TNPSC Current Affairs May 14, 2020 - Download as PDF

Current Affairs and GK Today May 14, 2020 - Download as PDF
இந்திய நிகழ்வுகள்
தேசிய மாதிரி பதிவு முறை (SRS) 2018
  • பிறப்பு, இறப்பு மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதங்கள் 
  • இந்திய பதிவாளர் ஜெனரல், 2018-ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மாதிரி பதிவு முறை (Sample Registration System-2018) அறிக்கையை 2020 மே 10, அன்று வெளியிட்டார். 
  • மாதிரி பதிவு முறை (SRS) என்பது தேசிய மற்றும் மாநில அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR), பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் பிற  குறிகாட்டிகளை கொண்டு குறிப்பிட்ட ஆண்டுக்கான மதிப்பீடுகளை பெறுவதற்கான ஒரு பெரிய அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.
  • தற்போதைய மாதிரி 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் (SRS) மாதிரி மாற்றப்படுகிறது.
  • மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு விகிதங்களுக்கு இந்த மாதிரிகள் கணக்கிடப்பட்டுள்ளன.
  • தேசிய அளவில் குழந்தை குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) 32 ஆகவும், பெரிய மாநிலங்களில் கேரள மாநிலம் குறைந்த IMR (7) கொண்டதாகவும், மத்தியப்பிரதேச மாநிலம் அதிக IMR (48) கொண்டதாகவும் உள்ளது.
  • தேசிய அளவில் பிறப்பு விகிதம் 20 ஆகவும், இறப்பு விகிதம் 6.2 ஆகவும் உள்ளது. புள்ளி விவரங்கள் இந்திய சராசரி, கிராமம், நகரம் மற்றும் சிறப்பான, மோசமான செயல்பாடுகளைக் கொண்ட 3 மாநிலங்கள் என தரப்பட்டுள்ளது.
TNPSC Current Affairs May 14, 2020 - Download as PDF
  • IMR ஐ.நா. நிலையான அபிவிருத்தி இலக்குகளை எட்டிய கேரள மாநிலம் 
  • ஒற்றை இலக்கத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் (7) கொண்ட ஒரே மாநிலம் என்ற சிறப்பை கேரள மாநிலம் பெற்றுள்ளது. கேரளா, 1000 குழந்தைகளுக்கு/ 7 குழந்தைகள் என்ற விகிதத்தை பெற்றுள்ளது. 
  • குழந்தைகள் இறப்பு விகிதக் குறைப்புக்கான (IMR reduction) ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDG) எட்டிய ஒரே மாநிலம் கேரளா ஆகும். ஐ.நா. 2020-ஆம் ஆண்டில் குழந்தைகள் இறப்பு விகிதத்தை ஒற்றை இலக்கில் நிர்ணயித்திருந்தது. 
  • IMR: Infant Mortality Rate, SRS: Sample Registration System, SDG: Sustainable Development Goals.
செரோ கணக்கெடுப்பு - சிறு தகவல்
  • கொரானா தொற்றுநோயை ஏற்படுத்தும் 'SARS-CoV-2' வைரஸின் பரவலைக் கண்காணிக்கும் நோக்கத்துடன் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் தொகை அடிப்படையிலான 'செரோ கணக்கெடுப்பு' (Sero survey) நடத்த சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • செரோ-கணக்கெடுப்பு என்பது: ஒரு செரோ-கணக்கெடுப்பு தனிநபர்களின் குழுவின் இரத்த சீரம் பரிசோதனையை உள்ளடக்கியது, மேலும் இது மாவட்ட அளவில் கொரோனா வைரஸ் அல்லது SARS-COV-2 நோய்த்தொற்றின் பரவலான போக்குகளைக் கண்காணிக்கப் பயன்படும்.
  • இந்த கண்காணிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் நோய்களுக்கான தேசிய மையம் (NCDC) மற்றும் மாநில சுகாதார துறைகளுடன் இணைந்து நடத்துகின்றன.
  • NCDC: National Centre for Disease Control. 
துணை ராணுவ கேன்டீன்களில் உள்நாட்டு பொருட்களை மட்டும் விற்க முடிவு
  • இந்தியாவில் துணை ராணுவத்தினருக்காக செயல்படும் கேன்டீன்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் அமலுக்கு இந்தமுறை அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 10 லட்சம் துணை ராணுவப்படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 50 லட்சம் பேர் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவார்கள்.
