Current Affairs March 7-8, 2020 (Tamil) - Download as PDF

 சர்வதேச நிகழ்வுகள்
உலக பல்கலைக்கழக தரவரிசை 2020
 • ‘குவாக்குவாரெலி சைமண்ட்ஸ்’ (QS University Rankings 2020) நிறுவனத்தின் 2020-ம் ஆண்டுக்கான உலக கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல் 2020 மார்ச் 4 அன்று, வெளியிடப்பட்டது. 
 • இந்த பட்டியலில் IIT பம்பாய் 44-வது இடத்தையும், IIT டெல்லி 47-வது இடத்தையும் பெற்றுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 373-வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளது.
 • முதல் 5 இடங்கள் 
  1. மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) - அமெரிக்கா
  2. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் - அமெரிக்கா
  3. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் - அமெரிக்கா
  4. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - ஐக்கிய இராச்சியம்
  5. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Caltech) - அமெரிக்கா
குறைந்த சுதந்திரமான ஜனநாயக நாடுகள் பட்டியல் - இந்தியா 83-வது இடம் 
 • அமெரிக்காவின் 'Freedom House' வெளியிட்ட, 2020 உலக சுதந்திர அறிக்கையின்படி (Freedom in the World 2020), குறைந்த சுதந்திரமான ஜனநாயக நாடுகளில் இந்தியா 83-வது இடத்தில் உள்ளது. மார்ச் 5, 2020 அன்று வெளியிடப்பட்ட 195 நாடுகல் பட்டியலில் பின்லாந்து முதலிடம் வகிக்கிறது. 
டைம் இதழின் 'நூற்றாண்டு பெண்கள்' - அமிர்த கவுர், இந்திரா காந்தி கௌரவிப்பு 
 • 2020 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி வெளியான டைம் இதழ் ‘ஆண்டின் 100 பெண்கள்’ (100 women of the year) திட்டத்தின் அடிப்படையில் 1920 முதல் 2019 வரை உலகில் சிறந்து விளங்கிய 100 பெண்களை கௌரவப்படுத்தி அவர்களது அட்டைப்படங்ளை வெளியிட்டுள்ளது.
 • இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் அமிர்த கவுர், 1947 ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த பெண் ஆளுமை’ என்றும், 1976-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ‘சிறந்த பெண் ஆளுமை’ என்றும் கௌரவித்துள்ளது.
இந்திய நிகழ்வுகள்
2020 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் 'வங்கிகள் ஒருங்கிணைப்பு'
 • 2020 மார்ச் மாதத்தில், அரசுக்கு சொந்தமான 10 வங்கிகளை நான்காக இணைப்பதற்கான திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது, மேலும் ஒருங்கிணைப்பு 2020 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது.
 • இந்த செயல்முறைக்குப் பிறகு, இந்தியாவில் 12 பொதுத்துறை வங்கிகள் இருக்கும்.
 • பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து ஸ்டேட் ஸ்டேட் ஆஃப் இந்தியா வங்கிக்கு வுக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியை உருவாக்குகின்றன.
 • கனரா வங்கி- சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா-ஆந்திர வங்கி-கார்ப்பரேஷன் வங்கி மற்றும் இந்தியன் வங்கி- அலகாபாத் வங்கி ஆகியவை இணைக்கப்படும் பிற வாங்கி குழுக்கள் ஆகும்.
கேரளாவில் கலப்பு திருமண தம்பதிகளுக்கான 'பாதுகாப்பு இல்லம்'
 • கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், அச்சமின்றி குடியிருக்க, 'பாதுகாப்பு இல்லம்' என்ற திட்டத்தை, கேரள அரசு அறிமுகப்படுத்த உள்ளது. தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், அனைத்து மாவட்டங்களிலும், இத்தகைய இல்லங்கள் ஏற்படுத்தப்படஉள்ளது.
மார்ச் 8: கேரளாவில் காவல் நிலையங்களுக்கு தலைமையேற்கும் பெண் காவலர்கள் 
 • 2020 மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கேரளாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 'ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகள்' (SHO), தங்கள் காவல் நிலையங்களில் உள்ள பெண் காவலர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் மசோதா 2020
 • சமீபத்திய ‘நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் மசோதா 2020 (Direct Tax Vivaad Se Vishwas Bill 2020)-இன் படி, வரி செலுத்துவோர் உரிய வரியை செலுத்தக்கூடிய கால அளவாக, 2020 மார்ச் 31 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • வருமான வரி மற்றும் நிறுவன வரி உள்ளிட்ட நேரடி வரியில் நிலுவையில் உள்ள வரி மோதல்களைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறையை இந்த மசோதா வழங்குகிறது.
இந்தியா ஸ்மார்ட் பயன்பாட்டு வாரம் 2020 (புது தில்லி)
 • புதுடெல்லியைச் சேர்ந்த இந்தியா ஸ்மார்ட் கிரிட் மன்றம் (ISGF) அமைப்பு 2020-ஆம் ஆண்டுக்கான இந்தியா ஸ்மார்ட் பயன்பாட்டு வாரத்தை (India Smart Utility Week 2020), புதுடில்லியில் சர்வதேச மாநாடு மற்றும் ஸ்மார்ட் நகரங்களுக்கான ஸ்மார்ட் எரிசக்தி மற்றும் நீர் குறித்த கண்காட்சியாக 2020 மார்ச் 3-7 முதல் ஏற்பாடு செய்தது.
