TNPSC Current Affairs April 28-30, 2020 - Download PDF

Current Affairs and GK Today  April 28 and  April 29 and April 30, 2020 

TNPSC Current Affairs April 2020 - Daily Download PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge April 28th 29th and 30th, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

GKTAMIL Current Affairs: Our Current Affairs April 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.

TNPSC Current Affairs April 28-30, 2020 - Download PDF
TNPSC Current Affairs April 28-30, 2020 - Download PDF
உலக நிகழ்வுகள்
இடப்பெயர்வு பற்றிய உலகளாவிய அறிக்கை-2020
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் (IDMC) 2020 என்ற இடப்பெயர்வு பற்றிய உலகளாவிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. முக்கிய விவரங்கள்:
  • அந்த அறிக்கையின்படி, மோதல்கள் மற்றும் பேரழிவுகள் காரணமாக உலகில் சுமார் 33.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்வுகளை எதிர்கொண்டனர். அவர்கள் 145 நாடுகளில் பரவியுள்ளனர்.
  • 2019 ஆம் ஆண்டில், சுமார் 75% பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில், 95% வெள்ளம் மற்றும் புயல் போன்ற வானிலை அபாயங்களால் ஏற்பட்டது.
  • தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவில் 2.6 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், மோதல்களால் நாட்டில் சுமார் 19,000 பேர் இடம்பெயர்ந்தனர். அவை முக்கியமாக மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா பகுதிகளில் அதிகமாக இருந்தன.
  • GRID: Global Report on Internal Displacement, IDMC: Internal Displacement Monitoring Centre.
சீனாவின் ஒரு பகுதி அக்சாய் சின்: WHO வரைபடம் வெளியீடு
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஏப்ரல் 28, 2020 அன்று வெளியிட்ட உலக வரைபடத்தில், லடாக் பிரதேசத்தைச் சேர்ந்த அக்சாய் சின் (Aksai Chin) பகுதியை சீனாவின் ஒரு பகுதியாக புள்ளியிடப்பட்ட கோடு மற்றும் வண்ணக் குறியீட்டைக் கொண்டு காட்டியுள்ளது. 
  • பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை (PoK) புள்ளியிடப்பட்ட கோடுகளுடன் சர்ச்சைக்குரிய பிரதேசமாக குறித்துள்ளது.
  • WHO: World Health Organisation, PoK: Pakistan-occupied Kashmir.
இந்தியாவுக்கு ADB 1.5 பில்லியன் டாலர் கடன் உதவி
  • ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இந்தியாவுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ .11,400 கோடி) கடன் வழங்க ஏப்ரல் 28-அன்று, ஒப்புதல் அளித்தது. 
  • கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டுள்ள பொருளாதார நிலையில் தொழிலாளர்கள் பொது மக்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • ADB: Asian Development Bank. 
சவுதி அரேபியாவில் சிறார்களுக்கான மரண தண்டனை - கைவிடல்
  • சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் முன்னெடுப்பில் சிறார்களுக்கான மரண தண்டனை முடிவுக்கு வந்தது. அதன்படி 18 வயதுக்குட்பட்டோர் ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக அபராதம், சிறை, சமூகசேவை ஆகியவற்றை வழங்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய நிகழ்வுகள்
டைம்ஸ் உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசை 2020: IIT கரக்பூர் 57-வது இடம்
  • டைம்ஸ் உயர் கல்வி (THE) நிறுவனத்தின் 2-வது பதிப்பு, 2020 உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசை (THE Impact Rankings 2020), ஏப்ரல் 22-அன்று வெளியிடப்பட்டது. இதில் 85 நாடுகளைச் சேர்ந்த 766 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. 