  • துணை ராணுவப்படையில் CRPF, BSF, CISF, IDBB, SSB, NSG மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் அடங்குவார்கள். இவர்களுக்காக செயல்படும் கேன்டீன்களில் ஆண்டுதோறும் 2 ,800 கோடி அளவுக்கு விற்பனை நடக்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் 4G இணையச்சேவை வழங்குவது குறித்து ஆராய உயா்நிலைக் குழு - உச்சநீதிமன்றம் உத்தரவு
  • ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் 4G இணையச் சேவையை மீண்டும் வழங்குவது குறித்து ஆராய்வதற்கு மத்திய உள்துறைச் செயலா் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • தேசப் பாதுகாப்புக்கு முக்கியத்தும் அளிக்கும் அதே நேரத்தில் மனித உரிமைகளுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் கல்வி அமைச்சா் பூபேந்திர சிங்கின் தேர்தல் வெற்றி செல்லாது - உயா்நீதிமன்றம் தீர்ப்பு
  • குஜராத் மாநில கல்வி மற்றும் சட்டத்துறைகளின் அமைச்சா் பூபேந்திர சிங் சூடாசமா, 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோதலில் பெற்ற வெற்றி செல்லாது என்று மாநில உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
  • குஜராத்தில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோதலில் பா.ஜ.க. சார்பில் தோல்கா தொகுதியில் போட்டியிட்ட சூடாசமா, 327 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் அஷ்வின் ரத்தோடை தோற்கடித்தார். 
பாதுகாப்பு/ விண்வெளி
சீனா விண்ணில் செலுத்திய 2 செயற்கைகோள்கள் 
  • விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை ஆராய்வதற்காக சீனா, வடமேற்கு மாகாணம் கான்சுவில் உள்ள ஜியாகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து, ஜிங்யூன்-2 01, ஜிங்யூன்-2 02 ஆகிய 2 செயற்கைகோள் குய்சோ-1ஏ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. இந்த 2 செயற்கைகோள்களும் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 
மாநாடுகள்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்-2020
  • கொரோனா தொற்று குறித்து விவாதிப்பதற்காக, ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளை சேர்ந்த (SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம், காணெலி காட்சிமுறையில் மே 13-அன்று நடைபெற்றது. ரஷிய வெளியுறவு அமைச்சா் சொகே லாவ்ரோவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உச்சிமாநாடு (SCO summit) 2020 ஜூலை மாதம் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. 
  • ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் உள்ளன.
  • 2005-ஆம் ஆண்டிலிருந்து பார்வையாளராக இருந்து வந்த இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் 2017-இல் உறுப்பு நாடாக இணைந்தன. 
  • SCO: Shanghai Cooperation Organisation.
அறிவியல் தொழில்நுடபம்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் 'CHAMPIONS' இணையதளம் 
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் சாம்பியன்ஸ் என்ற இணையதளம் (www.Champions.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் கையாளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் இணையதளமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • CHAMPIONS: Creation and Harmonious Application of Modern Processes for Increasing the Output and National Strength.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
13,000 டன் ஸ்டைரீன் வாயு - தென்கொரியாவி்ற்கு அனுப்பி வைப்பு
  • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஸ்டைரீன் என்ற விஷவாயு கசிவால் மே 7-அன்று ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்ததையடுத்து, விபத்து ஏற்பட்ட எல்.ஜி.பாலிமா்ஸ் ரசாயன ஆலையில் இருந்து 13,000 டன் ஸ்டைரீன் வாயு, அந்த ஆலையின் தலைமையகம் உள்ள தென்கொரிய தலைநகா் சியோலுக்கு இரண்டு கடட்ங்களாக அனுப்பிவைக்கப்படுகிறது.
  • எல்.ஜி.பாலிமா்ஸ் ரசாயன ஆலையில் இருந்து கசிந்த விஷவாயுவின் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்த, குஜராத் மாநிலம் முந்த்ராவில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு இந்திய விமானப் படை விமானம் 8.3 டன் ரசாயனங்களை ஏற்றி வந்ததாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
ஜூன் மாத இலவச ரேஷன் பொருள் - ரூ.219 கோடி ஒதுக்கீடு
  • தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு 17-ந் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக கடந்த 2-ந் தேதியன்று முதல்-அமைச்சர் அறிவித்தார். ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால், ஜூன் மாதத்துக்கும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
  • இந்த அறிவிப்பு தொடர்பாக அரசுக்கு சிவில் சப்ளைஸ் மேலாண்மை இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு 17-ந் தேதிவரை அமலில் உள்ளதால் 2020 ஜூன் மாதத்துக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்க ரூ.219.14 கோடி தொகையை அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 
'ரெம்டெசிவிர்' மருந்துகள்  - சோதனை முயற்சி
  • தமிழகத்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனை ஆகியவற்றில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சோதனை முயற்சியாக அவா்களின் அனுமதி பெற்று 'ரெம்டெசிவிர்' மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • 'ரெம்டெசிவிர்' என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை அமெரிக்கா ஜப்பான் நாடுகள் ஏற்றுக்கொண்டு அத்தகைய சிகிச்சைகளை அளித்து வருகின்றன. 
விளையாட்டு நிகழ்வுகள்
பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி-2021 (இந்தியா)
  • சர்வதேச கால்பந்து சம்மேளனம் (fifa) சார்பில் 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) நவம்பர் மாதம் இந்தியாவில் 5 நகரங்களில் 2021 பிப்ரவரி 17-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை நடக்கிறது.
