TNPSC Current Affairs January 15, 2020 - Download as PDF

Daily Current Affairs January 15, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 15, 2020
இந்திய நிகழ்வுகள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2020 
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. 
  • 2020-2021-ம் ஆண்டு நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
  • ஜனவரி 31-ல் நடைபெறும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
யஷஸ்வினி நலத்திட்டம் 
  • மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சமீபத்தில் கோவாவில் ‘யஷஸ்வினி’ (Yashaswini) என்ற நலத்திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு (SHGs) நிதி உதவி அளித்தலை நோக்கமாகக் கொண்டது.
  • இது ஒரு மகளிர் அதிகாரமளித்தல் திட்டமாகும், இது 5 லட்சம் வரை வட்டி இல்லாத கடன்களுடன் பெண்கள் சுய உதவிக்குழுக்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • SHGs: Self Help Groups
வெட்டுக்கிளியிடமிருந்து பயிர்களை காக்க விழிப்புணர்வு பிரச்சாரம் 
  • உத்திரபிரதேச மாநில அரசின் கரும்பு மேம்பாட்டுத் துறை விவசாயிகள் தங்கள் கரும்பு பயிரை வெட்டுக்கிளிகளிலிருந்து (locust) பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை சமீபத்தில் தொடங்கியுள்ளது.
  • 2019 டிசம்பர் மாத இறுதியில், வெட்டுக்கிளிகள் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் 25000 ஹெக்டேர் பயிர் நிலங்களை நாசமாக்கின. 
  • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவியாக குஜராத் சமீபத்தில் ஒரு ஹெக்டேருக்கு ரூ .18500 அறிவித்தது.
பரிக்ஷா பெ சார்ச்சா - மாணவர்களுடனான தொடர்பு நிகழ்வு-2020
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆயிரக்கணக்கான மாணவர்களைச் சந்தித்து தேர்வு பயத்தை சமாளிப்பது குறித்து உரையாற்றும் ‘பரிக்ஷா பெ சார்ச்சா’ (Pariksha Pe Charcha) என்ற பெயரிலான மூன்றாவது நிகழ்வு 2020 ஜனவரி 20 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள டகடோரா ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
ஒவ்வொரு குழந்தைக்கும் காசநோய் இல்லாத காற்று - திட்டம் 
  • இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (IAP) கேரள மாநிலத்தில் ‘ஒவ்வொரு குழந்தைக்கும் காசநோய் இல்லாத காற்று’ (TB-free air for every child) என்ற திட்டத்தை கேரள மாநிலத்தில் தொடங்கியுள்ளது.
  • இத்திட்டம், 2025 ஆண்டுக்குள், மாநிலத்தின் அனைத்து குழந்தைகளும் காசநோயிலிருந்து விடுபடுவதை உறுதி செய்யும்.
நிறுவனங்களின் தலைவர் & நிர்வாக இயக்குனரின் பொறுப்புகளை பிரிக்க காலக்கெடு 
  • SEBI-அமைப்பின் சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி, சிறந்த 500 நிறுவனங்களில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் பொறுப்புகளை பிரிக்க ஏப்ரல் 1, 2022 வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
  • தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் பொறுப்புகளை பிரிக்கும் முன்மொழிவு முதன்முதலில் உதய் கோட்டக் (Uday Kotak) தலைமையிலான கார்ப்பரேட் கவர்னன்ஸ் தொடர்பான SEBI-யின் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டது.
விருதுகள் 
திருவள்ளுவா் நாள் விருதுகள் 
  • 2019-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திருவள்ளுவா் நாள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:
    • பெரியாா் விருது - செஞ்சி ராமச்சந்திரன் 
    • அம்பேத்கா் விருது - க.அருச்சுனன் 
மாநாடுகள்
உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு 2020
  • 2020 உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு (World Future Energy Summit 2020) அபுதாபி நகரத்தில் ஜனவரி 18 முதல் 21 வரை நடைபெற்றது.
  • உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு சமீபத்தில் அபுதாபியில் தொடங்கியது.
  • இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள்: 'Rethinking Global Consumption, Production, and Investment'.
ரெய்சினா மாநாடு 2020 
  • சா்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடா்பான ‘ரெய்சினா பேச்சுவாா்த்தை’ மாநாடு, டெல்லியில் ஜனவரி 14-16 வரை நடைபெற்றது.
  • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், அப்சா்வா் ரிசா்ச் ஃபவுண்டேஷனும் இணைந்து இந்த மாநாட்டை நடத்தின.
  • தொடக்க விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் பங்கேற்றனா். அவருடன் 7 நாடுகளைச் சோ்ந்த முன்னாள் பிரதமா்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவா்கள் பங்கேற்றனா்.
டாக்கா சர்வதேச திரைப்பட விழா 2020
  • புகழ்பெற்ற டாக்கா சர்வதேச திரைப்பட விழாவின் (Dhaka International Film Festival 2020) 18 வது பதிப்பு சமீபத்தில் பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் தொடங்கியது.
  • ‘சிறந்த திரைப்படம், சிறந்த பார்வையாளர்கள் மற்றும் சிறந்த சமூகம்’ (Better Film, Better Audience and Better Society) என்ற கருப்பொருளுடன் 2020 ஜனவரி 11 முதல் 19 வரை இந்த விழா நடைபெறுகிறது.
மூங்கில்- ஒரு அதிசய புல் - பட்டறை மற்றும் கண்காட்சி 2020
  • வடகிழக்கு பிராந்தியத்தின் வழியே ஜம்மு-காஷ்மீரில் மூங்கில் தொழிலின் வளர்ச்சியை மையப்படுத்தும் “மூங்கில்- ஒரு அதிசய புல்” என்ற பயிற்சி பட்டறை மற்றும் கண்காட்சி (Bamboo- A wonder grass 2020) சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தில் ஜனவரி 1 முதல் 12 வரை நடைபெற்றது. 
தைப் பொங்கல் போல் இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்கள்
  • ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தைப் பொங்கல் திருவிழாபோல், அதே காலப்பகுதிகளில் இந்தியாவின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் விழாக்கள் விவரம்: பெட்டா பதங்கா (Pedda Padanga), மக் பிஹு (Magh Bihu), லோஹ்ரி (Lohri). 
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
‘ஷாப்பர்’ (Shopper) வைரஸ் தடுப்பு மென்பொருள் 
  • ‘ஷாப்பர்’ (Shopper) என்ற வைரஸ் தடுப்பு மென்பொருளை காஸ்பர்ஸ்கி லேப்ஸ் வெளியிட்டுள்ளது.
  • சர்வதேச சைபர் பாதுகாப்பு மற்றும் வைரஸ் தடுப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி லேப்ஸ் (Kaspersky Labs) சமீபத்தில் ஒரு ‘ஷாப்பர்’ (Shopper) என்ற ட்ரோஜன் பயன்பாடு/மால்வேர் (Malware) வைரஸ் தடுப்பு மென்பொருளை அண்மையில் வெளியிட்டது.
விளையாட்டு நிகழ்வுகள்
கால்பந்து 

ஸ்பானிஷ் சூப்பா் கோப்பை 2020: ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் 
  • சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டி ரியல் மாட்ரிட் அணி பட்டம் வென்றது.
முக்கிய தினங்கள்
இந்திய இராணுவ தினம் - ஜனவரி 15 
  • 72-வது இந்திய இராணுவ தினம் (Army Day), 2020 ஜனவரி 15 அன்று கடைபிடிக்கப்பட்டது. 
  • இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர். சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக (Commander-in-Chief) லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா (Kodandera M. Cariappa), 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார். 
  • இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக (Indian Army Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. 
Download this article as PDF Format
Previous Post Next Post