Current Affairs March 5-6, 2020 (Tamil) - Download as PDF

Daily TNPSC Tamil Current Affairs March 5-6, 2020

TNPSC Tamil Current Affairs March 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் மார்ச் 5-6, 2020
 சர்வதேச நிகழ்வுகள் 
2020 மார்ச் மாத ஐ.நா.பாதுகாப்புக் குழு தலைவர் பதவி ஏற்ற 'சீனா'
 • 2020 மார்ச் மாதத்திற்கான ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தலைவர் பதவியை சமீபத்தில் சீன நாடு ஏற்றது.
 • ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் 15 உறுப்பினர்கள் உள்ளனர் (5 நிரந்தர மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள்). 15 உறுப்பு நாடுகள் ஒவ்வொரு மாதமும் சுழற்சி அடிப்படையில் தலைமை பதவியை ஏற்றுக்கொள்கின்றன.
பொது போக்குவரத்தை இலவசமாக்கிய உலகின் முதல் நாடு 'லக்சம்பர்க்'
 • சிறிய ஐரோப்பிய நாடான லக்சம்பர்க் (Luxembourg), ஒரு ரயில்கள், டிராம்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து அமைப்புகளுக்கான கட்டணங்களை ரத்து செய்துள்ளது. 
 • இதன் மூலம் பொது போக்குவரத்தை இலவசமாக்கிய (public transport free) உலகின் முதல் நாடு என்ற சிறப்பை லக்சம்பர்க் பெற்றுள்ளது. 
சவூதி அரேபிய பிரீமியம் வசிப்பிடத்தைப் பெற்ற முதல் இந்தியர் - எம். யூசுப் அலி 
 • லுலு குழுமத்தின் (LuLu Group) தலைவர் எம். ஏ. யூசுப் அலி (M A Yusuff Ali) சவூதி அரேபியா நாட்டின் பிரீமியம் வசிப்பிடத்தை (premium residency) பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றார்.
இந்திய நிகழ்வுகள்
விமானப்படை மார்ஷல் அர்ஜன் சிங் 'சிறுப்பிருக்கை'
 • இந்திய விமானப்படை மற்றும் புனே சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழக ஒத்துழைப்புடன், பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் துறையில், 'விமானப்படை மார்ஷல் அர்ஜன் சிங் சிறப்பிருக்கை' (Marshal of the Air Force Arjan Singh Chair of Excellence) என்ற பெயரிலான பல்கலைகழக ஆய்வு இருக்கை (Chair of Excellence) அமைக்கப்படவுள்ளது.
 • இந்திய விமானப்படையின் ஒரே ஐந்து நட்சத்திர விருது (Five-Star Rank) பெற்ற அதிகாரி மார்ஷல் அர்ஜன் சிங்கின் நூற்றாண்டு பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் அவர் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படவுள்ளது.
 • இந்திய விமானப்படை அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் உயர் கல்வி மற்றும் முனைவர் ஆய்வுகளை இங்கு பயிலலாம்.
சுபோஷித் மா அபியான் திட்டம் 
 • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இளம் பருவப் பெண்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, “சுபோஷித் மா அபியான்” திட்டத்தை (Suposhit Maa Abhiyan) மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சமீபத்தில் ராஜஸ்தானின் கோட்டா நகரில் தொடங்கிவைத்தார்.
வீட்டுக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் செல்போன் செயலி 'அம்ஸஃபர்' 
 • சமீபத்தில் செய்திகளில் வந்த ‘அம்ஸஃபர்’ (Humsafar) என்ற செல்போன் செயலி வீட்டுக்கு எரிபொருள் 'விநியோகம் (Door Delivery of Fuel) வழங்கும் சேவையுடன் தொடர்புடையது ஆகும். 
 • தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள வீட்டுவசதி சங்கங்கள், ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளின் வீட்டு வாசல்களில் எரிபொருளை வழங்கும் நோக்கத்துடன் ‘அம்ஸஃபர்’ (Humsafar) என்ற செல்போன் செயலி பயன்பாடு தொடங்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டை லோக்பால் தீர்ப்பதற்கான கால எல்லை '30 நாட்கள்'
 • லோக்பால் என்பது மத்திய அரசின் அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஒரு உச்ச அமைப்பாகும். பெறப்பட்ட எந்தவொரு புகாரையும் லோக்பால் 30 நாட்களுக்குள் தீர்ப்பதற்கான கால எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜன்ஆஷாதி வாரம் - மார்ச் 1-7, 2020
 • 2020 மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை, நாடு முழுவதும் ஜன்ஆஷாதி (Janaushadhi week) வாரம் கடைபிடிக்கப்பட்டது. இந்த வாரத்தில், பல்வேறு ஜன்ஆஷாதி மையங்களில் சுகாதார பரிசோதனை முகாம், இலவச மருத்துவ ஆலோசனை, இலவச மருந்து விநியோகம் போன்ற பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
 • பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஆஷாதி பரியோஜனா (PMBJP) திட்டம் என்பது 2008-ஆம் ஆண்டில் ஜன்ஆஷாதி பிரச்சாரம் என்ற பெயரில் மருந்துத்துறையால் தொடங்கப்பட்டது.
விருதுகள் 
காமன்வெல்த் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருது - ஜாதவ் பயெங்
 • அசாம் மாநிலத்தை சேர்ந்த ஃபாரஸ்ட் மேன்’ என்றும் அழைக்கப்படும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜாதவ் பயெங் (Jadav Payeng ), 128-வது காமன்வெல்த் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருதை பெற்றுள்ளார்.
 • 57 வயதான ஜாதவ் பயெங், பிரம்மபுத்ரா ஆற்றங்கரையில் மரங்கள் இல்லாத ஒரு பரந்த மணல்வேலியை வனவிலங்குகள் வாழிடமாக மாற்றியுள்ளார்.
நியமனங்கள் 
புதிய நிதிச் செயலாளர் - அஜய் பூஷண் பாண்டே
 • இந்தியாவின் புதிய நிதிச் செயலாளராக அஜய் பூஷண் பாண்டே (Ajay Bhushan Pandey) நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநாடுகள்
ஈகாம் ஃபெஸ்ட் 2020
 • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் தேசிய ஊனமுற்ற நிதி மேம்பாட்டுக் கழகம் (NHFDC) ஏற்பாடு செய்த “ஈகாம் ஃபெஸ்ட்” (EKAM Fest) என்ற 7 நாள் கண்காட்சி மார்ச் 2 முதல் மார்ச் 9 வரை புதுதில்லியில் நடைபெறுகிறது.
 • பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தயாரிப்புகளை இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தவுள்ளனர்.
 • NHFDC: National Handicapped Finance Development Corporation 
பொருளாதார நிகழ்வுகள் 
இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் 'எஸ் பேங்க்'
 • தனியார் வங்கியான 'எஸ் பேங்க்' (Yes Bank) ரிசர்வ் வங்கியின் (RBI) கட்டுப்பாட்டின் (Moratorium) கீழ் மார்ச் 05-அன்று கொண்டுவரப்பட்டது.
 • தனியார் வங்கியான 'எஸ் பேங்க்' ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 • பிரசாந்த் குமார்: எஸ் பேங்க்கினை நிர்வகிக்க (Yes Bank administrator), SBI வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் (Prashant Kumar) நியமிக்கப்பட்டுள்ளார்.
 • எஸ் பேங்க்கில் வைப்புத் தொகை வைத்துள்ளவர்கள் தற்போது அதிலிருந்து ரூ. 50,000 வரையே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.5% ஆக குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு
 • 2019-20-ஆம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (Employees' Provident Fund) வட்டி விகிதம் 8.65% லிருந்து 8.50% ஆக குறைக்கப்பட்டுள்ளது. நிதியாண்டில் வட்டி விகிதம் 0.15% குறைந்து 8.50% ஆக இருக்கும் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
கிரிப்டோ கரன்சி பரிவா்த்தனைக்கான தடை: உச்ச நீதிமன்றம் நீக்கம்
 • இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் 'கிரிப்டோ கரன்சி' (Cryptocurrency) பரிவா்த்தனையில் ஈடுபடுவதற்கான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
 • இந்திய ரிசா்வ் வங்கி, 2018 -ஆம் ஆண்டு வெளியிட்ட சுற்றஅறிக்கையில். 'பிட்காயின், ரிப்பிள், லைட்காயின், எத்திரியம்' போன்ற மெய்நிகா் பணத்தை விற்பதும் வாங்குவதும் பரிவா்த்தனைகளில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
தேசிய சம்பல் சரணாலயம் 'சூழல் உணர்திறன் மண்டலமாக' (ESZ) அறிவிப்பு 
 • 2020 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய சம்பல் சரணாலயத்தை (National Chambal Sanctuary), சூழல் உணர்திறன் மண்டலமாக (ESZ) மத்திய அரசு அறிவித்துள்ளது. சம்பல் சரணாலயம், கங்கை டால்பின்கள் மற்றும் 75 சதவீத அருகிவரும் உயிரினங்கள் இருப்பிடமாகவும், உள்ளது.