அவுரங்காபாத் 'சத்ரபதி சம்பாஜி மகாராஜ் விமான நிலையம்' 
 • மகாராஷ்டிரா அரசு அவுரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை 'சத்ரபதி சம்பாஜி மகாராஜ் விமான நிலையம்' என்று பெயர் மாற்றியது.
 • மார்ச் 6, 2020 அன்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் பால் தாக்கரே தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பாதுகாப்பு/விண்வெளி 
ISRO-டெக்சாஸ் பல்கலைக்கழகம் 'விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு ஒப்பந்தம்' 
 • விண்வெளியில் இடம் பெற்றிருக்கும் செயற்கைக்கோள்கள், செயலிழந்து சுற்றிவரும் செயற்கைக்கோள் கழிவுகள் இருக்குமிடத்தை துல்லியமாக அறியும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் (SSA) முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஈடுபட்டு வருகிறது. 
 • அதற்காக அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்துடன் இஸ்ரோ புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
 • பெங்களூருவில் விண்வெளி செயற்கைக்கோள் கழிவுகள் இருக்குமிடம் கண்டறியும் கட்டுப்பாட்டு மையத்தை ISRO உருவாக்கி வருகிறது. 
 • SSA: Scientific Collaborations in area of Space Situational Awareness.
நியமனங்கள்
மத்திய தகவல் ஆணைய தலைமை ஆணையர் 'பிமல் ஜுல்கா'
 • மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக (CIC), பிமல் ஜுல்கா (Bimal Julka) மார்ச் 6-அன்று பதவியேற்றார். தகவல் ஆணையராக அமிதா பாண்டோவ் (Amita Pandove) பதவியேற்றார். இவர்களுக்கு குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
 • மத்திய தகவல் ஆணையத்தில், தலைமை ஆணையா் உள்பட 11 உறுப்பினா்கள் இருக்க வேண்டும். விமல் ஜுல்காவும், அமிதாவும் பதவியேற்றுக் கொண்ட பிறகு உறுப்பினா்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.
 • CIC: Chief Information Commissioner
மாநாடுகள்
உலக உற்பத்தித்திறன் மாநாடு 2020 (பெங்களூரு)
 • உலக உற்பத்தித்திறன் மாநாடு 2020 (World Productivity Congress 2020) பெங்களூரு நகரத்தில் 2020 மே 7 முதல் மே 8 வரை நடைபெறுகிறது.
 • 1969 முதல் உலக உற்பத்தி திறன் கூட்டமைப்பு (WCPS) நடத்தும் மாநாடு, 1974 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்றது. தற்போது 19-வது மாநாடு பெங்களூரு நகரத்தில் நடைபெறுகிறது.
 • WCPS: World Confederation of Productivity Science.
மத்திய பிரதேச அரசின் 'நமஸ்தே ஓர்ச்சா' திருவிழா 
 • மத்திய பிரதேச அரசு நமஸ்தே ஓர்ச்சா 2020 (Namaste Orchha) என்ற மூன்று நாள் சுற்றுலா திருவிழாவை மார்ச் 6-8 தேதிகளில் வரை மத்திய பிரதேசத்தின் புண்டேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள பண்டைய நகரமான ஓர்ச்சாவில் ஏற்பாடு செய்தது.
உலகளாவிய ஆயுர்வேத விழா 2020 (கொச்சி) 
 • நான்காவது உலகளாவிய ஆயுர்வேத விழா (Global Ayurveda Festival), 2020 மே 16 முதல் 20 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெறுகிறது. 
 • இந்த விழாவை அறிவியல் மற்றும் சமூக நடவடிக்கைக்கான கண்டுபிடிப்பு மையம் (CISSA) ஏற்பாடு செய்துள்ளது. 
 • இந்த நிகழ்வின் கருப்பொருள் 'Ayurveda Medical Tourism: Actualizing India’s credibility' என்பதாகும்.
 • CISSA: Centre for Innovation in Science and Social Action.
பொருளாதார நிகழ்வுகள் 
கொரோனா வைரஸ்: உலக பொருளாதாரத்தில் ரூ.25 லட்சம் கோடி இழப்பு
 • கொரோனா வைரஸ் காரணமாக, உலக பொருளாதாரத்தில் ரூ.25 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
மயிலாடுதுறை தனி மாவட்டம் - அரசு பரிசீலனை 
 • நாகை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு, மார்ச் 7-அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 
 • நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்வதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
காவிரி வடிநில உயா்நிலை கால்வாய் புனரமைப்பு
 • கரூா் மாவட்டம் காவிரி வடிநிலத்திலுள்ள கட்டளை உயா்நிலை கால்வாய் பாசன அமைப்பானது ரூ.335.50 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிக்கு முதல்வா் பழனிசாமி மார்ச் 6-அன்று அடிக்கல் நாட்டினாா். இதன்மூலம், கரூா் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 185 ஏக்கா் நிலங்களும், திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 589 ஏக்கா் நிலங்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 774 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தமிழ்நாட்டில் ‘ஸ்மார்ட் சிட்டி’ - சில தகவல்கள் 
 • தமிழ்நாட்டில் 11 நகரங்களில் ‘ஸ்மார்ட் சிட்டி’ (Smart City) திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 • ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட அடுத்த 5 ஆண்டுகளில் அதற்கான திட்டப்பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. 
