TNPSC Current Affairs 1-2 May 2020 - Download PDF

Current Affairs and GK Today  May 1 and  May 2, 2020 


TNPSC Current Affairs 1-2 May 2020 - Download PDF
TNPSC Current Affairs 1-2 May 2020 - Download PDF

TNPSC Current Affairs May 2020 - Daily Download PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

GKTAMIL Current Affairs: Our Current Affairs May 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
உலக நிகழ்வுகள்
அமெரிக்க முன்னுரிமை கண்காணிப்பு பட்டியலில் 'இந்தியா' 
  • அறிவுசார் சொத்து கட்டமைப்பில் அளவிடக்கூடிய முன்னேற்றங்கள் இல்லாததால் அமெரிக்கா இந்தியாவை "முன்னுரிமை கண்காணிப்பு பட்டியலில்" (Priority Watch List) வைத்துள்ளது.
  • அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்தியாவில் உள்ள அறிவுசார் சொத்துரிமை தொடர்பான சவால்கள், அமெரிக்க வர்த்தகர்களுக்கு நாட்டில் காப்புரிமையைப் பெறுவது, பராமரிப்பது மற்றும் செயல்படுத்துவதை கடினமாக கருதுகின்றனர். இது முக்கியமாக மருந்துத் தொழில்களில் இந்த சவால்கள் அதிகம் என அமெரிக்கா கருதுகிறது. 
  • இந்தியாவுடன் உட்பட 10 நாடுகளை பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அவை: சீனா, அர்ஜென்டினா, அல்ஜீரியா, சிலி, ரஷ்யா, இந்தோனேசியா, சவுதி அரேபியா, வெனிசுலா மற்றும் உக்ரைன் ஆகியவை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • பட்டியலில் இருந்து கனடா, குவைத் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் பட்டியல்-2020
  • சர்வதேச பட்ஜெட் கூட்டாண்மை (International Budget Partnership) அமைப்பு மொத்தம் 117 நாடுகளில் நடத்திய திறந்தநிலை பட்ஜெட் கணக்கெடுப்பின்படி, பட்ஜெட் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் பட்டியலில் (Budget Transparency and Accountability), 49 மதிப்பெண்களுடன் இந்தியா 53-வது இடத்தில் உள்ளது.
  • கணக்கெடுப்பில் இந்தியா 0f 100 இல் 49 ரன்கள் எடுத்தது. இந்த மதிப்பெண் உலகளாவிய சராசரியான 45 ஐ விட அதிகமாக இருந்தது. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மெக்ஸிகோ மற்றும் பிரேசில் முறையே முதல் 4 இடங்களைப் பெற்றுள்ளன.
ஜெர்மனியில் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் 'ஹெஸ்பொல்லா' சேர்ப்பு 
  • ஜெர்மனி தனது மண்ணில் ஹெஸ்பொல்லா (Hezbollah) என்ற அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று 2020 ஏப்ரல் 30-அன்று, வகைபடுத்தியுள்ளது. 
  • ஜேர்மன் காவல்துறையினரால் நடத்தப்பட்ட நடவடிக்கையின்படி, ஜெர்மனியில் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஹெஸ்பொல்லா தீவிரவாத பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது.
கொரானா நோய்த்தொற்று - 160 கோடி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் - பாதிப்பு
  • "கரோனா நோய்த்தொற்றும் தொழிலாளர் உலகமும்' என்ற தலைப்பில் ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ஏப்ரல் 29-அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள்:
  • கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பாதிப்பு காரணமாக உலகின் 160 கோடி முறைசாரா தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • உலகம் முழுவதும் 43 கோடிக்கும் மேற்பட்ட குறுநிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன. சில்லறை வர்த்தகம், உற்பத்தி உள்ளிட்ட துறைகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
  • உலகம் முழுவதும் 330 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 200 கோடி பேர் முறைசாராத தொழிலாளர்கள் ஆவர்.
