TNPSC Current Affairs May 12-13, 2020 - Download as PDF

Current Affairs and GK Today May 12, 2020 and May 13, 2020- Download as PDF


TNPSC Current Affairs May 2020 - Download as PDF
TNPSC Current Affairs May 12-13, 2020 - Download as PDF
சர்வதேச நிகழ்வுகள்
உலக நர்சிங் அறிக்கை 2020 - சில குறிப்புகள்
  • உலக சுகாதார அமைப்பு, நர்சிங் நவ் பிரச்சார அமைப்பு மற்றும் சர்வதேச செவிலியர் கவுன்சில் ஆகியவை இணைந்து உலக நர்சிங் அறிக்கையை (World’s Nursing Report 2020) வெளியிட்டன.
  • Year of Nurse and Midwife-2020
    • ஐக்கிய நாடுகள் சபை 2020 செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆண்டாக அறிவித்துள்ளதன் பின்னணியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • உலகின் பல்வேறு பகுதிகளில் மாறுபாடுகள் உள்ள போதிலும் 10,000 பேருக்கு 36.9 செவிலியர்கள் உள்ளனர்.
    • அமெரிக்காவில், 10,000 பேருக்கு 83.4 செவிலியர்களும், ஆப்பிரிக்காவில் 10,000 பேருக்கு 8.7 செவிலியர்களும் உள்ளனர்.
  • இந்தியாவில் செவிலியர்கள்
    • இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 1.56 மில்லியன் செவிலியர்கள் உள்ளனர். இருப்பினும், இந்த செவிலியர்களில், தொழில்முறை செவிலியர்கள் 67% ஆவர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 322,827 செவிலியர்கள் பட்டம் பெறுகிறார்கள்.
    • இந்தியாவில் மருத்துவ ஊழியர்களில் 47% செவிலியர்கள், மருத்துவர்கள் 23.3%, பல் மருத்துவர்கள் 5.5%, மருந்தாளுநர்கள் 24.1% ஆவர்.
    • இந்தியாவில் 1,000 பேருக்கு 1.7 செவிலியர்கள் உள்ளனர், இது உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை விட 43% குறைவு (1,000 பேருக்கு 3 செவிலியர்கள்) ஆகும்.
கொரோனா பாதிப்பு - 90 நாடுகளுக்கு இந்தியா மருத்துவ பொருட்கள் உதவி 
  • கொரோனா பாதிப்புகளில் இருந்து மீள, 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, 120 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உதவிகளை வழங்க, இந்தியா திட்டமிட்டுள்ளது. மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், ஆர்மேனியா, தஜிகிஸ்தான், உக்ரைன் உள்ளிட்ட 29 நாடுகளுக்கு, INS கேசரி போர் கப்பலில் 28 கோடி ரூபாய் மதிப்பிலான 5,600 டன் மருத்துவ பொருட்கள் சென்று சேர்ந்துள்ளன.
  • 67 நாடுகளுக்கு, ஒரு கோடி ‛ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவை சேர்ந்த 16 நாடுகள் உதவி கோரியுள்ளன. 
இந்திய நிகழ்வுகள்
DHRUVS -  புற ஊதா அடிப்படையிலான சுத்திகரிப்பான்
  • ஐதராபாத்தை தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (DRDO), இமரத் ஆராய்ச்சி மையம் (RCI), பாதுகாப்பு ஆராய்ச்சி புற ஊதா சுத்திகரிப்பானை (DHRUVS) உருவாக்கியுள்ளது.
  • இந்த DHRUVS என்று பெயரிடப்பட்டுள்ள புற ஊதா சுத்திகரிப்பானை கொண்டு, மொபைல் போன்கள், மடிக்கணினிகள், ஐபாட்கள், பாஸ்புக்குகள், சல்லன்கள் மற்றும் காகிதங்களை சுத்தப்படுத்த முடியும்.
  • நாணயத்தாள்களை சுத்தப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம். பெட்டகத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு புற ஊதா கதிர்களின் 360 டிகிரி வெளிப்பாட்டை பயன்படுத்தி தூய்மை செய்யலாம்.
