TNPSC Current Affairs April 26-27, 2020 - Download PDF

Current Affairs and GK Today 26 and 27 April, 2020 

TNPSC Current Affairs April 2020 - Daily Download PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge April 26th and 27th, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

GKTAMIL Current Affairs: Our Current Affairs April 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.

TNPSC Current Affairs April 26-27, 2020 - Download PDF
TNPSC Current Affairs April 26-27, 2020 - Download PDF
இந்திய நிகழ்வுகள்
இ-கிராம சுவராஜ் வலைதளம் & சுவாமித்வா திட்டம் - தொடக்கம்
  • 2020 ஏப்ரல் 24-அன்று, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை (National Panchayati Raj Day) முன்னிட்டு, இந்தியாவின் கிராமங்களில் வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி சுவாமித்வா திட்டத்தையும் ஒருங்கிணைந்த இ-கிராம சுவராஜ் வலைதளத்தையும் (e-Gram Swaraj portal) மொபைல் செயலி பயன்பாட்டையும் அறிமுகப்படுத்தினார்.
  • இ-கிராம் வலைதளம் (e-Gram Swaraj portal):
    • பஞ்சாயத்து ராஜ் அமைச்சின் புதிய திட்டமான இ-கிராம சுவராஜ் வலைதளம், கிராம பஞ்சாயத்துகளுக்கு அவர்களின் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்தை (GPDP) தயாரித்து செயல்படுத்த ஒரே இடைமுகத்தை (Interface) வழங்குகிறது. .
  • சுவாமித்வா திட்டம் (Swamitva Scheme):
    • சுவாமித்வா (இதன் பொருள் உரிமையாளர்) திட்டம் கிராமப்புற இந்தியாவிற்கு ஒருங்கிணைந்த சொத்து சரிபார்ப்பு தீர்வை (Property Validation Solution) வழங்குகிறது. 
    • இது கிராமங்களில் உள்ள சொத்துக்களை படவிவரணையாக்கம் (Mapping) செய்வதில் ட்ரோன்களை (Drones) பயன்படுத்தவுள்ளது.
  • GPDP: Gram Panchayat Development Plan.
உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள் 2016 - சிறு தகவல் 
  • கொரானா வைரஸ் (COVID-19 waste) கழிவுகளை கையாளுதல், சேமித்தல் போக்குவரத்து மற்றும் அகற்றுவது ஆகியவற்றை உன்னிப்பாக கண்காணிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
  • 2016-ஆம் ஆண்டின் உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள்படி (Biomedical Waste Management Rules 2016) தொற்று நோய்களால் உருவாகும் கழிவுகளை கையாள உத்தரவிட்டுள்ளது.
  • NGT: National Green Tribunal.
வங்கிச் சேவைகள் பொதுப் பயன்பாட்டு சேவையாக மாற்றம் 
  • இந்திய அரசு ஏப்ரல் 25-அன்று, தொழில்துறை தகராறு சட்டத்தின் கீழ் (Industrial Disputed Act 1947) அக்டோபர் 21 ஆம் தேதி வரை வங்கித்துறைச் சேவைகள் பொது பயன்பாட்டு சேவையாக (Public Utility Service)அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • வங்கித் துறையின் ஊழியர்களின் வேலைநிறுத்தங்களைத் தடுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
FRBM சட்ட உட்பிரிவுகளை மாநிலங்கள் பயன்படுத்த 'நிதி ஆணையம்' அறிவுறுத்தல்
  • கொரானா வைரசுக்கு (COVID-19) எதிராக போராடுவதற்கு கூடுதல் ஆதாரங்களை திரட்டுவதற்காக நிதி பொறுப்பு பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் (FRBM) உட்பிரிவுகளைப் பயன்படுத்துமாறு, 2020 ஏப்ரல் 24-அன்று நிதி ஆணையம் (Finance Commission) மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.
  • மாநிலங்களுக்கன தனி FRBM சட்டம் உள்ளது. மத்திய மற்றும் மாநில FRBM சட்டங்களுக்கு இடையிலான நிதிப் பற்றாக்குறையின் வரம்பு 3% ஆகும். இச்சட்டப்படி அரசாங்கங்கள் பற்றாக்குறையை 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த முடியும்.
