TNPSC Current Affairs April 19, 2020 - PDF

Current Affairs and GK Today April 19, 2020

TNPSC Current Affairs April 2020 - Daily Download PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge April 19th, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

GKTAMIL Current Affairs: Our Current Affairs April 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
உலக நிகழ்வுகள்
ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஒளிர்ந்த 'இந்திய தேசியக்கொடி'
  • சுவிஸ் நாட்டில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில் 4,478 மீட்டர் உயரத்தில் பிரமிடு வடிவத்தில் அமைந்துள்ள மேட்டர்ஹார்ன் மலையில் அந்த நாட்டைச் சேர்ந்த ஒளிகலைஞர் ஜெர்ரி ஹாப்ஸ்டெட்டர், ஆயிரம் மீட்டர் அளவிலான இந்திய தேசியக்கொடியை ஒளிர விட்டிருக்கிறார்.
  • கொரோனா வைரசுக்கு எதிரான போரில் பல்வேறு நாடுகளுடன், சுவிஸ் நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.
இந்தியாவிடம் இருந்து 'ஹைட்ராக்சிகுளோரோகுயின்' பெறும் - 55 நாடுகள்
  • மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டது. இந்த மாத்திரைகள் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. 
  • இந்தியாவிடம் இருந்து இந்த மாத்திரைகளை 55 நாடுகள் பெறுகின்றன. சில நாடுகள் இந்த மாத்திரைகளை விலை கொடுத்து வாங்குகின்றன. சில நாடுகளுக்கு இந்தியா இலவசமாக வழங்குகிறது.
தீநுண்மியியல் ஆய்வகம், வூஹான், சீனா - சில தகவல்கள்
  • சீனாவின் வூஹான் நகரில் உள்ள தீநுண்மியியல் ஆய்வகத்தில் (Wuhan National Biosafety Laboratory) ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளால்தான், கரோனா நோய்த்தொற்று தற்செயலாக வெளியேறி, வூஹான் மக்களிடையே பரவியதாக தற்போது சந்தேகிக்கப்படுகிறது.
  • ஆய்வுக்காக தீநுண்மிகளை சேமித்துவைக்கும் ஆசியாவின் மிகப் பெரிய வைரஸ் வங்கி இந்த ஆய்வக வளாகத்தில் அமைந்துள்ளது. அங்கு 1,500-க்கும் மேற்பட்ட நுண்கிருமிகள் உயிருடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
  • அந்த ஆய்வகத்தில், மனிதா்களுக்கிடையே பரவி நோயை ஏற்படுத்தக் கூடிய, மிகவும் ஆபத்தான - எபோலா போன்ற - 4-ஆம் பிரிவு தீநுண்மிகளை சேமித்து வைப்பதற்கான ஆய்வகமும் உள்ளது. இதுதான், 4-ஆம் பிரிவு தீநுண்மிகளைக் கையாளும் ஆசியாவின் முதல் ஆய்வகமாகும்.
  • பிரான்ஸைச் சோ்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனா் அலாயின் மெரீயக்ஸின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட அந்த உயா்பாதுகாப்பு ஆய்வகம், 2015-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, தனது செயல்பாட்டை 2018-ஆம் ஆண்டில் தொடங்கியது.
இந்திய நிகழ்வுகள்
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு: முன்அனுமதி கட்டாயம்
  • கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக, பொருளாதார அளவில் பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களை அண்டை நாட்டு நிறுவனங்கள் அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் கையகப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து பெறப்படும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசின் தொழிலக மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) ஏப்ரல் 18-அன்று அறிவித்தது.
  • இந்தியாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் நாடுகளை (சீனா, பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மா், ஆப்கானிஸ்தான்) சோ்ந்த நிறுவனங்கள், குடிமக்கள் ஆகியோா் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ள அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டியது தற்போது கட்டாயமாக்கப்படுகிறது. 
பிளாஸ்மா சிகிச்சை - மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
  • கரோனா நோயாளிகளுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை (Plasma Therapy) அளிப்பதற்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
  • பிளாஸ்மா சிகிச்சை: குணமடைந்த கரோனா நோயாளியின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா எனும் திரவத்தை எடுத்து, கரோனா நோயாளியின் உடலில் செலுத்தும்போது, அவரது நோய் எதிா்ப்பாற்றல் அதிகரித்து விடும். இதையடுத்து, அந்த நோயாளி கரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைவாா்.
  • குஜராத் அரசு COVID-19 வைரஸ் தொற்றுக்காக பிளாஸ்மா சிகிச்சையுடன் மருத்துவ பரிசோதனையைத் தொடங்க உள்ளது.
CSIR-CFTRI தயாரிக்கும் 'புரோட்டீன் செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகள்'
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CFTRI) இணைந்து கரோனா நோயாளிகளுக்கு (COVID-19) புரதச்சத்து செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை (Protein Enriched Biscuits) தயாரித்துள்ளது.
  • அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) உள்ள COVID-19 நோயாளிகளுக்கு இந்த பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டுள்ளது..
  • CFTRI:Central Food Technological Research Institute.
  • AIIMS: All India Institute of Medical Science.
CSIR-NAL தயாரிக்கும் பாதுகாப்பு உடைகள்
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-தேசிய ஏரோஸ்பேஸ் ஆய்வகங்கள் (NAL) தனிப்பட்ட பாதுகாப்பு உடையை (Personal Protective Cover all suit) ஏப்ரல் 18, 2020 அன்று உருவாக்கியுள்ளது.
  • மல்டிலேயர் பாலிப்ரொப்பிலீன் ஸ்பன் polypropylene spun என்ற நெய்யாத துணி மூலம் இந்த பாதுகாப்பு உடை தயாரிக்கப்பட்டுள்ளது.
  • கொரானா வைரஸ் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, உள்நாட்டில் PPE உடைகள் தயாரிக்கப்படுவதை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொளளப்பட்டுள்ளது. 
  • இந்தியா தற்போது சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து PPE உடைகளை இறக்குமதி செய்கிறது.
  • PPE: Personal Protective Equipment, CSIR: Council of Scientific and Industrial Research, NAL:National Aerospace Laboratories.
கொரானா வைரஸ் மூலக்கூறு ஆய்வு: 'CDRI-KGMU' புரிந்துணர்வு ஒப்பந்தத்ம்
  • பல்வேறு கொரானா வைரஸ் நோயாளிகளிடமிருந்து பெறப்பட்டமாதிரிகளின் மூலக்கூறுகள் தொடர்பான ஆய்வுகளை (Sequence Virus Strains) செய்ய மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (CDRI), லக்னோ நகரில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் ஏப்ரல் 18, 2020 அன்று, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
  • இது “டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு கண்காணிப்பு” (Digital and Molecular Surveillance) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
  • CDRI: Central Drug Research Institute, KGMU: King George Medical University, MoU: Memorandum of Understanding.
பாதுகாப்பு/விண்வெளி
NASA-வின் 'Demo-2 Mission' திட்டம்
  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (NASA) தனது விண்வெளி வீரர்கள் கொண்ட விமானத்தை, மே 27 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பவுள்ளது. இது 9 ஆண்டுகளில் முதன்முதலாக பால்கன்-9 ராக்கெட் (Falcon-9) மூலம் இந்த விமானம் செலுத்தப்படவுள்ளது. 
  • ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் Demo-2 Mission என்று பெயரிடப்பட்டுள்ள இந்த 'வணிக குழு திட்டத்தில்' (Commercial Crew Programme) எலோன் மஸ்க் (Elon Musk) விண்வெளி நிறுவனத்தின் முதல் குழு புறப்படவுள்ளது. 
தமிழ்நாடு நிகழ்வுகள்
MGNREGA திட்டம் - தமிழ்நாட்டில் ஊதியம் ரூ. 256-ஆக உயர்வு
  • மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் (MGNREGA) எனப்படும் 100 நாட்கள் வேலைதிட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கான ஒருநாள் ஊதியத்தை ரூ.229-ல் இருந்து ரூ.256-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து இது அமலுக்கு வருகிறது.
  • MGNREGA: Mahatma Gandhi National Employment Guarantee Act.
துரித பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா தொற்று பரிசோதனை - தொடக்கம்
  • சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏப்ரல் 18-அன்று துரித பரிசோதனை கருவிகள் (Rapid Test Kit) மூலம் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனை தொடங்கியது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 'புதிய கிருமி நாசினி'
  • கொரோனா வைரசை அழிப்பதற்கு புதிய கிருமி நாசினியை (novel hand sanitizer) அண்ணா பல்கலைக்கழகத்தின் தேசிய சுகாதார கருவி வடிவமைப்பு (NHHID) மையம் கண்டுபிடித்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
ஐ.லீக் கால்பந்து: 'மோகன் பகான் அணி' சாம்பியன்
  • 2020 ஆண்டுக்கான ஐ.லீக் கால்பந்து போட்டியில் I-League மொத்தம் 11 அணிகள் பங்கேற்றன. 28 லீக் ஆட்டங்கள் எஞ்சி உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த சீசனுக்கான எஞ்சிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. 
  • புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்த மோகன் பகான் அணி (Mohun Bagan) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 
முக்கிய தினங்கள்
ஏப்ரல் 19 - உலக சைக்கிள் தினம்
  • ஆண்டுதோறும் ஏப்ரல் 19-ந்தேதி அன்று உலக சைக்கிள் தினம் (World Cycle Day) கடைபிடிக்கப்படுகிறது. 
  • சீனா, நெதர்லாந்து போன்ற மேலை நாடுகளில் போக்குவரத்திற்கான முதன்மை வாகனமாக சைக்கிள் திகழ்கிறது.
Download this article as PDF Format
Previous Post Next Post