  • DHRUVS: Defence Research Ultraviolet Sanitizer.
பயிர்களில் காசநோய் மருந்துகளை பயன்படுத்த தடை - மத்திய குழு பரிந்துரை 
  • மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவுக் குழுவின் (CIBRC) கீழ் அமைக்கப்பட்ட பதிவுக் குழு, காசநோய் மருந்துகளான ஸ்ட்ரெப்டோமைசின் மற்றும் டெட்ராசைக்ளின் போன்றவற்றை பயிர்களுக்கு முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
  • 2020 மே 1 அன்று பதிவுக் குழுவின் துணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 9% மற்றும் டெட்ராசைக்ளின் ஹைட்ரோகுளோரைடு 1% பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது. டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாபில் இந்த மருந்துகள் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டன
  • CIBRC அமைப்பு, எட்டு பயிர்களில் ஸ்ட்ரெப்டோசைக்ளின் மருந்தைப் பயன்படுத்த முதலில் அனுமத்தது. இருப்பினும், இது அதிக பயிர்களில் பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்தப்படுவது இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
  • CIBRC: Central Insecticides Board and Registration Committee.
கோவிட் கவாச்: கொரானா தொற்றுக்கான 'இந்தியாவின் முதல் உள்நாட்டு எலிசா டெஸ்ட் கிட்'
  • கொரானா தொற்றுக்கான (COVID-19) தேசிய ஆன்டிபாடி கண்டறிதல் கருவியை (Antibody Detection Kit), தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உருவாக்கியுள்ளது. இந்த கிட் “கோவிட் கவாச் எலிசா சோதனை” (COVID KAVACH ELISA) எனப்படுகிறது. இந்த கிட் 2.5 மணிநேர ஒற்றை ஓட்டத்தில் COVID-19 நோய்த்தொற்றின் 90 மாதிரிகளை சோதிக்கும் திறன் கொண்டது. 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'பிபாட்ரோல்' ஆயுர்வேத மருந்து 
  • 'கொரோனா வைரஸை எதிர்க்கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன், 'பிபாட்ரோல்' என்ற ஆயுர்வேத மருந்துக்கு உள்ளதாக, தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
  • இந்த மருந்து, இயற்கை நுண்ணுயிர்க் கொல்லியாக இருந்து, தொற்று, காய்ச்சல் மற்றும் வலியை எதிர்த்து போராடும் திறன் கொண்டுள்ளது.
  • மூக்கடைப்பு, தொண்டைப் புண், தலைவலி, உடம்பு வலி ஆகிய பிரச்னைகளுக்கு, இம்மருந்து விரைவான நிவாரணம் தரும். 
கொரோனா பாதிப்பு - 14 மாநிலங்களுக்கு 'ரூ. 6,195 கோடி நிதி ஒதுக்கீடு' 
  • கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கம் தமிழகம், கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடியை, நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக, கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 'கொரோனா நெருக்கடியில் இருக்கும் மாநில அரசுகளுக்கு உதவும் வகையில், 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி, 2வது தவணையாக, 14 மாநிலங்களுக்கு ரூ .6,195.08 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட 'வந்தே பாரத் திட்டம்'
  • வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படும் வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 
  • முதல்கட்டமாக, வெளிநாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.
  • இரண்டாம் கட்டமாக, மே 16 முதல் 22-ஆம் தேதி வரை 31 நாடுகளுக்கு 149 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நிலை - ICMR ஆய்வு
  • இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல், மூன்றாம் நிலையான சமூக பரவல் நிலையை அடைந்துவிட்டதா என இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக நாடு முழுவதும் வைரஸ் தொற்று அதிகமுள்ள 69 ஹாட் ஸ்பாட் மாவட்டங்களில், மத்திய சுகாதாரத்துறையுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. குறிப்பிட்ட மாவட்டத்தின் 10 இடங்களில், 400 ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை மாவட்டங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
  • கொரோனா வைரஸ் தொற்றின் நான்கு நிலைகள்:
    • கொரோனா வைரஸ் பாதிப்பை, நான்கு நிலைகளாக மருத்துவ நிபுணர்கள் வரையறை செய்துள்ளனர். 