  • ஊரடங்கு காரணமாகவும் பல தொழில்துறைகள் சரிவைச் சந்தித்துள்ளதன் காரணமாகவும் உலகத் தொழிலாளர்களின் வருவாய் 60 சதவீதம் குறைந்துள்ளது.
  • தொழிலாளர்களின் வருவாய் இழப்பு ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க கண்டத்தில் 80 சதவீதமாகவும் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 70 சதவீதமாகவும் உள்ளது.
  • ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் தொழிலாளர்களின் வருவாய் இழப்பு 21.6 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய பிரதமா் மிகயீல் மிஷுஸ்டினுக்கு 'கரோனா நோய்த்தொற்று பாதிப்பு'
  • ரஷிய நாட்டு பிரதமா் மிகயீல் மிஷுஸ்டின் (வயது 54) அவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 
  • ஏற்கெனவே, பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு, தற்போது அவர் மீண்டுள்ளாா். 
இந்திய நிகழ்வுகள்
டெல்லி காவல்துறையின் 'ஆயுரக்ஷா திட்டம்'
  • அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) டெல்லி காவல்துறையுடன் இணைந்து, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ், ஆயுரக்ஷா என்ற திட்டத்தை (AYURAKSHA Programme) ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த திட்டம் கொரானா வைரஸ் தொற்று (COVID-19) காரணமாக முன்னணி வரிசை தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்த AYURAKSHA திட்டம் “Corona Se Jung-Delhi Police Ke Sang” என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • ஆயுஷ் என்பது, ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறைகள் இணைந்த அமைச்சகம் ஆகும்.
  • AIIA: All India Institute of Ayurveda.
அதுல்யா: COVID-19-ஐ சிதைக்கும் நுண்ணலை தொற்றுநீக்கி
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கீழ் இயங்கும் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனம் (Defence Institute of Advanced Technology), “அடுல்யா” (ATULYA) எனப்படும் நுண்ணலை தொற்றுநீக்கியை (Microwave sterilizer) உருவாக்கியுள்ளது.
  • கொரானா (COVID-19) வைரஸை சிதைக்க இந்த மைக்ரோவேவ் ஸ்டெர்லைசர் பயன்படுத்தப்படவுள்ளது.
  • DRDO: Defence Research and Development Organization.
யாஷ் திட்டம் - தொடக்கம்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் யாஷ் திட்டம் (YASH programe) ஏப்ரல் 30, 2020 அன்று, தொடங்கப்பட்டது.
  • இந்த திட்டம், அறிவியல் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொரானா தொற்று (COVID-19) பற்றிய பொது ஈடுபாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • YASH: Year of Awareness on Science and Health.
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் 'காவிரி நீர் மேலாண்மை ஆணையம்' 
  • ஏப்ரல் 29, 2020 அன்று மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை (CWMA) மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது, இந்த ஆணையம், முன்னர் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கா புத்துணர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இருந்தது.
  • CWMA: Cauvery Water Management Authority.
தேசிய குழாய் வரிசை உள்கட்டமைப்பு (NIP) பணிக்குழு - அறிக்கை சமர்பிப்பு
  • பொருளாதார விவகார செயலாளர் அதானு சக்ரவர்த்தி தலைமையிலான தேசிய குழாய் வரிசை உள்கட்டமைப்பு (NIP) பணிக்குழு, 2020 ஏப்ரல் 29-அன்று, தனது இறுதி அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சமர்ப்பித்தது.
  • 2019-20 முதல் 2024-25 நிதியாண்டு வரையிலான முதல் 2024-25 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு மொத்த உள்கட்டமைப்புக்கான முதலீட்டை ரூ .111 லட்சம் கோடியாக நிர்ணயித்துள்ளது.
  • NIP: National Infra Pipeline.
