்டின் மூலம் முடிவுக்கு வரவுள்ளது.
  • 2020 ஜூன் 26-அன்று, எத்தியோப்பியாவின் நீர் அமைச்சர், மூன்று நாடுகளுக்கு (எத்தியோப்பியா, சூடான் மற்றும் எகிப்து) 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜெயண்ட் எத்தியோப்பியன் மறுமலர்ச்சி அணை தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாகவும், அணை ஒருதலைப்பட்சமாக எத்தியோப்பியாவால் நிரப்பப்படாது என்றும் கூறியுள்ளார்.
  • வரவிருக்கும் வாரங்களில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வாய்ப்புள்ள நிலையில், ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa) எனப்படும் இந்தப் பிராந்திய ஸ்திரத்தன்மை வரவிருக்கும் ஆண்டுகளில் கணிசமாக மேம்படும்.
  • 2011-ஆம் ஆண்டில் எத்தியோப்பியா நீல நைலில் அணைக்கான கட்டுமானத்தைத் தொடங்கியபோது, எகிப்து உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்தது. 
  • எத்தியோப்பியாவின் டானா ஏரியிலிருந்து தோன்றும் நீல நைல் சூடான் வழியாக எகிப்துக்கு கீழ்நோக்கி பாய்கிறது.
இந்தியா பூடான் இடையே 'நீர் மின் திட்ட சலுகை ஒப்பந்தம்' 
  • இந்தியா, பூடான் நாடுகள் இடையே நீர் மின் திட்டத்திற்கான சலுகை ஒப்பந்தம், 2020 ஜூன் 29-அன்று பூட்டான் தலைநகர் திம்புவில் கையெழுத்திடப்பட்டது. 
  • கோலோங்சு ஹைட்ரோ எனர்ஜி லிமிடெட் (Kholongchhu Hydro Energy Limited) மற்றும் ராயல் பூட்டான் அரசு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • கிழக்கு பூட்டானின் டிராஷியாங்சே மாவட்டத்தில் உள்ள கோலோங்சு ஆற்றில் இந்த திட்டம் கோலோங்சு நீர் மின் திட்டம் அமைகிறது. இது இந்திய அரசுகளுக்கும் பூட்டானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் கீழ் 5 வது நீர் மின் திட்டமாகும்.
  • இந்தியா-பூட்டான் இருதரப்பு நீர்மின் திட்டங்கள்
  • சலுகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன், கோலோங்சு நீர் மின் திட்டத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.
  • இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மெய்நிகர் தளம் மூலம் கலந்து கொண்டார்.
யேமனில் 5 வயதிற்குட்பட்ட 24 லட்சம் குழந்தைகளுக்கு பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு
  • கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோய்களுக்கு மத்தியில், 5 வயதிற்குட்பட்ட 2.4 மில்லியன் (24 லட்சம்) குழந்தைகள் யேமன் நாட்டில் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) 2020 ஜூன் 26 அன்று தெரிவித்துள்ளது.
  • 2015 தொடக்கத்திலிருந்த நடைபெறும் உள்நாட்டுப் போரின் விளைவாக யேமன் நாடு, மனிதாபிமான உதவிகள், அத்தியாவசிய சேவைகள், மருந்துகள் ஆகியவற்றின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது.
  • UNICEF: United Nations Children’s Fund.
இரஷியாவில் அதிபர் பதவி காலம் நீட்டிக்க பொதுவாக்கெடுப்பு
  • இரஷிய அதிபர் விளாடிமீர் புதினின் பதவி காலத்தை நீட்டிக்க பொதுவாக்கெடுப்பு (Voting for Constitution Reforms in Russia), ஜூன் 25-அன்று தொடங்கியது, 2020 ஜூலை 1-ந் தேதி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • ரஷியாவில் அதிபரின் பதவிக் காலம், 6 ஆண்டுகள் ஆகும். அந்நாட்டு அரசியல் சாசனப்படி, ஒருவர், 2 முறை மட்டுமே தொடர்ந்து அதிபராக நீடிக்கலாம். 
