TNPSC Current Affairs January 13-14, 2020 - Download as PDF

Daily Current Affairs January 13-14, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 13-14, 2020
சர்வதேச நிகழ்வுகள் 
சீனாவில் எலி ஆண்டு (2020) கடைபிடிப்பு 
  • சீனாவில் இந்த 2020-ஆம் ஆண்டு எலி ஆண்டாக (Year of the Rat) கடைப்பிடிக்கப்படுகிறது. சீன சந்திர நாள்காட்டி தொகுதியைச் சேர்ந்த எலி ஆண்டு 2020 ஜனவரி 25 முதல் 21 பிப்ரவரி 2021 வரை கடைபிடிக்கப்படுகிறது.
  • ஐ.நா.வின் அஞ்சல் நிர்வாகம் ஜனவரி 10ஆம் தேதி சிறப்பு நினைவு அஞ்சல் தலையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
பிரிட்டன் அரச குடும்ப அந்தஸ்து - இளவரசர் ஹாரி 'கைவிட முடிவு 
  • பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் மார்க்கல் ஆகியோர் அரச குடும்பத்தின் முதன்மை உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தைக் கைவிடுவதாக அண்மையில் அறிவித்துள்ளனர்.
ஓமன் சுல்தான் 'காபூஸ் சயீது' மறைவு
  • ஓமன் சுல்தான் காபூஸ் பின் சயீது, தனது 79-ஆவது வயதில் ஜனவரி 10-அன்று மரணமடைந்தாா். 
  • 1970-ஆம் ஆண்டு முதல் ஓமனை ஆண்டு வந்த அவா், மிக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த அரபு மற்றும் மேற்காசியப் பிராந்தியத்தைச் சோ்ந்த மன்னா் ஆவார்.
  • ஓமன் அரசாட்சியை நிறுவிய அல் சயீது பரம்பரையில் காபூஸ் பின் சயீது 14-ஆவது சுல்தான் ஆவாா். அவரது ஆட்சிக் காலத்தின்போது ஓமன் நவீனமயமாக்கப்பட்டது. 
  • நாட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்திய காபூஸ் பின் சயீது, உலகில் பல ஆண்டுகளாக ஓமன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையை முடிவுக்குக் கொண்டு வந்தாா்.
  • ஓமன் புதிய சுல்தான் - ஹைதம் பின் தாரிக்
    • ஓமன் நாட்டின் புதிய சுல்தானாக ஹைதம் பின் தாரிக் (Haitham bin Tariq) அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய நிகழ்வுகள்
பூர்வோதயா - கிழக்கு பிராந்திய ஒருங்கிணைந்த எஃகு மையம் திட்டம் 
  • மத்திய எஃகு அமைச்சகம் (Ministry of Steel) ‘பூர்வோதயா’ (Purvodaya) எனப்படும் கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த எஃகு மைய திட்டத்தை தொடங்க உள்ளது.
  • இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஆந்திரா ஆகியவை பெரும் இரும்பு இருப்புக்களைக் கொண்டுள்ளன, இந்த எஃகு மையம் மூலம் பிராந்தியத்தில் ஒரு ஒருங்கிணைந்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனப்படுகிறது.
  • மத்திய எஃகு மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர்: தர்மேந்திர பிரதான்.
  • Purvodaya-Accelerated Development of Eastern Region through an Integrated Steel hub.
கொல்கத்தா துறைமுகம்: 'சியாமா பிரசாத் முகர்ஜி' பெயர் சூட்டல் 
  • கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழா, ஜனவரி 12-அன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
  • கொல்கத்தா துறைமுகத்துக்கு ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயர் மீண்டும் சூட்டப்படுவதாக அறிவித்தார்.
  • இந்த விழாவில், கொல்கத்தா துறைமுகத்தின் முன்னாள் ஊழியர்களில்,105 வயது முன்னாள் ஊழியர் நகினா பகத், 100 வயதான நரேஷ் சந்திர சக்ரவர்த்தி ஆகியோரை மோடி கவுரவித்தார்.
ஓமன் நாட்டு சுல்தான் மறைவு: இந்திய அரசு சார்பில் துக்கம் அனுசரிப்பு 
  • ஓமன் நாட்டு சுல்தான் காபூஸ் பின் சாய்த் அல் சாய்த் ஜனவரி10-ந்தேதி காலமானார். இந்தியாவுக்கும், ஓமனுக்கும் எப்போதும் நல்லுறவு நீடித்துவரும் நிலையில், சுல்தானின் மறைவுக்கு இந்திய அரசு சார்பில் ஜனவரி 13-ந்தேதி துக்கம் அனுசரிக்கபட்டது. 
