Daily Current Affairs February 10-11, 2020
TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 10-11, 2020
சர்வதேச நிகழ்வுகள்
அண்டார்டிகாவில் பதிவான '18.3 ° C வெப்பநிலை'
- சமீபத்தில், அண்டார்டிகா தீபகற்பத்தில் உள்ள எஸ்பெரான்சா தளம் (Esperanza Base),18.3 ° C வெப்பநிலையை அடைந்தது, இதனால் அண்டார்டிகா கண்டத்தில் பதிவான அதிக வெப்பநிலையாக இது அமைந்தது.
- எஸ்பெரான்சா பேஸ் (Hope Base) ஆராய்ச்சி நிலையம் அண்டார்டிகாவில் உள்ள அர்ஜென்டீனா நாட்டின் நிரந்தர ஆராய்ச்சி நிலையம் ஆகும்.
இந்திய நிகழ்வுகள்
ஆல்டர்நேரியா பிராசிகா பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 'இந்திய கடுகு'
- சமீபத்திய செய்திகளின்படி, ஆல்டர்நேரியா பிராசிகா (Alternaria brassicae) என்ற பூஞ்சை காரணமாக இந்தியாவின் கடுகு (Mustard) பயிர் ஆபத்தை எதிர்கொண்டது.
- மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஆல்டர்நேரியா பிராசிக்கா என்ற பூஞ்சையால் பாதிப்பால் மகசூல் 47% வரை குறைய வாய்ப்புள்ளது.
- டாக்டர் கலாம்-ஆக அவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் டாக்டர் கலாமின் பாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் முஹம்மது அலி (Muhammad Ali) நடிக்கிறார்.
- இந்த திரைப்படம் ஒரு ஹாலிவுட் புரொடக்ஷன் ஹவுஸின் நிர்வாக இயக்குனர் சுவர்ணா பப்பு, ஹாலிவுட் இயக்குனர் ஜகதீஷ் தானேட்டி மற்றும் ஹாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜானி மார்டின் ஆகியோரின் இணை தயாரிப்பு ஆகும்.
விருதுகள்
ஆஸ்கார் விருதுகள் 2020 - தொகுப்பு
- 2020-ஆம் ஆண்டின், 92-வது ஆஸ்கார் விருதுகள் (92nd Academy Awards) வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் பிப்ரவரி 9-அன்று நடந்தது.
- 2019-ஆம் ஆண்டு உலக அளவில் வெளிவந்த திரைப்படங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) வழங்கியது. முக்கிய விருதுகள் விவரம்:
- சிறந்த திரைப்படம் - பாராசைட் (தென்கொரிய படம், இயக்குனர்: போங்ஜூன் ஹோ)
- ஆஸ்கார் வரலாற்றில் ஆங்கிலம் அல்லாத பிறமொழி படம் சிறந்த படத்துக்கான விருதை பெற்றது இதுவே முதல் முறை.
- பாராசைட் படம் 4 விருதுகளை சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த வெளிநாட்டு படம் வென்றது
- சிறந்த நடிகர் விருது - வாக்கின் பீனிக்ஸ் (ஜோக்கர்)
- சிறந்த நடிகை - ரெனி ஜெல்வெகர் (ஜூடி)
- சிறந்த இயக்குநா்: பாங் ஜூன் ஹோ (பாராசைட்)
- சிறந்த நடிகா்: ஜாக்குவின் ஃபீனிக்ஸ் (ஜோக்கா்)
- சிறந்த நடிகை: ரென்னிஜெஸ்வேகா் (ஜூடி)
- சிறந்த துணை நடிகா்: பிராட் பிட்: ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்.
- சிறந்த அனிமேஷன் படம்: டாய் ஸ்டோரி 4
- சிறந்த அனிமேஷன் குறும்படம்: ஹோ் லவ்
- சிறந்த ஆவணப்படம்: அமெரிக்கன் ஃபேக்டரி (தயாரிப்பு:பாராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல்)
- சிறந்த துணை நடிகை: லாரா டொ்ன்.
- சிறந்த பின்னணி இசை - ஹில்டூர் குட்னாடோட்டிர் (ஜோக்கர்)
- சிறந்த பாடலுக்கான விருது - லவ் மீ ஏகெய்ன்’ (ராக்கெட்மேன்)
- சிறந்த ஒலித்தொகுப்பு: ஃபோா்ட் விஸஸ் ஃபெராரி (டொனாஸ்டு சில்வஸ்டா்)
- சிறந்த ஒலிக்கலவை: 1917
- சிறந்த படத்தொகுப்பு: ஃபோா்டு விஸஸ் ஃபெராரி.
- சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: 1917
- சிறந்த ஒளிப்பதிவு: 1917
- ஆஸ்கா் விருது: சுமாா் 35 செ.மீ. உயரம் கொண்ட ஆஸ்கா் விருதின் எடை சுமாா் 4 கிலோ இருக்கும். இதில் 5 ஆரங்கள் கொண்ட ஃபிலிம் ரீல் ஒன்றும் இருக்கும். நடிகா்கள், இயக்குனா்கள், தயாரிப்பாளா்கள், எழுத்தாளா்கள் தொழில்நுட்பக் கலைஞா்கள் ஆகியோரை அந்த ஆரங்கள் குறிக்கும். இந்த விருதுகள், வெண்கலத்தால் செய்யப்பட்டு, 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டவை ஆகும்.
FIH வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் விருது 2019: விவேக் சாகர் பிரசாத் தேர்வு
- சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில், 2019 ஆண்டின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் விருதுக்கு (FIH Rising Star of the Year 2019 award) இந்திய ஆக்கி அணியின் நடுகள வீரர் விவேக் சாகர் பிரசாத் (Vivek Sagar Prasad) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நியமனங்கள்
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தலைவர் - நீதிபதி துரை ஜெயச்சந்திரன்
- தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பதவி ஏற்றுள்ளார்.