  • அதன்படி, 2008 வரை, 2 முறை தொடர்ந்து அதிபராக இருந்த, புதின், அதன் பின்னர் பிரதமராக பதவி வகித்தார். அதனைத் தொடர்ந்து 2012-ல் மீண்டும் அதிபர் பொறுப்புக்கு வந்த அவர், 2018 அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, பதவியை தக்க வைத்துக் கொண்டார். அவரது பதவிக் காலம், 2024-ல் முடிகிறது. 
  • அதன் பின்ன்ர் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்த நாட்டின் சட்டத்தில் இடமில்லை.
  • 2024 மற்றும் 2030-ல் நடைபெறும் அதிபர் தேர்தல்களில் புதின் போட்டியிடுவதற்கு ஏதுவாக சட்ட திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேறியது. இதை சட்டமாக்குவதற்கு முன்பு மக்களின் விருப்பத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்திய நிகழ்வுகள்
மகாராஷ்டிராவில் உலகின் மிகப்பெரிய பிளாஸ்மா சிகிச்சை சோதனைத் திட்டம் ‘பிளாட்டினா’ 
  • உலகின் மிகப்பெரிய 'கான்வெலசென்ட் பிளாஸ்மா தெரபி சோதனை திட்டம்' (Convalescent Plasma Therapy Trial project) மகாராஷ்டிரா மாநில அரசினால், ‘பிளாட்டினா’ (Platina) என்ற பெயரில் 2020 ஜூன் 29-அன்று தொடங்கப்பட்டது.
  • இந்த சோதனை திட்டத்திற்காக, மகாராஷ்டிரா மாநில அரசின் 21 கொரானா சிகிச்சை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட COVID-19 நேர்மறை 
  • நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், கொரானா நோயாளிகளுக்கும் 200 மில்லி கான்வெலசென்ட் பிளாஸ்மா இரண்டு டோஸ் வழங்கப்படும்.
PM FME திட்டம் - தொடக்கம் 
  • ஆத்மா நிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக, மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம் (PM FME), 2020 ஜூன் 29-அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தொடங்கிவைத்தார்.
  • ரூ.35000 கோடி முதலீட்டில் இத்திட்டத்தின் கீழ் 9 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8 லட்சம் மைக்ரோ உணவு பதப்படுத்தும் பிரிவுகள் பயனடைகின்றன.
  • PM FME: Formalization of Micro Food Processing Enterprises scheme.
வங்கி ஒழுங்குமுறை திருத்தஅவசரச்சட்டம் - பிறப்பிப்பு
  • இந்திய ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான '2020 வங்கி ஒழுங்குமுறை திருத்த' அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஜூன் 27-அன்று ஒப்புதல் அளித்தார்,
  • 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 58 மாநில கூட்டுறவு வங்கிகள் என மொத்தம் 1,540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர 1949-ஆம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய ஜூன் 24-ந் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 
  • அதன்படி, 1,540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. வகை செய்யும், அவசர சட்டத்தை ஜனாதிபதி இராம்நாத் கோவிந்த் பிறப்பித்து உள்ளார்.
  • வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949-ஐ கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்துமாறு இந்த அவசரச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற வா்த்தக வங்கிகள் மீதான நடவடிக்கைகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கியிடம் ஏற்கெனவே அளிக்கப்பட்ட அதிகாரங்கள் தற்போது கூட்டுறவு வங்கிகளுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் 45 -ஆவது பிரிவு திருத்தமும் முக்கியமானது. அதன்படி, நிதி நிறுவனங்களில் ஏற்படும் இடையூறு தவிா்க்கப்படும். 
  • பொதுமக்கள், டெபாசிட்தாரா்கள் மற்றும் வங்கி அமைப்பின் நலன்களைப் பாதுகாக்கும். 
COVID-19 மருத்துவ மேலாண்மை நெறிமுறை - டெக்ஸாமெதாசோன் சேர்ப்பு
  • COVID-19 நோயாளிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளில் (Clinical Management Protocols COVID-19), டெக்ஸாமெதாசோன் மருந்தை (Dexamethasone), மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலசுகாதார அமைச்சகம் 2020 ஜூன் 27-அன்று சேர்த்துள்ளது. 
