TNPSC Current Affairs 12-13 February 2020 - Download as PDF

Daily Current Affairs February 12-13, 2020

TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 12-13, 2020
இந்திய நிகழ்வுகள்
இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் வலையமைப்பு 'ஐதராபாத் மெட்ரோ'
  • டெல்லி மெட்ரோ ரெயிலுக்குப் பிறகுதான் ஐதராபாத் மெட்ரோ ரயில், நாட்டின் இரண்டாவது பெரிய செயல்பாட்டு மெட்ரோ ரயில் வலையமைப்பாக மாறியுள்ளது. ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் இடையே ஹைதராபாத் மெட்ரோவின் நீளம் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. 
  • பொது-தனியார் உலகின் மிகப்பெரிய மெட்ரோ: ஐதராபாத் மெட்ரோ பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் உலகின் மிகப்பெரிய மெட்ரோ திட்டமாகும், மொத்த திட்ட செலவு ₹ 20,000 கோடி, லார்சன் & டூப்ரோவால் கட்டப்பட்டது.
கேரள அரசின் ‘குடும்பஸ்ரீ’ உணவகங்கள் 
  • ‘குடும்பஸ்ரீ’ ஹோட்டல்கள் (Kudumbashree) எனப்படும் மானிய விலையில் உணவு வழங்க உணவகங்களை நிறுவுவதற்கான முயற்சியை கேரளா மாநிலம் சமீபத்தில் தொடங்கியது.
  • 1034 உள்ளாட்சி அமைப்புகளில் ஒவ்வொன்றிலும் இந்த ஹோட்டல்கள் அமைக்கப்படவுள்ளன, இந்த உணவகங்களில் கேரள உணவு ரூ. 25 மானிய விலையில் கிடைக்கும்.
அரியானா அரசின் 'முக்யமந்திரி பரிவார் சமிரிதி யோஜனா'
  • ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவி வழங்கும் “முக்யமந்திரி பரிவார் சமிரிதி யோஜனா” (Mukhyamantri Parivar Samridhi Yojana) சமீபத்தில் அரியானா மாநிலத்தில் தொடங்கப்பட்டது.
  • அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டு வருமானம் ரூ .1.80 லட்சம் வரை மற்றும் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் பயன்பெறுவர்.
இந்திய உதவியுடன் நேபாளத்தில் 'அருண்-III (Arun-III) நீர் மின் திட்டம்' 
  • அருண்-III (Arun-III) என்ற நீர் மின் திட்டம் இந்தியாவின் உதவியுடன் நேபாள நாட்டில் கட்டப்படுகிறது. 
  • நேபாளத்தின் மிகப்பெரிய நீர்மின் திட்டமான (900 மெகாவாட்) இந்த நீர்மின் திட்டம், இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்படவுள்ள இத்திட்டம் 5 ஆண்டுகளில் முடிக்கப்பட உள்ளது. இந்திய அரசு, இமாச்சல பிரதேச அரசின் கூட்டு நிறுவனமான சத்லஜ் ஜல் வித்யுத் நிகாம் (SJVN) மற்றும் அருண் -3 மின் மேம்பாட்டு நிறுவனம் (SAPDC) ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
எளிமை வாழ்க்கை குறியீடு, நகராட்சி செயல்திறன் குறியீடு 2019 அறிமுகம் 
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், சமீபத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான எளிமை வாழ்க்கை குறியீடு (EoLI) மற்றும் நகராட்சி செயல்திறன் குறியீடு (MPI), என்ற இரண்டு மதிப்பீட்டு கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த இரண்டு குறியீடுகளும் 100 ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் 14 பிற நகரங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுகிறது.
  • EoLI: Ease of Living Index, MPI: Municipal Performance Index
பட்டியல், பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டம் 
  • சமீபத்தில், இந்திய உச்சநீதிமன்றம் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டத்தை உறுதி செய்தது. 1989-இல் இயற்றப்பட்ட இந்த சட்டம் 2018-ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.