    • முதல் நிலை: வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது, முதல் நிலை ஆகும். 
    • இரண்டாவது நிலை: வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது இரண்டாவது நிலை ஆகும். 
    • மூன்றாவது நிலை: வெளிநாடுகளுக்கு செல்லாதோர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, இந்த பாதிப்பு எப்படி வந்தது என கண்டுபிடிக்க முடியாத நிலை, சமூக பரவல் என கூறப்படுகிறது. இது, மூன்றாவது நிலை ஆகும். 
    • நான்காவது நிலை: நாடு முழுவதும் அனைவருக்கும் வைரஸ் பரவி, பேரழிவை ஏற்படுத்துவது நான்காவது நிலை ஆகும்.
ஸ்வஸ்த்வாயு - வென்டிலேட்டர் உருவாக்கம் 
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), பெங்களூரு தேசிய விண்வெளி ஆய்வகங்கள் அமைப்பு இணைந்த “ஸ்வஸ்தவயு” (SWASTHVAYU) என்ற வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளது. வென்டிலேட்டர் 36 நாட்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • உள்ளமைக்கப்பட்ட உயிர் இணக்க இணைப்பு (Biocompatible Coupler) மற்றும் உயர் செயல்திறன் வடிப்பானால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் COVID-19 பாதிப்புகளை குறைக்க வென்டிலேட்டருக்கு உதவுகின்றன.
மத்தியப் பிரதேச அரசின் “FIR ஆப்கே துவார் யோஜனா” திட்டம்
  • மத்தியப் பிரதேச மாநிலம், “FIR ஆப்கே துவார் யோஜனா” (FIR Aapke Dwar Yojana) என்ற புதுமை திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
  • 2020 மே 11-அன்று, மத்தியப் பிரதேச அரசு 23 காவல் நிலையங்களில் ஒரு பைலட் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகள் இதில் அடங்கும். 
  • இந்த திட்டத்தின் கீழ், ஒரு நபர் புகாரைத் தெரிவிக்க காவல் நிலையத்திற்குச் செல்லத் தேவையில்லை. மக்களிடமிருந்து புகார்களை பதிவு செய்ய இந்த திட்டம் தலைமை கான்ஸ்டபிள்களை அமர்த்தியுள்ளது.
  • FIR-இன் சட்டப்பூர்வ தன்மை: இந்திய அரசியலமைப்பு FIR மீது எந்த உரிமைகளையும் வழங்கவில்லை. FIR மற்றும் அதன் சட்டபூர்வமான தன்மை குற்றவியல் நடைமுறை சட்டம், 1973 ஆம் ஆண்டின் பிரிவு 154-ஆல் வரையறுக்கப்படுகிறது.
  • FIR என்பது முதல் தகவல் அறிக்கை (First Information Report) ஆகும். பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் FIR கருத்துரு பின்பற்றப்படுகிறது.
கேரள மாநிலத்தில் 'கள்ளுக்கடைகள்' திறப்பு
  • இந்தியாவில் கொரோனா பாதித்த முதல் மாநிலமான கேரளம், தற்போது பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. தற்போது மே 13-ஆம் தேதி முதல் கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என கேரள அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 
'ஆத்மநிர்பர் பாரத் அபியான்' திட்டம் - பிரதமர் அறிவிப்பு
  • பிரதமர் மோடி மே 12-அன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியாவில் கொரோனா பரவியதை தொடர்ந்து, அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது இது 5-வது தடவை ஆகும். உரையின் முக்கிய குறிப்புகள் விவரம்:
  • 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது. 21-ம் நூற்றாண்டு இந்தியா என்னும் கனவு மெய்ப்பட நாம் அனைவரும் இந்தியாவின் தற்சார்புத் தன்மையை உறுதிப்படுத்துவதாகும்.
