TNPSC Current Affairs 18-19, June 2020 - Download as PDF

 
சர்வதேச நிகழ்வுகள்
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை அமைப்பில் நிறுவன உறுப்பினரான "இந்தியா"   
  • செயற்கை நுண்ணறிவு தொடர்பான, உலகளாவிய கூட்டாண்மை (GPAI) நிறுவனத்தில் ஒரு நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது. 
  • செயற்கை நுண்ணறிவின் (AI), மனித மையப்படுத்தப்பட்ட வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை ஆதரிக்கும் பொறுப்பு இந்த அமைப்பிற்கு உள்ளது.
  • இதன் மூலம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, நியூசிலாந்து, 
  • கொரியா குடியரசு, மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட முன்னணி பொருளாதாரவள நாடுகளின் கூட்டணியில் இந்தியா இணைந்துள்ளது.
  • பாரிஸில் உள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (OECD) நடத்தப்படும் இரண்டு நிபுணத்துவ மையங்களால் (மாண்ட்ரீல், கனடா) மற்றும் பாரிஸ், பிரான்ஸ்) இந்த GPAI அமைப்பு ஆதரிக்கப்படுகிறது.
  • GPAI: Global Partnership on Artificial Intelligence, OECD: Organization for Economic Cooperation and Development.
ஐ. நா. பாதுகாப்பு சபை 'நிரந்தரமற்ற உறுப்பினரான பதவி பெற்ற இந்தியா'
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவுடன், அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் வெற்றி பெற்றன. 2021-2022 ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களுக்கான தற்போது காலியாக உள்ள 5 நாடுகளுக்கான தேர்தல் ஐ.நா. தலைமையகத்தில் ஜூன் 17-அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆசிய-பசிபிக் பிராந்தியம் சார்பில் இந்தியா போட்டியிட்டது.  192 ஓட்டுகளில் இந்தியா 184 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றது. 
  • ஐ.நா. பாதுகாப்பு குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினராக 1950-1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1984-1985, 1991-1992 மற்றும் 2011-2012 ஆம் ஆண்டுகளிலும், தற்போது 2021-2022 ஆம் ஆண்டுக்கு என இந்தியா 8-ஆவது முறையாக நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி தொடங்கி 2 ஆண்டுகள் இந்த பதவியில் இந்தியா இருக்கும். ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா தற்காலிக உறுப்பினர் ஆவது இது 8-வது தடவை ஆகும்.
  • ஐ.நா. பாதுகாப்பு சபை: ஐக்கிய நாடுகள் சபையின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படுவது பாதுகாப்பு சபை (United Nations Security Council). இது 5 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் என 15 உறுப்பினர்களைக் கொண்டது. 
  • இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளது. இவை தவிர நிரந்தரமற்ற உறுப்பினர்களாக 10 நாடுகள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொதுச் சபை இரண்டு நிரந்தரமற்ற ஐந்து உறுப்பினர்களை இரண்டு ஆண்டு காலத்திற்கு சுழற்சி முறையில் தேர்வு செய்கிறது.
  • ஐ.நா.பாதுகாப்பு சபை தலைவர் பதவி பெறும் இந்தியா: ஐ.நா.பாதுகாப்பு சபையின் தலைவர் பதவி (UNSC President), ஒவ்வொரு மாதமும் 15 உறுப்பு நாடுகளில் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில், இந்தியா ஐ.நா.பாதுகாப்புக் சபையின் தலைவர் பதவியை 2021 ஆகஸ்ட் மாதத்திலும், மீண்டும் 2022 ஆம் ஆண்டில் ஒரு மாதமும் வகிக்கவுள்ளது.  
இந்தியா-சீனா - கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம் - சில தகவல்கள்
  • இந்திய-சீன ராணுவ வீரர்கள் சண்டையிட்ட இடம் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு ஆகும். 
  • அங்குள்ள கல்வான் ஆற்றின் பெயரை கொண்டு தான் இந்த பகுதி அழைக்கப்படுகிறது. இந்த பகுதி இந்தியா-சீனா இடையே வரையறுக்கப்படாத எல்லை கோட்டில் உள்ளது. 
