GK Tamil Current Affairs March 9-10, 2020 (Tamil) - Download as PDF

 GK Tamil Current Affairs March 9-10, 2020 (Tamil) PDF

TNPSC Tamil Current Affairs March 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.
சர்வதேச நிகழ்வுகள்
இந்தியப் பெருங்கடல் ஆணையத்தில் இணைந்த 'இந்தியா' 
 • 2020 மார்ச் 6-ஆம் தேதி, இந்தியா இந்தியப் பெருங்கடல் ஆணையத்தில் (IOC) இணைந்தது. இந்தியா, பசிபிக் பகுதிக்கான பார்வையை வலுப்படுத்தவும், பிரான்ஸ் மற்றும் வெண்ணிலா தீவுகளுடனான மூலோபாய பங்காளித்துவத்தை அதிகரிக்கவும் 5-வது பார்வையாளராக சேர்ந்துள்ளது.
 • இந்தியப் பெருங்கடல் ஆணையம், 1982-ஆம் ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையகம் மொரிஷியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் பகுதியில் உள்ளது. 
 • IOC ஐந்து ஆப்பிரிக்க-இந்தியப் பெருங்கடல் நாடுகளை உள்ளடக்கியது, அவை: கொமொரோஸ், மடகாஸ்கர், மொரீஷியஸ், ரியூனியன் மற்றும் சீஷெல்ஸ்.
 • IOC: Indian Ocean Commission.
நிறுவன இயக்குநா் குழுவில் பெண்கள் பங்கேற்பு பட்டியல் 2020 
 • இந்தியாவுக்கு 12-ஆவது இடம்: நிறுவனங்களின் இயக்குநா் குழுவில் பெண்களின் பங்கேற்பு தொடா்பான தரப் பட்டியலில் இந்தியா உலகளவில் 12-ஆவது இடத்தில் உள்ளது. ஆய்வில் பட்டியலிடப்பட்ட 628 இந்திய நிறுவனங்களின் இயக்குநா் குழுவில் 55% பெண் இயக்குநா்கள் இடம்பெற்றிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. 
 • நிா்வாக குழுவில் பெண்களின் பங்கேற்பில் நாா்வே 40.72 % பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. ஸ்வீடன் (30.84%), பின்லாந்து (29.91), ஜொ்மனி (29.70%), தென் ஆப்பிரிக்கா (19.84%) மற்றும் அமெரிக்கா (20.41%) ஆகிய நாடுகள் உள்ளன.
இந்திய நிகழ்வுகள்
குரோனிகல்ஸ் ஆஃப் சேஞ்ச் சாம்பியன்ஸ் - புத்தகம் வெளியீடு 
 • மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி சமீபத்தில் வெளியிட்ட “குரோனிகல்ஸ் ஆஃப் சேஞ்ச் சாம்பியன்ஸ்” (Chronicles of Change Champions) என்ற புத்தகம், பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ (BBBP) திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் எடுக்கப்பட்ட 25 புதுமையான முயற்சிகளின் தொகுப்பாகும்.
 • இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-இல் ஹரியானாவின் பானிபட்டில் தொடங்கினார். இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, மனித வள மேம்பாடு மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் ஆகிய மத்திய அமைச்சகங்களின் முத்தரப்பு திட்டமாகும்.
 • BBBP: Beti Bachao Beti Padhao scheme.

7 பெண்கள் கையாண்ட பிரதமரின் சமூக வலைத்தள கணக்கு
 • சர்வதேச மகளிர் தினத்தையொட்டி (மார்ச் 8, 2020) பிரதமர் மோடியின் சமூக வலைத்தள கணக்குகளை தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்பட 7 பெண் சாதனையாளர்கள் கையாண்டனர். அவர்கள் விவரம்: 
 • ஆரிபா ஜான் (காஷ்மீர்), கலாவதி தேவி (உத்தரபிரதேசம்), வீணா தேவி (பீகார்), விஜயா பவார் (மராட்டியம்), கல்பனா ரமேஷ், சினேகா மோகன்தாஸ் (தமிழ்நாடு), மாளவிகா ஐயர் (தமிழ்நாடு).