  • இந்தியாவில் முதல்முறையாக நடக்கும் இந்த கால்பந்து திருவிழாவில் இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்-2021 (நியூசிலாந்து)
  • 12-வது பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்து நாட்டில் 2021 பிப்ரவரி 6-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து அணியும் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 3 அணிகள் தகுதிச்சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன.
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் - பாபர் அஸாம் 
  • பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அஸாம் நியமிக்கப்பட்டுள்ளார். 2020-21 சீஸனுக்கான கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். 25 வயது பாபர் அஸாம் 26 டெஸ்டுகள், 74 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 'டெண்டுல்கர்+கங்குலி' ஜோடி
  • சர்வதேச கிரிக்கெட் அமைப்பு அண்மையில் சுட்டுரை மூலம் தகவலை வெளியிட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் + செளரவ் கங்குலி இணைந்த ஜோடி 8000-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளதாகவும் வேறு எந்த ஜோடியும் ஒருநாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கூட கடந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளது. 
    1. டெண்டுல்கர் + கங்குலி கூட்டணி - 176 போட்டிகள்
    2. ரன்கள் - 8,227 ரன்கள்
    3. சராசரி - 47.55 ரன்கள்
முக்கிய நபர்கள்
டேபிள் டென்னிஸ் வீரர் - மன்மீத் சிங்
  • டேபிள் டென்னிஸ் முன்னாள் சாம்பியன் மன்மீத் சிங் (வயது 58) கனடாவின் மாண்ட்ரியலில் காலமானார். ஏமையோட்ராபிக் லேட்டரல் ஸ்க்ளிரோசிஸ் (amyotrophic lateral sclerosis) என்கிற நரம்புக் கோளாறு நோயால் மன்மீத் சிங் அவதிப்பட்டு வந்தார். (உலகின் தலைசிறந்த அறிவியலாளரான மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கும் இதே நோயால் இளமைப் பருவத்தில் பாதிக்கப்பட்டார்.)
  • தேசிய ஜூனியர் சாம்பியன், தேசிய தேசிய சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள மன்மீத் சிங் 1980களில் இந்தியாவின் மிகச்சிறந்த டேபிள் டென்னிஸ் வீரராக விளங்கினார். 
முக்கிய தினங்கள்
மே 13 - மாநிலங்களவை முதல் கூட்டம் நடந்த தினம் 
  • 68 ஆண்டுகளுக்கு முன்பு 1952-ம் ஆண்டு மே 13-ந் தேதியன்று நாடாளுமன்ற மாநிலங்களவையின் முதல் கூட்டம் நடந்தது. 
  • இந்தியாவில் மாநிலங்களவை (Council of States) அல்லது ராஜ்ய சபா (Rajya Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தில் அதிகபட்சம் 250 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ஆகும். தற்போது மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். 
  • மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார்.
  • மாநிலங்களவையின் தற்போதைய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்திய துணை குடியரசுத் தலைவரான வெங்கய்யா நாயுடு பொறுப்பேற்றுள்ளார். 2017 ஆகஸ்டு 9-முதல் பதவியேற்றுள்ளார்.
  • மாநிலங்களின் கவுன்சில் என்றும் அழைக்கப்படும் மாநிலங்களவையை 
  • இதுவரை அங்கு 5,472 அமர்வுகள் நடந்து 3,837 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் நாடாளுமன்றம் முடிவுக்கு வந்தாலும், மாநிலங்களவை தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும்.
    • நாடாளுமன்ற மேலவை - (மாநிலங்களவை/இராஜ்ய சபா)
    • ஆட்சிக்காலம் - 6 ஆண்டுகள்
    • உறுப்பினர்கள் - 245 (தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 233 + 12 நியமன உறுப்பினர்கள்)
    • மாநிலங்களவைத் தலைவர், (இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்) - எம். வெங்கையா நாயுடு (பா.ஜ.க) 
    • துணை அவைத்தலைவர் - ஹரிவன்ஷ் நாராயண் சிங் (ஐ.ஜ.த) 
    • ஆளுங்கட்சித் தலைவர் - தவார் சந்த் கெலாட் (பா.ஜ.க)  
    • எதிர்க்கட்சித் தலைவர் - குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்) 
  • செயல்திறன்: மாநிலங்களவையின் செயல்திறன் தொடா்ந்து குறைந்து வருகிறது. 1952 முதல் 1997 வரை செயல்திறன் 100 சதவீதத்துக்கு மேல் இருந்தது. அது 1998 முதல் 2004 வரை 87 சதவீதமாகவும் 2005 முதல் 2014 வரை 71 சதவீதமாகவும் 2014 முதல் 2019 வரை 61 சதவீதமாகவும் குறைந்தது.
Download this article as PDF Format
Previous Post Next Post