  • இந்தியாவில் 2 லட்சம் நோய்த்தொற்று பாதுகாப்பு உடைகளும், 2 லட்சம் ‘என்95’ பாதுகாப்பு முகக்கவசங்களும் தினமும் தயாரிக்கப்படுகின்றன.
  • 5 தூண்கள்
    • தற்சார்புடன் இயங்கும் நம் நாடு 5 தூண்களின் மீது உறுதியாக நிற்கும். 
    1. சிறு சிறு மாற்றங்கள் என்று இல்லாமல் மிகப்பெரும் பாய்ச்சலுடன் முன்னேறும் நம்முடைய பொருளாதாரம், 
    2. இந்தியாவின் அடையாளமாக விளங்கும் உள்கட்டுமானம், 
    3. 21-ம் நூற்றாண்டின் தொழில் நுட்பத்தின் துணையுடன் நிற்கும் சமூக கட்டுமானம், 
    4. தற்சார்புள்ள இந்தியாவின் மூல சக்தியாக விளங்கும் துடிப்புள்ள மக்கள் தொகை, 
    5. முழு அளவில் பயன்பாட்டில் உள்ள தேவை மற்றும் வழங்குதல் ஆகியவை நம்முடைய 5 தூண்களாகும். 
  • ரூ.20 லட்சம் கோடி 'ஆத்மநிர்பர் பாரத் அபியான்' திட்டம்
    • இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு, ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’(Atmanirbhar Bharat Abhiyan) என்ற பெயரில் பிரதமர் மோடி மே 11-அன்று அறிவித்துள்ளார்.
    • ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’(Atmanirbhar Bharat Abhiyan) அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும்.
    • 4-வது முறையாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 18-ந்தேதிக்கு முன் அறிவிக்கப்படும். மாநிலங்கள் தெரிவித்துள்ள யோசனைகளின் அடிப்படையில் இதுபற்றி அறிவிக்கப்படும். இந்த ஊரடங்கு நீட்டிப்பு புதிய வழிமுறைகளுடன் முந்தைய ஊரடங்குகளை விட வித்தியாசமானதாக இருக்கும் என தெரிவித்தார்.
விருதுகள் 
DW சுதந்திர பேச்சு விருது 2020 - சித்தார்த் வரதராஜன்
  • 2020 உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2020 மே 3-அன்று, 14 நாடுகளைச் சேர்ந்த 17 பத்திரிகையாளர்களுக்கு, 2020-ஆம் ஆண்டின் டாய்ச் வெல்லே சுதந்திர பேச்சு சுதந்திர விருது (Deutsche Welle Freedom of Speech Award 2020) வழங்கப்பட்டது. COVID-19 பெரும்தொற்று குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளதால், இவர்கள் காணாமல் போயுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சித்தார்த் வரதராஜன் - தி வயர் இணைய இதழ்: இந்தியாவை சேர்ந்த தி வயர் இதழின் சித்தார்த் வரதராஜன் அவர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளார். 
  • இலாப நோக்கற்ற இணையச் செய்தித்தாளான தி வயர் (The Wire) இதழின் நிறுவன ஆசிரியர்களில் ஒருவரான சித்தார்த் வரதராஜன் (Siddharth Varadarajan) அவர்களுக்கு, ஒரு மத விழாவில் பங்கேற்றதன் மூலம் ஒரு அரசியல்வாதி கோவிட்-19 வழிகாட்டுதல்களை மீறிய அறிக்கையை தொடர்ந்து, 2020 ஏப்ரல் 10-அன்று, காவல்துறை குழு நேரில் வரும்படி அறிவிக்கை வழங்கப்பட்டது. 
  • தி வயர் இகழ் "ஒரு கலவரத்தை ஏற்படுத்தியது" மற்றும் "பீதிக்கு வழிவகுத்தது" என்று குற்றம் சாட்டப்பட்டது.
நியமனங்கள்
சட்ட மேலவை உறுப்பினராக தேர்வாகும் உத்தவ் தாக்கரே
  • மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி சார்பில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வராக 2019 நவம்பர் 28-அன்று பொறுப்பேற்றார். 
  • சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடாமல் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றதால், அரசியலமைப்பு சட்டத்தின்படி, 6 மாதத்துக்குள் சட்டப்பேரவை உறுப்பினர் (M.L.A.) அல்லது சட்ட மேலவை உறுப்பினராக (M.L.C.) அவர் தேர்வாக வேண்டும். இதற்கான காலக்கெடு மே 28-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
  • 2020 ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற இருந்த 9 சட்ட மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மூலம் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள உத்தவ் தாக்கரே திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அந்த தேர்தல் கைவிடப்பட்டது. 
  • ஆளுநர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் 2 நியமன M.L.C. பதவிகளில் ஏதேனும் ஒன்றில் உத்தவ் தாக்கரேவை நியமிக்க மகாராஷ்டிர மாநில அமைச்சரவை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு பரிந்துரை செய்தது.
  • மே 21-ஆம் தேதியன்று மகராஷ்டிராவில் 9 உறுப்பினர்களுக்கான சட்டமேலவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்மூலம் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சட்ட மேலவைக்கு போட்டியின்றி தேர்வாகிறார்.
  • பிரிவு 164 இந்திய அரசியலமைப்பின் பிரிவு 164 (Article 164/) ஒரு மாநில முதல்வர் பதவிக்கான அனைத்து ஏற்பாட்டையும் வழங்குகிறது.
  • M.L.A.: Member of Legislative Assembly.
  • M.L.C.: Member of Legislative Council.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
‘டாக்கின்சியா’ பேரினத்தைச் சேர்ந்த மூன்று புதிய மீன் இனங்கள் - கண்டுபிடிப்பு
  • இந்திய விஞ்ஞானிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ‘டாக்கின்சியா’ (Dawkinsia) பேரினத்தைச் சேர்ந்த நன்னீரில் வாழும் 3 புதிய வகை மீன்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த மீன்களுக்கு டாக்கின்சியா அப்சரா (Dawkinsia apsara), டாக்கின்சியா ஆஸ்டெல்லஸ் (Dawkinsia austellus), டாக்கின்சியா க்ராஸா (Dawkinsia crassa) என பெயரிடப்பட்டுள்ளது.
  • மும்பை இயற்கை வரலாற்று சங்கத்தின் (BNHS), கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் ஆய்வுகள் பல்கலைக்கழகம் (KUFOS) மற்றும் புனே இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மீன் இனங்களை கூட்டாகக் கண்டுபிடித்துள்ளனர்.
புத்தக வெளியீடு
Fear of God - Bomma Devara Sai Chandravadhan
  • 2020 மே 9-அன்று, போம்ம தேவர சாய் சந்திரவதன், வதன் (Vadhan) என்ற புனைப் பெயரில் தனது மூன்றாவது புத்தகமான “கடவுளுக்கு பயம்” (Fear of God) என்ற தலைப்பிலான ஆங்கிலப் புத்தகத்தை எழுதி ட்ரீஷேட் வெளியீட்டத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். 
Finding Freedom: Harry and Meghan and the Making of a Modern Royal Family - Omid Scobie and Carolyn Durand 
  • ஓமிட் ஸ்கோபி மற்றும் கரோலின் டுராண்ட் எழுதியுள்ள "சுதந்திரத்தைக் கண்டறிதல்: ஹாரி மற்றும் மேகன் மற்றும் ஒரு நவீன அரச குடும்பத்தை உருவாக்குதல்" என்ற தலைப்பிலான பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதிகள் பற்றிய ஆங்கிலப் புத்தகம் 2020 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படவுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
நெஞ்சக நோயை கண்டறியும் நடமாடும் எக்ஸ்ரே கருவி வாகனங்கள் - தொடங்கிவைப்பு
  • கொரோனாவால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோயை துரிதமாக கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் மே 11-அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விளையாட்டு நிகழ்வுகள்

பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் - ஓய்வு அறிவிப்பு
  • அரியானாவை சேர்ந்த 49 வயதான தீபா மாலிக் பாரா விளையாட்டு போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மே 11-அன்று அறிவித்துள்ளார். 2016-ம் ஆண்டு ரியோடிஜெனீரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் இந்திய தடகள வீராங்கனை தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அர்ஜூனா, கேல்ரத்னா, பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
  • தீபா மாலிக், இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தலைவர் 'நரிந்தர் பாத்ரா' - பதவிக்காலம் நீட்டிப்பு
  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) தலைவர் நரிந்தர் துருவ் பாத்ரா மற்றும் நிர்வாக சபை (ஈபி) உறுப்பினர்களின் பதவிக்காலம் 2021 மே மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  • 2020 அக்டோபரில் இவர்களின் பதவிக்காலம் முடிவடையவிருந்தது.