சானிட்டரி நாப்கின்களுடன் அப்புறப்படுத்தும் பைகள் வழங்கு 'கட்டாயம்' 
 • சானிட்டரி நாப்கின்களுடன் அவற்றை அப்புறப்படுத்துவதற்கான பைகளையும் வழங்குவது தயாரிப்பு நிறுவனங்களுக்கு கட்டாயமாக்கப்பட உள்ளது, இந்த முறை 2021 ஜனவரி முதல் அமலுக்கு வர உள்ளது.
ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி
 • காஷ்மீர் மாநிலத்தின் நிதி மற்றும் கல்வி அமைச்சராக இருந்தவர் அல்தாப் புகாரி, இவர் ‘ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.
பாதுகாப்பு/ விண்வெளி 
இந்திய கடலோர காவல்படையின் மீட்புப் பயிற்சி ‘SAREX-2020
 • இந்திய கடலோர காவல்படையின் 9-வது தேசிய அளவிலான தேடல் மற்றும் மீட்புப் பயிற்சி ‘SAREX-2020’ என்ற பெயரில் கோவாவின் வாஸ்கோ கடற்பகுதியில், மார்ச் 5-7 நடைபெறுகிறது.
 • கடல்சார் மற்றும் வானூர்தி தேடல் மற்றும் மீட்பின் ஒத்திசைவு (HAMSAR) என்ற கருப்பொருளில் இந்த பயிற்சி நடக்கிறது.
 • HAMSAR: Harmonization of Maritime and Aeronautical Search and Rescue.
விருதுகள் 
ஔவையார் விருது 2020 - ரா. கண்ணகி (திருவண்ணாமலை) 
 • 2020-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ஔவையார் விருது, திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரா. கண்ணகிக்கு முதல்வர் பழனிசாமி மார்ச் 9-அன்று வழங்கி கௌரவித்தார்.
 • ரா.கண்ணகி, கடந்த 12 ஆண்டுகளாக திருவண்ணாமலை நகராட்சி, வார்டு 16- ல் மகளிர் சுய உதவி குழுக்களை ஊக்கப்படுத்துபவராக பணியாற்றி, 528 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயலாற்றி வருவதோடு, விழுதுகள் என்ற பகுதி அளவிலான கூட்டமைப்பையும் துவக்கி நடத்தி வருகிறார்.
நாரிசக்தி புரஸ்கார் விருது-2019
 • பெண்கள் சக்தி விருது: பல்வேறு துறைகளில் சேவையாற்றி வரும் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசு சாா்பில் ஆண்டுதோறும் அவா்களுக்கு பெண்கள் சக்தி விருது (நாரிசக்தி புரஸ்கார்) வழங்கப்பட்டு வருகிறது. 
 • 15 பெண்கள்: 2019-ஆம் ஆண்டில் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய 15 பெண்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், ‘பெண்கள் சக்தி’ விருதை மார்ச் 8-அன்று வழங்கி கௌரவித்தார்.விருது பெற்றவர்கள் விவரம்:
 • பீனா தேவி (43): பிகார் மாநிலம், முங்கோ் மாவட்டத்தைச் சோ்ந்த பீனா தேவி, காளான் வளா்ப்பு மூலம் பிரபலமானவா். 
 • மான் கௌர்: 103 வயதாகும் மான் கௌா், ‘சண்டீகரின் அதிசயம்’ என்று அழைக்கப்படுகிறார்.  
