TNPSC Current Affairs 3-4, May 2020 - Download PDF

Current Affairs and GK Today  May 3 and  May 4, 2020 
TNPSC Current Affairs 3-4, May 2020 - Download PDF
TNPSC Current Affairs 3-4, May 2020 - Download PDF
TNPSC Current Affairs May 2020 - Daily Download PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

GKTAMIL Current Affairs: Our Current Affairs May 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
இந்திய நிகழ்வுகள்
புவிசார் குறியீடு பெற்ற 'காஷ்மீர் குங்குமப்பூ' 
  • மே 1, 2020 அன்று காஷ்மீர் குங்குமப்பூ-விற்கு (Kashmir saffron) புவிசார் குறியீடு (GI tag) வழங்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் கரேவா (Karewa) மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுவது.
  • புவிசார் குறியீட்டுப்பதிவு சட்டம்: 1999-ஆம் பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டப்படி (Geographical Indications of Goods Registration and Protection Act-1999), இந்தியாவில் பொருட்களின் புவிசார் குறியீட்டுப் பதிவு , செப்டம்பர் 2003 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் முதல் புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புப்பொருள் டார்ஜிலிங் டீ (Darjeeling Tea) ஆகும். இதற்கு 2004-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
  • GI tag: Geographical Indication.
மகாராஷ்டிர அரசின் இலவச மற்றும் பணமில்லா காப்பீடு திட்டம் (MJPJAY) 
  • 2020 மே 1-அன்று மகாராஷ்டிர மாநில அரசு மகாத்மா ஜோதிபா புலே ஜான் ஆரோக்ய யோஜனா (MJPJAY) என்ற பெயரிலான மக்களுக்கு இலவச மற்றும் பணமில்லா காப்பீட்டை அறிவித்துள்ளது.
  • இலவச மற்றும் பணமில்லா காப்பீட்டை அறிவித்த முதல் மாநிலம் என்ற சிறப்பை மகாராஷ்டிர மாநிலம் பெற்றுள்ளது. 
  • MJPJAY: Mahatma Jyotiba Phule Jan Arogya Yojana.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: இணைந்த 17 மாநிலங்கள்
  • ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ (One Nation One Ration Card) திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட, மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்த திட்டத்தின் கீழ் புதிதாக ஐந்து மாநிலங்கள் / ஒன்றியப்பிரதேசங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன அவை: உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையு
  • இந்த திட்டம் ஏற்கனவே 12 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது, அவை: ஆந்திரா, கோவா, குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கேரளா, கர்நாடகா மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் திரிபுரா.
  • 2019 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், 2020 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பு நலன்களைக் வழங்கவிருக்கிறது.
சரஸ் சேகரிப்பு திட்டம் - தொடக்கம்
  • சரஸ் சேகரிப்பு திட்டம் (Saras Collection), அரசு மின்-சந்தை இணையமுகப்பில் (GeM) தொடங்கப்பட்டது, 
  • சரஸ் சேகரிப்பு திட்டம், சுய உதவி குழுக்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை தினசரி பயன்பாடுகளுக்காக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்த திட்டம் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் அரசு மின் சந்தை மற்றும் தீன் தயால் அந்தோடயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார பணித்திட்டம் (DAY-NRLM) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
  • GeM: Government E-Marketplace portal, DAY-NRLM: Deen Dayal Antyodaya Yojana-National Rural Livelihood Mission.
கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்கான "ரெம்டெசிவிர்' மருந்து
  • கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள "ரெம்டெசிவிர்' மருந்து 1,000 டோஸ்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
  • கரோனா சிகிச்சைக்கு "ரெம்டெசிவிர்' மருந்தினை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் அங்கீகரித்துள்ளது.
கொரோனாவை எதிர்ப்புப்பணி: ஆயுதப்படைகள் - மலர் தூவி மரியாதை 
  • கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து முன்னணியில் நின்று போராடுகிற மருத்துவ பணியாளர்கள், போலீசார் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் மே 3-அன்று ஆயுதப்படைகளின் மரியாதையை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக ஆயுதப்படைகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கும் விதமாக மே 3-அன்று, ஞாயிற்றுக்கிழமையன்று, காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் போர் விமானங்கள் வானில் அணிவகுத்து சென்றன, போர் கப்பல்களில் இருந்து ஒளிவெள்ளம் பாய்ச்சப்பட்டது, மருத்துவமனைகள் மீது ஹெலிகாப்டர்கள் பூமழை பொழிந்தன. 