IPL கிரிக்கெட் தொடர் - காலவரம்பின்றி ஒத்திவைப்பு
  • இந்தியாவில் IPL கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் கடந்த 2020 மார்ச் 29-இல் துவங்கி மே 24 வரை நடக்கவிருந்தது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2020 IPL கிரிக்கெட் தொடர் நடக்காமல் போனால் சுமார் ரூ .4000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
சாய்’ மையத்தில் மீண்டும் பயிற்சி: 6 பேர் கொண்ட கமிட்டி அமைப்பு
  • பாதுகாப்பு நடைமுறைகளை தயார்செய்து அதன் மூலம் ‘சாய்’ மையங்களில் மீண்டும் பயிற்சியை தொடங்குவது குறித்து 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த கமிட்டியின் தலைவராக ‘சாய்’ செயலாளர் ரோஹித் பரத்வாஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்திற்குட்பட்ட (SAI) பயிற்சி மையங்களில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்களும், ஒலிம்பிக் தகுதி சுற்றுக்காக தங்களை தயார்படுத்தி வந்த அனைத்து பயிற்சியும் 2020 மார்ச் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்டது. 
  • SAI: Sports Authority of India
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் - ஷபியுல்லா ஷபிக்-க்கு 6 ஆண்டு தடை
  • ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஷபியுல்லா ஷபிக் அவர்களுக்கு, மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டதால், கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட 6 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
முக்கிய நபர்கள்
வரலாற்றாசிரியர் ஹரிசங்கர் வாசுதேவன் 
  • 2020 மே 6-அன்று, பிரபல வரலாற்றாசிரியர் ஹரிசங்கர் வாசுதேவன் (Hari Shankar Vasudevan) தனது 68 வயதில் கொல்கத்தாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலமானார்.
  • ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய வரலாற்றில் அவர் செய்த படைப்புகளுக்காக பிரபலமானவர். 
முக்கிய தினங்கள்
மே 12 - சர்வதேச செவிலியர் தினம்
  • கொரோனா நோய் தொற்று பரவும் கடினமான காலகட்டத்தில் செவிலியர்களின் பணி மகத்தானது. செவிலியர்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு சர்வதேச செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நைட்டிங்கேல் பிறந்தநாள், மே 12, உலக செவிலியர் தினமாக (International Nurses Day) கொண்டாடப்படுகிறது. இத்தாலிய நாட்டில் பிளாரன்ஸ் என்னும் ஊரில் 1820 மே 12 அன்று பிறந்தவர். 
  • ‘கைவிளக்கேந்திய காரிகை’ என்று அழைக்கப்படும் "பிளாரன்ஸ் நைட்டிங்கேல்" உலகில் தொண்டுள்ளத்தோடு பணிபுரியும் செவிலியர்களுக்கு முன்னோடி ஆவார். 
  • 1854 - 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார். போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளியை முதலில் துவங்கியவர். 
  • 200-வது பிறந்த ஆண்டு செவிலியர்களின் அன்னையாக திகழும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது ஆண்டு பிறந்த தினம் (12/5/2020) ஆகும்.
  • 2020 செவிலியர் தின மையக்கருத்து: 'Nurses: A Voice to lead-Nursing the World to Health'.
Download this article as PDF Format
Previous Post Next Post