 • 2021 மார்ச் மாதத்துக்குள் சென்னை மற்றும் கோவையிலும், பிப்ரவரி மாதத்துக்குள் மதுரை, சேலம், வேலூர், தஞ்சையிலும், அதே ஆண்டு ஜூன் மாதத்துக்குள் திருப்பூர், நெல்லை, திருச்சி, தூத்துக்குடியிலும், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஈரோட்டிலும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது, என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி மக்களவையில் தெரிவித்தார். 
சங்கரன்கோவிலில் 'உலக அமைதி புத்த கோபுரம்' 
 • தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் 100 அடி உயர உலக அமைதி புத்த கோபுரம் மார்ச் 4 அன்று திறக்கப்பட்டது. இந்தியாவில் பிகார், ஒடிஸா, அருணாசல பிரதேசம், தில்லி உள்பட சில இடங்களில் உலக அமைதி புத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்தொடர்ச்சியாக, தென்னிந்தியாவில் முதலாவதாக வீரிருப்பு கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி இக்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
500 ஆண்டுகளுக்கு முன்பான 'போர் பதக்கம்' கண்டெடுப்பு 
 • சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் போர் வீரர்கள் அடையாளக் குறியீடாக கழுத்தில் வளையம் பொருத்தி பயன்படுத்திய 8.42 மில்லி கிராம் எடைகொண்ட 'போர் பதக்கம்' கரூர் மாவட்டம், குளித்தலையில் கண்டெடுக்கப்பட்டது. இது செம்பு உலோகத்தில் பொறிக்கப்பட்டு, அதைச் சுற்றியும் வட்ட வடிவத்தில் அலுமினிய வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
பேராசிரியர் க.அன்பழகன் மறைவு 
 • தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மார்ச் 6-அன்று இரவு மரணம் அடைந்தார். தி.மு.க. தொண்டர்களால் ‘இனமான பேராசிரியர்’ என்று க.அன்பழகன் அழைக்கப்பட்டார். 
 • தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அரசியல்வாதி, எழுத்தாளர், பேச்சாளர் என்று பன்முக தன்மை கொண்டவராக விளங்கினார். திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் எம்.கல்யாணசுந்தரனார்-சுவர்ணம்பாள் தம்பதியருக்கு 1922-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி மகனாக பிறந்தார்.
 • இவரது இயற்பெயர் ராமையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. தமிழ் (ஹானர்ஸ்) படித்தார். 1944-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றினார்.
 • 1971-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 1989-1991, 1996-2001 தி.மு.க. ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டார். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நிதித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
 • 1977-ம் ஆண்டு தி.மு.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
விளையாட்டு நிகழ்வுகள்
வாசிம் ஜாஃபர் - ஓய்வு அறிவிப்பு 
 • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான 'வாசிம் ஜாஃபர்' சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மார்ச் 7-அன்று அறிவித்துள்ளார்.
 • வாசிம் ஜாஃபர், ரஞ்சி டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சிறப்பை பெற்றவர். 
 • 1996-97 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ஜாஃபர், இந்தியாவுக்காக 31 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2008ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் விளையாடினார். 
 • 260 முதல் தர ஆட்டங்களில் விளையாடி, 19,410 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 57 சதங்களும், 91 அரை சதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 314 ஆகும். 
அரபு டென்னிஸ் வீராங்கனை 'ஓன்ஸ் ஜாபியார்'
 • கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் காலிறுதி வரை சென்ற முதல் 'அரபு டென்னிஸ் வீராங்கனை' என்ற சிறப்பை துனிசியா நாட்டைச் சோ்ந்த இளம் வீராங்கனை 'ஓன்ஸ் ஜாபியார்' (Ons Jabeur) பெற்றுள்ளார். அண்மையில் நடந்த கத்தாா் ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிவரை முன்னேறினாா் ஓன்ஸ் ஜாபியார். 
முக்கிய தினங்கள்
மார்ச் 8 - சர்வதேச பெண்கள் தினம்
 • ஆண்டுதோறும் சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-அன்று கடைபிடிக்கப்படுகிறது.
 • 2020 சர்வதேச பெண்கள் தின கருப்பொருள் (Theme): “I am Generation Equality: Realizing Women's Rights”.
 • சர்வதேச பெண்கள் தினம்: வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். இதன் நினைவாக சர்வதேச பெண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Download this article as PDF Format
Previous Post Next Post