  • கடந்த 1950-ம் ஆண்டு வரை சீனா, கல்வான் ஆறு வரை தனது நாட்டின் எல்லை இருப்பதாக சொல்லி வந்தது.
  • ஆனால் 1956-ம் ஆண்டு முதல் கல்வான் ஆறும், அதனை ஒட்டியுள்ள மலைப்பகுதியும் தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை கல்வான் ஆறு மற்றும் சீனா வசப்படுத்தி உள்ள அக்சய் சின் பகுதி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கூறி வருகிறது. அக்சய்சின் பகுதி தற்போது சீனா வசம் இருந்தாலும், அது இந்தியாவின் ஒரு பகுதியாக தான் இருந்தது.
  • கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள கல்வான் ஆற்றை முதன் முதலில் 1889-ம் ஆண்டு கண்டறிந்தவர் லடாக் பகுதியை சேர்ந்த குலாம் ரசூல் கல்வான். 
  • ஆயுதங்களைப் பயன்படுத்தாத நடைமுறை: "எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அனைத்துப் படையினரும் எப்போதும் ஆயுதம் வைத்திருப்பார்கள். ஜூன் 15-ஆம் தேதி கல்வானிலும் படை வீரர்கள் ஆயுதம் வைத்திருந்தனர். மோதலின்போது துப்பாக்கி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது நீண்டகாலமாக (1996 மற்றும் 2005 ஒப்பந்தங்களின்படி) கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை." என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
  • லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15, 16-இல் இந்தியா - சீனா ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். 
இந்திய நிகழ்வுகள்
41 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஏலம் - குறிப்புகள்
  • இந்தியாவில் 41 நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் நிகழ்ச்சி ஜூன் 18-அன்று தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்றார். இந்நிகழ்வில் பிரதமர் தெரிவித்த குறிப்புகள்:
  • பல ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி துறையை அதில் இருந்து வெளியே கொண்டு வந்து இருக்கிறோம். இந்த சீர்திருத்த நடவடிக்கையின் மூலம் நிலக்கரி உற்பத்தியும், நிலக்கரி துறையும் தன்னிறைவை பெறும். 
  • இயற்கை வளங்களும், சுரங்க தொழிலும் நமது பொருளாதாரத்தின் முக்கியமான தூண்கள் ஆகும்.
  • இந்தியாவில் நிலக்கரி வளம்: உலகில் நிலக்கரி வளத்தில் இந்தியா 4-வது இடத்திலும், உற்பத்தியில் 2-வது இடத்திலும் உள்ளது. ஆனால் நாம் நிலக்கரியை ஏற்றுமதி செய்யவில்லை. ஆனால் உலகிலேயே அதிகமாக நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
  • அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் நிலக்கரி சுரங்க தொழிலில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்கள் மூலம் மாநில அரசுகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும்.
சுரங்க, கனிமத்துறை ஆத்மநிர்பர் பாரத் திட்டத்திற்கான "சத்யபாமா வலைத்தளம்"
  • சுரங்க மற்றும் கனிமத்துறையில் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்திற்கான சத்யபாமா (SATYABHAMA Portal) என்ற வலைத்தளம் தொடங்கப்பட்டது. இதை மத்திய சுரங்க மற்றும் நிலக்கரி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தொடங்கிவைத்தார். இந்த வலைத்தளத்தை research.mines.gov.in என்ற இணைய முகவரியில் அணுகலாம்.
  • இந்த வலைத்தளம் மூலம், சுரங்க மற்றும் கனிமத் துறையில் தரமான மற்றும் புதுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களையும் விஞ்ஞானிகளையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது..
  • SATYABHAMA: Science and Technology Yojana for AtmaNirbhar Bharat in Mining Advancement.