  • மெத்தில்ல்பிரெட்னிசோலோன் (Methylprednisolone) மருந்துக்கு மாற்றாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும் COVID-19 நேர்மறை நோயாளிகளுக்கு அல்லது அதிகப்படியான அழற்சி உள்ளவர்களுக்கு மட்டுமே டெக்ஸாமெதாசோன் மருந்து பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
டெல்லியில் அமையும் "இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி" 
  • இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி டெல்லி அரசு அமைக்கிறது. கொரானா நோயாளிகளுக்கு (COVID-19) சிகிச்சையளிக்க, டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த இரண்டு நாட்களில் தலைநகர் டெல்லியில் ‘பிளாஸ்மா வங்கி’ அமைக்கப்படும் என்று 2020 ஜூன் 29-அன்று அறிவித்தார்.
  • புதுடெல்லியில் கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனத்தில் இந்த பிளாஸ்மா வங்கி அமைக்கப்படுகிறது.
  • ILBS: Institute of Liver and Biliary Sciences
STARS-திட்டம் - உலக வங்கி குழு 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க ஒப்புதல் 
  • இந்தியாவில் பள்ளிக்கல்வி முறையின் தரம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தும் STARS-என்ற திட்டத்திற்காக, 2020 ஜூன் 24-அன்று 500 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 3700 கோடி) கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தக் கடன், இராஜஸ்தான், ஒடிசா, கேரளா, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 6 இந்திய மாநிலங்களில் 1.5 மில்லியன் பள்ளிகளில் 10 மில்லியன் ஆசிரியர்களுக்கும் 250 மில்லியன் பள்ளி மாணவர்களுக்கும் பயனளிக்கும்.
  • 1994 முதல் இந்தியா மற்றும் உலக வங்கிக்கு இடையே ஒரு நீண்ட கூட்டாண்மை நிறுவ இந்த திட்டம் உதவியது.
  • STARS Program: Strengthening Teaching-Learning and Results for States Program.
சங்கல்ப பர்வா - மரம் வளர்ப்பு இயக்கம் - தொடக்கம்
  • பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், 2020 ஆம் ஆண்டு ஜூன் 28 முதல் ஜூலை 12 வரை ‘சங்கல்ப் பர்வா’ (Sankalp Parva) என்ற 2 வார கால மரம் வளர்ப்பு பிரச்சார இயக்கத்தை கொண்டாட முடிவு செய்துள்ளதாக மத்திய கலாச்சார அமைச்சகம் 2020 ஜூன் 27 அன்று அறிவித்துள்ளது.
  • COVID-19 தொற்றுநோய் காரணமாக நாடு தழுவிய பொதுமுடக்கத்தின் போது, நாடு ஒரு தூய்மை மற்றும் ஆரோக்கிய சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டி, சங்கல்ப் பர்வா இயக்கத்தின் கீழ், பார்காட், அவ்லா, பெப்பால், அசோக் மற்றும் பெல் ஆகிய 5 வகையான மரங்களை நடவு செய்ய கலாச்சார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்த 5 மரங்களும் நாட்டின் மூலிகை பாரம்பரியத்தை குறிக்கின்றன.
  • சங்கம் பர்வா திட்டம், கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அனைத்து துணை அலுவலகங்கள், கல்விக்கூடங்களுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் வளாகங்களி்ல் செயல்படுத்தப்படவுள்ளது.
பாதுாப்பு/ விண்வெளி
இந்தியா-ஜப்பான் கடல்சார் கூட்டுப் பயிற்சி 
  • இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையும், ஜப்பானின் கடல்சார் பாதுகாப்பு படையும் இணைந்து ஜூன் 27-அன்று கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. 
  • அதில், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா, ஐஎன்எஸ் குலிஷ் ஆகிய போர்க்கப்பல்களும், ஜப்பானின் ஜேஎஸ் கஷிமா, ஜேஎஸ் ஷிமாயுகி ஆகிய கப்பல்களும் இந்தப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன.
ஜூலையில் 06 இரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை
  • பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.58,000 கோடி மதிப்பீட்டில், 36 இரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்காக, பிரான்ஸ்-இந்தியா இடையே 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • இந்த ஒப்பந்தத்தின்படி, இரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் பணியில் பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
  • முதல் கட்டமாக, 06 ரஃபேல் விமானங்கள், வரும் ஜூலை 27-க்குள் இந்தியா வந்தடைய வாய்ப்புள்ளது.