  • இந்த தரவரியையின் படி, கரக்பூர் இந்தியன் தொழில்நுட்ப கழகம் (IIT Kharagpur), உலகளாவிய அளவில் 87.9 மதிப்பெண்களுடன் 57-வது இடம் பெற்றுள்ளது. 
  • THE: Times Higher Education.
பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்வு - ஏப்ரல் 27, 2020
  • பிரதமர் மோடி ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று‘மனதின் குரல்’ என்ற பெயரில் வானொலி மூலம் உரையாற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 27 அன்று மாத ‘மனதின் குரல்’ நிகழ்வில் பிரதமரின் உரை விவரம்:
  • மத்திய, மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதையும் மருத்துவம், காவல்துறை, ரெயில்வே, விமானத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரின் பங்களிப்பு குறித்தும் குறிப்பிட்டார்.
  • Covidwarriors: அரசு covidwarriors.gov.in என்ற இணைய தளத்தை தற்போது அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் சமூகநல அமைப்புகளின் தொண்டர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் ஆகியோர் ஒரே தளத்தில் இணைக்கப்படுகின்றனர். 
பிளாஸ்மா தெரபி (CPT) சிகிச்சை தொடங்கிய இந்தியாவின் முதல் அரசு மருத்துவமனை 'KGMU'
  • உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் (KGMU), 2020 ஏப்ரல் 27-அன்று, COVID-19 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக நோயினின்று நீக்குகிற பிளாஸ்மா தெரபி (CPT) சிகிச்சையை தொடங்கியுள்ள இந்தியாவின் முதல் அரசு (அரசு) மருத்துவமனை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
  • KGMU: King George Medical University (Lucknow, Uttar Pradesh). CPT: Convalescent Plasma Therapy.
இந்தியாவில் கொரானா தொற்று பாதித்து குணமடைவோர் விகிதம் - 23.3% 
  • இந்தியாவில் கரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,869 ஆக உயர்ந்துள்ளதன் மூலம், நாட்டின் தொற்று பாதித்து குணமடைவோரின் விகிதம் 23.3% ஆக இருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை ஏப்ரல் 28-அன்று தெரிவித்துள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை ஆராய்ச்சிக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் - அரசு அறிவிப்பு
  • கொரோனா வைரசை குணப்படுத்த அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை. பிளாஸ்மா சிகிச்சை முறை, இன்னும் பரிசோதனை கட்டத்தில்தான் இருக்கிறது. பிளாஸ்மா சிகிச்சை உதவிகரமாக இருக்கும் என்பதற்கு விஞ்ஞானரீதியான ஆதாரம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. அதுவரை ஆராய்ச்சி நோக்கத்துக்காக மட்டுமே பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்த வேண்டும். மற்றவற்றுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் அடையாள அட்டை CSC மையங்களில் மேம்படுத்திக்கொள்ள அனுமதி 
  • நமது நாட்டு மக்களுக்கு 12 இலக்கங்களை கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதில் ஒருவரின் பெயர், முகவரி, சுய தகவல்கள் இடம் பெறுகின்றன. இந்த அட்டையை ஒவ்வொருவருக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்குகிறது.
  • மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறையின் சார்பில் நாடு முழுவதும் CSC என்று அழைக்கப்படுகிற 20 ஆயிரம் பொது சேவை 
  • மையங்களில் பொதுமக்கள் தங்கள் ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை மேம்படுத்திக்கொள்ளலாம் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏப்ரல் 28-அன்று அறிவித்துள்ளார். 
மகாராஷ்டிரா மாநில தலைமை செயலகம் - மூடல் 
  • மும்பையில் ‘மந்திராலயா’ என அழைக்கப்படும் மகாராஷ்டிரா மாநில அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றிய 4 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்ள்ளதால் டு இருக்கிறது. தலைமை செயலகம் ஏப்ரல் 28-முதல் 2 நாட்கள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு/விண்வெளி