சாலையோர வியாபாரிகளுக்கு "SIDBI" மூலம் சிறப்பு மைக்ரோ-கடன்கள் திட்டம்
  • ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் 2020 ஜூன் 19-அன்று, லக்னோவை தளமாகக் கொண்ட "SIDBI" என்ற சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி மூலம் சிறப்பு மைக்ரோ-கடன்களை (Special Micro-Credit Facility) வழங்கவுள்ளது. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
விருதுகள்
சிறப்பு ஜூரி விருது வென்ற ‘மார்டியாபுரா ரீ ஜமராஜ்’ குறும்படம்
  • ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தின் அங்குஷ்பூர் கிராமத்தைச் சேர்ந்த குழுவினர் தயாரித்த குறும்படம் ‘மார்டியாபுரா ரீ ஜமராஜ்’ (Yamaraj on earth) ஆகும். இப்படம் இணையதளம் மூலம் நடத்தப்பட்ட 2020 கோவிட்-19 சர்வதேச திரைப்பட விழாவில் (COVID-19 International Film Festival 2020), சிறப்பு ஜூரி விருதை வென்றுள்ளது.
  • ஸ்டிதாதி ராத் (Stitadhi Rath) என்பவர் ஒடியா மொழியில் இயக்கிய இந்த 13 நிமிட குறும்படம், கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது.  
கொரானா நிகழ்வுகள்
டெல்லியில் 'மிகப்பெரிய கொரானா பராமரிப்பு மையம்'
  • டெல்லியில் உள்ள இராதா சோமி ஸ்பிரிசுவா மையத்தை, கொரானா நோயாளிகளின் பராமரிப்பு வசதி மையமாக (Largest COVID-19 facility) மாற்ற டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இந்த மையம் 22 கால்பந்து மைதானங்களின் பரப்பளவு கொண்டது. 
  • இந்த மையம் உலகின் மிகப்பெரிய COVID-19 பராமரிப்பு வசதிகளை கொண்டிருக்கும். 10,000 படுக்கைகள் கொண்ட 200-க்கும் மேற்பட்ட அரங்குகளை இம்மையம் கொண்டுள்ளது.
இந்தியாவின் முதல் நடமாடும் கொரானா ஆய்வகம் - தொடக்கம்
  • இந்தியாவின் முதல் நடமாடும் கொரானா ஆய்வகத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் ஜூன் 18-அன்று தொடக்கி வைத்தார்.
  • நாட்டில் போக்குவரத்து வசதியே இல்லாத, கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ள இந்த நடமாடும் கரோனா ஆய்வகங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 
  • தினந்தோறும் இந்த நடமாடும் ஆய்வகத்தின் மூலம் 25 RT-PCR பரிசோதனைகளும், 300 ELISA பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • 2020 பிப்ரவரி மாதம் நாட்டில் முதல் கொரானா ஆய்வகம் தொடக்கி வைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 953 கரோனா பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. இதில் 699 பரிசோதனைக் கூடங்கள் அரசு பரிசோதனைக் கூடங்களாகும்.
  • RT-PCR: Reverse Transcription Polymerase Chain Reaction.
'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்களால் வைரஸ் தொற்று அதிகம் பரவல் - நிதி ஆயோக் 
  • புலம் பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்களால் 'நிதி ஆயோக்' கண்காணிப்பில் இருக்கும், 98 மாவட்டங்களில், கொரானா வைரஸ் தொற்று அதிகம் பரவியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.நாட்டில், கல்வி, தொழில், சுகாதாரம், வேலை வாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பின்தங்கிய, 112 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை முன்னேற்றும் நடவடிக்கைகள், நிதி ஆயோக் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
பொருளாதார நிகழ்வுகள்
150 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதல் இந்திய நிறுவனம் - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
  • ரூபாய் காலத்தில், மும்பையைச் சேர்ந்த இந்திய பன்னாட்டு நிறுவன நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL), ஜூன் 19-அன்று பங்குச் சந்தை உயர்வைத் தொடர்ந்து 150 பில்லியன் அமெரிக்க டாலர் (USD 150 Billion) மதிப்பை பெற்றது. இந்த அளவிற்கு சந்தை மதிப்பை அடைந்த முதல் இந்திய நிறுவனம் என்ற சிறப்பை RIL பெற்றது. 150 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் ரூ.11 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
  • RIL: Reliance Industries Limited.
ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியின் ‘சுரக்ஷ சம்பள கணக்கு’ 
  • இந்திய கொடுப்பனவு வங்கியான ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி (Airtel Payments Bank), சமீபத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME), 'சூரக்சா சம்பளக் கணக்கு' (Suraksha Salary Account) என்ற சம்பள கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக்கணக்கு மூலம் MSME மற்றும் பிற நிறுவனங்களுக்கு ரொக்கமில்லா பணப்பரிவரத்தனையை மேற்கொள்ள உதவும்.
2020 மே மாத ஆண்டு பணவீக்க விகிதம் -3.21%
  • மத்திய கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) சமீபத்திய அறிவிப்பின்படி, மாதாந்திர மொத்த விலைக் குறியீட்டை (Wholesale Price Index) அடிப்படையாகக் கொண்ட ஆண்டு பணவீக்க விகிதம், 2020 மே மாதத்தில் 3.21% ஆக சுருங்கியது.
  • அதாவது 2020 மே மாதத்தில் ஆண்டு பணவீக்க விகிதம் -3.21% ஆகும். 
  • நாடு முழுவதும் ஊரடங்கால் மொத்த விலைக் குறியீட்டு (WPI) தரவை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதை அரசாங்கம் நிறுத்தியது. எனவே மே மாதத்தின் தற்காலிக புள்ளிவிவரங்கள் மார்ச் மாத இறுதி புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.  
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
இயற்கை அழிக்கப்படுவதால் உரவாகும் கொள்ளை நோய்கள் - WWF அறிக்கை
  • உலக நாடுகளின் அரசுகள், நிறுவனங்கள், தனி நபா்களின் உதவியுடன் உலகின் மிகப் பெரிய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான உலக வனவாழ்வு நிதியம் (World Wide Fund for Nature) ஆகும். இவ்வமைப்பு சுவிடா்லாந்தின் கிளைன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. உலக வனவாழ்வு நிதியம் (WWF) கொள்ளை நோய்கள் குறித்த தனது அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய விவரங்கள்: 
  • இயற்கையை மனிதா்கள் அழிப்பதாலேயே கொரானா நோய்த்தொற்று (COVID-19) போன்ற கொள்ளை நோய்ககள் உருவாகின்றன 
  • கடந்த 30 ஆண்டுகளில் உருவான புதிய நோய்த்தொற்றுகளில் 60 முதல் 70 சதவீதம் வரையிலானவை, வன விலங்குகளிடமிருந்து உருமாற்றம் பெற்று மனிதா்களுக்குப் பரவிய வைரஸ்களால் ஏற்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு ஆண்டும் வன விலங்களிடமிருந்து புதிய புதிய தீநுண்மிகள் மனிதா்களிடம் தொற்று உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. HIV (AIDS), சார்ஸ், தற்போது பரவி வரும் கொவைட்-19 போன்ற தீநுண்மிகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன.
  • இனி வரும் காலங்களில், அதிகரித்து வரும் உணவுத் தேவையை ஈடு செய்யும் வகையில் விவசாயத்துக்காக காடுகள் அழிக்கப்பட்டுவதும் அதிகரிக்கும். இதன் காரணமாக, வன விலங்குகளிடமிருந்து கொள்ளை நோய்கள் மனிதா்களுக்குப் பரவும் அபாயமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகியுள்ளது.
  • பாதுகாப்பற்ற முறையில், இறைச்சிக்காக வன விலங்குகள் விற்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதும் இந்த அபாயத்தை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம்
மறைமுக வரி & சுங்க வாரிய அலுவலகங்களில் ‘இ-ஆபிஸ்’ பயன்பாடு அறிமுகம்
  • மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC), 500-க்கும் மேற்பட்ட GST மற்றும் சுங்க அலுவலகங்களில் ‘இ-ஆபிஸ்’  (e-Office) என்ற இணையப் பயன்பாட்டு விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயன்பாட்டை தேசிய தகவல் மையம் (NIC) உருவாக்கியுள்ளது.