  • டெல்லியில் ராஜபாதையில் தொடங்கி தலைநகர் முழுவதும் சுகோய்-30 எம்.கே.ஐ., மிக்-29 மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் வானில் அணிவகுத்து பறந்தன.
  • முப்படைகளின் தலைமை தளபதி - பிபின் ராவத் 
மேற்கு வங்கத்தில் கரோனா தொற்றால் உயிரிழப்பு - 12.8%
  • மேற்கு வங்கத்தில் கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாட்டிலேயே அதிக அளவாக 12.8 சதவீதம் உள்ளதென அந்த மாநிலத்துக்கு வருகை தந்துள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அபூர்வ சந்திரா தலைமையிலான மத்தியக்குழு தெரிவித்துள்ளது. 
ஜன்தன் கணக்குகளில் 2-ஆவது தவணை உதவித்தொகை - தொடக்கம்
  • கரோனா தொற்றால் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, ஏழைகள், பெண்கள், முதியவா்களுக்கு உதவும் வகையில் ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைத் திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாா்ச் 26-ஆம் தேதி அறிவித்தாா். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் (Pradhan Mantri Garib Kalyan Yojana), பெண்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில், ஏப்ரல் மாதத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு ரூ.500 வீதம் செலுத்தப்படும் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது தவணையாக ரூ.500 அளிக்கும் பணி மே 3-அன்று முதல் தொடங்குகிறது. 
  • ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20.05 கோடி பெண்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் முதல் தவணையாக தலா ரூ.500 செலுத்தப்பட்டது. ஏப்ரல் 22-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் ரூ.10,025 கோடி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் காய்ச்சலை கண்டறியும் 'நவீன தெர்மல் கேமரா'
  • கேரள தலைநகா் திருவனந்தபுரத்தில் காய்ச்சலை கண்டறிவதற்காக முக அடையாளத்துடன் உடல் வெப்பத்தை தெரிந்துகொள்ள உதவும் அதிநவீன தெர்மல் கேமரா நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டா்டாம் நகரில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படும் இந்தக் கேமரா விமான நிலையத்திலோ, ரயில் நிலையத்திலோ அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலோ பொருத்தப்படும்.
விருதுகள்
நிக்கி ஆசியா பரிசு 2020 - தலப்பிள் பிரதீப்
  • மெட்ராஸ் இந்தியன் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (IIT-M) பேராசிரியர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற தலப்பிள் பிரதீப் (Thalappil Pradeep) அவர்களுக்கு, நானோ தொழில்நுட்பம் சார்ந்த நீர் சுத்திகரிப்பு தொடர்பான முன்னோடிப்பணியை அங்கீகரிப்பதற்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் 25 வது நிக்கி ஆசியா பரிசு (Nikkei Asia Prizes 2020) வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் ராயல் சொஸைட்டி: இந்தியர் விக்ரம் தேஷ்பாண்டே-க்கு கௌரவம்
  • புகழ்மிக்க பிரிட்டன் ராயல் சொஸைட்டியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் விக்ரம் தேஷ்பாண்டே சேர்க்கப்பட்டுள்ளாா். இவா் இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்டவா் ஆவாா்.
  • மும்பையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) பயின்ற விக்ரம் தேஷ்பாண்டே, தனது ஆராய்ச்சிகள் மூலம் இயந்திரப் பொறியியலுக்குப் பல்வேறு முக்கியப் பங்களிப்புகளை நல்கியுள்ளாா்.
  • விக்ரம் தேஷ்பாண்டேயுடன், பிரிட்டனின் பிரபல காா் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவா் லாண்ட்ரோவரின் தலைவா் சா் ரால்ஃப் ஸ்பெத், ராயல் சொசைட்டியில் சோக்கப்பட்டுள்ளாா். ஜாகுவா் லாண்ட் ரோவா் நிறுவனம் இந்தியாவின் டாடா குழுமத்துக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் ராயல் சொஸைட்டி 1660
  • அறிவியல் சாா்ந்த பயன்பாடுகளை ஊக்குவிப்பதற்கான கூட்டமைப்பான பிரிட்டன் ராயல் சொஸைட்டி 1660-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன், சாா்லஸ் டாா்வின், ஸ்டீபன் ஹாக்கிங், ஸ்ரீநிவாச ராமானுஜன் உள்ளிட்டோா் ராயல் சொஸைட்டியின் உறுப்பினா்கள் ஆவா். இந்தச் சூழலில், பேராசிரியா் விக்ரம் தேஷ்பாண்டே ராயல் சொஸைட்டியில் இணைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளாா்.