 • 435 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள தேசிய சாம்பல் சரணாலயம், மத்திய பிரதேசத்தின் ஷியோபூர், மொரேனா மற்றும் பிந்த் மாவட்டங்களில் 400 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்துடன் அமைந்துள்ளது. ESZ: Eco-Sensitive Zone
தமிழ்நாடு நிகழ்வுகள்
நாமக்கல் புதிய மருத்துவக்கல்லூரி- அடிக்கல் 
 • ரூ.338. 76 கோடி மதிப்பீட்டில், நாமக்கல் நகரில் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந் திட்ட வளாகத்தில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 05-அன்று அடிக்கல் நாட்டினார். மேலும் தமிழகத்தில் அரியலூா், கள்ளக்குறிச்சி பகுதியில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
பெங்களூரூ மெட்ரோ - ஒசூா் வரை நீட்டிக்க பரிசீலனை
 • கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து மாநில எல்லையான அத்திப்பள்ளி வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூா் வரை நீட்டிக்க பரிசீலனை செய்து வருவதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் (செங்கல்பட்டு)
 • தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் அரசு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் (HLL Biotech Limited) உள்ளது. உலகத்தரத்தில் உற்பத்தியை மேற்கொள்ளவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலுமானதொரு ஒருங்கிணைந்த தடுப்பூசி மருந்துகள் தயாரிப்பு வளாகமாகவும் இது உள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
BCCI புதிய தேர்வுக்குழுத் தலைவர் 'சுனில் ஜோஷி'
 • இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளா் 'சுனில் ஜோஷி' (Sunil Joshi) மார்ச் 4-அன்று நியமிக்கப்பட்டார். ஐந்து உறுப்பினர் கொண்ட தேர்வுக்குழுவிற்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹர்விந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஆலோசனைக் குழு (CAC) இந்த நியமனங்களை மேற்கொண்டது.
 • தேர்வுக்குழு உறுப்பினர்கள்: சுனில் ஜோஷி (தலைவர்) ஹர்விந்தர் சிங், ஜதின் பராஞ்சிபே, சரண்தீப் சிங், தேவன் காந்தி.
முக்கிய நபர்கள் 
சுற்றுச்சூழல் ஆர்வலர் 'அஃப்ரோஸ் ஷா'
 • அஃப்ரோஸ் ஷா (Afroz Shah) மகாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். அவர் மிகப்பெரிய கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கத்தை ஏற்பாடு செய்வதில் பெயர் பெற்றவர்.
 • நார்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் டாக்-இங் உல்ஸ்டீன் (Dag-Inge Ulstein) தனது மூன்று நாள் இந்திய பயணத்தின் போது சுற்றுச்சூழல் ஆர்வலர் அஃப்ரோஸ் ஷாவுடன் இணைந்து மகாராஷ்டிராவின் மிதி நதியில் தூய்மைப்படுத்தல் பணியில் சமீபத்தில் பங்கேற்றார்.
 • 2016 ஆம் ஆண்டில் அஃப்ரோஸ் ஷாவுக்கு ‘ஐ.நா. சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்’ விருது வழங்கப்பட்டது. 
முக்கிய தினங்கள்
மார்ச் 04 - தேசிய பாதுகாப்பு தினம் 
 • 49-வது தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day) 2020 மார்ச் 4 அன்று இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது.
 • 2020 தேசிய பாதுகாப்பு தின மையக்கருத்து: Enhance Health & Safety Performance by Use of Advanced Technology“.
Download this article as PDF Format
Previous Post Next Post