  • முதல் கட்டமாக, இந்தியா வரும் ரஃபேல் விமானங்கள், ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப் படைத் தளத்தில் சோக்கப்படவுள்ளன. இரண்டாம் கட்டமாக வரும் விமானங்கள், மேற்கு வங்கத்தில் உள்ள ஹாஸிமாரா விமானப் படைத் தளத்தில் சோக்கப்படவுள்ளன. இந்த இரு தங்களிலும், ரஃபேல் விமானங்களை நிறுத்துவது, பராமரிப்பது ஆகியவற்றுக்காக ரூ.400 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • பிரான்ஸில் இருந்து வரும் 36 இரஃபேல் விமானங்களில், 30 விமானங்கள் படைப்பிரிவிலும், 6 விமானங்கள் பயிற்சிப் பிரிவிலும் சோக்கப்படும்.
சர்வதேச விண்வெளி மையம் - NASA வீரர்கள் விண்வெளியில் நடைபயணம்
  • லித்தியம் அயன் பேட்டரிகள் மாற்றம்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நிக்கல்ஹைட்ரஜன் பேட்டரிகளுக்கு பதிலாக அதிக சக்தி வாய்ந்த லித்தியம் அயன் பேட்டரிகள் மாற்றப்படும் பணி கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. 
  • இந்த பணியின் போது வீரர்கள் விண்வெளியில் நடைபயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, அமெரிக்க விண்வெளி வீரர்கள் கிறிஸ் கஸ்சிடி, ரோபர்ட் பென்கென் ஆகிய இருவரும் ஜூன் 26-அன்று ஆய்வு மையத்தை விட்டு வெளியே வந்து விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்டு பேட்டரிகளை மாற்றினர்.
  • பேட்டரிகளை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 4 விண்வெளி நடை பயணங்களில் இது முதலாவது என்றும் அடுத்த விண்வெளி நடைபயணம் வருகிற ஜூலை 1-அன்று நடைபெறும் என்றும் அமெரிக்க விண்வெளி அமைப்பு NASA தெரிவித்துள்ளது.
  • விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
சா்வதேச விண்வெளி ஆய்வுத்துறை - இந்தியாவின் பங்களிப்பு 3%
  • சா்வதேச அளவில் விண்வெளி ஆய்வுத் துறையின் பொருளாதார மதிப்பு 300 பில்லியன் டாலா்களாக உள்ளது. அதில், இந்தியாவின் பங்களிப்பு வெறும் 3 சதவீதம் ஆகும்.
  • கொரானா தொற்றின் பரவல் காரணமாக இஸ்ரோவின் செயல்பாடுகள் தடைபட்டுள்ளன. இதன் காரணமாக மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 திட்டம், சந்திரயான்-3 ஆகிய திட்டங்களை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 
  • விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும், அனுமதி அளிப்பதற்கும் மத்திய விண்வெளி ஆய்வுத் துறையின் கீழ் 'இன் ஸ்பேஸ்' (IN-SPACe) என்ற அமைப்பு செயல்படும்.
  • குலசேகரப்பட்டினத்தில் இராக்கெட் ஏவுதளம்: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முக்கிய காரணம் அதன் நில அமைப்பாகும். அங்கிருந்து எளிதாக தென்திசையில் செலுத்த வேண்டிய ராக்கெட்களை விண்ணில் ஏவ முடியும். அங்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என இஸ்ரோ (ISRO) தலைவா் கே.சிவன் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
அரியானா குருகிராமில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
  • இராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது அரியானா மாநிலத்தில் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. 
  • தலைநகர் டெல்லிக்கு மிக அருகில் உள்ள அரியானாவின் குருகிராம் நகரில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. 
  • இதைப்போல் உத்தரப்பிரதேச மாநிலத்தின் எல்லையோர நகரங்களிலும் வெட்டுக்கிளிகள் படையெடுக்க தொடங்கியுள்ளன. அரியானா மற்றும் உத்திர பிரதேசத்தில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கட்டுப்படுத்த ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சிறப்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. 
