TNPSC current Affairs January 10, 2020 - Download as PDF

Daily Current Affairs January 10, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 10 , 2020
சர்வதேச நிகழ்வுகள் 
பல்-நுழைவு சுற்றுலா விசா ஐக்கிய அரபு நாடுகள் (UAE)
  • சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன், மத்திய கிழக்கு நாடுகளில் சமீபத்தில் அனைத்து நாடுகளுக்கும் பல்-நுழைவு சுற்றுலா விசாக்களை (Multiple-Entry Tourist Visas) ஐக்கிய அரபு நாடுகள் (UAE) அறிவித்துள்ளது.
பிரெக்ஸிட்: பிரிட்டன் நாடாளுமன்ற கீழவை ஒப்புதல்
  • ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு (பிரெக்ஸிட்) அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) ஜனவரி 09-அன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இம்மாத இறுதியில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது. 
  • 2016-ஆம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் விலகலுக்கு அந்த நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்தனா். 
நேபாள அதிகாரிகளுக்கு இந்தியாவில் ஊழல் ஒழிப்புப் பயிற்சி
  • நேபாளத்தில் ஊழலைத் தடுக்க அந்நாட்டு அதிகாரிகள் 21 போ் கொண்ட குழுவுக்கு, குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகம் சாா்பில் ‘மோசடி, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு’ தொடா்பான இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்திய நிகழ்வுகள்
இந்தியாவின் ஏவுகணை பெண்மணி 'டாக்டர் டெஸ்ஸி தாமஸ்'
  • இந்தியாவின் ஏவுகணை பெண்மணி (Missile Woman of India) என்று அழைக்கப்படுபவர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் (Dr.Tessy Thomas) ஆவார். இவர் தற்போது DRDO-வில் ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸ் இயக்குநர் ஜெனரலாக உள்ளார்.
2018-இல் குற்றங்கள் பற்றிய புள்ளி விவரங்கள்
  • 2018-ம் ஆண்டில் நாடு முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் பற்றிய புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அவற்றின் விவரம்:
  • 2018-இல் இந்தியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 80 கொலைகள் மற்றும் 91 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன.
  • ஆண்டு முழுவதும் 29 ஆயிரம் கொலை வழக்குகள், 33 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 1.3 சதவீதம் அதிகமாகும். 
சென்னை-அந்தமான் கண்ணாடி இழை கம்பி வடப் பணி - தொடக்கம் 
  • பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் சென்னை-அந்தமான் தீவுகளுக்கு இடையே ரூ. 1,224 கோடியில் சுமாா் 2,250 கி.மீ. தொலைவுக்கு கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிப்பதற்கான திட்டப் பணியை மத்திய தொலைத் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் சென்னையில் ஜனவரி 9-அன்று தொடக்கி வைத்தாா். இத்திட்டம் மூலம் அதிவேக இணையதள வசதிகள் கிடைக்கும்.
  • இந்த திட்டம் ஜூன், 2020 முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இத்திட்டத்தின்படி, அந்தமான் மற்றும் நிகோபா் தீவுகளில் உள்ள போா்ட் பிளேயா், லிட்டில் அந்தமான், காா் நிகோபா், ஹேவ்லாக் உள்ளிட்ட 7 தீவுகள் கண்ணாடி இழை கம்பி வடங்களால் இணைக்கப்பட உள்ளன. இதில், 2,250 கிலோமீட்டா் தொலைவுக்கு கடலுக்கு அடியில் கண்ணாடியிழை பதிக்கும் சிறப்புக் கப்பல் மூலம் வடம் பதிக்கும் பணி 2020 மே மாதத்துக்குள் நிறைவடைகிறது. 
  • அந்தமான்- நிகோபா் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா் - டி.கே. ஜோஜி
நீதிமன்ற பாதுகாப்பு பணி - மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) - சிறு தகவல் 
  • அண்மையில், இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகளை, மேற்கொள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை (CISF), பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் மைய அரசை கேட்டுள்ளது.
  • தற்போது நீதிமன்றப்பாதுகாப்பு பணிகளை, உள்ளூர் போலீஸ் படைகள் மேற்கொண்டு வருகின்றன.
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
  • CISF: Central Industrial Security Force. 
வடகிழக்கு இயற்கை எரிவாயு குழாய் கட்டம் (IGGL) -தகவல்கள் 
  • ஐந்து மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs): GAIL, IOCL, ONGC, OIL and NRL.