அரியானாவின் மாணவர்களுக்காக ‘படித்தல் பணி’ (Reading Mission 2022)
  • அரியானா மாநில அரசு சமீபத்தில் மாணவர்களுக்காக ‘படித்தல் பணி’ (Reading Mission 2022) முயற்சியைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களால் மாதாந்திர புத்தக மறுஆய்வு அமர்வுகள் மற்றும் வெகுஜன புத்தக வாசிப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
பாதுகாப்பு/விண்வெளி 
'அஜயா வாரியர்' கூட்டு இராணுவப் பயிற்சி 2020 
  • ‘அஜயா வாரியர்’ (Ajeya Warrior) என்பது இந்தியாவிற்கும் ஐக்கிய இராச்சியம் (United Kingdom). நாட்டிற்கும் இடையே நடத்தப்படும் கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்.
  • 2020-ஆம் ஆண்டிற்கான அஜயா வாரியர் கூட்டு இராணுவப் பயிற்சி, பிப்ரவரி 13 முதல் 26 வரை ஐக்கிய இராச்சியத்தின் சாலிஸ்பரி சமவெளியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏ.கே.47 குண்டு துளைக்காத ஜாக்கெட் கண்டுபிடித்த 'அனூப் மிஸ்ரா' 
  • இராணுவ பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த இந்திய ராணுவ மேஜரான அனூப் மிஸ்ரா (Anoop Mishra), துப்பாக்கி சுடும் தோட்டாக்களிலிருந்து பாதுகாக்கும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டை அண்மையில் உருவாக்கினார்.
  • இவர் உருவாக்கிய குண்டு துளைக்காத ஜாக்கெட் மூலம், உலகின் முதல் ஏ.கே .47 புல்லட்களில் இருந்தும் காக்க முடியும்.
விருதுகள்
மின்-ஆளுமை விருது 2019-20: ஆந்திர மாசு கட்டுப்பாட்டு வாரியம்
  • ஆந்திர மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் மின்-ஆளுமை 2019-20-க்கான (e-Governance 2019-20) தேசிய விருதைப் பெற்றது. 
  • மும்பையில் நடைபெற்ற இ-ஆளுமை தொடர்பான 23-வது தேசிய மாநாட்டின் போது, ஆந்திர மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (APPCB) அதன் நிகழ்நேர மாசு-கண்காணிப்பு அமைப்பு (RPTMS project) திட்டத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
  • ஒரு தொழில் நிறுவனம் மாசு அளவை மீறினால், RPTMS திட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.
பராக் ஒபாமா தயாரித்த 'American Factory' என்ற ஆவணப்படம்
  • சிறந்த நீள ஆவணப்படத்திற்கான 'American Factory' என்ற ஆவணப்படம், எந்த பிரபல அமெரிக்க ஆளுமையால் தயாரிக்கப்பட்டது? பராக் ஒபாமா
  • பராக் மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவின் தயாரிப்பு நிறுவனமான ‘ஹையர் கிரவுண்ட்’ (Higher Ground) வெளியிட்ட முதல் ஆவணப்படம் இதுவாகும்.
மாநாடுகள் 
ஐ.நா. புலம்பெயர் உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு 2020 (COP 13)
  • COP 13 எனப்படும் 13-வது ஐ.நா. புலம்பெயர் உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு 2020 (UN Convention on the Conservation of Migratory Species), குஜராத் மாநிலத்தின் காந்திநகரில், பிப்ரவரி 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது.
  • இந்த 2020 உச்சிமாநாட்டின் கருப்பொருள்: ‘Migratory species connect the planet and we welcome them home’.
  • கிரேட் இந்தியன் பஸ்டர்ட்: 2020 புலம்பெயர் உயிரினங்களின் பாதுகாப்பு மாநாட்டின் சின்னமாக (mascot) கிரேட் இந்தியன் பஸ்டர்ட் என்ற பறவை அறிவிக்கப்பட்டது. 
  • மூன்று உயிரினங்கள்: ஐ.நா. புலம்பெயர் உயிரினங்களின் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு, ஆசிய யானை, கிரேட் இந்தியன் பஸ்டார்ட் மற்றும் பெங்கால் ஃப்ளோரிகன் ஆகிய மூன்று உயிரினங்களை ‘அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்குள்ளான புலம்பெயர் இனங்கள்’ (Migratory Species Threatened with Extinction) பட்டியலில் சேர்க்க இந்தியா சமீபத்தில் முன்மொழிந்தது.