நியமனங்கள்
அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் சர்வதேச உறுப்பினர் - பேரா. ஷோபனா நரசிம்மன்
  • பெங்களூரு நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (JNCASR) பேராசிரியர் ஷோபனா நரசிம்மன் Shobana Narasimhan , அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் சர்வதேச உறுப்பினராக American Academy of Arts and Scienc௰ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • JNCASR: Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research.
மாநாடுகள்
அணி சேரா இயக்கத் தலைவர்கள் கூட்டம்-2020
  • அணி சேரா இயக்கத்தில் (NAM) அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் காணொலி முறையில் ஏப்ரல் 4-அன்று நடைபெற்றது. 
  • இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
  • உலக அளவில் 120 நாடுகளுக்கு இந்தியா மருந்துகளை வழங்கியுள்ளது. இதில் 59 நாடுகள், அணி சேரா இயக்கத்தின் உறுப்பு நாடுகள், கரோனா பிரச்னையால் உலகமயமாக்கலில் புதிய பரிமாணத்துக்கான அவசியம் எழுந்துள்ளது; இது, சமத்துவம், மனிதாபிமானம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
  • 120 வளரும் நாடுகளின் கூட்டமைப்பு அணிசேரா இயக்கம் (NAM) ஆகும். ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்து5, நாடுகளின் மிகப்பெரிய குழுவாக அணிசேரா இயக்கம் உள்ளது.
  • இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, யூகோஸ்லாவிய தலைவர் ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்துல் கமல் அப்தெல் ஆகியோரின் முன்முயற்சியால்,1961-ஆம் ஆண்டில் அணி சேரா இயக்கம் நிறுவப்பட்டது.
  • அணிசேரா இயக்கம் (1961) 
  • 1961 ஆம் ஆண்டில் பெல்கிரேட் நகரில் அணிசேரா இயக்கம் நிறுவப்பட்டது. அணிசேரா இயக்கம், முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் யூகோஸ்லாவிய தலைவர் ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ எகிப்திய ஜனாதிபதி அப்துல் கமால்ஆகியோரின் கூட்டு முயற்சியாகும்.
  • தலைமையகம்: மத்திய ஜகார்த்தா, இந்தோனேசியா
  • உறுப்பினர்கள்: 120 உறுப்பு நாடுகள்; 17 மாநிலங்கள் (பார்வையாளர் தகுதி நாடுகள்); 10 சர்வதேச அமைப்புகள்.
  • NAM: Non-Aligned Movement.
பொருளாதார நிகழ்வுகள்
இந்தியாவின் கடற்சார் திட்டங்கழுக்கான உலக வங்கியின் '400 மில்லியன் டாலர் நிதி உதவி' 
  • 2020 ஏப்ரல் 2- அன்று, உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு 400 மில்லியன் அமெரிக்க டாலர் (USD 400 million) பல-ஆண்டு நிதி உதவியை இந்தியாவிற்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்த நிதிவுதவி மூலம் இந்தியா தனது கடலோர மற்றும் கடல் வளங்களை மேம்படுத்தவும், கடலோர மக்களையும் மாசுபாடு, அரிப்பு, கடல் மட்ட உயர்வு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கவும் மேலும் அடுத்த தசாப்தத்தில் கடலோர சமூகங்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துதவும் உதவும்.
  • ENCORE திட்டம்: கடலோர மற்றும் பெருங்கடல் வள செயல்திறனை மேம்படுத்தும் (ENCORE) திட்டத்திற்கான, முதல் கட்டம், 8 கடலோர மாநிலங்களையும் 3 கடலோர யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியது ஆகும். இதற்காக 180 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கவுள்ளது. 
  • ENCORE: Enhancing Coastal and Ocean Resource Efficiency. 
அறிவியல் தொழில்நுட்பம்
'கிசான் சபா' செல்போன் செயலி - அறிமுகம் 
  • கொரானா வைரஸ் தொற்று காரணமாக விவசாயிகளின் விளைபொருட்களை சரியான நேரத்தில் விற்பனை மற்றும் விதை, உரம் கொள்முதல் ஆகியவற்றுக்கான சந்தையை அடைய முயற்சிக்காக, விநியோகச் சங்கிலி மற்றும் சரக்கு போக்குவரத்து மேலாண்மைக்கான ‘கிசான் சபா’ என்ற செல்போன் செயலி பயன்பாட்டை (Kisan Sabha App), டெல்லியில் உள்ள CSIR-மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (CRRI), மே 1, 2020 அன்று அறிமுகப்படுத்தியது
  • CRRI: Central Road Research Institute.
தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம் உருவாக்கிய பயோசென்சார் 'eCovSens' 
  • ஐதராபாத் நகரில் உள்ள தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்பவியல் நிறுவன (NIAB) ஆய்வாளர்கள் 'eCovSens' என்ற பயோசென்சாரை (Biosensor) உருவாக்கியுள்ளனர்.
  • உமிழ்நீர் மாதிரிகளில் (Saliva Sample) கொரானா (COVID-19) வைரஸைக் கண்டறிய இந்த சென்சார் பயன்படுத்தப்படுகிறது.
  • NIAB: National Institute of Animal Biotechnology.
தீநுண்மிகளை அழிப்புக்காக புறஊதா கதிர் கோபுரங்கள் 'யுவி பிளாஸ்டர்'
  • கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அச்சம் அதிகம் உள்ள பகுதிகளில் தீநுண்மிகளை அழிக்கக் கூடிய வகையில் புறஊதா கதிர்களை வெளியிடும் வகையிலான கோபுரங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது.
  • இந்தக் கிருமிநாசினி கோபுரத்தை தொலையுணர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (Remote Access) "வைஃபை' தொடுப்பு மூலம் மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவற்றைக் கொண்டு இயக்க இயலும். 
  • "யுவி பிளாஸ்டர்' (UV Blaster) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவியை (UV based sanitizer) தில்லியில் இயங்கும் DRDO-வின் முதன்மை ஆய்வகமான "லேசர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்', குருகிராமைச் சேர்ந்த "நியூ ஏஜ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அண்ட் மெடீரியல்ஸ்' நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கியுள்ளது.
புத்தக வெளியீடு
Prof. B. B. Lal-India Rediscovered - Prof B. B. Lal
  • சிறந்த தொல்பொருள் ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் பி. பி. லாலின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 'Prof. B. B. Lal-India Rediscovered' என்ற தலைப்பிலான மின் புத்தகத்தை புதுதில்லியில் மத்திய கலாச்சார அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், 2020 மே 2-அன்று வெளியிட்டார் 
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
நீர்வாழ் டைனோசர் 'ஸ்பினோசொரஸ் ஈஜிப்டியாகஸ்' - கண்டுபிடிப்பு
  • நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, அமெரிக்க விஞ்ஞானிகள் குழு, வட ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டின் சஹாரா பகுதியில் உள்ள கெம் கெம் என்ற இடத்தில் “ஸ்பினோசொரஸ் ஈஜிப்டியாகஸ்” (Spinosaurus Aegyptiacus) என்ற பெயரிடப்பட்ட முதல் மாமிச உண்ணி (carnivorous) நீர்வாழ் டைனோசர் (Aquatic Dinosaur) ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
முக்கிய நபர்கள்
நீதிபதி ஏ.கே.திரிபாதி - மறைவு
  • கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.திரிபாதி, மே 2-அன்று உயிரிழந்தாா். சத்தீஸ்கா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான அரசியல் சாசன அமைப்பான லோக்பால் அமைப்பின் உறுப்பினராகவும் இருந்து வந்தாா். 
  • லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தவா் நீதிபதி ஏ.கே.திரிபாதி என மத்திய அரசு புகழாரம் சூட்டியுள்ளது.
முக்கிய தினங்கள்
ஏப்ரல் 29, 2020 (ஏப்ரல் கடைசி புதன்கிழமை) - சர்வதேச வழிகாட்டி நாய் தினம் (International Guide Dog Day). 

மே 2 மற்றும் அக்டோபர் 5, 2020 - சர்வதேச வானியல் தினம்
  • ஆண்டுக்கு இரண்டு முறை (Bi-Annual) சர்வதேச வானியல் தினம் (International Astronomy Day) கடைபிடிக்கப்படுகிறது. 2020 வசந்த காலத்தில் (Spring) ஒரு முறை மே 2-அன்றும் இலையுதிர்காலத்தில் (Autumn) அக்டோபர் 5-அன்றும் கொண்டாடப்படுகிறது.
  • மே 3, 2020 (மே மாத முதலாவது ஞாயிற்றுக்கிழமை) - உலக சிரிப்பு தினம் (World Laughter Day).
மே 04 - சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் 
  • சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் (International Firefighters’ Day), அனைத்து தீயணைப்பு வீரர்களின் அர்ப்பணிப்பை போற்றும் விதமாக ஆண்டுதோறும் மே 4 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
Download this article as PDF Format
Previous Post Next Post