  • நிதி பொறுப்பு பட்ஜெட் மேலாண்மை சட்டம் (FRBM), ஆகஸ்ட் 26, 2003 அன்று அமலுக்கு வந்தது.
  • FRBM: Fiscal Responsibility and Budget Management) Act.
டைம்ஸ் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் 2020
  • 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை நீா்வளம், சுகாதாரம் உள்ளிட்ட 17 பிரிவுகளின் கீழ் தற்போது டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
  • மொத்தம் உலகளவில் 330 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.
  • இந்தப் பட்டியலில் நீா்வள ஆராய்ச்சிப் பிரிவில் தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் 70 மதிப்பெண்களைப் பெற்று, 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 
  • இதே பிரிவில் IIT காரக்பூா் 4-ஆம் இடத்தையும், சென்னை IIT 32-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
  • தொழிற்சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் சென்னை IIT 16-ஆவது இடம் பிடித்துள்ளது. 
  • ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி 301 முதல் 400 இடங்களுக்குள்ளும், அண்ணா பல்கலைக்கழகம் 401 முதல் 600 இடத்துக்குள்ளும் வந்துள்ளன.
  • டைம்ஸ் நிறுவனம் வெளியிடும் உலக தரவரிசைப் பட்டியலில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் அதில் பங்கேற்க போவதில்லை என்று சென்னை, காரக்பூா் உள்ளிட்ட 7 ஐஐடி.க்கள் அண்மையில் கூட்டாக அறிவித்தன.
விருதுகள்
பஞ்சாயத்து விருதுகள் 2020 
  • 2020 ஏப்ரல் 24-அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலத்தின் 3 கிராம பஞ்சாயத்துகளுக்கு கிராமப்புற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் சிறந்து விளங்கியதற்காக 2020-ஆம் ஆண்டின் தேசிய பஞ்சாயத்து விருதுகள் (Panchayat Awards 2020) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. 
  • பஞ்சாயத்துகள் (ஜம்மு-காஷ்மீர்) - விருதுகள்
    • ஜமோலா லோயர், ராஜோரி மாவட்டம்
    • டாங்ரி, ராஜோரி மாவட்டம்
    • சலூரா பி, பாரமுல்லா மாவட்டம்
  • பஞ்சாயத்துகள் (ஒடிசா) - விருதுகள்
    • பதபோர்சிங்கி, பெலகுந்தா தொகுதி - நட்பு கிராம பஞ்சாயத்து விருது 
    • போடாமாரி, சனகேமுண்டி தொகுதி - நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ் கிராம சப புராஸ்கர் விருது
    • கைஞ்சபூர், கஞ்சம் தொகுதி - கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்ட விருது
நியமனங்கள்
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் - சஞ்சய் கோத்தாரி
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (CVC) சஞ்சய் கோத்தாரி (Sanjay Kothari), ஏப்ரல் 25-அன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நகுடியரசுத் தலைவர் முன்னிலையில் அவர் உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
  • CVC: Central Vigilance Commissioner.
மாநாடுகள்
SAARC சுகாதார அமைச்சர்கள் மெய்நிகர் மாநாடு-2020
  • கொரோனா வைரஸ் தொற்றுநோயைச் சமாளிக்க பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக 2020 ஏப்ரல் 23-அன்று, தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (SAARC) சுகாதார அமைச்சர்கள் மெய்நிகர் மாநாட்டை (Virtual Conference) பாகிஸ்தான் நடத்தியது. 
  • இம்மாநாட்டில் இந்தியா சார்பில் இந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் ராஜீவ் கார்க் (Rajiv Garg) பங்கேற்றார்.
  • இந்த கூட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமரின் சுகாதார சேவைகள் தொடர்பான சிறப்பு உதவியாளர் டாக்டர் ஜாபர் மிர்சா (Dr Zafar Mirza) தலைமை வகித்தார், சார்க் பொதுச்செயலாளர் எசலா ருவான் வீரகூன் (Esala Ruwan Weerakoon) கலந்து கொண்டார்.