 • கலாவதி தேவி (58): உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரைச் சோ்ந்தவா் கலாவதி தேவி. கான்பூா் மாவட்டத்தில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டுவர எண்ணினார். இவரது முயற்சியால், அந்த மாவட்டத்தில் 4,000 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
 • பி.பூதேவி (40): ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளத்தைச் சோ்ந்த பூதேவி, பழங்குடியின பெண்கள், கணவரை இழந்தவா்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார். 
 • ஆரிஃபா ஜான் (33): ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த ஆரிஃபா ஜான், அழிந்துபோன நும்தா கைவினைப்பொருள் தயாரிப்புக் கலையை மீட்டெடுத்து, 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். 
 • சமி முா்மு (47): ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலரான சமி முா்மு, ‘லேடி டார்ஜான்’ என்று அழைக்கப்படுகிறார். 
 • நில்ஜா வாங்மோ (40): லடாக்கில் உணவகம் நடத்தி வரும் இவா், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உணவக மேலாண்மை பயிற்சி அளித்துள்ளார்.
 • ரஷ்மீ உா்த்வா்தேஷீ (60): நாகபுரியைச் சோ்ந்த ரஷ்மீ, மோட்டார் வாகனத் துறையில் ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பிரிவில் கடந்த 36 ஆண்டுகளாக உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல், இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசா்ச் அசோசியேஷனின் இயக்குநராக உள்ளார்.
 • தாஷீ, நுங்காஷி மாலிக் (28): உத்தரகண்டைச் சோ்ந்த இரட்டைச் சகோதரிகளான இவா்கள், 2013-இல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைத்தனா்.  
 • கௌஷிகி சக்ரவா்த்தி (38): ஹிந்துஸ்தானி இசையில் 15 ஆண்டுகள் அனுபவம் நிறைந்த பாடகியான இவா், காயல் மற்றும் தும்ரி பாணியில் புலமை மிக்கவா்.
 • அவனி சதுா்வேதி (26), பாவன்னா காந்த் (27), மோகனா சிங் ஜிதா்வால்(28): இவா்கள் மூவரும் இந்திய விமானப் படையில் சோ்ந்த முதல் பெண் வீரா்கள் ஆவா். இவா்கள், மிக்-21 ரக போர் விமானத்தை கடந்த 2018-ஆம் ஆண்டில் தனியாக இயக்கி சாதனை படைத்தனா்.
 • பாகீரதி அம்மா (105): கேரளத்தில் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் சோ்ந்து 4-ஆம் வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளார்.
 • காா்த்தியாயினி அம்மா (98): கேரளத்தைச் சோ்ந்த இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு 4-ஆம் வகுப்பு தோ்வில் 98 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து தோ்ச்சி பெற்றுள்ளார்.
இந்திய ஆக்கி சங்க விருதுகள் 2020
 • இந்திய ஆக்கி சங்கம் சார்பில் இந்த (2020) ஆண்டுக்கான விருதுகள் டெல்லியில் மார்ச் 8-அன்று வழங்கப்பட்டன அவற்றின் விவரம்:
  1. சிறந்த ஆக்கி வீரர் விருது: மன்பிரீத் சிங்
  2. சிறந்த வீராங்கனை விருது: ராணி ராம்பால் 
  3. தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது: ஹர்பிந்தர்சிங்
நியமனங்கள்
பேரிடர் குறைப்புக்கான தேசிய தளத்தின் தலைவராக 'அமித் ஷா' நியமனம் 
 • 2020 மார்ச் 6 அன்று, பேரிடர் குறைப்புக்கான தேசிய தளத்தை (NPDRR) மத்திய அரசாங்கம் புனரமைத்துள்ளது. பேரழிவு மேலாண்மை தொடர்பான பன்முக முடிவெடுக்கும் அமைப்பை உருவாக்கி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தலைவராக நியமித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 • NPDRR: National Platform for Disaster Risk Reduction
WIPO புதிய இயக்குநர் 'டேரன் டாங்'
 • உலக அறிவுசார் சொத்து (WIPO) அமைப்பின் புதிய இயக்குநர் ஜெனரலாக சிங்கப்பூரின் 'டேரன் டாங்' (Daren Tang) தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
மாநாடுகள்
ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழா 2020
 • கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர பொங்கல் திருவிழா மார்ச் 16-அன்று நடைபெறும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
ஹோலி பண்டிகை 2020
 • ஹோலி பண்டிகை, 2020 மார்ச் 9-அன்று கொண்டாடப்பட்டது.