பாதுகாப்புப் படைக்கான நிதி ஒதுக்கீடு-2019: இந்தியா 3-ஆம் இடம்
  • 2019-ஆம் ஆண்டில் உலக அளவில் பாதுகாப்புப் படைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கிய நாடுகள் பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின் சில விவரங்கள்:
  • 2019-ஆம் ஆண்டில் உலக நாடுகள் ரூ.134.19 லட்சம் கோடியை பாதுகாப்புக்காக செலவு செய்தன. இது 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.6 சதவீதம் அதிகமாகும். 2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உலக நாடுகளின் பாதுகாப்பு செலவு 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • அந்த தொகை உலக நாடுகளின் மொத்த உற்பத்தியில் (GDP) 2.2 சதவீதம் ஆகும். 
  • இந்த செலவு வரிசையில் இந்தியா மூன்றாம் இடம் பெற்றுள்ளது. இந்தியா 2019-இல் பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.98 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது. 
  • இது 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.8 சதவீதம் அதிகமாகும்).
  • முதல் 3 நாடுகள் பட்டியல்
    • நாடு - செலவு (ரூ.)
    1. அமெரிக்கா - ரூ.51.24 லட்சம் கோடி 
    2. சீனா -ரூ.18.27 லட்சம் கோடி 
    3. இந்தியா - ரூ.4.98 லட்சம் கோடி. 
நியமனங்கள்
மேகலாய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி - விஸ்வநாத் சோமாதா் 
  • மேகலாய மாநிலம் ஷில்லாங்கில் ஆளுநா் மாளிகையில் ஏப்ரல் 27-அன்று, மேகலாய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக விஸ்வநாத் சோமாதா் பதவியேற்றார். ஆளுநா் ததாகத் ராய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
  • அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விஸ்வநாத் சோமாதா் அண்மையில் மேகலாய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நியமித்தாா். 
ஒடிசா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி - முகமது ரஃபீக்
  • ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் ஆளுநா் மாளிகையில் ஏப்ரல் 27-அன்று, ஒடிசா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக முகமது ரஃபீக் பதவியேற்றார். ஆளுநா் கணேஷி லால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். 
  • நீதிபதி முகமது ரஃபீக், இதற்கு முன் மேகாலய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தாா்.
  • மேகாலய உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முகமது ரஃபீக் அண்மையில் ஒடிசா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நியமித்தாா். 
மத்திய அரசின் துறை செயலாளர்கள் - பதவி நீட்டிப்பு, மாற்றங்கள்
  • பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு, ஏப்ரல் 26-அன்று மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பதவி வகித்து வந்த முக்கிய அதிகாரிகளுக்கு பதவி நீட்டிப்பு மற்றும் துறை மாற்றங்களும் அறிவித்துள்ளது. அவற்றின் விவரம்:
  • பதவி நீட்டிப்பு
    • பிரீத்தி சுதன் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் 
  • துறை மாற்றங்கள்
    • ராஜேஷ் பூஷண் - சிறப்பு அதிகாரி, சுகாதார துறை 
    • நாகேந்திரநாத் சின்கா - ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் 
    • பிரதீப் குமார் திரிபாதி - உருக்குத்துறை செயலாளர் 
    • தருண் கபூர் - பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத்துறை செயலாளர்
    • தருண் பஜாஜ் - பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் 
    • அனிதா கர்வால் - கல்வி மற்றும் எழுத்தறிவு துறை செயலாளர். 
ஹட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக 'சிவ் தாஸ் மீனா' நியமனம் 

  • இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (MoHUA) கூடுதல் செயலாளர், சிவ் தாஸ் மீனா (Shiv Das Meena) வீட்டுவசதி 
  • மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்தின் (HUDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக 2020 ஏப்ரல் 21-அன்று நியமிக்கப்பட்டுள்ளார். 
  • MoHUA: Ministry of Housing and Urban Affairs, HUDCO: Managing Director of Housing and Urban Development Corporation.
மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி - தீபாங்கா் தத்தா

  • மும்பை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபாங்கா் தத்தா (Justice Dipankar Dutta) ஏப்ரல் 28-அன்று பதவியேற்றாா். மும்பை ஆளுநா் மாளிகையில் மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
  • கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தீபாங்கா் தத்தாவை மும்பை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக  உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைப்படி குடியரசுத் தலைவா் அண்மையில் நியமித்தார். 
  • மும்பை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த பூஷண் தா்மாதிகாரி ஏப்ரல் 27அன்று ஓய்வு பெற்றாா். 
பொருளாதார நிகழ்வுகள்
தொழிலதிபா்கள்யகடன் மோசடியாளா்கள் - ரூ.68,607 கோடி கடன்கள் - RBI நீக்கம்

  • வங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்டவர்கள் மற்றும் தொழிலதிபா்கள் தங்களது நிறுவனங்களின் மீது பெற்ற ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டதாக இந்திய ரிசா்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.
  • தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இத்தகவல் பெறப்பட்டுள்ளது.
  • 2019 செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி, 50 தொழிலதிபா்களின் கடன் கணக்கு விவரங்கள், 'சாகேத் கோகலே' என்பவரின் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இத்தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இணை வர்த்தக ஏற்பாடுகள்: RBI அனுமதி பெற்ற முதல் வங்கிசாரா நிறுவனம் 'டிரான்ஸ்கார்ப்'

  • இணை வர்த்தக ஏற்பாடுகளில் (Co-Branding Arrangements) நுழைவதற்கு ரிசர்வ் வங்கியின் (RBI nod) அனுமதியைப் பெற்ற முதல் வங்கி சாரா நிறுவனம் என்ற பெயரை டிரான்ஸ்கார்ப் (TIL) நிறுவனம் பெற்றுள்ளது. 
  • டிரான்ஸ்கார்ப், முன்னணி அந்நிய செலாவணி மற்றும் கட்டண தீர்வுகள் வழங்கும் சர்வதேச டிரான்ஸ்கார்ப் நிறுவனம் ஆகும்.
  • தற்போதைய COVID-19 தொற்று காரணமாக 35 லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் இணைய நுழைவாயில்களில் ப்ரீபெய்ட் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
  • TIL: Transcorp International Limited.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி 50,000 கோடி கடனுதவி

  • மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  • அமெரிக்காவின் பிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்டு நிறுவனம் அதன் 6 கடன் அளித்த திட்டங்களை மூடிவிட்டது. இதனால் ஏற்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்த மத்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி கடனுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.
  • நிலையான ரெப்போ விகிதத்தில் 90 நாட்கள் ரெப்போ நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
2020-இல் ஆசிய-பசிபிக் பொருளாதார வளர்ச்சி 2.7% குறையும் - APEC கணிப்பு

  • 2020 ஏப்ரல் 27-அன்று, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு செயலகம் வெளியிட்ட 'கொரானாவின் மையம் ஆசிய-பசிபிக் பிராந்தியம்' (APEC in the Epicentre of COVID-19) என்ற அறிக்கையின்படி, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) பிராந்தியத்தின் வளர்ச்சி 2020-ஆம் ஆண்டில் 2.7% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கணிப்பு வெளியிட்டுள்ளது.
  • 2009 உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் மிகவும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாக இது கருதப்பட்கிறது. 2019 இல் ஏற்பட்ட 3.6% வளர்ச்சியுடன் இது ஒப்பிடப்படுகிறது.
  • APEC: Asia-Pacific Economic Cooperation.
கொரோனா தொற்று: நிதி திரட்டும் வாய்ப்புகள் குறித்த 'FORCE' அறிக்கை

  • மத்திய வருமாய் துறை அதிகாரிகள் (IRS) சங்கம், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக நிதி திரட்டும் வாய்ப்புகள் குறித்த ‘போர்ஸ்’  (FORCE) என்ற பெயரிலான அறிக்கையை மத்திய நேரடி வரிகள் வாரிய (CBDT) தலைவர் பி. சி. மோடியிடம் அளித்தது.
  • அந்த அறிக்கையின் முக்கிய விவரங்கள்:
  • ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரியை 40 சதவீதமாக உயர்த்தலாம்.
  • ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு அதிகமாக உள்ள பணக்காரர்களுக்கு மீண்டும் செல்வ வரியை wealth tax அறிமுகம் செய்யலாம்.
  • இந்தியாவில் செயல்படுகிற வெளிநாட்டு நிறுவனங்களுக்குமிகை வரியாக (Surcharge) ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான வருமானத்துக்கு 2 சதவீதமும், ரூ.10 கோடிக்கு அதிகமான வருவாய்க்கு 5 சதவீதமும் விதிக்கப்படுகிறது, இதை உயர்த்தலாம்.
  • கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக கூடுதல் நிதி திரட்டுவதற்கு வசதியாக ‘கொரோனா செஸ்’ (Carona Cess) என்ற பெயரில் கூடுதல் வரி வசூலிக்கலாம். 
  • IRS: Indian Revenue Service, CBDT: Central Board of Direct Taxes, FORCE: Fiscal Options and Response to the COVID-19 Epidemic.
ஆந்திர அரசின் பூஜ்ஜிய வட்டி கடன் திட்டம் - தொடக்கம்