  • வடகிழக்கு இயற்கை எரிவாயு குழாய் கட்டம் (North East Natural Gas Pipeline Grid) ஐந்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்படுகிறது. 
  • இந்த கூட்டு நிறுவனம் 'இந்திரதானுஷ் கேஸ் கிரிட் லிமிடெட் (IGGL) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 
  • இது ரூ. 9,265 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த குழாயின் மொத்த நீளம் 1,656 கி.மீ. என திட்டமிடப்பட்டுள்ளது.
  • இது வடகிழக்கு பிராந்தியத்தின் எட்டு மாநிலங்களை உள்ளடக்கிய திட்டம் ஆகும். அவை, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேக்மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா.
  • IGGL: Indradhanush Gas Grid Limited.
கனிம சட்டங்கள் (திருத்தம்) ஆணை 2020 - சிறு தகவல் 
  • சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட கனிம சட்டங்கள் (திருத்தம்) ஆணை 2020-இல், நிலக்கரி வளத்தின் இறுதி பயன்பாட்டு அளவுகோல்களை நீக்கியுள்ளது.
  • இந்த ஆணைக்கு, (Mineral Laws (Amendment) Ordinance 2020), 2020 ஜனவரி 8-ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஆணை, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957 மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 2015 ஆகியவற்றை திருத்தி, நிலக்கரி சுரங்கங்களை ஏலம் எடுப்பதற்கான விதிகளை எளிதாக்குகிறது. 
நியமனங்கள் 
ஏர் இந்தியா புதிய தலைவர் 'அஸ்வானி லோகானி'
  • ரயில்வே வாரியத்தின் முன்னாள் தலைவர் அஸ்வானி லோகானி (Ashwani Lohani), கடனால் பாதிக்கப்பட்ட தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் ( Air India) தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் (Chairman and Managing Director) ஜனவரி 8-அன்று நியமிக்கப்பட்டார்.
  • முன்னதாக ஆகஸ்ட் 2015 முதல் ஆகஸ்ட் 2017 வரை இரண்டு ஆண்டுகள் இந்த அமைப்பின் தலைவராக அஸ்வானி லோகானி இருந்தார்.
மாநாடுகள் 
சென்னை ஐ.ஐ.டி.யின் ‘சாரங்’ கலை இலக்கிய விழா-2020
  • சென்னை IIT-யில் ஒவ்வொரு ஆண்டு ‘சாஸ்திரா’ என்ற தொழில்நுட்ப விழாவும், ‘சாரங்’ என்ற கலை இலக்கிய விழாவும் நடத்தப்பட்டு வருகிறது.
  • 25-வது ஆண்டு ‘சாரங்’ கலை இலக்கிய விழா சென்னை IIT வளாகத்தில் ஜனவரி 10 முதல் 12 வரை நடைபெறுகிறது. 
தேசிய வர்த்தகர்கள் மாநாடு 2020
  • தேசிய வர்த்தகர்கள் மாநாடு (National Traders convention 2020) புது தில்லியில் டிசம்பர் 6 முதல் 9 வரை நடைபெற்றது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) ஏற்பாடு செய்த இந்த மாநாட்டை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
விளையாட்டு நிகழ்வுகள் 
கிரிக்கெட்

4 நாடுகள் ஜூனியர் கிரிக்கெட்: 'இந்திய அணி' சாம்பியன்
  • தென்ஆப்பிரிக்காவில் நடந்த, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய ஜூனியர் அணிகள் (19 வயதுக்குட்பட்டோர்) பங்கேற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது.
  • இறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணியை, 69 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
  • இந்திய வீரர் திலக் வர்மா தொடர்நாயகன் விருதை பெற்றார் (181 ரன்கள், 4 விக்கெட்டுகள்)
முக்கிய தினங்கள் 
உலக இந்தி தினம் - ஜனவரி 10 
  • விஸ்வ இந்தி திவாஸ் அல்லது உலக இந்தி தினம் (World Hindi Day) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10 அன்று கொண்டாடப்படுகிறது.
  • 1975-ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் ஜனவரி 12 வரை நாக்பூரில் நடைபெற்ற முதல் உலக இந்தி மாநாட்டை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • உலகம் முழுவதும் இந்தி மொழியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முதல் உலக இந்தி நாள் ஜனவரி 10, 2006 அன்று அனுசரிக்கப்பட்டது.
Download this article as PDF Format
Previous Post Next Post