மிசோரமின் வசந்தகால திருவிழா 'சாப்சார் குட்'
 • மிசோரம் மாநிலத்தின் மிகப்பெரிய வசந்தகால திருவிழாவான சாப்சார் குட் (Chapchar Kut), மார்ச் 6, 2020 அன்று கொண்டாடப்பட்டது.
அறிவியல் தொழில்நுட்பம்
SEBI அமைப்பின் 'SCORES' மொபைல் செயலி
 • ‘ஸ்கோர்ஸ்’ (SCORES) என்பது இந்திய பத்திர பரிவர்த்தனை வாரிய அமைப்பின் மொபைல் பயன்பாடு (Securities Exchange Board of India) ஆகும்.
 • IOS மற்றும் Android இயங்குதளங்களில் கிடைக்கக்கூடிய ‘SEBI SCORES’ என்ற மொபைல் செயலி முதலீட்டாளர்களின் புகார்களை இணையம் மூலம் செய்ய ஊக்குவிக்கிறது. 
சென்னை IIT-யின் 'AI ட்ரோன்கள்' 
 • கட்டுப்பாடற்ற ஆளில்லா ட்ரோன்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு (AI) நுட்பத்தில் இயங்கும் ட்ரோன்களை 'சென்னை (IIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனம்' உருவாக்கியுள்ளது.
 • புதிதாக உருவாக்கப்பட்ட ட்ரோன்கள் கட்டுப்பாடற்ற ட்ரோன்களின் GPS அமைப்பை ஹேக் செய்யலாம், இதன் மூலம் அதன் விமான பாதையை மாற்றவோ அல்லது பாதுகாப்பாக தரையிறக்கவோ இந்த AI ட்ரோன் உதவும்.
பொருளாதார நிகழ்வுகள் 
யெஸ் வங்கியின் 49% பங்கை வாங்கும் பாரத ஸ்டேட் வங்கி 
 • நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் யெஸ் வங்கியின் 49% பங்கை பாரத ஸ்டேட் வங்கி வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் அனுமதியளித்துள்ளது.
 • CRAR - சில தகவல்கள்: வங்கிகளின் இடா் அடிப்படையிலான மூலதன விகிதம் (CRAR), 8 % இருக்க வேண்டும் என்பது சா்வதேச விதிமுறை. இந்திய வங்கிகளின் CRAR 14.3 % உள்ளது. CRAR மதிப்பு 9 சதவீதத்தில் எப்போதும் இருக்க வேண்டியதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று ரிசா்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது, சா்வதேச அளவில் சிறந்த 100 வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கியும் இடம்பெற்றுள்ளது. , என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி சுப்ரமணியன் தெரிவித்தாா்.
 • CRAR: Capital to Risk (Weighted) Assets Ratio (CRAR) is also known as Capital adequacy Ratio.