  • ஆந்திரப்பிரதேச மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கான (SHGs) பூஜ்ஜிய வட்டி கடன் திட்டத்தை (Zero Interest Loan Scheme) மீண்டும் தொடங்கியுள்ளார். இதன்மூலம் 8.78 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட பெண் சுய உதவிக்குழுவினர் 1,400 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவியை பெறுவர். 
  • SHGs: Self-Help Groups.
மாநாடுகள்
பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்-2020

  • பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த பிரிக்ஸ் (BRICS Foreign Ministers Meet 2020) கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் காணொலி முறையில் ஏப்ரல் 28-அன்று நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் (S Jaishankar) பங்கேற்றார். இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் உள்பட 85 நாடுகளுக்கு இந்தியா மருந்துப் பொருள்களை வழங்கியுள்ளது என தெரிவித்தார்.
  • பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்காக பிரிக்ஸ் நாடுகள் 15 பில்லியன் டாலர் ($15 billion) வழங்க உறுதியளித்துள்ளன.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்

சூறாவளிகளுக்கான169 புதிய பெயர்கள்- வெளியீடு 

  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (Indian Ocean Region) உருவாகும் வெப்பமண்டல சூறாவளிகளுக்கு (Tropical Cyclones), 169 புதிய பெயர்களை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ளது.
  • 13 நாடுகள், 13 பெயர்கள்: இந்தியா, இலங்கை, மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஏமன், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஈரான் ஆகிய மொத்தம் 13 நாடுகள் தலா 13 பெயர்கள் வீதம் சூறாவளிகளுக்கான 169 பெயர்களை வழங்கியுள்ளன.
  • 62 கி.மீ. வேகம்: வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு வெப்பமண்டல புயல் மணிக்கு 62 கி.மீ. வேகத்தில் வீசும்போது பெயரிடும் செயல்முறையை செயல்படுத்துதப்படும்.
  • உலக வானிலை அமைப்பு நடத்திய வெப்பமண்டல சூறாவளிகள் குழுவின் (PTC) 45-வது அமர்வின் போது சூறாவளிகளின் புதிய பட்டியலை உருவாக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
  • புதுதில்லியில் பிராந்திய சிறப்பு வானிலை ஆய்வு மையம் (RSMC) வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடல் பகுதியில் உள்ள சூறாவளிகளுக்கு பெயரிடும் பொறுப்பு அமைப்பாகும்.
  • வானிலை ஆய்வு மையம் அறிவித்த புயல்களில் பெயா்ப் பட்டியலில் 2 தமிழ்ப் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்ப் பெயா்கள் இடம்பெற்றிருப்பது இதுவே முதல்முறை ஆகும். அவை:
    • 'முரசு' எனும் பெயா், பட்டியலில் 28-ஆவது இடத்தில் உள்ளது.
    • 'நீா்' எனும் பெயரும் 93-ஆவதாக இடம்பெற்றுள்ளது. 
  • புயல்களுக்கு பெயரிடும் முறை (2004)
    • வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் ஓா் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 புயல்கள் உருவாகும். இவ்வாறு உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறை 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் முதல் அட்டவணையை தயாரித்த போது 8 நாடுகள் சாா்பில் 8 பெயா்கள் வீதம் 64 பெயா்கள் வழங்கப்பட்டன.
    • 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த புயல்களுக்கு பட்டியலிலிருந்த 63 பெயா்களும் வைக்கப்பட்டன. இதில் தாய்லாந்து சாா்பில் வழங்கப்பட்ட ஆம்பான் (அம்ல்ட்ஹய்) என்ற பெயா் மட்டும் மீதமிருக்கிறது.
  • IMD: Indian Meteorological Department, PTC: Panel on Tropical Cyclones, RSMC: Regional Specialize Meteorological Centre.
கங்கையின் நீர் தரத்தை மேம்படுத்தியுள்ள பொது முடக்கம்