இந்திய எரிசக்தி கொள்கைகள் குறித்த முதலாவது ஆய்வு-2020
  • சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) NITI Aayog அமைப்புடன் இணைந்து, இந்தியாவின் எரிசக்தி கொள்கைகளின் முதலாவது ஆழமான ஆய்வு (Review of India’s energy policies) சமீபத்தில் புதுடெல்லியில் வெளியிடப்பட்டது.
  • சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) சமீபத்தில் இந்திய சிந்தனைக் குழுவான NITI Aayog உடன் இணைந்து இந்தியாவின் எரிசக்தி கொள்கைகளின் முதல் ஆழமான மதிப்பாய்வை வெளியிட்டது.
  • பாரிஸ் நகரை தளமாகக் கொண்ட உலகளாவிய எரிசக்தி அமைப்பான சர்வதேச எரிசக்தி அமைப்பின் (IEA) சங்க உறுப்பினராக 2017-மார்ச்சில் இந்தியா இணைந்தது. அதன் பின்னர் செய்யப்பட்ட முதல் மதிப்பாய்வு இது வாகும்.
  • இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் வளர்ச்சியை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது, இது இப்போது நாட்டின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் கிட்டத்தட்ட 23% ஆகும்.
  • IEA: International Energy Agency.
பெண்களின் பாதுகாப்பில் மோசமான இடம் பிடித்த 'உத்தரபிரதேசம்'
  • சமீபத்திய தேசிய குற்ற பதிவு பணியகம் (NRCB) அறிக்கையின்படி, உத்தரபிரதேச மாநிலம் பெண்களின் பாதுகாப்பில் மோசமான இடம் பிடித்துள்ளது.
  • 2018-ஆம் ஆண்டிற்கான ‘க்ரைம் இன் இந்தியா’ (Crime in India) புள்ளிவிவர அறிக்கையின்படி, உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் (59445) பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • 2018-ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான கற்பழிப்பு வழக்குகள் மத்தியப் பிரதேசத்திலும், மேற்கு வங்காளத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிட் தாக்குதல் வழக்குகளும் பதிவாகியுள்ளன.
  • 2017 உடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குற்றங்கள் 2018 ல் 1.3% அதிகரித்துள்ளன என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
  • NRCB: National Crime Records Bureau.
உ.பி. அரசின் கற்றல் குறைபாடு குழந்தைகளுக்கான சிறப்பு புத்தகங்கள் 
  • கற்றல் குறைபாடுகள் உள்ள மாநில குழந்தைகளுக்காக சிறப்பு உரை புத்தகங்கள் (special text-books) 
  • தயாரிக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • ஆங்கிலம், இந்தி, கணிதம் ஆகிய பாடங்களில் 1 முதல் 5 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு19 (1) (a) மற்றும் 19 (1) (g) - சிறு தகவல் 
  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு19 (1) (a), பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அளிக்கிறது, அதே நேரத்தில் 19 (1) பிரிவின் துணைப்பிரிவு (g) எந்தவொரு தொழிலையும் பயிற்சி செய்ய அல்லது எந்தவொரு தொழில், வர்த்தகம் அல்லது வணிகத்தையும் மேற்கொள்வதற்கான உரிமையை வழங்குகிறது.
  • இந்திய அரசியலமைப்பின் 19 (1) (அ) மற்றும் 19 (1) (g ) பிரிவுகள் அரசியலமைப்பு பாதுகாப்பைப் பெறுகின்றன என்று சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
  • ஜம்மு-காஷ்மீரில் இணையத்திற்கு விதிக்கப்பட்ட ஐந்து மாத தடைகளின் பின்னணியில் இந்த மைல்கல் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
தைவான் அதிபராக 'சாய் இங்-வென்' மீண்டும் தேர்வு 
  • தைவான் நாட்டில் நடைபெற்ற தோ்தலில் அதிபா் சாய் இங்-வென் (Tsai Ing-wen) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். சாய் இங்-வென் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்.
NASA விண்வெளி வீரர்கள் பயிற்சி: இந்திய வம்சாவளி 'ராஜா சாரி' தேர்வு 
  • விண்வெளி ஆராய்ச்சி மையம் NASA நடத்திய விண்வெளிப் பயிற்சி வகுப்பை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா சாரி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
  • Raja Chari: American Test Pilot
விருதுகள் 
BCCI விருதுகள் 2018-19 
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2018-19-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரா், வீராங்கனை விருதுகள் வழங்கப்பட்டன. மும்பையில் ஜனவரி 12-அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் BCCI தலைவர் செளரவ் கங்குலி விருதுகளை வழங்கினார்.