கரோனா பாதிப்பு பகுதிகள் - சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள்
  • நாடு முழுக்க கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரித்து மத்திய சுகாதாரத் துறை பட்டியல் ஏப்ரல் 31-அன்று வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம்
  • மூன்று வண்ண மண்டலங்கள்
    • சிவப்பு மண்டலங்கள்: அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட பகுதிகள், அபாயப் பகுதிகள்
    • ஆரஞ்சு மண்டலங்கள்: புதிதாக கரோனா நோயாளிகள் இல்லா மாவட்டங்கள் 
    • பச்சை மண்டலங்கள்: கரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டங்கள்
    • நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதிக கரோனா பாதிப்பு உள்ள மண்டலங்களைக் கொண்ட மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக 130 மாவட்டங்களும், குறைவான கரோனா நோயாளிகளைக் கொண்ட 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு/விண்வெளி
செவ்வாய் கிரக முதல் ஹெலிகாப்டர் - 'இன்ஜெனியூயிட்டி' 
  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (NASA) சாா்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டருக்கு (Nasa's first Mars helicopter) இந்திய வம்சாவளி மாணவி வனீஸா ரூபானி (Vaneeza Rupani) பரிந்துரைத்த பெயா் சூட்டப்பட்டுள்ளது.
  • வனீஸா ரூபானி அனுப்பிய கட்டுரையின் அடிப்படையில் 'இன்ஜெனியூயிட்டி' (Ingenuity) பெயா் சூட்டப்பட்டுள்ளது. 
  • 7-ஆம் வகுப்பு மாணவா் அலெக்சாண்டா் மேத்தா் அனுப்பிய கட்டுரையின் அடிப்படையில் ரோவருக்கு 'பொசிவியரன்ஸ்' என்று பெயா் சூட்டப்பட்டது.
  • 'பொசிவியரன்ஸ்' ரோவருடன் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படவுள்ள அந்த ஹெலிகாப்டா், வேற்று கிரகத்தில் முதல் முறையாக பறக்க இருக்கிறது.
நியமனங்கள்
ஐ. நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி 'டி.எஸ்.திருமூர்த்தி'
  • ஐ. நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக (Permanent Representative of India to the United Nations), வெளியுறவுத் துறையில் பணியாற்றி வரும் மூத்த அதிகாரியான டி.எஸ்.திருமூர்த்தி (வயது 58) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான முறைப்படியான அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏப்ரல் 30-அன்று வெளியிட்டது.
  • தற்போது மத்தியவெளியுறவுத்துறையில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக திருமூர்த்தி முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். 1962-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி சென்னையில் பிறந்தவரான திருமூர்த்தி, இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்று, சட்டம் பயின்றவர். 
  • 1985-இல், இந்திய வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்த திருமூர்த்தி (T. S. Tirumurti), பல்வேறு நாடுகளின் இந்திய துாதரகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
  • சிறந்த எழுத்தாளரான திருமூர்த்தி, கிஸ்ஸிங் தி ஹெவன் மானசரோவர் யாத்ரா, கிளைவ் அவென்யு, சென்னைவாசி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 
  • தற்போதைய பிரதிநிதியான சையது அக்பரூதீன்,விரைவில் ஓய்வு பெறவுள்ளதை அடுத்து டி.எஸ்.திருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார், இவர் சென்னையில் பிறந்தவர். 
  • சர்வதேச பிரச்னைகளில், நம் நாட்டின் நிலைப்பாட்டை திறமையுடனும், ஆதாரத்துடனும், ஐக்கிய நாடுகள் சபையில் எடுத்து வைக்கும் சவாலான பணியை இந்தியாவின் நிரந்தர பிரதிநிதிகள் செய்து வருகின்றனர். 
  • பிற நியமனங்கள்: 
    1. ஆஸ்திரியாவுக்கான இந்தியத் தூதர் - ஜெய்தீப் மஜும்தார் 
    2. கத்தார் நாட்டுக்கான தூதர் - தீபக் மிட்டல் 
    3. பஹ்ரைன் நாட்டுக்கான தூதர் - பியூஷ் ஸ்ரீவஸ்தவா 
    4. ஸ்லோவேனியா நாட்டின் தூதர் - நம்ரதா எஸ் குமார்.