  • SAARC: South Asian Association for Regional Cooperation.
அறிவியல் தொழில்நுட்பம்
கொரோனா நோய்த்தொற்றைக் கணிக்கும் 'PRACRITI' டாஷ்போர்ட்
  • IIT-டெல்லி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுகள் பரவுவதைக் கணிக்க இணையம் அடிப்படையிலான 'PRACRITI' என்ற டாஷ்போர்டை (Dashboard) உருவாக்கியுள்ளனர்.
  • PRACRITI: Prediction and Assessment of Corona Infections and Transmissions in India.
பாதுகாப்பு/விண்வெளி
30-வது ஆண்டை நிறைவு செய்த 'ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி'
  • அமெரிக்க விண்வெளி அமைப்பான NASA-வின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி (Hubble Space Telescope) தனது 30 ஆண்டு நிறைவு தினத்தை 2020 ஏப்ரல் 24-அன்று, கொண்டாடியது.
  • இந்த ஹப்பிள் தொலைநோக்கி, உலகில் மிக நீண்ட காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் விண்வெளி தொலைநோக்கிகளில் ஒன்றாகும்
  • ஹப்பிள் விண்வெளி ஆய்வகம் (Hubble Space Observatory) ஐரோப்பிய விண்வெளி அமைப்புடன் (European Space Agency) இணைந்து இயங்கப்படுகிறது.
  • NASA: National Aeronautics and Space Administration.
19 விண்மீன் சிறுகோள்கள் கண்டுபிடிப்பு 
  • ஜூபிடர் (Jupiter) மற்றும் நெப்டியூன் (Neptune) கோள்களுக்கு இடையில் 19 விண்மீன் சிறுகோள்கள் (Interstellar Asteroids) பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவை 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலத்தில் இணைந்ததாக நம்பப்படுகிறது. 
  • இவை ஜூபிடர் மற்றும் நெப்டியூன் இடையில் 'சென்டார்ஸ்' (Centaurs) என்ற சிறுகோள்கள் குழுவின் பகுதியாகும். 
  • 2017-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் விண்மீன் சிறுகோள் 'ஓமுவாமுவா' (Oumuamua) என்பது ஆகும்.
விளையாட்டு நிகழ்வுகள்
கிரிக்கெட்டில் "பால் டேம்பரிங்"க்கு புதிய செயற்கைப்பொருள் - பரிசீலனை
  • கிரிக்கெட் விளையாட்டில் பந்துகளை மெருகூட்டுவதற்கு (Ball Tampering) நடுவர்களின் மேற்பார்வையில் ஒரு செயற்கைப் பொருளைப் பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் குழு (ICC) பரிசீலித்து வருகிறது, ஏனெனில் பந்துகளை மெருகூட்டுவதற்கு பந்துவீச்சாளர்கள் உமிழ்நீரைப் பயன்படுத்துவது ஆபத்து என்பதை தற்போதைய கொரானா வைரஸ் தொற்று (COVID-19)பரவுவதை கருத்தில் கொண்டு உமிழ்நீருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
ஏப்ரல் 26 - உலக அறிவுசார் சொத்துரிமை தினம் 
  • ஆண்டுதோறும் ஏப்ரல் 26 அன்று உலக அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day) கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 உலக அறிவுசார் சொத்துரிமை தின கருப்பொருள்: 'Innovate for a Green Future'.
ஏப்ரல் 26 - சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம்
  • 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் விபத்து ஏற்பட்டது.
  • இதன் காரணமாக அணு உலை விபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம் (International Chernobyl Disaster Remembrance Day 26 April) கடைபிடிக்கப்படுகிறது.
  • இது உலகின் மிக மோசமான அணு உலை விபத்து எனக்கூறப்படும், இதன் விளைவாக மோசமான கதிரியக்கம் வெளிப்பட்டது. 
ஏப்ரல் 27 - சர்வதேச சிற்பிகள் தினம் 

ஏப்ரல் 27 - கால்நடை மருத்துவ தினம் 
  • உலக கால்நடை மருத்துவ தினம் (World Veterinary Day), ஆண்டுதோறும் ஏப்ரல் 27 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • 2020 உலக கால்நடை மருத்துவ தின கருப்பொருள்: ‘Environmental Protection'.
Download this article as PDF Format
Previous Post Next Post