  • சிறந்த வீரருக்கான பாலி உம்ரிகா் விருது - ஜஸ்ப்ரீத் பும்ரா
  • சிறந்த வீராங்கனை விருது - பூனம் யாதவ் 
  • வாழ்நாள் சாதனையாளா் விருதுகள்:
  • வாழ்நாள் சாதனையாளா் விருது (ஆண்கள்) கிருஷ்ணமச்சாரி ஸ்ரீகாந்த்
  • வாழ்நாள் சாதனையாளா் விருது (பெண்கள்) - அன்ஜும் சோப்ரா (100 ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை) 
  • இந்த நிகழ்வில் டைகர் பட்டோடி 7-ஆவது நினைவு உரையை முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் நிகழ்த்தினார்.
உலக இளம் சாதனையாளர் விருது
  • பிரிட்டனைச் சேர்ந்த இந்தியா வம்சாவளி ஈஸ்வர் சர்மா (10 வயது) என்ற இந்திய யோகா சாம்பியனுக்கு உலக இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஸ்கோச் தங்க விருது 2019
  • தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புப் படை, பொதுமக்களுக்கான சிறப்பான சேவை மற்றும் கடலோரப் பாதுகாப்பினை வலுப்படுத்த எடுத்த முன்னெடுப்புகளுக்காகவும், நாட்டின் முன்மாதிரியான அமைப்பாக விளங்குவதற்காகவும் வழங்கப்பட்ட 2019-ம் ஆண்டிற்கான ஸ்கோச் தங்க விருது மற்றும் தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு விருது ஆகிய இரு தேசிய அளவிலான விருதுகள் தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புப் படைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநாடுகள்
உலகளாவிய பருப்பு வகைகள் மாநாடு 2020
  • இந்தியாவின் பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் தொழில் மற்றும் வர்த்தகத்தின் உச்ச அமைப்பு, இந்தியா பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் சங்கம் (IPGA), ஐந்தாவது உலகளாவிய பருப்பு மாநாட்டை, பிப்ரவரி 12 முதல் 14, 2020 வரை புனேவின் லோனாவாலா பகுதியில் நடைபெறுகிறது.
23-வது தேசிய இளைஞர் விழா 2020
  • 23-வது தேசிய இளைஞர் விழாவை (National Youth Festival 2020) லக்னோ நகரில் உத்தரபிரதேச அரசுடன் இணைந்து 2020 ஜனவரி 12 முதல் 16 வரை லக்னோவில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்தது. சுவாமி விவேகானந்தர் (ஜனவரி 12) அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
பொருளாதார நிகழ்வுகள் 
நிதி சேர்க்கைக்கான தேசிய வியூகம் - RBI அறிக்கை 2020
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் ‘நிதி சேர்க்கைக்கான தேசிய வியூகம்’ (National Strategy for Financial Inclusion) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • 2022-க்குள் பொது கடன் பதிவேட்டை (PCR) முழுமையாக செயல்படுத்த இந்தஅறிக்கை பரிந்துரைத்துள்ளது.
  • முறையான வங்கி விற்பனை நிலையங்களுடன், கட்டண வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் நியாயமான விலைக் கடைகள் போன்ற வங்கி சாரா பிரிவுகளும் டிஜிட்டல் வங்கியைப் (Digital Banking) பயிற்சியை மேற்கொள்ள இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
  • PCR: Public Credit Registry.
புத்தக வெளியீடு
கர்மயோத்தா கிரந்த் - புத்தகம் வெளியீடு
  • நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை குறித்த ‘கர்மயோத்தா கிரந்த்’ (Karmayoddha Granth) என்ற புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 7-அன்று வெளியிட்டார். தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட புத்தகம் இதுவாகும்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் 
  • அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை, காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, கிளாய் ஊராட்சி விளையாட்டு மைதானத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத்திட்டத்தை தலைமைச்செயலகத்தில் ஜனவரி 13-அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலமாக தொடக்கிவைத்தார். 
  • தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்படஉள்ளது.
ஜல்லிக்கட்டு 2020: நீதிபதி மாணிக்கம் குழு 
  • மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவை நியமிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
ATP கோப்பை: சொ்பியா சாம்பியன்
  • முதலாவது ATP கோப்பை சாம்பியன் பட்டத்தை சொ்பியா வென்றுள்ளது.
  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆண்கள் உலக டென்னிஸ் போட்டி எனப்படும் ATP கோப்பையை ஜோகோவிச் தலைமையிலான சொ்பியா அணி வென்றது.
முக்கிய தினங்கள்
சித்த மருத்துவ தினம் - ஜனவரி 13
  • சித்த மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் அகத்திய சித்தரின் பிறந்த தினமான ஜனவரி 13, சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.
Previous Post Next Post