மாநாடுகள்
G20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டம்-2020
  • G20 கூட்டமைப்பு நாடுகளின் G20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் (G20 Digital Economy Ministers meeting), 2020 ஏப்ரல் 30-அன்று கூட்டப்பட்டது.
  • இக்கூட்டத்தில் G20 டிஜிட்டல் பொருளாதாரம் பணிக்குழு அமைச்சரவை அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவின் பிரதிநிதி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்றார்.
தமிழ்நாடு நிகழ்வுகள்

புவிசாா் குறியீடு பெற்ற 'கோவில்பட்டி கடலை மிட்டாய்' 
  • கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு (Kovilpatti Kadalai Mittai) புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி வட்டார கடலை மிட்டாய் உற்பத்தியாளா் மற்றும் விற்பனையாளா் நலச் சங்கம் என்ற பெயரில் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் 30-அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய் புகழ்பெற்றது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் எண்ணெய் வித்துக்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. தரமான நிலக்கடலை, மண்டைவெல்லம் கிடைப்பதால் கடலை மிட்டாய் உற்பத்தியில் கோவில்பட்டி சிறப்பு பெற்று விளங்குகிறது.
  • 34-ஆவது பொருள்: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டு, விருப்பாச்சி வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள், பழனி பஞ்சாமிா்தம் என 33 பொருள்களுக்கு ஏற்கெனவே புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 34-ஆவது பொருளாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது.
  • பிற பொருட்கள்: மணிப்பூர் மாநிலத்தின் கருப்பு அரிசி எனப்படும் சக்-ஹாவ் Black rice of Manipur/Chak-Hao, உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூர் டெர்ராகோட்டா Gorakhpur Terracottaஎனப்படும் மண்பாண்ட பொருட்கள் ஆகியவற்றுக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 
  • GI Tag: Geographical Indication tag.
வெளிநாட்டில் இருந்து தமிழர்கள் தமிழகம் திரும்ப 'இணைய பதிவு வசதி' - உருவாக்கம்
  • வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள், கொரானா பாதிப்பு காரணமாக உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்களுக்காக nonresidenttamil.org என்ற இணைய முகப்பின் மூலம், இணைய பதிவு வசதியை தமிழ்நாடு அரசு புதிதாக உருவாக்கியுள்ளது. 
சென்னை கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி - ஜே. ராதாகிருஷ்ணன் 
  • சென்னைக்கு கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையராக இருக்கும் ஜே. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு நிகழ்வுகள்
பெட் கோப்பை ஹார்ட் விருது 2020 - 'சானியா மிர்சா' பரிந்துரை
  • இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 2 ஆண்டுகளுக்குபின் களம் திரும்பி, பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் விளையாடினார்.
  • தற்போது இந்தோனேஷியாவின் பிரிஸ்கா நுக்ரோகோவுடன் இணைந்து பெட் கோப்பை இதய (ஹார்ட்) விருதுக்கு ஆசியா-ஓசியானியா மண்டலத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் சானியா ஆவார்.
லீக்-1 கால்பந்து போட்டி-2020: பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி சாம்பியன்
  • பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் லீக்-1 கால்பந்து போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இடையில் நிறுத்தப்பட்டு, எஞ்சிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டு புள்ளி பட்டியலில் 68 புள்ளிகளுடன் முதலிடம் வகித்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி சாம்பியன் கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. 
நியூசிலாந்து கிரிக்கெட் விருதுகள்-2019
  • நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர், வீராஙகனை மற்றும் நடுவர்களுக்கான விருதுகள் அறிவிக்ப்பட்டன. 
  • 2019-ம் ஆண்டுக்கான சிறந்த நியூசிலாந்து வீரராக ராஸ் டெய்லர் தேர்வாகியுள்ளார். இதன்மூலம் ரிச்சர்ட் ஹாட்லி விருதை மூன்றாவது முறையாக வென்றுள்ளா. விருதுகள் விவரம்:
    1. சிறந்த வீரர் விருது - ராஸ் டெய்லர் 
    2. சிறந்த டெஸ்ட் வீரர் - டிம் செளதி
    3. சிறந்த நடுவர் - கிம் காட்டன் 
    4. சிறந்த ஒருநாள் வீரர் - கேப்டன் கேன் வில்லியம்சன்
    5. சிறந்த டி20 வீரர் - ராஸ் டெய்லர் 
    6. சிறந்த ஒருநாள் வீராங்கனை - சுசி பேட்ஸ்
    7. சிறந்த டி20 வீராங்கனை - சோபி டிவைன்.