  • இது கோப்புகளைக் கையாளும் உள் செயல்முறைகளின் தன்னியக்கம் மற்றும் மின்-நிர்வாக ஆளுமையை மேம்படுத்த உதவும். 50000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த விண்ணப்பத்தைப் பயன்படுத்துவார்கள்.
  • CBIC: Central Board of Indirect Taxes and Customs.
தமிழ்நாடு நிகழ்வுகள்
பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இணையப் பயிற்சி - தொடக்கம்
  • கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 'நீட்' (NEET) எனப்படும் மருத்துவ தேர்வுக்கு தயாராகும் விதமாக இலவச இணையதள பயிற்சி வகுப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 17-அன்று தொடங்கி வைத்தார். 
  • ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம் 412 சிறப்பு மையங்களில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு இந்த பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. ‘இ-பாக்ஸ்‘ என்ற நிறுவனம் இந்தப் பயிற்சியை நடத்துகிறது.
விளையாட்டு நிகழ்வுகள்
பத்மஸ்ரீ விருதுக்கு ஐ.எம் விஜயன் பரிந்துரை 
  • அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சமீபத்தில் முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் ஐ.எம்.விஜயனை (IM Vijayan), இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைத்தது.
  • ஐ..எம். விஜயன் 79 போட்டிகளில் 40 கோல்களை அடித்துள்ளார். 2003-இல் அர்ஜுனா விருதை வென்றார். மேலும், 1993, 1997 மற்றும் 1999-ஆண்டுகளில் அவருக்கு “ஆண்டின் சிறந்த வீரர்” விருது வழங்கப்பட்டது. 
100 மீட்டர் உலக சாம்பியன் "கிறிஸ்டியன் கோல்மேன்" - இடைநீக்கம்
  • 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • அதிவேக மனிதர்: 2019 தோகா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மேன் தங்கப்பதக்கத்தை 
  • வென்று சாதனை படைத்தார். 9.76 வினாடிகளில் இலக்கை எட்டிய அவரே உலகின் அதிவேக மனிதராக அழைக்கப்படுகிறார்.
பன்டெஸ்லிகா கால்பந்து 2020: பேயர்ன் முனிச் அணி ‘சாம்பியன்’
  • 18 கிளப் அணிகள் பங்கேற்ற 2020 பன்டெஸ்லிகா கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெர்டர் அணியை தோற்கடித்து மீண்டும் ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
முக்கிய தினங்கள்
ஆட்டிஸ்டிக் பெருமை  தினம் (Autistic Pride Day) - ஜூன் 18

நிலையான சுவையுணவுக்கலை தினம் - ஜூன் 18
  • ஆண்டுதோறும் நிலையான சுவையுணவுக்கலை தினம்  (Sustainable Gastronomy Day) ஜூன் 18 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • உள்ளூர் உணவு வகைகள் தினம்: காஸ்ட்ரோனமி (Gastronomy) சில நேரங்களில் உணவின் கலை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் சமையல் பாணியை மற்றும் உள்ளூர் உணவு மற்றும் உணவு வகைகளை குறிக்கிறது.
மோதலில் பாலியல் வன்முறை-அகற்றுவதற்கான சர்வதேச தினம் - ஜூன் 19 
  • ஆண்டுதோறும் ஜூன் 19 அன்று மோதலில் பாலியல் வன்முறை-அகற்றுவதற்கான சர்வதேச தினம் (International Day for the Elimination of Sexual Violence in Conflict) கடைபிடிக்கப்படுகிறது. 
முக்கிய நபர்கள்
கியுகி டிஜிட்டல் மீடியா இணை நிறுவன - சமீர் பங்காரா - காலமானார்
  • டிஜிட்டல் மியூசிக் பிளாட்பார்ம் கியுகி டிஜிட்டல் மீடியாவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி சமீர் பங்காரா (samir Bangara), சமீபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி அண்மையில் காலமானார்.
  • ஸ்டார்ட்-அப் நிறுவனமான கியுகியில் சேருவதற்கு முன்பு டிஸ்னி இந்தியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக சமீர் பங்காரா பணியாற்றினார்.
Post a Comment (0)
Previous Post Next Post