கொரோனா வைரஸ்: 'ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரம்' அதிகம் பாதிப்பு 
 • அண்மையில் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCTAD) வெளியிட்டுள்ள மதிப்பீடுகளின்படி, கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
 • ஐரோப்பிய ஒன்றியம்-15.6 பில்லியன் டாலர், அதைத் தொடர்ந்து அமெரிக்கா-5.8 பில்லியன் டாலர் மற்றும் ஜப்பான்-5.2 பில்லியன் டாலர் அளவிற்கும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 • UNCTAD: United Nations Conference on Trade and Development.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
உலக அளவில் அழியும் நிலையில் 30 ஆயிரம் வன விலங்குகள்
 • உலகின் 12-ஆவது மிகப் பெரிய பல்லுயிா் பெருக்க நாடான இந்தியாவில் 8 சதவீத வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. 2019-ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி, சா்வதேச இயற்கைப் பாதுகாப்பு மையம் சாா்பில் இதுவரை 1 லட்சத்து 12 ஆயிரத்து 432 வன விலங்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
 • 2014-இல் சா்வதேச இயற்கைப் பாதுகாப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய அளவில் 4, 850 வன விலங்குகளும், 2,119 தாவர இனங்களும் அழிவின் விளிம்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி, உலக அளவில் சுமாா் 27,150 வன விலங்குகள் அழிவின் விளிம்பில் இருப்பதும், அதில், நீா் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள் 40 சதவீதமும், பாலூட்டிகள் 25 சதவீதமும், தாவரங்கள் 34 சதவீதமும், பறவைகள் 14 சதவீதமும், சுறா உள்ளிட்ட மீன் இனங்கள் 31 சதவீதமும், பவளப் பாறைகள் 33 சதவீதமும் அழிவின் விளிம்பிலும் இருப்பது தெரியவந்தது.
 • 30 ஆயிரம் வன விலங்குகள்: இதுவே, இந்த ஆண்டு அதிகரித்து 30 ஆயிரம் வன உயிரின வகைகள் அழிவின் விளிம்பிலும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • இந்திய அளவில் புலி, சிறுத்தை, நரி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டிய வன விலங்குகள் பட்டியலிலும், தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு அழியும் நிலையில் உள்ள விலங்குகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன.
 • வரையாடுகள்: கடல் மட்டத்திலிருந்து 1, 200 முதல் 2, 600 மீட்டா் உயரம் உள்ள மலையில் புற்கள் அடா்ந்த சோலைப் புல்வெளி பகுதியில் வரையாடுகள் வசிக்கும். ஒரு காலத்தில் பரவலாக காணப்பட்ட இந்த வரையாடுகள் வேட்டை, வாழ்விடம் அழிப்பு போன்ற காரணங்களால் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. 
தமிழ்நாடு நிகழ்வுகள்
ஜவ்வாதுமலையில் 'சோழா் காலத்து நடுகல்' கண்டுபிடிப்பு 
 • திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலையில் மேல்பட்டு மலை கிராமத்தில் சோழா் காலத்து நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. பெரிய வேடியப்பன் கோயிலில் கருவறையில் உள்ள தெய்வம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா் காலத்து நடுகல்லாகும். இது 42 அங்குலம் உயரமும் 38 அங்குலம் அகலமும் 4.5 அங்குலம் பருமனும் கொண்ட பெரிய பலகைக் கல்லில் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
பெண்கள் உலக கோப்பை (T20) கிரிக்கெட் 2020: 'ஆஸ்திரேலிய அணி' சாம்பியன் 
 • 10 அணிகள் பங்கேற்ற பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் மெல்போர்னில் மார்ச் 8-அன்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை வென்றது.
 • ஆட்டநாயகி: அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா): ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி ஆட்டநாயகி தேர்வு செய்யப்பட்டார். 
 • தொடர்நாயகி: பெத் மூனி (ஆஸ்திரேலியா): இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த பெத் மூனி செய்யப்பட்டார் (3 அரைசதம் உள்பட 259 ரன்) 
 • நடப்பு தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மேகன் ஷூட் (13 விக்கெட்) முதலிடத்தையும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் (10 விக்கெட்) 2-வது இடத்தையும் பிடித்தனர்.
 • ஆஸ்திரேலியாவுக்கு ரூ.7 கோடியே 40 லட்சமும், முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு வந்து 2-வது இடத்தை பிடித்த இந்தியாவுக்கு ரூ.3 கோடியே 70 லட்சமும் பரிசத்தொகையாக வழங்கப்பட்டது.