முக்கிய நபர்கள்
இந்திய கால்பந்து வீரர் - சுனி கோஸ்வாமி
  • இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சுனி கோஸ்வாமி (வயது 82) உடல் நலக்குறைவால் ஏப்ரல் 30-அன்று மரணம் அடைந்தார். 
  • மோகன் பகான் கிளப்புக்காக மட்டும் விளையாடி 145 கோல்கள் அடித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்காக 50 ஆட்டங்களில் களம் இறங்கி இருக்கிறார். 
  • முதல்தர கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக 1962-63-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை விளையாடியுள்ளார்.
  • 1962-ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றார். மத்திய அரசு 1963-ம் ஆண்டு அர்ஜூனா விருதும், 1983-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கியது.
இந்தி நடிகர் ரிஷி கபூர் மறைவு
  • பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் (வயது 67) ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஏப்ரல் 30-அன்று மரணம் அடைந்தார். 
முக்கிய தினங்கள்
மே 1 - தொழிலாளர் தினம் - குறிப்புகள்
  • 1889-ம் ஆண்டு இறுதியில், பாரீஸ் நகரில் பல நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி சிகாகோ நகரில் ஏற்பட்ட 1890-ம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று ‘மே தினம்’ அணுசரிக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. 
  • இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதலாம் நாள் தொழிலாளர் தினமாக (International Labour Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • முதல் உலகப் போருக்குப் பிறகு, வெர்சைல்ஸ் உடன்படிக்கையின்படி 1919-ல் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு தொடங்கப்பட்டது. 
  • இந்தியாவின் முதல் மே நாள் கொண்டாட்டம்
    • தென்னிந்தியாவின் ‘முதல் பொதுவுடைமைத் தலைவர்’ என்றழைக்கப்படும் ம. சிங்காரவேலர், 1923-ம் ஆண்டில் மே நாளைக் கொண்டாடினார். நாட்டின் முதல் மே நாள் கொண்டாட்டம் இதுவாகும். 
மே 1 - மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம் 
  • 1956-ஆம் ஆண்டு குஜராத்தி மொழி பேசும் மக்கள், பம்பாயை தலைநகராக கொண்ட ‘மஹாகுஜராத் அந்தோலன்’ என்ற தனி மாநிலம் வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். 
  • அதேபோல், மராத்தி பேசும் மக்கள், "சம்யுக்த மஹாராஷ்ட்ரா அந்தோலன்" என தனி மாநிலம் வேண்டும் என போராட்டம் நடத்தினர். 
  • 1960-ம் ஆண்டு மே 1 அன்று நேரு ஆட்சியில், பம்பாய் மாநிலம் இரண்டாக பிக்கப்பட்டது. மராத்தி பேசும் மக்களுக்கு மகாராஷ்ட்ரா மாநிலமாகவும், குஜராத்தி பேசும் மக்களுக்கு குஜராத் மாநிலமாகவும் பிரிக்கப்பட்டது. 
மே 2 - உலக டூனா தினம் 
  • உலக டூனா தினம் (World Tuna Day), ஐ. நா. அவையால் மே 2 தேதி கடைபிடிக்கப்படுகிறது. டுனா, ஒரு வகை மீன் ஆகும், தமிழில் "சூரை மீன்" என்றழைக்கப்படுகிறது. டுனா மீனின் முக்கியத்துவம், விழிப்புணர்வு, மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பது இந்த நாளின் நோக்கம் ஆகும். 
மே 2 - உலக கடவுச்சொல் தினம் (World Password Day).
Download this article as PDF Format
Previous Post Next Post