  • தொலைநோக்கு பார்வை திட்டம்: பறவை இனங்கள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்காக, சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) சமீபத்தில் 2020-2030-ஆண்டிற்கான தொலைநோக்கு பார்வை திட்டத்தை வெளியிட்டது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
யானைகளை வேட்டையாட 'ஏலம் உரிமங்கள்' வழங்கிய 'போட்ஸ்வானா' 
  • தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகிலேயே அதிக யானைகள் உள்ளன. அண்மையில், யானைகளை வேட்டையாடுவதற்கும், மனித-விலங்கு மோதலைச் சமாளிப்பதற்கும், போட்ஸ்வானா (Botswana) ஏல உரிமங்களை உரிமங்களை கொடுத்துள்ளது.
  • நாட்டின் தலைநகரான கபோரோனில், 70 யானைகளை வேட்டையாடுவதற்கான ஏலம் உரிமங்கள் விடப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வேட்டை மீதான தடையை போட்ஸ்வானா அரசாங்கம் அண்மையில் நீக்கியது.
ஐரோப்பிய நாடுகளைத் தாக்கிய ‘சியாரா’ புயல் 
  • ஐரோப்பிய நாடுகள் ‘சியாரா’ (Ciara) என்ற பேரழிவுகரமான புயலை சமீபத்தில் எதிர்கொண்டன. பிரிட்டன் மற்றும் அயர்லாந்தைத் தாக்கிய பின்னர் புயல் ஜெர்மனிக்கு அருகில் நகர்ந்தது. இது ஐரிஷ் வானிலை சேவை மையத்தால் ‘சியாரா’ என்று அழைக்கப்பட்ட இந்த புயல் மற்றும் ஜெர்மனியில் ‘சபின்’ (Sabine) என்று அழைக்கப்பட்டது.
புத்தக வெளியீடு 
A Child of Destiny - K. Ramakrishna Rao
  • சமீபத்தில் இந்திய துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு அவர்களால் ‘எ சைல்ட் ஆஃப் டெஸ்டினி’ (A Child of Destiny) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் புகழ்பெற்ற இந்திய தத்துவஞானியும் இந்திய கல்வியாளருமான கே.ராமகிருஷ்ண ராவ் (K. Ramakrishna Rao) அவர்களின் சுயசரிதை ஆகும்.
அறிவியல் தொழில்நுட்பம் 
ஆபரேஷன் நகாய் - திட்டம் 
  • ஆட்டோ டிரைவர்களின் அடையாளத்தை சரிபார்க்க காஸியாபாத் (Ghaziabad) நகரத்தின் காவல்துறை சமீபத்தில் ‘ஆபரேஷன் நகாய்’ (Operation Nakai) என்ற புதிய முன்முயற்சி திட்டத்தை தொடங்கியது.
  • இந்த முயற்சியின் கீழ், நகரின் ஒவ்வொரு ஆட்டோ ரிக்‌ஷாவிற்கும் ஒரு தனித்துவமான நான்கு இலக்க எண் ஒதுக்கப்படும். வாகனத்தின் உரிமையாளர் ஆட்டோவில் எண், அவரது பெயர் மற்றும் மொபைல் எண்ணை வண்ணம் தீட்ட வேண்டும், அவற்றை அடையாளம் காண எளிதாக இருக்கும்.
நிலக்கரி சுரங்கங்களின் நட்சத்திர மதிப்பீட்டுக்கான 'வலைதளம்' 
  • ‘நிலக்கரி சுரங்கங்களின் நட்சத்திர மதிப்பீட்டு’க்கான (Star rating of Coal mines) வலைதளத்தை (web portal) மத்திய நிலக்கரி அமைச்சகம் (Ministry of Coal) சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. 
  • இந்த வலைதளத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அனைத்து செயல்படும் நிலக்கரி சுரங்கங்களிலும் சுய மதிப்பீடு செயல்படுத்தப்படும்.
முக்கிய தினங்கள்
பிப்ரவரி 13 - உலக வானொலி நாள் 
  • ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (UNESCO) அமைப்பினால், உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13-அன்று கடைபிடிக்கப்படுகிறது.
Previous Post Next Post