TNPSC current Affairs January 9, 2020 - Download as PDF

Daily Current Affairs January 9, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 9, 2020
இந்திய நிகழ்வுகள்
FASTags விற்பனை செய்யும் 'Paytm' கொடுப்பனவு வங்கி
  • நாடு முழுவதும், சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ (FASTags) என்னும் தேசிய மின்னணு சுங்கவரி வசூல் திட்டம் டிசம்பர் 15 முதல் அமலுக்கு வந்தது.
  • பேடிம் வங்கி: ஃபாஸ்டேக் முறைக்கான பொதுச்சேவை மையம் (CSC), பேடிம் கொடுப்பனவு வங்கியுடன் (Paytm Payment Bank) இணைந்து ஃபாஸ்டேக்-களை (FASTags) விற்பனை செய்யவுள்ளது.
ஆந்திர அரசின் ஆரோக்கியஸ்ரீ திட்டம் 
  • ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை வழங்கும் முன்முயற்சியான ஆரோக்கியஸ்ரீ திட்டத்தை (Dr. YSR ArogyaSri scheme) ஆந்திரா மாநில அரசு தொடங்கியுள்ளது.
IRDAI-வின் ஆரோக்கிய சஞ்சீவானி கொள்கை
  • இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) சமீபத்தில் சுகாதார மற்றும் பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒரு நிலையான தனிநபர் சுகாதார காப்பீட்டுக் கொள்கையை வழங்குமாறு அறிவுறுத்தியது.
  • இந்தக் கொள்கைக்கு ‘ஆரோக்கிய சஞ்சீவானி கொள்கை’ (Arogya Sanjeevani policy) என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 'நிர்வாகப் பணிகளுக்கு டிஜிட்டல் பயன்பாடு' 
  • மேற்கு வங்க மாநில அரசு காகிதத்தை சேமிக்க சுற்றுச்சூழல் நட்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. பெரும்பாலான நிர்வாகப் பணிகளுக்கு டிஜிட்டல் பயன்பாட்டை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
  • மேற்கு வங்க மாநில செயலகம், நபன்னா (Nabanna) ஏற்கனவே இந்த முறையைப் பின்பற்றுகிறது, இது மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படஉள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி 
TISS செயற்கைகோள் கண்டறிந்த 'TOI 700 d' வெளிக்கோள் 
  • அமெரிக்க விண்வெளி நிறுவனத்திற்கு (NASA) சொந்தமான TISS என்ற செயற்கைகோள், அண்மையில் 'TOI 700 d' என்ற பெயரிடப்பட்ட உயிரினங்கள் வாழும் வகையிலான முதலாவது பூமி அளவிலான வெளிக்கோள் (a new habitable exoplanet) ஒன்றை கண்டுபிடித்தது.
  • இந்த பூமியின் அளவிலான கிரகத்தில் மேற்பரப்பில் திரவநிலையில் நீர் இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.
  • TISS: Transiting Exoplanet Survey Satellite.
விருதுகள் 
சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது 2019
  • இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இந்தியாவின் முன்னாள் மகளிர் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI CK Nayudu Lifetime Award) மதிப்புமிக்க ‘சி கே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் 1981 முதல் 1992 வரை இந்தியாவிற்காக விளையாடினார்.
பொருளாதார நிகழ்வுகள் 
நிதி ஆயோக் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் 2020
  • டெல்லியில் மத்திய அரசின் கொள்கைக் குழுவான ‘நிதி ஆயோக்’ அமைப்பின் சாா்பில் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் பிரதமா் மோடி தலைமையில் ஜனவரி 9-அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொருளாதார நிபுணா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது.
2019-20 மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியி விகிதம் - 5%
  • 2020 ஜனவரி முதல் வாரத்தில், 2019-20 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டின் திட்டமிடப்பட்ட வளர்ச்சி 5%-ஆகா இருக்கும்.
  • இது கடந்த ஆண்டு பொருளாதார கணக்கெடுப்பால் கணிக்கப்பட்ட 7% இலிருந்து மிககுறைவான வளர்ச்சியாகும். முந்தைய ஆண்டின் 6.8% வளர்ச்சியை விட மிகக் குறைவானதாகும்.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
போர்ட்டோ ரிகோவில் நிலநடுக்கம்
  • சமீபத்தில் போர்ட்டோ ரிகோ நாட்டில் 6.4 ரிக்டர் அளவிலான ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட்டோ ரிகோ அரசு இதனால் அவசரகால நிலையை அறிவித்தது, போர்ட்டோ ரிகோ என்பது கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவுகளின் கூட்டம் ஆகும். இது அமெரிக்காவின் இணைக்கப்படாத பிரதேசங்களில் ஒன்றாகும். போர்ட்டோ-ரிகோவின் தலைநகரம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகரம் சான் ஜுவான் (San Juan). ஆகும்.
ஆஸ்திரேலியாவில்10,000 ஒட்டகங்களை கொல்ல முடிவு 
  • கடும் வறட்சி, காட்டுத் தீயாலும் (wild fires) அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியாவில், சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. மிச்சம் பிடிக்க,
  • ஒட்டகங்கள் அதிக அளவு தண்ணீரை அருந்துவதால், தெற்கு ஆஸ்திரேலியாவின் APY ஊரக நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. 
  • APY: Anangu Pitjantjatjara Yankunytjatjara.
முக்கிய தினங்கள்
ஹர் கோவிந்த் கோரானா பிறந்த நாள் - ஜனவரி 9
  • நோபல் பரிசு (1968): இந்தியாவை சேர்ந்த ஹர் கோவிந்த் கோரானா (Har Gobind Khorana), 1968-ஆம் ஆண்டு உடலியல் அல்லது (Nobel Prize in Physiology) மருத்துவத்திற்கான நோபல் பரிசை மார்ஷல் டபிள்யூ. நிரன்பெர்க் மற்றும் ராபர்ட் டபிள்யூ. ஆகியோருடன் இணைந்து பெற்றார்.
  • 1972 ஆம் ஆண்டில், முதல் செயற்கை மரபணுவையும் (artificial gene) கோரானா உருவாக்கினார்.
வெளிநாடுவாழ் இந்தியர் தினம் - ஜனவரி 9, 2020
  • வெளிநாடுவாழ் இந்தியர் தினம் (Pravasi Bharatiya Divas 2020) ஆண்டுதோறும் ஜனவரி 9-ம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பை போற்றும் வகையில், 2003-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் ஜனவரி 9-ஆம் தேதி வெளிநாடுவாழ் இந்தியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
  • மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்த சேர்ந்த நாள் ஜனவரி 9, 1915 ஆகும். (Commemorate the return of Mahatma Gandhi from South Africa to India in 1915), இதன் நினைவாக அந்த நாள் "வெளிநாடுவாழ் இந்தியர் தினமாக" தேர்ந்தெடுக்கப்பட்டது. 
Download this article as PDF Format
Previous Post Next Post