அறிவியல் தொழில்நுட்பம்
SPICe + என்ற புதிய இணைய படிவம்
- மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம், தற்போதுள்ள 'SPICe' என்ற நிறுவனத்தை மின்னணு முறையில் இணைப்பதற்கான எளிய விவர படிவத்தை SPICe + என்ற புதிய இணைய படிவமாக மாற்றுகிறது.
- மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் வழங்கப்படும் PAN/TAN/DIN ஒதுக்கீடு உள்ளிட்ட 10 சேவைகளை இந்த SPICe + என்ற புதிய இணைய படிவம் மூலம் பெற முடியும்.
ஆப்பிள் நிறுவனத்த்தின் 'பேட்டரிகேட்' (Batterygate) தொழில்நுட்பம்
- சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட 'பேட்டரிகேட்' (Batterygate) என்ற சொல், ஆப்பிள் (Apple) தொழில்நுட்ப நிறுவனத்துடன் தொடர்புடையது.
- ஆப்பிள் ஐபோன்களின் பழைய மாடல்களில் செயல்திறன் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதை பேட்டரிகேட் குறிக்கிறது.
ஏவுகணைகளின் வெப்பத்தை தணிக்கும் ‘கபிந்த்ரா’ தொழில்நுட்பம்
- அதிவேக ஏவுகணைகள் பூமிக்கு திரும்பும்போது கடுமையான வெப்பத்தை உமிழ்கின்றன. இந்த வெப்பத்தை தணிப்பதற்கு இந்திய விஞ்ஞானிகள் வெப்ப மேலாண்மை முறையை கடைபிடித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சென்னை IIT மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையை சேர்ந்த குழுவினர் ‘கபிந்த்ரா’ என்ற (Start-up Kapindra) புதிய வைர பூச்சு தொழில்நுட்பத்தை (Diamond Coating Technology) கண்டுபிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதித்துவம் - முடிவு
- தமிழக சட்டசபையில் 68 ஆண்டுகளாக ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு அளிக்கப்பட்டு வரும் பிரதிநிதித்துவம் 2021-ஆம் ஆண்டோடு முடிவுக்கு வருகிறது.
- தமிழகத்தைப் பொறுத்தவரை 1952-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்காக ஒருவர் நியமிக்கப்பட்டு வருகிறார்.
- தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.க்களுடன், 235-வது எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்படும் ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதி 2021-முதல் நியமிக்கப்பட்மாட்டார்.
- 2011-2016-ம் ஆண்டுகளில் டாக்டர் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
- அண்மையில் ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதித்துவம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டசபையிலும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
- அந்த வகையில், கடந்த 68 ஆண்டுகளாக தி, அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு இடம்பெறமாட்டார்.
விளையாட்டு நிகழ்வுகள்
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் 2020: 'பங்காளதேஷ் அணி' சாம்பியன்
- 16 அணிகள் பங்கேற்ற 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்தது (2020 Under-19 Cricket World Cup).
- இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 3-விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்காளதேஷ் அணி கோப்பையை வென்றது.
- இந்திய வீரர் ஜெய்ஸ்வால் தொடர்நாயகன் விருதை பெற்றார்.
- 6 ஆட்டத்தில் ஆடிய அவர் ஒரு சதம் மற்றும் 4 அரைசதத்துடன் மொத்தம் 400 ரன்கள் எடுத்துள்ளார்
- பந்து வீச்சாளர்களில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் (17 விக்கெட்) முதலிடம் பெற்றார்.
மராட்டிய ஓபன் டென்னிஸ் 2020: 'ஜிரி வெஸ்லி' சாம்பியன்
- 3-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் செக்குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி சாம்பியன் பட்டம் வென்றார்.
முக்கிய நபர்கள்
பக்தி இயக்கத்தின் நிறுவனர் 'சாந்த் ரவிதாஸ்'
- சாந்த் ரவிதாஸ் 14-ஆம் நூற்றாண்டு துறவி மற்றும் வட இந்தியாவில் பக்தி இயக்கத்தின் (Bhakti movement) நிறுவனர் ஆவார்.
- உத்தரபிரதேசத்தில் பனராஸ் அருகில் உள்ள சீர் கோவர்தன்பூர் (Seer Goverdhanpur) ரவிதாஸ் (Sant Ravidas) என்ற பக்தி இயக்க துறவியின் பிறந்த இடம் ஆகும்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் - பரமேஸ்வரன்
- கேரள மாநிலத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் பி.பரமேஸ்வரன் (P. Parameswaran) காலமானார். 93 வயதான அவர், வாழ்நாள் முழுவதும் RSS பிரசாரகராக இருந்தார். RSS: Rashtriya Swayamsevak Sangh
முக்கிய தினங்கள்
உலக பருப்பு வகைகள் தினம் - பிப்ரவரி 10
- உலக பருப்பு வகைகள் தினம் (World Pulses Day), பிப்ரவரி 10 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- 2016 ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் அவை, சர்வதேச பருப்பு வகைகள் ஆண்டாக (International Year of Pulses) கடைபிடித்தது.
பிப்ரவரி 10 - புதுடெல்லி இந்தியாவின் தலைநகரமாக்கப்பட்ட நாள்
- 1931-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ஆம் நாளில் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் புதுடெல்லி இந்தியாவின் தலைநகராக தொடங்கி வைக்கப்பட்டது.
- இந்திய நாடு, ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911-ம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே இந்தியாவின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது.
- Download this article as PDF Format