  • 2020 ஆம் ஆண்டு மார்ச் 22-முதல் நாட்டில் விதிக்கப்பட்ட பொது முடக்கம் (Lock Down), காற்றின் தரம் மற்றும் நீரின் தரத்தை மேம்படுத்தியுள்ளது. 
  • மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) கூற்றுப்படி, 40 மில்லியன் லிட்டர் கழிவு நீர் நீர்நிலைகளில் கலக்கிறது. 
  • கங்கை நதியின் 36 கண்காணிப்பு மையங்களில், 27 தற்போது தூய்மையாகவும் வனவிலங்கு மற்றும் மீன்வள க்கும் பொருத்தமானவை என்று மாசு 
  • கட்டுப்பாட்டு வாரிய நிகழ்நேர கண்காணிப்பு தரவுகள் கூறுகின்றன.
  • பொது முடக்கத்திற்கு முன் இருந்த 3.8 மி.கி. நீர் மாசுடன் ஒப்பிடும்போது தற்போது 6.8 மி.கி. (mg/litre) அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது..
  • CPCB: Central Pollution Control Board.
அறிவியல் தொழில்நுட்பம்
ஆரோக்கிய சேது செயலி - பதிவிறக்கம் - கட்டாயம்

  • கொரானா நோய்த்தொற்று குறித்த தகவல்களை அறியவும், அருகில் உள்ள அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை? என்பதை அடையாளம் காணவும் 'ஆரோக்கிய சேது செயலி'யை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 
  • மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் 'ஆரோக்கிய சேது' செயலியை தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் ‘இ-காரியாலய்’ 

  • கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்காக, அதன் கோப்புகள் மற்றும் ஆவணங்களின் இயக்கத்திற்காக ‘இ-காரியாலய்’ (e-karyalay) என்ற மின்னணு அலுவலக பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
தொற்று நோயால் இறப்பு - உடல் அடக்கம் தொடர்பான் அவசர சட்டம் 

  • தமிழ்நாடு அரசினால், அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதை தடுத்தால், தமிழ்நாடு 
  • பொது சுகாதாரத் சட்டம், 1939, பிரிவு 74-ன்படி அபராதம் உள்பட அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏப்ரல் 26-அன்று பிறப்பித்துள்ளது.
மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு

  • தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று 6-வது இடத்தில் உள்ள நிலையில், சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்ரல் 26-அன்று முதல் 4 நாட்களும், இதேபோல் சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஏப்ரல் 28 வரை 3 நாட்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறை: பெண்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

  • குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள், உதவி எண்கள் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர்களை அணுகலாம்' என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உதவி எண்கள்: 181; 1091, 112.
விளையாட்டு நிகழ்வுகள்
அமெரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் 'ஜே. அருண் குமார்' 

  • அமெரிக்க கிரிக்கெட் அணியின் (USA national team) பயிற்சியாளராக கர்நாடக அணியின் முன்னாள் வீரர் ஜே. அருண் குமார் (J. Arunkumar) நியமிக்கப்பட்டுள்ளார். இரு வருடங்களுக்குப் பணியாற்றுவார்.
  • ஜே. அருண் குமார் (45 வயது), 1993-94-ல் அறிமுகமாகி, 2008 வரை முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 
  • இவர் பயிற்சியாளராக இருந்தபோது கர்நாடக அணி ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, இரானி கோப்பை போன்ற பட்டங்களை வென்றுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் அணியின் உதவி பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். 
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் - 3 ஆண்டுகள் தடை

  • பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு, சூதாட்டப் புகார காரணமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 3 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை 'சனா மிர்' - ஓய்வு அறிவிப்பு

  • பாகிஸ்தானின் கிரிக்கெட் வீராங்கனை சனா மிர் ஏப்ரல் 25-அன்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
  • 15 வருடங்களாக பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வந்த 34 வயது சனா மிர், 226 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 
  • 2009 முதல் 2017 வரை 137 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தார்.
முக்கிய நபர்கள்
நடிகர் இர்பான் கான் - மறைவு

  • பாலிவுட் நடிகர் இர்பான் கான் (வயது 54) நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை புற்றுநோயால் மும்பை மருத்துவமனையில் ஏப்ரல் 29-அன்று உயிரிழ்ந்தார்.
  • 1988-ல் சலாம் பாம்பே என்ற இந்தி படத்தில் இர்பான் கான் அறிமுகம் ஆன இவர் வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்திலும் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்த, இர்பான் கான் பாலிவுட் மட்டுமல்லாது 'லைஃப் ஆஃப் பை', ஜுராசிக் வேர்ல்டு போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
  • 2011-ம் ஆண்டு வெளியான பான் தோமர் சிங் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.
கொரோனா வைரஸ் ஆராய்ச்சி 'இந்திய விஞ்ஞானிகள்'

  • கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் உலகத்துக்கு வழிகாட்டியாக செயல்படும் சில இந்திய விஞ்ஞானிகள் குறித்த சிறு தகவல்கள்:
டாக்டர் எஸ்.எஸ்.வாசன்

  • காமன்வெல்த் அறிவியல், தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியாக இருப்பவர் இந்தியரான டாக்டர் எஸ்.எஸ்.வாசன். இவர் ஆஸ்திரேலியாவில் விலங்கு சுகாதார ஆய்வகத்தில் ஆபத்தான நோய்க்கிருமி குழுவை வழிநடத்தி வருகிறார். 
சுனேத்ரா குப்தா

  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியை சுனேத்ரா குப்தா. இவர் கொரோனா வைரசின் சிறப்பியல்புகளை பகுப்பாய்வு செய்வதற்கான ஆராய்ச்சியை இங்கிலாந்து நாட்டில் முன்னெடுத்து செய்து வருகிறார்.கொரோனா வைரஸ் தொற்றுநோயின் குணாதிசயங்கள் பற்றிய ஊகங்களை அடிப்படையாக கொண்ட இந்த ஆராய்ச்சி, சக மதிப்பாய்வின் கீழ் உள்ளது. 
அரிஞ்சய் பானர்ஜி

  • ‘கூகுள்’ அறிஞர் என்று அழைக்கப்படுகிற மேக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான இந்திய டாக்டர் அரிஞ்சய் பானர்ஜி. இவர் பல ஆற்றலாளர்களை தன்னிடம் கொண்டுள்ள கனடா சன்னிபிருக் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு அங்கமும் ஆவார்.
  • அரிஞ்சய் பானர்ஜி மற்றும் அவரோடு சேர்ந்து பணியாற்றும் குழுவினரால் தொற்றுநோய்க்கு காரணமான கொரோனா வைரசை தனிமைப்படுத்த முடிந்திருக்கிறது.
எழுத்தாளர் பிரபஞ்சன் 

  • எழுத்தாளர் பிரபஞ்சன் பிறந்த தினம் - ஏப்ரல், 27
  • புதுச்சேரியில் 1945 ஏப்ரல் 27-அன்று பிறந்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். 
  • தஞ்சாவூர் கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் ஆசிரியராக பணியாற்றியவர்.
  • குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். 46-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார்.
  • 1995-ல் இவரது வரலாற்று புதினமான வானம் வசப்படும் ,நூலுக்கு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • உடல்நலக்குறைவால் 2018 டிசம்பர் 21-ம் தேதி காலமானார். 
நாடக கலைஞர்- உஷா கங்குலி 

  • இந்தி நாடகத்துறையில் பணியாற்றிய புகழ்பெற்ற நாடக இயக்குனர், நடிகர் மற்றும் ஆர்வலர் உஷாகங்குலி (Usha Ganguly), 2020 ஏப்ரல் 23-அன்று தனது 75 வயதில் கொல்கத்தாவில் காலமானார்.
முக்கிய தினங்கள்
  • ஏப்ரல் 28 - வேலையிடத்தில் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்திற்கான சர்வேதேச தினம் (World Day for Safety and Health at Work)
  • 2020 கருப்பொருள்: 'Safety and health at work can save lives'. 
ஏப்ரல் 29 - சர்வதேச நடன தினம் 
  • ஆண்டுதோறும் ஏப்ரல் 29 அன்று, சர்வதேச நடன தினம் (International Dance Day) அனுசரிக்கப்படுகிறது. இது நவீன பிரஞ்சு நடனக் கலைஞரான ஜீன்-ஜார்ஜ் நோவெர்ரின் பிறந்தநாளை முன்னிட்டு கடைபிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் 30 - சர்வதேச ஜாஸ் தினம் (International Jazz Day).
Download this article as PDF Format
Previous Post Next Post