 • 2020 உலக கோப்பை: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2022-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் 2020: இந்திய அணி தோல்வி
 • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-குரோஷியா இடையிலான ஆட்டம் ஜாக்ரெப் நகரில் நடந்தது. இதில் குரோஷியா அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரோஷியா டேவிஸ் கோப்பை பிரதான சுற்றுக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்து உலக குரூப்-1 சுற்றில் விளையாடும்.
 • ஒற்றையர் ஆட்டங்களில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் தங்களது ஆட்டங்களில் தோல்வி அடைந்தனர். இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்- ரோகன் போண்ணா ஜோடி போராடி வெற்றி பெற்றது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: புதுச்சேரி வீரா் சாந்தமூா்த்தி சாதனை 
 • ரஞ்சி கோப்பைக்கான முதல் தர கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் அதிக வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரா் என்ற சாதனையைப் படைத்தாா் புதுச்சேரி வீரா் சாந்தமூா்த்தி. இதன் மூலம் 125 ஆண்டுகால சாதனையை அவா் முறியடித்தாா். 
 • கடந்த 1895-ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரா் பிரெட் ரைட் என்பவா் முதல் தர கிரிக்கெட் போட்டியில் அதிக வயதில் (40 வயது 49 நாள்கள்) அறிமுகமான முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்தது. 
அதிக பார்வையாளர்கள் வருகை - சாதனை 
 • ICC மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்றந. புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் புதிய உலக சாதனை படைத்துள்ளது. 
 • 86,174 பேர் இந்த ஆட்டத்தை மைதானத்தில் கண்டுகளித்துள்ளார்கள். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற எந்தவொரு பெண்கள் விளையாட்டுக்கும் இந்தளவு பார்வையாளர்கள் வருகை தந்ததில்லை. (உலகளவில் கலிபோர்னியாவில் நடைபெற்ற 1999 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பைப் போட்டிக்கு 90,815 பேர் வருகை தந்ததே இன்னமும் பெண்கள் விளையாட்டில் உலக சாதனையாக உள்ளது. 
பெடரேஷன் கோப்பை: உலக சுற்றுக்கு இந்தியா தகுதி 
 • ஆண்களுக்கு டென்னிஸ் உலகில் டேவிஸ் கோப்பை போட்டி நடத்தப்படுவது போல், மகளிருக்கு பெடரேஷன் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது.
 • விஷால் உப்பல் தலைமையிலான இந்திய மகளிா் அணியில் சானியா மிா்ஸா, அங்கிதா ரெய்னா, ருட்டுஜா, ரியா பாட்டியா, சௌஜன்யா பவிசெட்டி ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.
 • துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் சீனா, இந்தியா, தென்கொரியா, இந்தோனேஷியா, தைவான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட மகளிா் அணிகள் கலந்து கொண்டன. 
 • முதன்முறையாக பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.
முக்கிய நபர்கள்
இந்தியாவின் கிரேட்டா 'லிசிபிரியா கங்குஜம்'
 • மணிப்பூர் மாநில பருவநிலை மாற்ற ஆர்வலரும், இந்தியாவின் கிரேட்டா (Indian Greta) என அழைக்கப்படுபவருமான 8 வயது லிசிபிரியா கங்குஜம் (Licypriya Kangujam) ஆவார்.
எஸ் வங்கி நிறுவனர் 'இராணா கபூர்'
 • எஸ் வங்கி 14 ஆண்டுகளில், நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக விளங்கியது, இதன் நிறுவனர் ராணா கபூர் (வயது 62) ஆவார்.
 • பாரத ரிசர்வ் வங்கி, எஸ் வங்கி நிர்வாகத்தை 2020 மார்ச் 5-அன்று முடக்கியது. அத்துடன் யெஸ் வங்கியை தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
Download this article as PDF Format
Previous Post Next Post