உலகின் மிக நீளமான மின்னல்
  • பிரேஸிலில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 700 கி.மீ. மின்னல்தான், உலகின் மிக நீளமான மின்னல் என்று ஐ.நா.வின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது. 2019 அக்டேபா் மாதம் 31-ஆம் தேதி பிரேஸிலில் இன்னொரு மின்னல் ஏற்பட்டது. அந்த மின்னலின் நீளம், 700 கி.மீ.க்கும் அதிகமாக இருந்தது. இது, இதற்கு முன்னா் சாதனை படைத்திருந்த மின்னலைவிட இரு மடங்கு அதிக நீளமாகும். இதற்கு முன்னா் அமெரிக்காவில் கடந்த 2007-ஆம் ஆண்டு இந்த சாதனையைப் படைத்திருந்த மின்னல், 321 கி.மீ. நீளமே இருந்தது.
  • 2018 மார்ச் மாதம் 4-ஆம் தேதி, பிரேஸில் மற்றும் ஆா்ஜெண்டீனாவில் மிக நீளமான மின்னல் ஏற்பட்டது. அந்த மின்னல், தொடா்ந்து 16.73 விநாடிகளுக்கு மின்னியது. இதுதான் உலகிலேயே மிக நீண்ட நேரம் மின்னிய மின்னலாகும்.
பொருளாதார/வணிக நிகழ்வுகள்
அப்பல்லோ டயர்ஸ் அப்பல்லோ டயர் உற்பத்தி ஆலை
  • குருகிராம் நகரைத் தலைமையிடமான அப்பல்லோ டயர்ஸ் லிமிடெட் நிறுவனம் (Apollo Tyres), தனது புதிய உற்பத்தி பிரிவை ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில், 2020 ஜூன் 25-அன்று தொடங்கியுள்ளது.
  • ரூ.3,800 கோடி முதலீட்டில் 256 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. உலகளவில், இது அப்பல்லோ டயர் நிறுவனத்தின் 7-வது உற்பத்தி அலகு மற்றும் இந்தியாவில் அமையும் 5-வது அலகு ஆகும்.
தமிழ்நாடு நிகழ்வுகள்
பொது முடக்கம் நீட்டிப்பு
  • தமிழ்நாட்டில் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னை மற்றும் ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் மதுரை மாவட்டத்தில் ஜூலை 5 ஆம் தேதி வரை தற்போதுள்ளபடியே முழுப் பொது முடக்கம் தொடரும் எனவும் இதர மாவட்டங்களில் ஜூலை 1-ஆம் தேதி முதல் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி மருந்துகள் - கொள்முதல்
  • கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் மூலம் 1,200 குப்பிகள் டாசிலிசம்பாப் (400 எம்.ஜி.), 42 ஆயிரத்து 500 குப்பிகள் ரெம்டெசிவிர் (100 எம்.ஜி.) மற்றும் ஒரு லட்சம் குப்பிகள் ஏனாக்ஸாபரின் (40 எம்.ஜி.) விலை உயர்ந்த ஊசி மருந்துகளை வாங்குவதற்கு கொள்முதல் ஆணைகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
MCC கிளப்பின் முதல் பெண் தலைவராகும் "கிளார் கானர்" 
  • இங்கிலாந்து நாட்டின் MCC கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இங்கிலாந்து பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் கிளார் கானர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். 
  • 2021, அக்டோபர் 1 முதல் MCC அமைப்பின் தலைவர் பதவியில் அவர் அமரவுள்ளார். இதன்மூலம் எம்சிசி அமைப்பின் 233 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் தலைவராகவுள்ளார்.
  • கொரானா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைய MCC தலைவர் குமார் சங்கக்காரா அப்பதவியில் மற்றுமொரு 12 மாதம் நீடிக்கவுள்ளார். இவருடைய பதவிக்காலம் 2022, செப்டம்பர் 30 அன்று முடிவடையும். அக்டோபர் 2019-ல், இங்கிலாந்தைச் சேராத முதல் நபராக எம்சிசி தலைவர் ஆனார் சங்கக்காரா ஆவார்.
  • MCC எனப்படும் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (Marylebone Cricket Club) என்பது லண்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற கிரிக்கெட் கிளப் ஆகும்.
முக்கிய நபர்கள்
பேராசிரியா் மு.பி.பாலசுப்பிரமணியன் மறைவு
  • சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வா் பேராசிரியா் மு.பி.பாலசுப்பிரமணியன் (வயது 82) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் ஜூன் 27-அன்று காலமானார். 
  • செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் உறுப்பினா் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கவிஞா் வாணிதாசன் படைப்புகள் குறித்து முதன் முதலில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றவா். மு.பி.பா. கவிதைகள், சீனத்துப்பரணி, தென்பாண்டித் தென்றல், இதழியல் பதிவுகள், திராவிட இயக்கம் வளா்த்த தமிழ் என பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். 
பாதிரியார் ஜோசப் மார் தோமா
  • கேரள மாநிலம் பத்தனம்திட்டா பாதிரியார் ஜோசப் மார் தோமாவின் 90-வது பிறந்த நாள் விழா ஜூன் 27-அன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார். இந்திய அரசியல் சாசனம் நமது வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
முக்கிய தினங்கள்
சர்வதேச வெப்பமண்டல காடுகள் தினம் - ஜூன் 29
  • ஆண்டுதோறும் ஜூன் 29 அன்று சர்வதேச வெப்பமண்டல காடுகள் தினம் (International Day of the Tropics) கடைபிடிக்கப்படுகிறது. உலகில் வெப்பமண்டல வனப்பகுதிகள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சவால்கள், பிரச்சினைகள் குறித்து அனைத்து மட்டங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சர்வதேச வெப்பமண்டல தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
தேசிய புள்ளியியல் தினம் - ஜூன் 29
  • கொல்கத்தா இந்திய புள்ளியியல் நிறுவன பேராசிரியரும் புகழ்பெற்ற புள்ளிவிவர மேதை பி. சி. மஹலானோபிஸ் அவர்களின் பிறந்த தினமான ஜூன் 29 அன்று "தேசிய புள்ளியியல் தினம்" ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 
  • 2020 மையக்கருத்து: SDG- 3 (Ensure healthy lives and promote well-being for all at all ages) & SDG- 5 (Achieve gender equality and empower all women and girls).
சர்வதேச சிறுகோள்கள் தினம் - ஜூன் 30 
  • சர்வதேச சிறுகோள் தினம் (International Asteroid Day), ஜூன் 30-அன்று கடைபிடிக்கப்படுகிறது. சிறுகோளின் தாக்க அபாயத்தைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பூமிக்கு அருகில் விண் பொருள்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து உலக அளவில் எடுக்கப்பட வேண்டிய நெருக்கடி தகவல்தொடர்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக நாடாளுமன்ற தினம் - ஜூன் 30 
  • ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும், ஜூன் 30-ந் தேதி உலக நாடாளுமன்ற தினத்தை (International Day of Parliamentarism) கடைப்பிடிக்கிறது.
  • 1889-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் இண்டர் பார்லிமென்டரி யூனியன் என்னும் உலகம் தழுவிய ஒரு அமைப்பு உலகில் உள்ள நாடாளுமன்றங்களைப் பாதுகாக்கவும், ஜனநாயக மாற்றங்களையும் கொண்டு வருவதற்காகவும் தொடங்கப்பட்டது. 
  • இந்த அமைப்பின் அறிக்கைகளின்படி உலகில் 193 நாடுகளில் நாடாளுமன்ற அமைப்பு இயங்கி வருகிறது. 46,000 மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயகக் கடமையாற்றுகிறார்கள்.
  • நாடாளுமன்ற மாநிலங்களவை & மாநிலங்களவை
  • இந்தியா - 552/245: இந்திய நாட்டு ஜனநாயகம். மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு நாட்டை இயக்கும் இருசக்கரங்களைக் கொண்ட நாடாளுமன்ற அமைப்பு, மக்களவை, மாநிலங்களவை ஆகும். 
  • 552 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவை, இந்தியா முழுவதிலும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் இருந்து தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 
  • அமைப்பாகும். மக்களவையில் பெரும்பான்மையான இடங்களைப்பெறும் கட்சிதான் ஆட்சியமைக்கும்.
  • மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 245 உறுப்பினர்கள், மாநில சட்டசபைகளில் உள்ள உறுப்பினர்களின் பலத்தை அடிப்படையாக வைத்தும், நியமன அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • தமிழ்நாடு - 39/18 : தமிழ்நாட்டில் மக்களவை மூலம் 39 உறுப்பினர்களும், மாநிலங்களவை மூலம் 18 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாநிலங்களவையின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
I Frame View 

Post a Comment (0)
Previous Post Next Post